27 December 2020
புரட்டியெடுக்குமா இந்தியா 195 ஓட்டங்களுடன் சுருண்டது அவுஸ்;
சுற்றுலா இந்திய – அவுஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான 2வது டெஸ்ட் போட்டி 26-12-20-அன்று மெல்பேர்னில் ஆரம்பமாகியது.
போட்டியில் முதலில் ஆடிய அவுஸ்திரேலிய அணி 72.3 ஓவர்களில் சகல விக்கெட்களையும் இழந்து 195 ஓட்டங்களை
மட்டும் பெற்றது. துடுப்பாட்டத்தில் மர்னஸ் லபுஸ்சன் (48), ட்ரவிஸ் ஹெட் (38) ஓட்டங்களை பெற்றனர். பந்துவீச்சில் ஜஸ்பிரித் பும்ரா (56/4), ரவிச்சந்திரன் அஸ்வின் (35/3)
விக்கெட்களை வீழ்த்தினர்.
இந்நிலையில் தமது முதல் இன்னிங்ஸில் ஆடிவரும் இந்திய அணி, இன்றைய ஆட்ட நாள் நிறைவில் 11 ஓவர்களில் 1 விக்கெட் இழப்பிற்கு 36 ஓட்டங்களை பெற்ற நிலையில் உள்ளது
23 December 2020
ஐதராபாத்தில் கொரோனா சோதனை. தனிமைப்படுத்திக் கொண்ட ரஜினி
படக்குழுவினர் சிலருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதால் அண்ணாத்த படப்பிடிப்பு நிறுத்தப்பட்ட நிலையில், நடிகர் ரஜினி
கொரோனா சோதனை செய்து தனிப்படுத்திக் கொண்டார்.
நடிகர் ரஜினிகாந்த் அடுத்த மாதம் தனி
கட்சி தொடங்கி அரசியலில் ஈடுபட இருப்பதால், அதற்கு முன்பாக தனது காட்சிகளை படமாக்கி முடித்து விடும்படி ‘அண்ணாத்த’ படக்குழுவினரை அறிவுறுத்தினார்.
இதையடுத்து கொரோனா பரவல் காரணமாக கடந்த மார்ச் மாதம் நிறுத்தப்பட்ட படப்பிடிப்பு 9 மாதங்களுக்கு பிறகு கடந்த டிசம்பர் 14-ந் தேதி ஐதராபாத்தில் மீண்டும் தொடங்கி நடந்து வந்தது. இதில் ரஜினி, குஷ்பு, நயன்தாரா, மீனா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
இந்நிலையில், படப்பிடிப்பில் 8 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதால் அண்ணாத்த படத்தின் ஷூட்டிங் தற்காலிகமாக
நிறுத்தப்பட்டது. இதையடுத்து படக்குழுவினர் அனைவருக்கும் கொரோனா சோதனை செய்யப்பட்டது. இதில் ரஜினிக்கு
நெகட்டிவ் என தகவல் வெளியாகியுள்ளது.
இதையடுத்து ஐதராபாத்தில் நடிகர் ரஜினிகாந்த் தன்னைப் படுத்திக் கொண்டுள்ளார் என்று செய்திகள் வெளியாகியுள்ளது. மேலும்
விரைவில் ரஜினி
சென்னை திரும்ப இருக்கிறார்.
15 December 2020
இலங்கையில் மீன்வளத்தை அள்ளவந்த இந்திய மீனவர்கள் 19 பேர் கைது
அண்மைய நாட்களாக இலங்கையின் வடக்கு பகுதி கடற்கரைக்கு நெருக்கமாக அத்துமீறி இலங்கை தமிழ் மீனவர்களின் மீன் வளத்தை அள்ளிவந்த இந்திய மீனவர்களில் 19 பேரை இலங்கைக் கடற்படையினர் கைது
செய்துள்ளனர்.
நெடுந்தீவுக் கடற்பரப்பில் தொடர்ந்தும் அத்துமீறி கரைக்கு மிக நெருக்கமாக வந்து மீன்வளத்தை வாரி அள்ளிச் சென்ற இந்திய மீனவர்களின்
மோசமான நடவடிக்கையால் இனி வரும் நாட்களில் இந்திய மீனவர்கள் மீது தாக்குதல் நடத்துவோம் என்று வடமராட்சி மீனவர்கள் எச்சரிக்கை தீர்மானம் எடுத்திருந்திருந்தனர்.
இந்நிலையில் இன்று நெடுந்தீவுக் கடற்பரப்பில் அத்துமீறிய மீன்பிடிப் படகுகளை சுற்றிவளைத்த கடற்படையினர் அவற்றைக் கைப்பற்றியுள்ளனர். அதில் இருந்த 19 மீனவர்களும் கைது
செய்யப்பட்டுள்ளனர்.
இதேவேளை தற்போதைய கொரோனா நிலைமை காரணமாக அத்துமீறும் மீனவர்கள் அவர்களின் நாடுகளுக்கு திருப்பி அனுப்பப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
Subscribe to:
Posts (Atom)