20 December 2019
கூடல்நகா் இலங்கை அகதிகள் முகாமில் 36 பேருக்கு ஏற்பட்டுள்ள பரிதாப நிலை
இலங்கை அகதிகள் முகாமில் உள்ள பெண்களின் பெயரைப் பயன்படுத்தி 50 இலட்சம் ரூபாய் கடன் பெற்று மோசடி செய்த பெண் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என மதுரை மாநகர காவல் ஆணையரிடம் பாதிக்கப்பட்ட பெண்கள் முறைப்பாடு செய்துள்ளனர்.
இதுகுறித்து கூடல்நகா் இலங்கை அகதிகள் முகாமில் வசிக்கும் 36 பெண்கள் அளித்த புகாா் மனு:
ஆர். டயானா.. நான் வசிக்கும் முகாம் அருகில் தமிழ் நகரைச் சோ்ந்த தெய்வம் மனைவி காஞ்சனா என்பவா் வசித்து வருகிறாா்.
அவருக்கு முகாமில் வசிக்கும் பெண்களுடன் 15 ஆண்டுகளுக்கு
மேல் பழக்கம் உள்ளது.
இந்நிலையில், சுய உதவிக்குழுக்களில் கடன் பெற்று தருமாறு கல்பனா என்னிடமும், முகாமில் உள்ள பெண்கள்
சிலரிடமும் கேட்டாா்.
கடன் பெற்று தந்தால் முறையாக திருப்பிச் செலுத்துவதாகவும் கூறினாா். இதை நம்பி அவருக்கு முகாமைச் சோ்ந்த நான் உள்பட 37 பெண்கள் ரூ. 50 லட்சம் கடன் பெற்று தந்தோம்.
அந்த கடன் தொகைக்கான தவணைகளை காஞ்சனா சில மாதங்களுக்கு திரும்பச் செலுத்தினாா்.
இந்நிலையில், கடந்த 4 மாதங்களாக கடன் தொகையைச் செலுவில்லை. கடன் கொடுத்தவா்கள் எங்களிடம் கேட்டாா்கள். இதுதொடா்பாக காஞ்சனாவிடம் கேட்டபோது சில நாட்களில் கடன் தொகையைத் திரும்பச் செலுத்திவிடுதாகக் கூறி வந்தவா் திடீரென்று
தலைமறைவாகி விட்டாா்.
இந்நிலையில், கடன் கொடுத்தவா்கள் முகாமிற்கு வந்து தொடா்ந்து பிரச்சினைச் செய்து வருகின்றனா்
இது குறித்து கூடல்புதூா் காவல்நிலையத்தில் நவம்பா் 21ஆம் திகதி முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.
ஆனால், இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.காஞ்சனா குடும்பத்தினா், மோசடி செய்த பணத்தை கொண்டு பல்வேறு இடங்களில் சொத்துகள் வாங்கி உள்ளனா்.
மேலும் கூடல்நகா் பகுதியில் ரூ. 30 லட்சத்தில் வீடு கட்டியுள்ளனா்.
எனவே, காஞ்சனா மீது உரிய நடவடிக்கை எடுத்து, அவா் மோசடி செய்த பணத்தை திரும்ப பெற்று தரவேண்டும் எனக் குறிப்பிட்டுள்ளாா்.
முன்னதாக, டயானா மற்றும் 36 பெண்கள் மாநகா் காவல் ஆணையா் அலுவலகத்திற்கு சென்று ஆணையரிடம் புகாா்
மனுவை நேரில் அளித்தனா்.
புகாா் மனுவை பெற்ற காவல் ஆணையா் உரிய நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தாா்.இதுதொடா்பாக பாதிக்கப்பட்ட
பெண்கள் கூறியது:
பாதிக்கப்பட்டவா்கள் அனைவரும் கூலி வேலை செய்து
குடும்பத்தை நடத்தி வருகிறோம்.
சுயஉதவிக் குழுக்கள் மூலம் மட்டும் ரூ. 50 லட்சத்திற்கும் மேல் மோசடியில் காஞ்சனா ஈடுபட்டுள்ளாா்.
இதை தவிா்த்து முகாமில் பலரிடம் நகை, ரொக்கம்
என ரூ. 4 கோடி வரை பெற்றுள்ளாா்.
காவல்நிலையத்தில் புகாா் கொடுத்து ஒரு மாதம் ஆகி விட்டது. ஆனால் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை.
இது குறித்து காவல் நிலையத்திற்கு கேட்க சென்றால் பொலிஸாா் தகாத வாா்த்தையால் திட்டுகின்றனா்
என தெரிவித்தனா்
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>
17 December 2019
இலங்கைக்கு படகு மூலம் தப்பித்த ஈழ அகதிகளுக்கு தனுஸ்கோடியில் நேர்ந்த கதி
தமிழகத்திலிருந்து சட்டவிரோதமாக இலங்கைக்கு தப்ப முயன்ற 6 இலங்கை அகதிகளை கீயூ பிரிவு பொலிஸார் கைது செய்துள்ளனர்.தனுஸ்கோடி கடற்கரை பகுதியில் நேற்று ( திங்கட்கிழமை) கியூ பிரிவு பொலிஸார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தபோது, தனுஸ்கோடி அருகே எம்.ஆர் சத்திரம் பேரூந்த நிலையத்தில் சந்தேகத்திற்குரிய முறையில் நின்று கொண்டிருந்த 6 பேரை பிடித்து விசாரணை செய்துள்ளனர்.
குறித்த விசாரணையில், அவர்கள் திருகோணமலை மற்றும் யாழ்பாணம் பகுதியை சேர்ந்த இலங்கை அகதிகளான சதீசன், டிலக்சனா, சுதாகரன், சந்திரமதி, ஹரீஸ்கரன்,உதயகுமார் என இரண்டு பெண்கள் மூன்று ஆண்கள் மற்றும் ஒரு ஆண் குழந்தை ஆகிய ஆறு
பேரும் சென்னை மற்றும் திருவள்ளுர் பகுதிகளிலுள்ள முகாம்களில் வசித்து வந்தாகவும், தனுஸ்கோடி கடல் வழியாக சட்ட விரோதமான முறையில்தோணி ஊடாக இலங்கைக்கு
தப்பி செல்ல இருந்ததாகவும் தெரிவித்தனர்.இதனையடுத்து குறித்த ஆறு பேரையும் கைது செய்த கீயூ பிரிவு பொலிஸார், வழக்கு பதிவு செய்து தனுஸ்கோடி காவல் நிலையத்தில் வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.குறித்த விசாரணைக்கு
பின்னர் ராமேஸ்வரம் நீதிமன்றத்தில் அவர்களை முன்னிலைப்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளவுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மேலும், கைது செய்யப்பட்டவர்கள், காவல் துறையினர் விசாரணையின்போது, தாங்கள் இலங்கையில் நடைபெற்ற உள்நாட்டு போரின்போது தங்களது
உயிர்களை காப்பாற்றி
கொள்ள 2012 ஆம் ஆண்டு தமிழகத்திற்கு அகதிகளாக வந்ததாகவும் தற்போது இலங்கையில் பிரச்சினை இல்லாமல் இயல்பு நிலைக்கு திரும்பியதாக தங்களது உறவினர்கள் கூறியதையடுத்து இலங்கை திரும்பி செல்ல தனுஸ்கோடி வடக்கு கடற்கரை பகுதியில் நின்றதாகவும் தெரிவித்தனர்.தமிழகத்தில் இருந்து இலங்கைக்கு அழைத்து செல்ல, படகோட்டியிடம் தலா 10 ஆயிரம் என 60 ஆயிரம் ரூபாய் கொடுத்தாகவும் ஆனால் கியூ பிரிவு பொலிஸாரை
கண்டதும் படகோட்டி படகுடன் தப்பி சென்றார் எனவும் தெரிவித்தனர்.கைது செய்யப்பட்டவர்களிடம் இருந்து இலங்கை பணம் 8ஆயிரத்தி ஐந்நூறு இந்திய பணம் ஆயிரம் மற்றும் கடவுச்சீட்டு, இலங்கை குடியுரிமை ஆவணங்கள் மற்றும் தமிழக வங்கி கணக்கு அட்டைகள்
பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
ஆறு வருடங்களுக்கு பின் அமெரிக்காவிலிருந்து தாயகம் திரும்பிய மருமகளுக்கு நேர்ந்த சோகம்
ஆறு வருடங்களுக்கு பிறகு அமெரிக்காவில் இருந்து வந்த மருமகளை மாமியார் ஒருவர் அடித்துக்கொன்ற சம்பவம் ஒன்று இந்தியாவின் மகாராஷ்டிராவில் இடம்பெற்றுள்ளது
.இந்தியாவின் மகாராஷ்டிராவில் மகனையும், பேரக்குழந்தைகளையும் தன்னிடம் இருந்து பிரித்து விடுவார் என்ற பயத்தில்
மருமகளை மாமியார் கொலை
செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ள நிலையில் குறித்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.இந்தியாவின், மகாராஷ்டிரா மாநிலத்தின் வசாய் நகரின் மாணிக்பூர் பகுதியை சேர்ந்தவர் ஆனந்தி மனே (வயது 48). இவரது மூத்த
மகன் ரோகன் மனே தனது மனைவி ரியா மனேவுடன் அமெரிக்காவில் வசித்து வருகிறார்.இந்நிலையில், கடந்த 6 வருடங்களுக்கு பின்னர் ரோகன் – ரியா தம்பதியினர் கடந்த முதலாம் திகதி இந்தியாவுக்கு சென்றிருந்தனர். மாமியார் – மருமகள் இடையேயான வழக்கமான சண்டை ஆனந்தி மற்றும் ரியா இடையே அடிக்கடி இடம்பெற்றுள்ளது.இதையடுத்து நேற்றுக் காலை ரோகன் மனே நடைபயிற்சிக்காக காலையிலேயே
வெளியே சென்றிருந்தார்.
அப்போது மாமியார் மருமகள் இடையே சண்டை ஏற்பட்டுள்ளது. இதனால் கோபமடைந்த மாமியரான ஆனந்தி மனே அங்கிருந்த இரும்பு பூந்தொட்டியை எடுத்து தனது மருமகளை அடித்தார். தலையில் தாக்கப்பட்ட ரியா மனே சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதையடுத்து ஆனந்தி மனே மாணிக்பூர் பொலிஸ் நிலையத்திற்கு சென்று சரணடைந்தார். சம்பவ இடத்திற்கு சென்ற பொலிஸார், ரியா மனேவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
‘ஆனந்தி மனே- ரியா மனே இடையே சில சண்டை சச்சரவுகள் இருந்து வந்துள்ளன. தனது மகனையும், பேரக்குழந்தைகளையும் தன்னிடமிருந்து ரியா மனே பிரித்து சென்று விடுவார் என்ற எண்ணம் ஆனந்தியிடம் இருந்தது.மருமகளை கொலை செய்த மாமியாரான ஆனந்தி சில தூக்க மாத்திரைகளையும் உட்கொண்ட நிலையில், வைத்தியசாலையில், அனுமதிக்கப்பட்டார்.சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு
வருகின்றனர்.
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>
10 December 2019
தனது தங்கையை கணவனின் விருப்பப்படி திருமணம் செய்து வைத்த மனைவி
தாலி கட்டிய கணவனுக்கு மனைவியே தங்கையை திருமணம் செய்துவைத்துள்ள சுவாரஷ்ய சம்பவம் மத்தியப்பிரதேச மாநிலத்தில் நடந்தேறியுள்ளது.மத்திய பிரதேச மாநிலத்தை சேர்ந்த திலீப் என்பவர் கடந்த 9 ஆண்டுகளுக்கு முன்பாக வினிதா என்பவரை
திருமணம் செய்துள்ளார். இந்த
தம்பதியினருக்கு
3 குழந்தைகள் உள்ளனர்.இந்த நிலையில், திலீப் தன்னுடைய மனைவி வினிதாவிடம், அவருடைய உறவு
பெண்ணான ரச்னா என்பவரை நீண்ட காலமாக விரும்புவதாகவும், அவரை திருமணம் செய்து கொள்ள ஆசைப்படுவதாகவும்
கூறியுள்ளார்.
இதற்கு வினிதா சம்மதம் கூறியதை அடுத்து, ஒரே மேடையில் ரச்னா மற்றும் தனது மனைவியுடன் மாலை மாற்றி திலீப் திருமணம் செய்துள்ளார்.இதுகுறித்து வினிதா கூறுகையில், சில ஆண்டுகளாகவே நான் உடல்நிலை சரியில்லாமல் இருந்து
வருவதால் என்னுடைய கணவர் தான் குழந்தைகளை கவனித்து வருகிறார்.வேறு ஒரு பெண்ணை அவருக்கு
திருமணம் செய்து வைத்தால், குழந்தைகளை நன்றாக கவனித்து கொள்ள மாட்டார்கள். என்னுடைய தங்கையை திருமணம் செய்துவைத்தால், நன்றாக பார்த்துக்கொள்வார் என்பதாலே திருமணம்
செய்துவைத்தேன் என்றார்
12 November 2019
பொலிஸ் நிலையத்திற்கு மனைவியின் தலையை வெட்டி கொண்டு வந்த கணவன்
பெண்ணின் தலையை அரிவாளால் வெட்டி கணவன் கொலை செய்த பயங்கர சம்பவம் அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.குறித்த சம்பவம் இந்தியா உத்திரப்பிரதேச மாநிலத்தில் இடம்பெற்றுள்ளதுஇது தொடர்பில் மேலும் அறியமுடிவதாவது;நரேஷ் என்பவக்கு 17 வருடங்களுக்கு முன்னர் சாந்தி என்ற பெண்ணுடன் திருமணம்
நடைபெற்றுள்ளது.
இத்தம்பதியினருக்கு 3 மகள்களும்இ ஒரு மகனும் உள்ளனர். நரேஷுக்கு மதுப்பழக்கம் இருந்துள்ளது. இதனால் கணவன்
மனைவி இடையே எப்பொழுதும் தகராறுகள் ஏற்பட்டு வந்துள்ளன.நரேஷ் குடித்துக்கொண்டிருந்த போது அவருடைய
மனைவி தடுத்து நிறுத்த
முயற்சி செய்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த நரேஷ் சாந்தியின் தலையை அரிவாளால் வெட்டியுள்ளார். தலையில்லாமல் முண்டமாக இருந்த சடலத்தை நரேஷ் வேறொரு அறையில் வைத்து பூட்டியுள்ளார். சாந்தியின் தலையை
ஒரு டப்பாவுக்குள் மூடி வைத்துள்ளார். மறுநாள் காலையில் குழந்தைகள் தாயின்றி கத்தியுள்ளனர்.மூத்த மகள் சென்று
எட்டிப்பார்த்தபோது, தாய் தலையில்லாமல் கிடந்ததை கண்டு அதிர்ச்சியுற்றாள். உறவினர்கள் வருவதற்குள்
சாந்தியின் தலையுடன் நரேஷ் காவல் நிலையத்தை சென்றடைந்தார்.நரேஷை
கண்டு அதிர்ந்த பொலிஸார் அவர் மீது வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்தனர். முதற்கட்ட விசாரணையில் சம்பவத்தின் போது மது அருந்தவில்லை என தெரியவந்துள்ளது. மேலதிக விசாரணைகளை பொலிஸார்
மேற்கொண்டு வருகின்றனர்.
09 November 2019
பெற்றோர்களுக்கு ஓர் அபாய எச்சரிக்கை.பரிதாபமாக பலியான குழந்தை
தொலைக்காட்சி விழுந்ததில் குழந்தை பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.இந்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரிவிக்கப்படுவதாவது;ஆந்திரப் பிரதேச மாநிலம் சிறீகாகுளம் மாவட்டம், காசிபுகா நகரில் உள்ள நியூ காலணியில் வசித்து வரும் வரலக்ஷ்மி என்பவர் நேற்று தனது 11 மாத குழந்தை
மோகாரினிக்கு
உணவு கொடுத்துக் கொண்டிருந்தார்.உணவை சாப்பிட மறுத்த குழந்தை அங்கும் இங்குமாக ஓடியது. அப்போது வீட்டின் உள்அறையில் மேஜை மீது வைக்கப்பட்டிருந்த தொலைக்காட்சியின் வயரை தவறுதலாக இழுத்ததில் அது குழந்தையின் மீது விழுந்தது.
இதில், பலத்த காயமடைந்த குழந்தையை பெற்றோர்கள் உடனடியாக அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு
சென்றனர். அங்கு சிகிச்சை பலனின்றி குழந்தை பரிதாபமாக இறந்தது.இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை
ஏற்படுத்தியுள்ளதுடன், குழந்தைகளிருக்கும் வீடுகளில் இவ்வாறு அலட்சியமாக பொருட்களை வைக்காமல், அவதானமாகச் செயற்படுமாறு சமூக ஆர்வலர்கள் எச்சரித்துள்ளமை
குறிப்பிடத்தக்கது.
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>
05 November 2019
புறாவை துரத்திச் சென்று 100 அடிக் கிணற்றிற்குள் வீழ்ந்த சிறுவன்
புறாவை துரத்திச் சென்று 10-ம் வகுப்பு மாணவன் 100 அடி ஆழக் கிணற்றில் விழுந்த சம்பவம் ராசிபுரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.தமிழகம் நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தை அடுத்த புதுப்பாளையம் பகுதியை சேர்ந்தவர் பெருமாள். கூலித் தொழில் செய்து வரும் இவருக்கு கார்த்திக் என்ற மகன் உள்ளார். இவர் அதே பகுதில் உள்ள பள்ளி ஒன்றில் 10ம் வகுப்பு படித்து வருகிறார். நேற்று விடுமுறை என்பதால், தனது நண்பர்களுடன் விளையாடிக் கொண்டிருந்திருக்கிறார். அப்போது புறா ஒன்று அந்த
பகுதியில் வந்து அமர்ந்துள்ளது.
அப்போது அதனை பிடிக்க கார்த்திக் முயற்சிக்க அது பறந்து சென்றுள்ளது. இருப்பினும் அதனை விடக் கூடாது எப்படியாவது பிடித்து விட வேண்டும் என்ற ஆர்வத்தில், புறாவை கார்த்திக் துரத்தியுள்ளார். தனது முழுக் கவனமும் மேலே சென்று கொண்டிருந்த புறாவிடம் இருக்க, கீழே இருந்த கிணற்றை கவனிக்கத் தவறிய கார்த்திக் எதிர்பாராத விதமாக
கிணற்றுக்குள் விழுந்தார்.
அது 100 அடி ஆழக் கிணறு என்பதனால் பதறி போன அவரது நண்பர்கள் உடனடியாக வீட்டிற்கும், தீ அணைப்பு துறையினருக்கும் தகவல் தெரிவித்தனர்.இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த தீ அணைப்பு துறையினர், ஒரு மணி நேர கடுமையான போராட்டத்திற்கு பிறகு சிறுவனை உயிருடன் மீட்டனர். புறாவை துரத்திச் சென்று சிறுவன் 100 அடி ஆழக் கிணற்றுக்குள் விழுந்த சம்பவம் அந்தப் பகுதியில்
பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
04 November 2019
கேரளவில் பிறப்புறுப்பில் உயிர்போகும் வலி மருத்துவரை நாடிய இளைஞன்
இந்தியாவின் கேரள மாநிலத்தில் இளைஞர் ஒருவரின் பிறப்புறுப்பில் இருந்து அட்டைப் புழு ஒன்றை மருத்துவர்கள் அப்புறப்படுத்திய சம்பவம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.கேரளாவின் ஆலப்புழா பகுதியில் இளைஞர் ஒருவருக்கு கடந்த சில நாட்களாக
பிறப்புறுப்பில் வலி ஏற்பட்டு வந்துள்ளது.வலியால் அந்த இளைஞர் துடித்துப் போயுள்ளார். ஒரு கட்டத்தில் தம்மால் இனி பொறுக்க முடியாது என கருதிய அவர் மருத்துவரை நாடியுள்ளார்.மருத்துவர் மேற்கொண்ட பரிசோதனையில் அந்த இளைஞருக்கு அதிர்ச்சி காத்திருந்தது.
அவரது பிறப்புறுப்பில் மலைப் பிரதேசங்களில் மட்டும் காணப்படும் ஒருவகை அட்டைப் புழு நுழைந்துள்ளது மருத்துவர்களால் கண்டறிந்துள்ளனர்.சமீபத்தில் அவர் குடியிருப்புக்கு அருகாமையில் உள்ள குளம் ஒன்றில் குளிக்க சென்றுள்ளார். அந்த
குளத்தில் வைத்து நூலிழை அளவுக்கு மட்டுமே இருந்த அந்த அட்டை அந்த இளைஞரின் பிறப்புறுப்பில் புகுந்துள்ளது.
அது தற்போது ரத்தம் குடித்து 7 செ.மீ அளவுக்கு
வளர்ந்துள்ளது. இதனையடுத்து மருத்துவர்கள் உரிய கருவிகளை பயன்படுத்தி அந்த அட்டையை வெளியே எடுத்துள்ளனர்.தற்போது தீவிர சிகிச்சை அளித்து இளைஞரை குணப்படுத்தியுள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
02 November 2019
சிறுவன் சுர்ஜித்தின் நினைவாக அபாயநிலையை உணர்த்தும் கல்வெட்டு
ஆழ்துளை கிணற்றில் விழுந்து உயிரிழந்த சிறுவன் சுர்ஜித்தின் நினைவாக கல்வெட்டொன்று அமைக்கப்பட்டுள்ளது.திருவண்ணாமலை மாவட்டத்தின் தென் அரசம்பட்டு கிராமத்தில் இயங்கி வரும் அரசு ஆரம்பப் பாடசாலையின் அமைக்கப்பட்டிருந்த ஆழ்துளைக் கிணறு
ஒன்று மழை நீர் சேமிப்பாக மாற்றப்பட்டது.அத்துடன் அங்கு சமீபத்தில் ஆழ்துளைக் கிணற்றில் விழுந்து உயிரிழந்த குழந்தை சுர்ஜித்திற்கு ஒரு நினைவு அஞ்சலியும் நடத்தப்பட்டதுடன் சுர்ஜித்தின் நினைவாக கல்வெட்டொன்றும் திறக்கப்பட்டது. இதனை
திருவண்ணாமலை
மாவட்ட ஆட்சியர் கந்தசாமி திறந்து வைத்தார்.இந்தக் கல்வெட்டில், நான் சுர்ஜித் பேசுகிறேன். நான் திருச்சி மாவட்டம் நடுக்காட்டுப்பட்டி கிராமத்தில், எனது தாயின் கருவறையில் பிறந்து இரண்டு
வயதில் ஆழ்துளைக் கிணற்றின்
கறுப்பறையில் என் வாழ்க்கை முடிந்துவிட்டது.இறப்பு அனைவருக்கும் உண்டு என்றாலும் என்னை போல் 80 மணி நேரம், மரணத்துடன் போராடிய அந்த தருணம் மிகவும் கொடுமையானது.
நான் இந்த உலகத்தில் வாழ
முடியாமல் போனாலும், இனி வரும் காலங்களில் ஆழ்துளைக் கிணறுகளை திறந்து வைக்காமல் என்னைபோல் உள்ள குழந்தைகளின் உயிரை பாதுகாக்கவும். என் இறப்பு உங்களுக்கு ஒரு பாடமாக இருக்கட்டும் என்ற வாசகம் பொறிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
31 October 2019
சிறுவன் சுர்ஜித்தின் பெற்றோர்கள் செய்த கண்கலங்க வைக்கும் செயல்
தமிழகத்தில் சுர்ஜித் என்ற இரண்டு வயது சிறுவன் ஆழ்துளைக் கிணற்றில் விழுந்து பலியான சம்பவம் தமிழகத்தை உலுக்கிய நிலையில், தற்போது சிறுவனின் பெற்றோர் செய்த செயலின்
புகைப்படம்
சமூகவலைத்தளங்களில் வைரலாகி பார்ப்போரை கண்கலங்க வைத்துள்ளது.திருச்சி மணப்பாறையை அடுத்த நடுக்காட்டுப்பட்டியில் கடந்த 25-ஆம் திகதி மாலை அவரது வீட்டு தோட்டத்தில்
விளையாடிக் கொண்டிருந்த
2 வயது குழந்தை சுர்ஜித் அங்கிருந்த மூடப்படாத ஆழ்துளை கிணற்றில் விழுந்தது.இதனால், அந்த குழந்தையை மீட்க கடந்த 4 நாட்களாக பல்வேறு முயற்சிகள் எடுக்கப்பட்டன. ஆனால், இந்த
நடவடிக்கைகள் எதுவும்
பலனளிக்காத நிலையில், நேற்று முன்தினம் அதிகாலை உயிரிழந்த நிலையில் மீட்டனர்.அந்தக் குழந்தையின் உடல் அழுகி சிதிலமடைந்திருப்பதால் உடனே பிரேத பரிசோதனை செய்யப்பட்டு பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டது.
இந்நிலையில் நேற்றிலிருந்து சுர்ஜித்தின் பெற்றோர் புகைப்படம் ஒன்று சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது. அதில் சுர்ஜித் விழுந்து இறந்த ஆழ்துளை கிணற்றிற்கு மாலை வைத்து, தாய் மற்றும் தந்தை வேதனையுடன் உள்ளனர்.இதைக் கண்ட இணைவாசிகள் சிலர், வேதனையான பதிவுகளை பதிவேற்றம் செய்து வருகின்றனர். அதில் ஒருவர் தாய்க்கு தெரியும் தன் மகன் எங்கே புதைக்கப்பாட்டான் என்று குறிப்பிட்டுள்ளார்.
29 October 2019
சிறுவன் சுஜித்தின் உடல். அழுகிய நிலையில் மீட்கப்பட்டஉண்மையில் நடந்தது என்ன
சிறுவன் சுஜித் ஆழ்த்துளை கிணற்றில், கிட்டத்தட்ட 80 மணி நேரம் உடல் மண்ணுக்குள் இருந்துள்ளது. மிகவும் மோசமான முறையில் சிதைந்த நிலையில்தான் உடலை மீட்டதாக சொல்கிறார்கள். எனவே குழந்தையின் உடல் இந்த அளவுக்கு எப்படி சிதைந்து,
அழுகிப் போனது என்ற கேள்விகள் பல எழுந்துள்ளன.கடந்த 25ம் திகதி மாலை 5. 40 மணிக்கு குழிக்குள் விழுகிறான் சுஜித். அவன் விழுந்ததைப் பார்த்து பதறிப் போய் ஓடி வந்து காப்பாற்றப் பார்க்கிறார் தாய் கலா மேரி. ஆனால், முடியவில்லை. அவர் போட்ட கூச்சலில் ஊரே
கூடுகிறது. தீயணைப்புப் படையினருக்கு தகவல் போகிறது. அவர்கள் விரைந்து வருகிறார்கள்.
சற்று நேரத்தில் கூட்டம் அதிகரிக்கிறது. போலீஸார் வருகிறார்கள். அமைச்சர் விஜயபாஸ்கர் உள்ளிட்டோர் வருகிறார்கள். மக்கள் கூட்டம் அதிகரிக்கிறது. மீட்கும் முயற்சிகள் தொடங்குகின்றன.அதைத்தொடர்ந்து, குழந்தை சுஜித் முதலில் 26 அடி ஆழத்தில் சிக்கியிருக்கிறான். அப்போது அவனை தெளிவாக பார்க்க முடிந்திருக்கிறது. இரு
கைகளும் மேல் நோக்கிய நிலையில் தலையின் மேற்பகுதி மட்டும் தெரிகிறது. அழுகிறான். பேசுவதும் தெளிவாக கேட்கிறது. அதுவரை அவன் பாதுகாப்பான நிலையில்தான் இருந்திருக்கிறான்.ஆனால், நேரம் செல்ல, செல்ல அவன் மெதுவாக கீழ் நோக்கி சரிந்து
செல்ல ஆரம்பித்திருக்கிறான். பார்த்துக் கொண்டிருந்தபோதே சிறுவன் 88 அடிக்குப் போய் விட்டான். மணிகண்டன் டீம் முயற்சி செய்தபோது குழந்தை 26 அடியில்தான் இருந்துள்ளது. ராஜேஷ் டீம் வந்து முயற்சி செய்தபோதுதான் சிறுவன் 80 அடிக்குக் கீழ்
போனது தெரியவந்தது.
அதன் பிறகுதான் குழந்தையின் நிலைமை மோசமடைந்திருக்க வாய்ப்புள்ளது. ஆக்சிஜன் பற்றாக்குறை ஏற்பட்டிருக்கலாம். தலை மீது மண் சரிந்ததாகவும் தகவல்கள் வெளியாகின. அந்த சமயத்தில்தான் குழந்தையின் உயிருக்கு ஆபத்து ஏற்பட்டிருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது. காரணம் உடலை மீட்டபோது முழுமையான
உடல் பாகங்கள் கிடைக்கவில்லை என்கிறார்கள்.முழுமையாக உடல் பாகங்கள் கிடைக்காத அளவுக்கு இறந்த உடல் இருக்குமானால் அது எந்த அளவுக்கு சிதைந்து போயிருக்கக் கூடும் என்று யோசிக்க வைக்கிறது. எனவே குழந்தை சுஜித் இறந்தது சரியாக எப்போது
என்ற கேள்வி எழுகிறது.சுஜித் 2வது நாளிலேயே கூட இறந்திருக்கலாம் என்ற கூறப்படுகிறது. அதாவது தலையைச் சுற்றிலும் மண் விழுந்ததாக சொன்னபோதே குழந்தைக்கு
ஆபத்து தொடங்கியிருக்கலாம்.
தொடர்ந்து ஆக்சிஜன் செலுத்தப்பட்டு வந்தாலும் கூட, அதை நுகரும் சூழல் குழந்தைக்குக் கிடைக்காமல் போயிருக்கக் கூடும். மண் விழுந்து மேலும் அழுத்தியிருக்கக் கூடும். இப்படி பல்வேறு காரணிகள் குழந்தைக்கு எதிராக போனதால்தான் உயிரைக் காப்பாற்ற
முடியாமல் போனதாக கருதப்படுகிறது.பல மணி நேரம் இறந்த நிலையில், மண்ணுக்குள் புதைந்திருந்த காரணத்தாலும், ஈரம் காரணமாகவும், குழந்தையின் உடல் வேகமாக
அழுகியிருக்கலாம், சிதைந்திருக்கலாம் என்றும் சொல்லப்படுகிறது.மொத்தத்தில் அத்தனை பேரையும் ஏங்கித் தவிக்க வைத்த குழந்தை சுஜித்துக்கு இப்படி ஒரு வலியுடன் கூடிய முடிவு வந்திருக்கக் கூடாது. அதுதான் அனைவரின் மனதையும்
உடைய வைத்துள்ளது.
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>
16 October 2019
வெளிநாட்டிலிருந்து 40 வருடங்களின் பின் வந்து தாயைத் தேடிக் கண்டுபிடித்த பாச மகன்
டென்மார்க்கை சேர்ந்த இளைஞர் தனது தாயை தமிழ்நாட்டில் தேடி வந்த நிலையில் தற்போது அவர்களின் பாசப்போராட்டம் நெகிழ்ச்சியான முடிவை எட்டியுள்ளது.தமிழகத்தின் தஞ்சாவூரை சேர்ந்த
கலியமூர்த்தி – தனலட்சுமி தம்பதி வறுமை காரணமாக சென்னைக்கு 1979ஆம் ஆண்டு குடிபெயர்ந்த நிலையில் தங்களின் மகனை தத்து கொடுத்தார்கள்.ஒரு தன்னார்வத் தொண்டு நிறுவனம் மூலம் டென்மார்கில் வாழும் தம்பதிக்குத் தத்துக் கொடுக்கப்பட்ட சாந்தகுமார், டானிஸ்
எனும் தம்பதியால் டேவிட் கில்டென்டல் நெல்சன் என்ற பெயருடன் பாசமாக வளர்க்கப்பட்டார்.தற்போது வங்கி அதிகாரியாக
உள்ள சாந்தகுமாருக்கு திருமணமாகி குழந்தைகள் உள்ளனர்.இந்நிலையில், தன்னை பெற்ற
தாய் மற்றும் குடும்பத்தாரை காண அவருக்கு ஆசை ஏற்பட்ட நிலையில், கடந்த 2013ஆம் ஆண்டு இந்தியாவுக்கு வந்து உறவுகளை
தேடினார்.ஆனால், அவர்கள் கிடைக்காததால் டென்மார்குக்கு திரும்பின்னர்.பின்னர் ஒவ்வொரு
வருடமும் விடுமுறை நாட்களில் சாந்தகுமார் தனது தாய் மற்றும் குடும்பத்தாரை தேடி தமிழக தெருக்களில் அலைந்தார்.கூடவே, அவருக்கு மும்பையைச் சேர்ந்த குழந்தைகள் தத்தெடுப்பு குறித்து
தன்னார்வு தொண்டு
நிறுவனம் உதவி கிடைக்கவே அந்த நிறுவனத்தின் இயக்குநர் அருண் டோஹ்லி மற்றும் வழக்கறிஞர் அஞ்சலி பவர் ஆகியோருடன் சேர்ந்து
தேடுதலைத் தொடங்கினார். அப்போது
ஒரு சமயம் அம்மா உங்களை தேடி உங்கள் மகன் வந்திருக்கிறேன், எங்கு இருக்கிறாய் அம்மா என தனக்கு தெரிந்த தமிழில் பேசிக் கொண்டே தேடினார். மேலும், பார்ப்போரிடம் எல்லாம் அவங்க கிடைத்ததும் அவங்கள மகாராணி
போல் வைத்து பார்த்து
கொள்ள வேண்டும் என்று கலங்கினார்.இந்நிலையில், நீதிமன்றம் மூலம்
தனது ஆவணங்களை பெற்ற சாந்தகுமார் தனது
அண்ணன் ராஜன் என்பவரும் டென்மார்க்கில் தத்துக் கொடுக்கப்பட்டதை கண்டுபிடித்தார்.தனது அண்ணனை டென்மார்க்கில் பல்வேறு இடங்களில் தேடி அலைந்தார் சாந்தகுமார். இதேபோல், தஞ்சையில்பல்வேறு இடங்களில் தேடி அலைந்தும் சாந்தகுமாரின் தாய் தனலட்சுமி குறித்த அவரது குடும்பத்தார் குறித்து
தகவல் தெரியவில்லை.
இந்தசூழலில், தான் தனது தாய் சென்னைக்கு குடிபெயர்ந்தது அவருக்கு தெரிந்தது.பின்னர் டென்மார்குக்கு சென்ற அவருக்கு தாய் தனலட்சுமி சென்னையை அடுத்த மணலியில் இளைய மகன் சரவணனிடம் இருப்பது தெரியவந்தது.அதை அடுத்து சாந்தகுமார் மற்றும்
அவரது குழந்தைகள் சென்னையில் இருக்கும் தனலட்சுமியிடம் வீடியோ
அழைப்பில் பேசியுள்ளார். சில வருடங்களாகத் தாயைத் தேடி தமிழகம் வந்த சாந்தகுமார் தான் கற்றுக்கொண்ட சிறு சிறு
தமிழ் வார்த்தைகளில் தாய் உடல்நலம் விசாரிக்க, தாய் தனலட்சுமி கண் கலங்கினார். வரும் நவம்பர் மாதம் தாயைச் சந்திக்க டேவிட் சாந்தகுமார் டென்மார்க்கிலிருந்து தமிழகம் வருவதாகக் கூறியுள்ளாராம்.இது குறித்து
சாந்தகுமாருக்கு உதவிய வழக்கறிஞர் கூறுகையில், டென்மார்கைச் சேர்ந்த தம்பதிக்குத் தனது குழந்தையை தனலட்சுமி
தத்து கொடுத்த சில வருடங்களில் அவரின் கணவர் கலியபெருமாள் இறந்துவிட்டார்.
அடுத்தடுத்த நெருக்கடிகளில் நொடிந்து போன தனலட்சுமி சென்னையில் பல்வேறு இடங்களில் வேலை செய்து அவரின் இளைய மகன் உள்ளிட்ட பிள்ளைகளை வளர்த்துள்ளார்.சாந்தகுமாருக்குத் தாயிருக்கும் இடம் தெரிந்ததும், அவர் தொடர்பான
ஆவணங்கள் மற்றும் புகைப்படங்களைச் சரி பார்த்தோம். தனலட்சுமி சாந்தகுமார் மற்றும் ராஜன் உள்ளிட்டோரின் புகைப்படங்களை இதுநாள் வரை பத்திரமாக வைத்திருந்தார். அதன்மூலம், தனலட்சுமி தான் சாந்தகுமாரின் தாய் என்பதை உறுதி செய்தோம் என மகிழ்ச்சியுடன் கூறினார்.
14 October 2019
காணாமல் போன மகன் 20 வருடங்களுக்கு பின் கிடைத்த இன்ப அதிர்ச்சியில் தாய்
6 வயதில் காணாமல் போன மகனை 20 ஆண்டுகளுக்குப் பின்னர் தாய் ஒருவர் மீட்டுள்ள சம்பவம் அனைவரையும் நெகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.குறித்த சம்பவம் தமிழகத்தில் இடம்பெற்றுள்ளது.இந்த நெகிழ்ச்சி சம்பவம் தொடர்பில் மேலும் அறியமுடிவதாவது
, திட்டக்குடியை அடுத்த திருமாந்துறை கிராமத்தை சேர்ந்தவர் இந்திரா. கணவனை இழந்த நிலையில், மகன் மற்றும் மகளை
விவசாயக் கூலி
வேலை செய்து காப்பாற்றி வந்துள்ளார். 20 ஆண்டுகளுக்கு முன்பு தனது 6 வயது மகனை மரத்தடியில் அமர வைத்து விட்டு, வயலில் வேலை செய்யச் சென்ற அவர், திரும்பி வந்து பார்த்தபோது, மகனைக் காணாமல் பரிதவித்துள்ளார்.பல இடங்களில் தேடியும்
மகன் கிடைக்காத நிலையில், அன்றாடம் அழுது நொந்து கொண்டிருந்த அவர், தனது மகளுடன் பெங்களுர் பகுதியில் வீட்டு வேலைக்காகச் சென்றுவிட்டார். அவ்வப்போது சொந்த ஊருக்கு வரும் போது, மகனைப் பற்றிய தகவல் ஏதாவது கிடைக்கிறதா
என விசாரித்து வந்துள்ளார்.
இதனிடையே, மகளை வளர்த்து திருமணம் செய்து கொடுத்துவிட்டதால், சிலமாதங்களுக்கு முன்பு சொந்த ஊரான திருமந்துரைக்கு திரும்பியுள்ளார்.இந்த நிலையில், அண்மையில், ராமநத்தத்தில் உள்ள உறவுக்கார பெண் ஒருவரின் வீட்டிற்கு
$சென்றுள்ளார் இந்திரா. அப்போது அந்த உறவுக்காரப் பெண், தொழுதூர் பகுதியில் கட்டிட கூலி வேலைக்குச் சென்றபோது, தன்னுடன் ஒருவர் வேலை செய்ததாகவும், அந்த இளைஞர் இந்திராவின் கணவர் சரவணனின் சாயலில் இருந்ததாகவும் கூறியுள்ளார். இதனைத் தொடர்ந்து, அந்த இளைஞரைத் தேடி
உறவினர்களுடன் சென்று விசாரித்த போது, அவர் தனது பெயர் இம்ரான் என்றும், தனது தந்தை அபிபுல்லா ராமநத்தத்தில் இருப்பதாகவும் கூறியுள்ளார். ஆனால் இம்ரான் தன் மகன்தான் என்ற
உறுதியுடன் இருந்த தாய் இந்திரா, அபிபுல்லாவை சந்தித்து தன் மகன் காணாமல் போனதைக் கூறியுள்ளார். அதன்பின்னர், 15, 16 ஆண்டுகளுக்கு முன்பு 10 வயது சிறுவனாய் அவன் தெருவோரத்தில் அழுது கொண்டு நின்றதாகவும், அவனை அழைத்து வந்து தான் வளர்த்து வருவதாகவும் கூறிய அபிபுல்லா, முறைப்படி பொலிசாரிடம் கூறி முடிவு
காணக் கூறியுள்ளார்.
இதனைத் தொடர்ந்து, தாய் இந்திராவின் புகாரின் பேரில், விசாரணை செய்த பொலிசார், இம்ரான் என்ற பெயரில் வளர்ந்து வந்த அந்த இளைஞர், இந்திராவின் மகன்தான் என்பதை உறுதி செய்து தாயுடன் அனுப்பி வைத்தனர். 6 வயதில் காணாமல் போன அந்த சிறுவன் 10 வயது வரை ஒரு பெரியவரின் பராமரிப்பில் இருந்து வந்ததாகவும், அவர் விட்டுச் சென்றவுடன், அபிபுல்லாவின் பராமரிப்பில் வந்ததாகவும், சிறுவனின் தாய் இந்திரா தெரிவித்துள்ளார்.
யாருமற்ற நிலையில், வாழ்ந்து வந்த நிலையில், மீண்டும் தனது மகன் கிடைத்தது, பெரு வரம் கிடைத்ததற்கு ஒப்பானது என்று நெகிழ்கிறார் ஏழைத்தாய் இந்திரா, இந்த சம்பவம் அந்தப் பகுதி மக்களையும் பெரும் நெகிழ்ச்சியில், ஆழ்த்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
31 May 2019
கனரக வாகனத்தில் இந்தியாவை வலம் வரும் தமிழக மங்கை
தமிழகத்தைச் சேர்ந்த பெண்ணொருவர்,தனது அதீத திறமையினால் தன்னந்தனியாக 10 டயர்கள் கொண்ட கனரக லொறியை ஓட்டி சாதனை படைத்துள்ளார்.பெண்கள் இன்று பல துறைகளில் கால் பதித்து வருகின்றனர். குறிப்பாக அரசியலிலும் பெண்களின் பங்கு அதிகரித்து வருகிறது. நகரின் பல
இடங்களில் பெண்கள்
ஆட்டோ ஓட்டி செல்வதைப் பார்த்திருப்போம்.இந்நிலையில், தமிழகத்தின் சேலம் மாவட்டம் மேற்கு ராஜபாளையத்தைச் சேர்ந்த பெண்ணொருவர் கனரக லொறியை ஓட்டி சாதனைப் படைத்துள்ளார்.
கூலித் தொழிலாளியான ரெங்கையா என்பவரின் மனைவியான செல்லம்மாள்(48), கணவர் உடல்நலம் குன்றியதால்
குடும்ப பாரத்தை ஏற்றுக்கொண்டார்.இரண்டு குழந்தைகளுக்கு தாயான செல்லம்மாள் சிறிய ரக வாகனங்களை
இயக்கத் தொடங்கினார். 5 ஆண்டுகளுக்கு முன்பே ஓட்டுநர் பயிற்சி பெற்ற இவர் கனரக வாகனங்களையும் ஓட்ட ஆரம்பித்தார்.தற்போது
10 டயர்கள் கொண்ட லொறியை ஓட்டி, இந்தியா முழுவதும் வலம் வந்துகொண்டிருக்கிறார். செல்லம்மாள் மும்பையில் இருந்து சரக்கு ஏற்றிக்கொண்டு தூத்துக்குடிக்கு லொறியை ஓட்டி வந்த நிலையில், கப்பலூர் மேம்பாலம் அருகே தனியார்
பேருந்து ஒன்றின்
மீது மோதியதில் பக்கவாட்டில் கண்ணாடி உடைந்தது.இதுகுறித்து பொலிசார் விசாரணை நடத்தியபோதே செல்லம்மாளின் சாதனை வெளியுலகுக்கு தெரிய வந்தது. மேலும் இந்த விபத்துக்கு காரணம் தனியார் பேருந்து தான் என்பது தெரிய வந்தது.
இந்நிலையில் சாதனை குறித்து செல்லம்மாள் கூறுகையில் ‘கடந்த 5 ஆண்டுகளாக இந்தியாவில் காஷ்மீர், உத்தரபிரதேசம், பீகார், தமிழ்நாடு, உள்ளிட்ட அனைத்து மாநிலங்களுக்கும் நான்
சரக்கு வாகனங்களை ஓட்டிச் சென்று வருகிறேன்.அனைத்து மாநிலங்களிலும் காவல் துறையினர் மற்றும் போக்குவரத்து அதிகாரிகள் எனக்கு பக்கபலமாக உள்ளனர். என்னைப்போல
நிறைய பெண்கள்
ஓட்டுநராக உருவாக வேண்டும். அப்போதுதான் இந்த சமுதாயம் நன்றாக இருக்கும்’ எனத் தெரிவித்துள்ளார்.தற்போது செல்லம்மாளின் உழைப்பில், அவரது மகன்கள் பொறியியல் படிப்பு படித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>
18 May 2019
திருச்சியில் தங்கையின் திருமணத்தை நடக்க வழிவிட்ட அண்ணன்
தமிழகத்தில் தந்தை இறந்த தகவலை மறைத்து சகோதரியின் திருமணத்தை நடத்தி முடித்த அண்ணனின் செயல் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.திருச்சியை சேர்ந்த மதியழகன் என்பவரின் மகன் ராஜகுமார். செம்பரை கிராமத்தை சேர்ந்த நடராஜனின் மகள் கனிமொழி.ராஜகுருவுக்கும், கனிமொழிக்கும்
சில மாதங்களுக்கு முன்னர் திருமண நிச்சயதார்த்தம் நடந்த நிலையில் நேற்று திருமணம் செய்ய முடிவு செய்யப்பட்டு திருமண மண்டபம் முன்பதிவு செய்யப்பட்டிருந்தது.மணமகள் கனிமொழியின் தந்தை நடராஜனுக்கு தலையில் கட்டி ஏற்பட்டு பாதிக்கப்பட்டதால், அவர் மருத்துவமனையில் ஒரு மாதமாக தங்கி சிகிச்சை பெற்று வந்தார்.இந்நிலையில், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நடராஜன் நேற்று முன்தினம் சிகிச்சை பலனின்றி இறந்தார்.
இந்த விடயம் மணமகளின் அண்ணன் உள்ளிட்ட சிலருக்கு மட்டுமே தெரியும். தந்தை இறந்த தகவலை தெரிவித்தால் தனது சகோதரி கனிமொழி திருமணம் நின்று விடும் என்று கருதிய அவர் அண்ணன், அந்த தகவலை மறைத்து, சகோதரியின் திருமணத்துக்கு செல்லாமல் மருத்துவமனையில் இருந்து விட்டார்.நேற்றுக் காலை ராஜகுரு- கனிமொழி
திருமணம் நல்ல படியாக நடந்து முடிந்தது. பின்னர் மணமகளின் உறவினர் ஒருவர் நடராஜன் இறந்த தகவலை அங்கிருந்த சிலரிடம் தெரிவிக்கவே, அந்த தகவல் திருமண மண்டபம் முழுவதும் பரவியது.இதைக்கேட்ட கனிமொழி,அவரது தாய் உள்ளிட்ட உறவினர்கள்
அனைவரும் கதறி அழுதனர்.
மணமகன் குடும்பத்தினர் அனைவரும் பெரும் அதிர்ச்சியடைந்தனர்.இதையடுத்து அனைவரும் மருத்துவமனை சென்று உடலை ஊருக்கு கொண்டு சென்றனர். நேற்று மாலை நடராஜன் இறுதிச்சடங்கு நடைபெற்றது. இதில் மணக்கோலத்துடன்
மணமகள் கலந்து கொண்டார்.காலையில் மகள் திருமணம் நடந்த நிலையில், மாலையில் தந்தையின் இறுதிச் சடங்கு நடைபெற்றது அனைவரையும்
சோகத்தில் ஆழ்த்தியது.
16 April 2019
ஒடிசாவில் நிர்பய் ஏவுகணை வெற்றிகரமாக பரிசோதிக்கப்பட்டது
இந்திய இராணுவ ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுத்துறையான டி.ஆர்.டி.ஓ. பல்வேறு சக்திவாய்ந்த ஏவுகணைகளை தயாரித்து வருகிறது.
அவ்வகையில், கடல், ஆகாயம் மற்றும்
தரையில் இருந்து சுமார் ஆயிரம் கிலோமீட்டர் தூரம் வரை பாய்ந்து சென்று எதிரிகளின் இலக்கை குறிதவறாமல் தாக்கி அழிக்கவல்ல ´நிர்பய்’
ஏவுகணை ஒடிசாவில்15,04,, 2019, இன்று வெற்றிகரமாக
பரிசோதிக்கப்பட்டது.
ஒடிசா மாநிலத்தின் பாலசோர் கடல்பகுதியில் உள்ள ஏவுதளத்தின் மூன்றாவது முனையத்தில் இருந்து இன்று காலை 11.44 மணிக்கு ஏவப்பட்ட ´நிர்பய்’ ஏவுகணை 42 நிமிடம் 23 வினாடிகள் தொடர்ந்து பறந்து, நிர்ணயிக்கப்பட்டிருந்த இலக்கை வெற்றிகரமாக தாக்கி அழித்ததாக இந்திய இராணுவ ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுத்துறை
அதிகாரிகள் தெரிவித்தனர்.
விண்ணில் அதிக உயரத்தில் பறந்து தாக்குவதுடன் தரைமட்டத்தில் சுமார் 100 மீட்டர் உயரத்தில் பறக்கு இலக்கையும் மணிக்கு சுமார் 865 கிலோமீட்டர் வேகத்தில் தாக்கும் திறன் ´நிர்பய்’ ஏவுகணைக்கு உண்டு என்பது குறிப்பிடத்தக்கது.
15 April 2019
ஒருபோதும்தமிழன் கண்ணீரில் தாமரை மலராது சீறிய சீமான்
நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு தூத்துக்குடியில் நாம் தமிழர் கட்சி சார்பில் தேர்தல் பிரச்சாரக் கூட்டம் நேற்றிரவு நடைபெற்றது. இக்கூட்டத்தில் நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்
கலந்துகொண்டு பேசினார்.
அப்போது அவர், “தண்ணீரில் வேண்டுமானால் தாமரை மலரலாம். தமிழன் கண்ணீரில் ஒருபோதும் தாமரை மலரவே மலராது. குளத்தில் வேண்டுமானால் மலரலாம். தமிழன் நிலத்தில் ஒருபோதும் தாமரை மலராது” என்று பேசினார். அதேபோல கன்னியாகுமரியில் இன்று நாம் தமிழர் தேர்தல் பரப்புரை கூட்டம் நடைபெற்றது. அதில் பேசிய சீமான், “இன்னும் எத்தனை நாட்களுக்கு மக்களை மடையர்கள் கூட்டம் என கருதி
இவர்கள் ஆட்சி செய்வது?
மக்கள் ஏழையாகிவிட்டார்கள் என்று கூறுகிறார்கள். 72 ஆண்டுகால விடுதலை இந்தியாவில் 50 ஆண்டுகளாக காங்கிரஸ் கட்சி ஆட்சி செய்துள்ளது. மக்கள் வறுமையில் இருக்கிறார்கள் என்றால் அதற்கு பொறுப்பேற்க வேண்டிய கட்சிகள் காங்கிரஸும், பாரதீய ஜனதாவும். வெட்கமில்லாமல் வங்கியில் 6,000 ரூபாய் போ
டுவோம் என்கிறார்கள்.
விவசாயிகள் மீது இவ்வளவு அக்கறை காட்டும் மோடி உங்கள் வீட்டு வாசலில் விவசாயிகள் நிர்வாணமாக நின்றபோது ஏன் அக்கறை காட்டவில்லை? மக்கள் மீது அதீத பற்று வைத்திருக்கும் மோடி கடந்த ஐந்தாண்டு ஆட்சியின்போது நிதிநிலை அறிக்கையில் இத்திட்டத்தை அறிமுகப்படுத்தி இந்நேரத்திற்கு நிறைவேற்றியிருக்கலாமே”
என்று பேசினார்.
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>
06 April 2019
இந்திய வெளியுறவு அதிகாரி போல் அரசாங்கத்திற்கே பெப்பே காட்டிய பெண்
இந்திய வெளியுறவு அதிகாரி போல் போலி ஐ.டி கார்டு தயாரித்து மோசடியில் ஈடுபட்ட பெண்ணை நொய்டாவில் பொலிசார் கைது செய்தனர்.டெல்லியைச் சேர்ந்த ஷோயா கான் என்ற பெண் எம்.ஏ அரசியல் அறிவியல் படித்துள்ளார். ஐ.ஏ.எஸ் அதிகாரியாக வேண்டும் என்பது தான் இவரது கனவு, இதற்காக கடந்த 2017-ஆம் ஆண்டு ஐ.ஏ.எஸ்
தேர்வு எழுதியுள்ளார்.
ஆனால் அதில் தேர்ச்சி பெறவில்லை. இருப்பினும் அதிகாரி ஆக வேண்டும், பேர் புகழோடு திகழ வேண்டும் என்ற ஆசை அவரை விட்டு போகாத காரணத்தினால் தான் நினைத்ததை அடைய வேண்டும் சில குறுக்க வழிகளை கையாண்டுள்ளார்.அதன்படி, இவர் தனது
இந்திய வெளியுறவுத்துறை அதிகாரி என போலியான ஐ.டி கார்டு ஒன்றை தயாரித்துள்ளார். அத்துடன் போலியான இ-மெயில் ஐ.டி-யை உருவாக்கியுள்ளார்.
அதுமட்டுமின்றி செல்போன் ஆப் மூலம் தனது குரலை ஆண் குரலாக மாற்றி பேசியுள்ளார்.இவரது கணவர் வங்கியில் வேலை செய்து, அங்கிருந்து வெளியேறியவர் என்பதால் இவருக்கு போலியான் ஐ.டி.கார்டு போன்றவைகளை ஷோயா தயாரித்து
கொடுத்துள்ளார்.
அதன் பின் ஒரு அரசு அதிகாரி போலவே ஷோயா வலம்வர தொடங்கியுள்ளார். 18 மாதங்கள் ஒரு அரசு அதிகாரி போல் வலம் வந்துள்ளார். இவரின் இந்த திருட்டுத்தனத்தை அறியாமல் இவருக்கு பொலிஸ் பாதுகாப்பு வேறு போடப்பட்டுள்ளது.இந்நிலையில்,
கடந்த வாரம் ஷோயா உத்தரப் பிரதேசம் மீரட்டில் நடந்த பிரதமர் மோடி நிகழ்ச்சியில் கலந்துகொண்டுள்ளார்.
அங்கும் ஒரு அதிகாரி போல் வலம்வர, இவரை பிரதமரின் பாதுகாப்பு அதிகாரி என அனைவரும் நினைத்துள்ளனர். பல காவல் அதிகாரிகளும் இவருக்கு சல்யூட் அடித்துள்ளனர்.
இதையடுட்த்து நொய்டாவின் கவுதம் புத்த நகர் எஸ்.எஸ்.பி வைபாவ் கிருஷ்ணாவை செல்போனில் தொடர்பு கொண்ட இவர் தனக்கு பாதுகாப்பு கொடுக்கும் பொலிசாரை அனுப்பிவைக்க தாமதப்படுத்தியதாக திட்டியுள்ளார்.அதன் பின்னரே இவர் மீது சந்தேகம் வந்துள்ளது. இதனால் அவரது வீட்டை சோதனை செய்து போது பொலிசாருக்கு அதிர்ச்சி தகவல்கள் கிடைத்துள்ளன.
இதைத் தொடர்ந்து நடத்திய விசாரணையில், அவர் உண்மையான அதிகாரியே இல்லை போலியான ஐ.டி. கார்டை தயாரித்து 18 மாதங்களாக மோசடியில் ஈடுபட்டிருப்பது தெரியவந்துள்ளது.
இதையடுத்து அவர் தங்கியிருந்த 3 படுக்கையறைகள் கொண்ட வீட்டை காவல்துறையினர் முடக்கியுள்ளனர். அத்துடன் 2 சொகுசுக் கார்கள், 2 லேப்டாப்கள், 2 போலி ஐ.டி கார்டுகள், 2 வாக்கி டாக்கிகள், 4 ஸ்மார்ட்போன்கள் மற்றும் 2 போலி துப்பாக்கிகளை
பறிமுதல் செய்துள்ளனர்.
அவரது கணவரையும் பொலிசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.இவர் கோ டாடி என்ற இணையதளத்தில் பணம் செலுத்தி போலியான இணைய தளம் ஒன்றையும் உ
ருவாக்கியிருப்பது தெரியவந்துள்ளது. அத்துடன் அரசியல் பிரபலங்கள் பலருடன் புகைப்படம் எடுத்துக்கொண்டிருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
மேலும், இவர் போலியான ஐ.டி கார்டு,
தயாரித்து மோசடியில் ஈடுபடும் நபர் தான் என்றும், இவருக்கு வெளிநாட்டில் இருக்கும் ஏஜென்சிகளுக்கு எந்த தொடர்பும் இல்லை எனவும்தெரியவந்துள்ளது.
23 March 2019
திருச்சியில் உயிரிழந்த பெண்ணுக்கு திடீரென உயிர் வந்த அதிசயம்
தனியார் மருத்துவமனையால் இறந்துவிட்டதாக அறிவிக்கப்பட்ட பெண், அரசு மருத்துவமனையில் உயிருடன் இருந்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
திருச்சியில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.
திருச்சி மாவட்டத்தை சேர்ந்த சுமதி என்பவர் கடந்த ஞாயிற்றுக்கிழமையன்று தீக்குளித்து தற்கொலைக்கு முயன்றார். அவரை காப்பற்ற சென்ற போது அவருடைய கணவர் முருகேசனும்
தீக்காயமடைந்தார்.
உடனடியாக மீட்கப்பட்ட சுமதி மணப்பாறையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவர் இரண்டு நாட்களாக சிகிச்சை பெற்று வந்தார்.
திடீரென அவர் உயிரிழந்துவிட்டதாக மருத்துவமனை நிர்வாகம் கூறியது.
இதனை அடுத்து, வேகமாக மணப்பாறை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.
அங்கு சிகிச்சை மேற்கொண்ட மருத்துவர்கள் சுமதி உயிருடன் இருப்பதை உறுதி செய்து, தொடர்ந்து சிகிச்சை அளித்து வருகின்றனர்.
இதுசம்மந்தமாக சுமதியின் உறவினர்கள் பொலிஸ் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளனர்.
ஆனால் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என தெரிகிறது. இதனால் ஆத்திரமடைந்த உறவினர்கள் தனியார் மருத்துவமனையை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.
சம்பவம் அறிந்து வந்த பொலிஸார் சமாதானம் செய்து வீட்டிற்கு
அனுப்பி வைத்தனர்
13 March 2019
கிளியை கண்டுபிடித்து தருபவருக்கு காத்திருக்கும் பரிசு
உத்தரப்பிரதேச முன்னாள் அரச குடும்பத்தைச் சேர்ந்த ஒருவர் காணாமல் போன தனது கிளியை கண்டுபிடித்து தருவோருக்கு ரூ.20 ஆயிரம் பரிசு தரப்படும் என்று அறிவித்திருப்பது
ஆச்சரியத்தை ஏற்படுத்தியிருக்கிறது.உத்தரப்பிரதேச மாநிலம் ராம்பூரை சேர்ந்தவர் சனம் அலி கான் (37). இவர் முன்னாள் அரச குடும்பத்தை சேர்ந்தவர். அவர் கடந்த 9 ஆண்டுகளாக ஒரு பச்சைக் கிளி
வளர்த்து வந்தார்.
நன்றாக பேசும் அந்த கிளிக்கு, மித்து என்கிற பவுலி என பெயரிட்டு இருந்தார். அந்த கிளியை கடந்த சில நாட்களாக காணவில்லை. பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை.காணாமல் போன கிளியின் போட்டோ
‘வாட்ஸ் அப்’பில் வெளியிடப்பட்டது. நண்பர்கள்
மற்றும் உறவினர்களுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. இருந்தும் எந்த தகவலும் இல்லை.
எனவே, காணாமல் போன கிளியை கண்டுபிடித்து தருவோருக்கு ரூ.20 ஆயிரம் பரிசு வழங்கப்படும் என
அறிவிக்கப்பட்டுள்ளது. இதுதவிர ரிக்ஷாவில் ஒலி பெருக்கி கட்டி அதன் மூலம் மைக்கில் அறிவிப்புகள் வெளியிடப்படுகின்றன.இந்த கிளி குறித்து சனம் அலிகான் கூறும்போது, 1998-ம் ஆண்டு வெளியான மவுலி என்ற இந்தி படத்தின் பெயரை இதற்கு சூட்டினேன். அது கிளி பற்றிய படமாகும். நாங்கள் டெல்லிக்கு சென்றிருந்தபோது அதை பராமரித்து வந்தவரின் கவனக்குறைவால் அது காணாமல் போய்விட்டது.
அது மிகவும் புத்திசாலி. கேட்கும் கேள்விகளுக்கு பதில் சொல்லும். நண்பர்கள் மற்றும் உறவினர்களுக்கு ஸ்கைப் ஆக அதை பயன்படுத்தி வந்தோம். அதை கண்டுபிடித்து ஒப்படைப்பவர்களுக்கு ரூ.20 ஆயிரம் பரிசு வழங்கப்படும் என்றார்.சனம் அலிகானின் சகோதரர் சகாப்சதா சல்மான் அலிகான் கூறும்போது, கிளி காணாமல் போனது எங்கள்
குடும்பத்துக்கு பேரிழப்பு.
கிளி மித்துவை மிகவும் அன்புடன் வளர்த்து வந்தோம். அது மீண்டும் திரும்பி வர வேண்டும் என பிரார்த்திக்கிறோம் என்றார். இவர் கடந்த 2014-ம் ஆண்டு நடந்த பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட்டு தோல்வி
அடைந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
08 March 2019
தாயாருக்கு சிறுநீரகத்தை தானம் செய்ய நீதிமன்றத்தை நாடிய மகன்
புதுச்சேரியில் மரணப்படுக்கையில் உள்ள தாயாருக்காக ஒரு சிறுநீரகத்தை தானம் செய்ய மகனுக்கு சட்டத்துக்கு உட்பட்டு அனுமதி வழங்க வேண்டுமென உடல் உறுப்புகள் மாற்று அறுவை சிகிச்சை அங்கீகாரக் குழுவுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
புதுச்சேரியைச் சேர்ந்த 53 வயது வாணி என்ற பெண்மணி சிறுநீரகக் கோளாறு ஏற்பட்டு சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். மரணப்படுக்கையில் உள்ள அவருக்கு நெருங்கிய உறவினர்கள் ஒரு சிறுநீரகத்தை தானம் செய்தால் பிழைக்க வாய்ப்புள்ளதாக
மருத்துவர்கள் கூறினர்.
இதைத்தொடர்ந்து அவருடைய மகன் செந்தில்குமார் தனது ஒரு சிறுநீரகத்தை தானம் செய்ய முன்வந்தார். அதற்கு மருத்துவ அதிகாரிகளும் சம்மதம் தெரிவித்தனர். ஆனால், சம்பந்தப்பட்ட தனியார்
மருத்துவமனை, இதுதொடர்பாக உடல், உறுப்பு மாற்று அ
றுவை சிகிச்சை அங்கீகாரக் குழுவின் ஒப்புதலை கோரியது. அந்த ஒப்புதல் குழு, சம்பந்தப்பட்ட நபரின் மனைவி ஒப்புதல் அளித்தால் மட்டுமே அவரது சிறுநீரகத்தை தானம் செய்ய முடியும்
எனக்கூறி மறுத்தது.
இதையடுத்து செந்தில்குமார் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இதுதொடர்பாக அவர் தாக்கல் செய்த மனுவில் ‘மரணப்படுக்கையில் உள்ள எனது தாயாரைக் காப்பாற்ற உடனடியாக எனது சீறுநீரகத்தை தானம் செய்ய
வேண்டியுள்ளது.
தற்போது நான் மனைவியை பிரிந்து வாழ்கிறேன். ஆனால் மனைவியுடன் வாழ்கிறேன் எனக் கூறினால்தான் எனது சிறுநீரக அறுவை சிகிச்சைக்கு அதிகாரிகள் ஒப்புதல் அளிப்பார்கள் என நினைத்து
மனைவியுடன் வாழ்வதாக தெரிவித்தேன். தற்போது மனைவியின் ஒப்புதல் கோருகின்றனர். அது நடக்காத காரியம் என்பதால் எனது சிறுநீரகத்தை தாயாருக்கு தானம் செய்ய அனுமதியளிக்க சம்பந்தப்பட்ட குழுவுக்கு உத்தரவிட வேண்டும்’ என்று கோரியிருந்தார்.
இந்த வழக்கு நேற்று நீதிபதி கே.ரவிச்சந்திரபாபு முன்பு நடந்தது. அப்போது நீதிபதி உணர்ச்சிவசப்பட்டு அழுதார்.
அதைப் பார்த்த
கூடுதல் அரசு தலைமை வழக்கறிஞர் எஸ்.ஆர்.ராஜகோபால், இதுதொடர்பாக தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்கிறேன் என்றார்.
அதையடுத்து நீதிபதி ‘இந்த வழக்கில் உடல் உறுப்பு மாற்று
அறுவை சிகிச்சை அங்கீகாரக் குழு, மனுதாரரிடம்
புதிதாக வாக்குமூலம் பெற்று அதன் அடிப்படையில் அவரது சிறுநீரகத்தை தாயாருக்கு தானமாக அளிக்க அனுமதியளிக்க வேண்டும்” என உத்தரவிட்டார். நீதிபதி கண்ணீர் விட்டு அழுததால், சிறிதுநேரம் நீதிமன்ற வளாகம் அமைதியானது.
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>
27 February 2019
இந்தியா-பாகிஸ்தான் இடையில் போர் மூளும் ஆபத்து
இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே ஏற்பட்டுள்ள பதற்றம்தற்போது டெல்லியை மையப்படுத்திய வான்பரப்பை இந்தியா அவசரமாக மூடும் சூழல் முதல் எல்லையில் இரண்டுதரப்பும் கடும் எறிகணைகளை வீசிவரும் நிலைமைவரை நகர்ந்துவிட்டது.இன்று இந்திய வான்பரப்பில் பாகிஸ்தானிய போர்விமானங்கள் பிரவேசித்ததையடுத்துஇந்தியத்தரப்பில் சர்வதேச எல்லைக்கட்டுப்பாட்டுப்பகுதியில் ராணுவத்தினலும் எல்லைப்பாதுகாப்புப் படையினர், குவிக்கப்பட்டுவருகின்றனர்.
அத்துடன் இந்தப் பிராந்தியங்களில் உள்ள சகல பாடசாலைகளும் தற்காலிகமாக மூடப்பட்டுன. இந்த பகுதிகளில் இருக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு அப்புறப்படுத்தப்பட்டுவருகின்றனர்.இதற்கிடையே காஷ்மீர் ரஜவுரி பகுதியில் பறந்த பாகிஸ்தானுக்குச் சொந்தமான எப்-16 ரக விமானத்தை இந்தியராணுவத்தினர் சுட்டு வீழ்த்தியதாக
கூறப்படுகிறது.
இதற்குப்பதிலாக ஜம்மு, ரஜவுரி, பூஞ்ச் ஆகிய மாவட்டங்களில் முளில்நேற்று இரவு முதல் பாகிஸ்தானிய ராணுவம் எறிகணை மற்றும் துப்பாக்கித் தாக்குதல்களை நடத்திவருகின்றனர் இதற்குப்பதிலடியாக
இந்திய ராணுவம்; 5 பாகிஸ்தானிய நிலைகளை அழித்ததாக கூறப்பட்டுள்ளது.இந்த நிலையில், அடுத்த 72 மணிநேரத்துக்குள் இந்தியாவுடன் போர் ஏற்பட்டால், அது இரண்டாம் உலகப்
போரைக் காட்டிலும், மிகப்பெரியதாக இருக்கும் என்று பாகிஸ்தானியத்தரப்பில் கூறப்பட்டுள்ளது.
அடுத்துவரும் 3 நாட்கள் மிக முக்கியமானவை. இப்போதுள்ள சூழல் அடுத்துவரும் நாட்களில் போராக மாறலாம், அல்லது அமைதிக்கும் திரும்பலாம் என பாகிஸ்தானியத் தரப்பில்
தெரிவிக்கப்பட்டுள்ளது.
20 February 2019
இராணுவ மேஜரின் உடலை முத்தமிட்டு சல்யூட் அடித்த மனைவி
நாட்டுக்காக உயிரை தியாகம் செய்த ராணுவ அதிகாரியின் உடலுக்கு அவரது மனைவி, முத்தமிட்டு அன்பை வெளிப்படுத்திய நிகழ்வு காண்போரை கண் கலங்க வைத்துள்ளது.
ஜம்மு காஷ்மீர் மாநிலம் புல்வாமாவில் பயங்கரவாதிகளுடனான சண்டையில் உத்தரகாண்டைச் சேர்ந்த மேஜர் தவுண்டியால் வீர மரணம் அடைந்தார் அவரது உடல் நேற்றைய டேராடூன்
கொண்டு வரப்பட்டது.
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>
04 February 2019
குழந்தைகளையும் கொன்று தற்கொலைக்கு முயன்ற தாய்
<
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>
மாமியாருடன் மீன் குழம்பு சம்மந்தாக நடந்த பிரச்சினையில், மருமகள் தனது குழந்தைகளை கொன்றுவிட்டு தானும் தற்கொலைக்கு முயற்சித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் சந்தைமேடு பகுதியை சேர்ந்தவர் பிரபு. இவரது
மனைவி அம்மு.இவர்களுக்கு 2 மற்றும் 8 வயதில் இரு மகன்கள் இருந்தனர். பிரபுவுடன் அவரது தாய் மீனா வசித்து வந்தார். 2 மாதங்களுக்கு முன்னர் உடல்நலக்குறைவால்
பிரபு இறந்து விட்டார்.
இந்நிலையில் அம்மு தனது மாமியார் மீனா மற்றும் தனது இரு பிள்ளைகளுடன் வசித்து வந்தார். நேற்று காலை மாமியார் மீனா, மருமகள் அம்முவிடம் தனக்கு மீன் குழம்பு சமைத்து தரும்படி கேட்டுள்ளார். இதனால், அவர்கள் இருவருக்கும் இடையே சண்டை
ஏற்பட்டுள்ளது.
இதனால் மனமுடைந்த அம்மு, தனது இரு பிள்ளைகளுக்கு விஷம் கொடுத்துவிட்டு தாமும் விஷம் அருந்தினார். ஆபத்தான் நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர்களில் அம்முவின் குழந்தைகள் இறந்துவிட, அம்மு ஆபத்தான நிலையில் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார். மீன் குழம்புக்காக ஒரு குடும்பமே சீரழிந்து போன சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Subscribe to:
Posts (Atom)