31 May 2016
ஆசிரியர்கள் வகுப்பறையில் செல்போன் பயன்படுத்தக் கூடாது.அரசு தடை!
சென்னை வகுப்பறையில் ஆசிரியர்கள் செல்போன் பயன்படுத்தக் கூடாது, பணி நேரத்தில் பள்ளியை விட்டு வெளியே செல்லக் கூடாது என்பது உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகளை தமிழக அரசின் பள்ளிக்கல்வித்துறை விதித்துள்ளது. தமிழகம் முழுவதும் கோடை
விடுமுறை
முடிந்து நாளை அரசுப் பள்ளிகள், அரசு உதவி பெறும் பள்ளிகள் திறக்கப்படுகின்றன. பெரும்பாலான தனியார் பள்ளிகளும் கூட திறக்கப்படவுள்ளன. இந்த நிலையில் மாணவர்களுக்கும்,
ஆசிரியர்களுக்கும் பல்வேறு அறிவுறுத்தல்களை பள்ளிக்கல்வித்துறை வழங்கியுள்ளது. அதில் மாணவர்கள் செல்போன்களை பள்ளிக்
கூடத்திற்குக் கொண்டு வரக் கூடாது என்பது
முக்கிய
அறிவுறுத்தலாக இருந்தது. இந்த நிலையில் தற்போது
ஆசிரியர்களுக்கும் செல்போன் பயன்பாட்டில் கட்டுப்பாட்டைக் கொண்டு வந்துள்ளது பள்ளிக்கல்வித்துறை. இதுதொடர்பாக அது விடுத்துள்ள சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:
இங்குஅழுத்தவும் நவற்கிரி.கொம் செய்திகள் >>> 26 May 2016
கொடூரமான வெயில் கொடுமைக்கு 317 பேர் பலி!!!
ஐதராபாத்:தெலுங்கானா மாநிலத்தை புரட்டி எடுக்கும் கொடூரமான வெயிலில் சிக்கி, இதுவரை, 317 பேர் உயிரிழந்துள்ளனர்.
வட மாநிலங்களில், இந்த ஆண்டு கடுமையான கோடை நிலவி வருகிறது. முன்னெப்போதும் இல்லாத வகையில், முக்கிய நகரங்களில், 50 டிகிரி 'செல்சியஸ்' வெப்பம் நிலவி வருகிறது.
இதுபோலவே
, தென் மாநிலங்களில் ஒன்றான தெலுங்கானாவிலும் வெப்பத்தின் தாக்கம் அதிகமாக உள்ளது. 'ரோனு' புயல் கடந்து சென்ற பின், அங்கு, வெப்ப காற்று வீசி வருகிறது. அடிலாபாத், மெகபூப் நகர், கரீம்நகர் உள்ளிட்ட பகுதிகளில், 45 டிகிரி செல்சியஸ் வெப்பம் பதிவாகி
வருகிறது.
இந்த கோடைகாலத்தில், கடுமையான வெயிலின் வெப்பக்காற்றில் சிக்கி, இதுவரை, 317 பேர் உயிரிழந்துள்ளனர். நல்கொண்டா மாவட்டத்தில் அதிகபட்சமாக, 91 பேர், வெயிலுக்கு பலியாகி விட்டனர். '
அடுத்த இரண்டு
நாட்களுக்கு வறண்ட வானிலை நிலவுவதுடன், கடுமையான அனல் காற்று வீசும். மக்கள் முன்னெச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்' என, வானிலை மையம் எச்சரித்துள்ளது.
இங்குஅழுத்தவும் நவற்கிரி.கொம் செய்திகள் >>>23 May 2016
இயற்கை அனர்த்தங்களால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக இந்திய உதவிப் பொருட்கள் வந்தன
சிறிலங்காவில் இயற்கை அனர்த்தங்களால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக இந்திய விமானப்படையின் இராட்சத போக்குவரத்து விமானத்தில் எடுத்து வரப்பட்ட உதவிப் பொருட்கள், சிறிலங்காவின் அனர்த்த முகாமைத்துவ அமைச்சர் அனுர பிரியதர்சன யாப்பாவிடம்
கையளிக்கப்பட்டது.
பாதிக்கப்பட்ட மக்களுக்காக இரண்டு கடற்படைக் கப்பல்களிலும், விமானம் ஒன்றிலும் இந்தியா மொத்தம் 85 மெட்ரிக் தொன் உதவிப் பொருட்களை அனுப்பியுள்ளது.
கடற்படைக் கப்பல்களில் எடுத்து வரப்பட்ட 35 மெட்ரிக் தொன் உதவிப் பொருட்கள் நேற்று சிறிலங்கா பிரதி வெளிவிகார அமைச்சர் ஹர்ஷ டி சில்வாவிடம் இந்தியத் தூதுவரால் கையளிக்கப்பட்டது.
அதேவேளை, 50 மெட்ரிக் தொன் உதவிப் பொருட்களுடன்
நேற்றுக்காலை வந்த
இந்திய விமானப்படையின் இராட்சத போக்குவரத்து விமானமான சி-17இல் எடுத்து வரப்பட்ட உதவிப் பொருட்கள், கட்டுநாயக்க விமான நிலையத்தில் இந்தியத் தூதுவர் வை.கே.சின்ஹாவினால், சிறிலங்காவின் அனர்த்த முகாமைத்துவ அமைச்சர் அனுர பிரியதர்சன யாப்பாவிடம் கையளிக்கப்பட்டது.
இதில், 700 கூடாரங்கள், 1000 தார்ப்பாய் விரிப்புகள், 10 மின்பிறப்பாக்கிகள், 100 அவசரகால விளக்குகள், 10 ஆயிரம் பேருக்கான நோய்த்தடுப்பு மருந்துகள், நீர் சுத்திகரிப்பு கருவிகள், குடைகள், மழைக்கவசங்கள், மெத்தைகள் உள்ளிட்டவை அடங்கியுள்ளன.
இங்குஅழுத்தவும் நவற்கிரி.கொம் செய்திகள் >>>15 May 2016
இந்தியாவுடன் சம்பூர் திட்டம்தொடர்பான பேச்சு எதிர் வரும் 20ஆம் நாள் ?
சம்பூர் அனல் மின் திட்டத்தை, திரவ இயற்கை எரிவாயு மின் திட்டமாக மாற்றியமைப்பது தொடர்பாக, வரும் 20ஆம் நாள், இந்திய பங்காளர்களுடன், சிறிலங்காவின் மின்சக்தி அமைச்சின் குழுவொன்று பேச்சுக்களை நடத்தவிருப்பதாகத் தகவல்கள்
தெரிவிக்கின்றன.
அனல் மின் திட்டத்துக்குப் பதிலாக, திரவ இயற்கை எரிவாயு மின் திட்டத்தை அமைப்பதற்கான சாத்திய ஆய்வை மேற்கொள்வதற்கு, பொருளாதார முகாமைத்துவத்துக்கான அமைச்சரவை குழு தீர்மானித்துள்ளது.
அத்துடன் சம்பூர் அனல் மின் திட்டம் தொடர்பாக ஏற்கனவே கோரப்பட்ட கேள்விப்பத்திரங்களை ரத்துச் செய்தல் உள்ளிட்ட அனைத்துச் செயற்பாடுகளையும் நிறுத்தி வைக்கவும் அமைச்சரவைக் குழு முடிவு செய்துள்ளது.
இது குறித்துக் கருத்து வெளியிட்டுள்ள சிறிலங்கா மின்சார சபையின் பேச்சாளர் சுலக்சனா ஜெயவர்த்தன, இந்த திட்டத்தை எவ்வாறு முன்னெடுப்பது என்று மே 20 ஆம் நாள் முடிவு எடுக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.
சம்பூரில் அனல் மின் நிலையைத்தை ஆரம்பிக்க சுற்றுச்சூழல், சமூக மட்டத்தில் கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது. திரவ இயற்கை எரிவாயு மின்திட்டத்தை அமைக்கலாமா என்று நாம் யோசித்து வருகிறோம். ஆனால் இன்னமும் இறுதி முடிவு எடுக்கப்படவில்லை என்றும் அவர்
தெரிவித்தார்.
இதற்கிடையே, சிறிலங்காவில் திரவ இயற்கை எரிவாயுயை இறக்கவோ, அவற்றைக் கையாளவோ வசதிகள் இல்லை என்றும், அதனால் சிறிலங்காவில் திரவ இயற்கை எரிவாயு மின்திட்டத்தை ஆரம்பிப்பது நடைமுறைச்சாத்தியமற்றது என்றும் ஜப்பானியர்கள் மேற்கொண்ட சாத்திய ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளதாக சிறிலங்கா மின்சாரசபை அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
இங்குஅழுத்தவும் நவற்கிரி.கொம் செய்திகள் >>> 11 May 2016
தேர்தலை முன்னிட்டு வாக்களிப்பதற்கு சிறப்புப் பேருந்துகள்?
தேர்தலை முன்னிட்டு வாக்காளர்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு சென்று வாக்களிப்பதற்கு வசதியாக சிறப்புப் பேருந்துகள்
இயக்கப்பட உள்ளன.
தமிழக சட்டமன்ற தேர்தல் வரும் 16 ஆம் தேதி நடைபெறுகிறது. தேர்தல் நடைபெறும் நாளுக்கு முந்தைய இரு நாட்களும் வார இறுதி நாட்களாக உள்ளதால் வெளி ஊர்களில் பணிபுரிபவர்கள் ஏராளமானோர் சொந்த ஊர்களுக்கு செல்வார்கள் என
எதிர்பார்க்கப்படுகிறது.
தொலைதூரம் செல்லக்கூடிய விரைவுப் பேருந்துகளில் 13, 14 ஆகிய தேதிகளில் முன்பதிவு முடிவடைந்துவிட்டதாகக் கூறப்படுகிறது. இதனையடுத்து ஒரு நாளைக்கு கூடுதலாக 100 தொலைதூர விரைவுப்பேருந்துகளும், மற்ற கோட்டங்களிலிருந்து தேவைக்கேற்ற வகையில் 300 முதல் 400 சிறப்புப் பேருந்துகள் சென்னைக்கும் மற்ற ஊர்களுக்கும் இயக்கப்பட உள்ளதாக போக்குவரத்துக்கழக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
பயணிகளின் வருகையை முன்னிட்டே இப்பேருந்துகள் இயக்கப்படுவதாகவும், தேர்தல் ஆணையத்திடமிருந்து எந்த கோரிக்கையும் வரவில்லையென்றும் அதிகாரிகள்
கூறியுள்ளனர்.
இங்குஅழுத்தவும் நவற்கிரி.கொம் செய்திகள் >>> 09 May 2016
மூன்று பெண்கள் மண் தோண்டியபோது சுரங்கம் சரிந்து பலி!
மத்திய பிரதேச மாநிலம் கார்கோன் மாவட்டம் தாவ்லா பாலியா கிராமத்தைச் சேர்ந்த 3 பெண்கள், நேற்று ஊருக்கு வெளியே உள்ள காலியிடத்தில் தோண்டி வீடு கட்டுவதற்கு தேவையான மண் எடுத்துக்கொண்டிருந்தனர். அப்போது மண் சுரங்கம் திடீரென சரிந்து மூன்று பெண்கள் மீதும் விழுந்து
அமுக்கியது. இதில் அவர்கள் மூவரும் மூச்சுத்திணறி சிறிது நேரத்தில் இறந்து விட்டனர்.
இதுபற்றி தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, மண்ணை அப்புறப்படுத்தி ரீனா பாய், அவரது மகள் ரேஷ்மா மற்றும் ஹாத்ரி பாய் ஆகிய மூன்று பேரின் சடலங்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இதுபற்றி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>> 02 May 2016
போதையில் 2 நாளாகியும் மனைவி பிணத்துடன் தூங்கிய கணவர்!
கோவை சூலூர் அருகேயுள்ள செலக்கரிச்சல் பகுதியை சேர்ந்தவர் முருகானந்தம் (44). சமையல்காரர். இவர் தனது மனைவி, குடும்பத்தை பிரிந்து தனியாக வசித்து வந்தார். திருமண மண்டபத்தில் சமையல் வேலைக்கு வந்த ராஜேஸ்வரி (45) என்பவருடன் முருகானந்தத்திற்கு
நட்பு ஏற்பட்டது.
ராஜேஸ்வரிக்கு ஏற்கனவே 3 திருமணம் நடந்துள்ளது. தனது கடைசி கணவர் சந்திரசேகரனை பிரிந்து தனிமையில் வசித்து வந்தார். நாளடைவில் முருகானந்தத்திற்கும், ராஜேஸ்வரிக்கும் பழக்கம் ஏற்பட்டது. 4 ஆண்டிற்கு முன் திருமணம் செய்து கொண்டனர்.
இந்நிலையில், முருகானந்தம் மது போதைக்கு அடிமையானார். சரியாக வேலைக்கு செல்லாமல் போதையில் சுற்றினார். இதை தொடர்ந்து ராஜேஸ்வரி அவரை கோவை அரசு மருத்துவமனையில் மது போதை மீட்பு மையத்தில் சேர்த்து சிகிச்சை அளித்தார்.
சில நாட்கள் மது பழக்கத்தில் இருந்து விடுபட்ட அவர், நல்ல முறையில் வேலைக்கு சென்று கொண்டிருந்தார். திருச்சியில் தனது அத்தை இறப்பிற்கு துக்கம் விசாரிக்க சென்ற முருகானந்தம் மது போதையில் வீட்டிற்கு வந்தார். சிகிச்சை அளித்தும் திருந்தவில்லையே என கணவரிடம் ராஜேஸ்வரி வாக்குவாதம் செய்தார்.
பின்னர் அவர் கடந்த 28ம் தேதி தூக்கு போட்டு இறந்தார். போதையில் இருந்த முருகானந்தம், மனைவியின் சடலத்தை தூக்கு கயிற்றை அறுத்து படுக்கையில் போட்டார். பின்னர், சடலம் அருகேயே தூங்கி விட்டார். போதை தெளிந்த பின்னர் மீண்டும் மது குடிக்க சென்று விட்டார். 2 நாளாக, சடலத்தை என்ன செய்வது யாருக்கு தகவல் தெரிவிப்பது என தெரியாமல் போதையில் முருகானந்தம் இருந்துள்ளார்.
வீட்டில் துர்நாற்றம் வீசியதால் சந்தேகம் அடைந்த அக்கம் பக்கத்தினர் அங்கே சென்று பார்த்த போது ராஜேஸ்வரி இறந்து கிடந்ததும், அருகே போதையில் முருகானந்தம் தூங்கியதும் தெரியவந்தது. இது தொடர்பாக சூலூர் போலீசார் வழக்கு பதிவு ெசய்து விசாரிக்கின்றனர். போலீசாரிடம் முருகானந்தம் கூறுகையில், ‘‘ என் மனைவி மயக்கத்தில் இருப்பதாக
நினைத்தேன்.
தொடர்ந்த குடித்து கொண்டிருந்ததால் என் மனைவி தூங்குவது போல் தான் எனக்கு தெரிந்தது. அவர் இறந்து விட்டாரா, இல்லையா என என்னால் கண்டுபிடிக்க முடியவில்லை, ’’ என புலம்பினார். முருகானந்தத்தின் மகள் டில்லியில், ராணுவ அதிகாரியாக பணியாற்றி
வருவது குறிப்பிடதக்கது.
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>
Subscribe to:
Posts (Atom)