சிறுவன் சுஜித் ஆழ்த்துளை கிணற்றில், கிட்டத்தட்ட 80 மணி நேரம் உடல் மண்ணுக்குள் இருந்துள்ளது. மிகவும் மோசமான முறையில் சிதைந்த நிலையில்தான் உடலை மீட்டதாக சொல்கிறார்கள். எனவே குழந்தையின் உடல் இந்த அளவுக்கு எப்படி சிதைந்து,
அழுகிப் போனது என்ற கேள்விகள் பல எழுந்துள்ளன.கடந்த 25ம் திகதி மாலை 5. 40 மணிக்கு குழிக்குள் விழுகிறான் சுஜித். அவன் விழுந்ததைப் பார்த்து பதறிப் போய் ஓடி வந்து காப்பாற்றப் பார்க்கிறார் தாய் கலா மேரி. ஆனால், முடியவில்லை. அவர் போட்ட கூச்சலில் ஊரே
கூடுகிறது. தீயணைப்புப் படையினருக்கு தகவல் போகிறது. அவர்கள் விரைந்து வருகிறார்கள்.
சற்று நேரத்தில் கூட்டம் அதிகரிக்கிறது. போலீஸார் வருகிறார்கள். அமைச்சர் விஜயபாஸ்கர் உள்ளிட்டோர் வருகிறார்கள். மக்கள் கூட்டம் அதிகரிக்கிறது. மீட்கும் முயற்சிகள் தொடங்குகின்றன.அதைத்தொடர்ந்து, குழந்தை சுஜித் முதலில் 26 அடி ஆழத்தில் சிக்கியிருக்கிறான். அப்போது அவனை தெளிவாக பார்க்க முடிந்திருக்கிறது. இரு
கைகளும் மேல் நோக்கிய நிலையில் தலையின் மேற்பகுதி மட்டும் தெரிகிறது. அழுகிறான். பேசுவதும் தெளிவாக கேட்கிறது. அதுவரை அவன் பாதுகாப்பான நிலையில்தான் இருந்திருக்கிறான்.ஆனால், நேரம் செல்ல, செல்ல அவன் மெதுவாக கீழ் நோக்கி சரிந்து
செல்ல ஆரம்பித்திருக்கிறான். பார்த்துக் கொண்டிருந்தபோதே சிறுவன் 88 அடிக்குப் போய் விட்டான். மணிகண்டன் டீம் முயற்சி செய்தபோது குழந்தை 26 அடியில்தான் இருந்துள்ளது. ராஜேஷ் டீம் வந்து முயற்சி செய்தபோதுதான் சிறுவன் 80 அடிக்குக் கீழ்
போனது தெரியவந்தது.
அதன் பிறகுதான் குழந்தையின் நிலைமை மோசமடைந்திருக்க வாய்ப்புள்ளது. ஆக்சிஜன் பற்றாக்குறை ஏற்பட்டிருக்கலாம். தலை மீது மண் சரிந்ததாகவும் தகவல்கள் வெளியாகின. அந்த சமயத்தில்தான் குழந்தையின் உயிருக்கு ஆபத்து ஏற்பட்டிருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது. காரணம் உடலை மீட்டபோது முழுமையான
உடல் பாகங்கள் கிடைக்கவில்லை என்கிறார்கள்.முழுமையாக உடல் பாகங்கள் கிடைக்காத அளவுக்கு இறந்த உடல் இருக்குமானால் அது எந்த அளவுக்கு சிதைந்து போயிருக்கக் கூடும் என்று யோசிக்க வைக்கிறது. எனவே குழந்தை சுஜித் இறந்தது சரியாக எப்போது
என்ற கேள்வி எழுகிறது.சுஜித் 2வது நாளிலேயே கூட இறந்திருக்கலாம் என்ற கூறப்படுகிறது. அதாவது தலையைச் சுற்றிலும் மண் விழுந்ததாக சொன்னபோதே குழந்தைக்கு
ஆபத்து தொடங்கியிருக்கலாம்.
தொடர்ந்து ஆக்சிஜன் செலுத்தப்பட்டு வந்தாலும் கூட, அதை நுகரும் சூழல் குழந்தைக்குக் கிடைக்காமல் போயிருக்கக் கூடும். மண் விழுந்து மேலும் அழுத்தியிருக்கக் கூடும். இப்படி பல்வேறு காரணிகள் குழந்தைக்கு எதிராக போனதால்தான் உயிரைக் காப்பாற்ற
முடியாமல் போனதாக கருதப்படுகிறது.பல மணி நேரம் இறந்த நிலையில், மண்ணுக்குள் புதைந்திருந்த காரணத்தாலும், ஈரம் காரணமாகவும், குழந்தையின் உடல் வேகமாக
அழுகியிருக்கலாம், சிதைந்திருக்கலாம் என்றும் சொல்லப்படுகிறது.மொத்தத்தில் அத்தனை பேரையும் ஏங்கித் தவிக்க வைத்த குழந்தை சுஜித்துக்கு இப்படி ஒரு வலியுடன் கூடிய முடிவு வந்திருக்கக் கூடாது. அதுதான் அனைவரின் மனதையும்
உடைய வைத்துள்ளது.
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>
0 கருத்துகள்:
Post a Comment