This is default featured slide 1 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.This theme is Bloggerized by Lasantha Bandara - Premiumbloggertemplates.com.

This is default featured slide 2 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.This theme is Bloggerized by Lasantha Bandara - Premiumbloggertemplates.com.

This is default featured slide 3 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.This theme is Bloggerized by Lasantha Bandara - Premiumbloggertemplates.com.

This is default featured slide 4 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.This theme is Bloggerized by Lasantha Bandara - Premiumbloggertemplates.com.

This is default featured slide 5 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.This theme is Bloggerized by Lasantha Bandara - Premiumbloggertemplates.com.

Search This Blog n

Showing posts with label புகைபடங்கள். Show all posts
Showing posts with label புகைபடங்கள். Show all posts

18 December 2012

உலக மக்களே மட்டக்களப்பு மாவட்டத்தை திரும்பி பாருங்கள்



மட்டக்களப்பில் வெள்ள அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட கிராமங்கள் பலவற்றை தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சீனித்தம்பி யோகேஸ்வரன் நேரடியாகச் சென்று பார்வையிட்டதுடன் அம்மக்களுக்கு அவசியமாக தேவைப்படும் பொருட்களை உடனுக்குடன் வழங்கியுள்ளார்.

மட்டக்களப்பு மாவட்டத்தின் பல பகுதிகளில் தொடர் மழையால் பல கிராமங்கள் வெள்ளத்தில் மூழ்கி உள்ளன. சித்தாண்டி, வந்தாறுமூலை, ஐயங்கேணி, தளவாய், ஏறாவூர்,கொம்மாதுறை, வந்தாறுமூலை,முறக்கொட்டாஞ்சேனை, தேவாபுரம், கோப்பாவெளி, ஈரளக்குளம், பெரியவட்டவான், பூலாக்காடு, பொண்டுகள்சேனை, இலுக்கு, சந்திவெளி, கிரான், பதுளை வீதியில் அமைந்துள்ள கிராமங்கள், மயிலவட்டவான், வேப்பவட்டுவான், செங்கலடியில் அமைந்துள்ள கிராமங்கள் பெரும் பாதிப்பை எதிர்கொண்டுள்ளன.{புகைபடங்கள்,}


இதுவரை மட்டக்களப்பு மாவட்டத்தில் 154 கிராமங்கள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அதில் 34753 குடும்பத்தைச் சேர்ந்த 135464 நபர் பாதிக்கப்பட்டதாக அனர்த்த முகாமைத்துவ மட்டக்களப்பு காரியாலயம் தெரிவிக்கின்றது.

வெள்ளத்தால் 154 வீடுகள் முழுச் சேதத்தையும், 607 வீடுகள் பகுதிச் சேதத்தையும் அடைந்துள்ளது. இவ்வனர்த்தத்தின் மூலம் இடம்பெயர்ந்த மக்கள் 17 இடைத்தங்கல் முகாம்களில் மக்கள் வைக்கப்பட்டுள்ளனர்.

இதன்படி கோப்பாவெளி அரசினர் தமிழ் கலவன் பாடசாலை, வேப்பவட்டுவான் அரசினர் தமிழ் கலவன் பாடசாலை, சித்தாண்டி சித்தி விநாயகர் வித்தியாலயம்,சித்தாண்டி அலைமகள் வித்தியாலயம்,மயிலவட்டவான் வித்தியாலயம்,வந்தாறுமூலை கணேசா வித்தியாலயம்,சித்தாண்டி மகா வித்தியாலயம்,சித்தாண்டி சமுர்த்தி கட்டடம்,சித்தாண்டி இராமகிருஷ்ணா வித்தியாலயம், ஈரளக்குளம் அரசினர் தமிழ் கலவன் பாடசாலை,பெரியவட்டவான் அரசினர் தமிழ் கலவன் பாடசாலை, பூலாக்காடு அரசினர் தமிழ் கலவன் பாடசாலை, கொண்டுகள்சேனை அரசினர் தமிழ் கலவன் பாடசாலை உட்பட பல இடங்கள் முக்கிய இடைத்தங்கல் முகாமாக உள்ளது.



இவ்வேளை, மயிலவட்டவானின் ஏற்பட்ட வெள்ளத்தில் மூழ்கி இருவர் இறந்ததுடன் ஒருவர் சார்பாக இதுவரை தகவல் இல்லை. பிரதான வீதி வெள்ளத்தில் மூழ்கியமையின் காரணமாக வாகனப் போக்குவரத்துகள் துண்டிக்கப்பட்டுள்ளது. இதனால் பலரும் பல சிரமத்தை எதிர்கொள்கின்றனர்.

இதேவேளை, மட்டக்களப்பு ஏறாவூர் பிரதேச செயலகத்திற்குட்ட மயிலவெட்டுவான் கிராமத்தில் நேற்றிரவு தொடக்கம் வெள்ளத்தினால் சூழப்பட்டிருந்த 103பேர் இன்று காலை படகுகளை அனுப்பி மீட்கப்பட்டதாக பிரதேச செயலாளர் உ.உதயஸ்ரீதர் தெரிவித்தார்.

இவர்களை மீட்கும் பணியில் கடற்படையினரும் பிரதேச சபை மற்றும் இடர் முகாமைத்துவ அதிகாரிகளும் உதவியிருந்ததாகவும் அவர் தெரிவித்தார்.

இதேவேளை ஏறாவூர்ப்பற்று செங்கலடி பிரதேச செயலகப் பிரிவில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்கள் 13 முகாம்களில் 1098 குடும்பங்களைச் சேர்ந்த 4400 பேர் தங்கவைக்கப்பட்டுள்ளதாகவும் ஏனைய சேத விவரங்கள் திரட்டப்பட்டு வருவதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.









12 December 2012

94 முறை குத்திக் கொலை செய்த சிறுவன் சிறையில் ?

பிரிட்டனில் தன் மீது பாசம் காட்டாத தாயை ஆத்திரத்தில் 94 முறை குத்திக் கொன்ற சிறுவன் சிறையில் அடைக்கப்பட்டான். பிரிட்டனில் டார்செட் பகுதியில் உள்ள வேமவுத் என்ற இடத்தை சேர்ந்த லீ விட்டில் (வயது 42) என்ற பெண் தனது படுக்கையறையில் பிணமாக கிடந்தார்.
தகவல் அறிந்ததும் அங்கு வந்த பொலிசார் அவரது 17 வயது மகன் கிரன் ஸ்மித்திடம் விசாரித்தனர்.
அப்போது அச்சிறுவன், போதை மருந்து விவகாரத்தில் எனது அண்ணன் சிக்கி கொண்டான். இதையடுத்து யார்க்ஷயரில் உள்ள டோன் காஸ்டரில் இருந்து வந்த மர்ம நபர்கள் எனது தாயுடன் பேசிக் கொண்டிருந்தனர்.
பின்னர் அவரை சரமாரியாக கத்தியால் குத்தி கொன்று விட்டு எனது தாயாரிடம் இருந்து பணத்தை கொள்ளையடித்து விட்டு தப்பி விட்டனர் என்று கூறினான்.
சிறுவன் மீது சந்தேகம் கொண்ட பொலிசார் நடத்திய விசாரணையில் தன் தாயை குத்திக்கொண்டதை அச்சிறுவன் ஒப்புக்கொண்டான்.
பின்னர் அவன் கூறுகையில், தாயாருக்கு என்னை அதிகமாக பிடிக்காது. இதனால் அவர் மீது கடுமையான கோபம் ஏற்பட்டது.
எனவே, அவருடன் வாக்குவாதம் ஏற்பட்ட போது ஆத்திரத்தில் அவரை கத்தியால் குத்தி கொன்று விட்டு பால்கனி வழியாக பைப் மூலம் கீழே இறங்கி தப்பி ஓடிவிட்டேன் என்றான்.
கொலை செய்யப்பட்ட லீ விட்டிலின் உடல் பிரேத பரிசோதனைக்காக அனுப்பப் பட்டது.
அங்கு அவரது உடலில் தலை, முகம், கை, கால்கள், முதுகு, தண்டு வடம் உள்ளிட்ட 94 இடங்களில் கத்திகுத்து காயங்கள் இருந்தன.
கைது செய்யப்பட்ட அச்சிறுவன் சிறையில் அடைக்கப்பட்டான் {புகைபடங்கள், }.






11 December 2012

இந்துக் ஆலயங்களின் அபிவிருத்திக்காக ஜனாதிபதி மஹிந்த நிதி !

          
நாட்டில்உள்ளஇந்துக் ஆலயங்களின் அபிவிருத்திக்காக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவினால் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதிமஹிந்த ராஜபக்ஷ மற்றும் இந்துக் கோயில்களின் மதக்குருக்களுக்குமிடையிலான சந்திப்பொன்று அலரி மாளிகையில் இடம்பெற்றது.

இச்சந்திப்பின் போது ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இந்துக் கோயில்களின் அபிவிருத்திக்காக நிதி உதவிகளையும் வழங்கி வைத்தார்.

இந்த சந்திப்பின் போது நாட்டிலுள்ள சகல இந்துக் கோயில்களின் மதக்குருக்கள் மற்றும் கோயில் நிர்வாக நபை உறுப்பினர்கள் பெரும் எண்ணிக்கையானோர் கலந்துக் கொண்டனர்.

இந்நிகழ்வில் அமைச்சர்களான பெசில் ராஜபக்ஷ, டக்டஸ் தேவானந்தா, ரத்னசிறி விக்கிரமநாயக்க விநாயகமூர்த்தி முரளீதரன், மஹிந்தானந்த அளுத்கமகே ,எம்.கே.டி.எஸ். குணவர்த்தன ஆகியோரும் கலந்து கொண்டனர்.{புகைபடங்கள்,}
  


 

26 November 2012

வயிட்ஹோல் வீதியை ஸ்தம்பிக்க வைத்த நிர்வாண மனிதன்!

                  
லண்டனில் பிரதமர் டேவிட் கெமரூன் வீட்டுக்கு அருகில் உள்ள சாலையில் நிறுவப்பட்டுள்ள சிலை மீது நிர்வாணமாக வாலிபர் ஒருவர் அமர்ந்து கொண்டதால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. மேலும் அப்பகுதியில் போக்குவரத்தும் இதனால் ஸ்தம்பித்தது.
மூன்று மணி நேர போராட்டத்துக்கு பிறகு கீழே இறங்கி வந்த அந்நபரை பொலிஸார் கைது செய்து சிறையில் அடைத்தனர். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இங்கிலாந்து தலைநகர் லண்டனின் மத்திய பகுதியில் உள்ளது வயிட்ஹோல் வீதி. மிக முக்கியமான இந்த சாலை அருகில்தான் பிரதமர் டேவிட் கெமரூனின் வீடு அமைந்துள்ள சாலையும் உள்ளது.
மேலும் பல்வேறு முக்கிய அலுவலகங்களும் இந்த சாலையில் உள்ளது. 19ம் நூற்றாண்டில் இந்த பகுதியின் இராணுவ தளபதியாக இருந்தவரும், கேம்பிரிட்ஜ் பகுதியை ஆட்சி செய்தவருமான பிரின்ஸ் ஜோர்ஜ் சிலை நிறுவப்பட்டுள்ளது. குதிரை மீது ஜோர்ஜ் செல்வது போன்ற சிலை, உயர்ந்த பீடத்தின் மீது அமைக்கப்பட்டுள்ளது.
இந்த சிலையின் மீது நேற்று பகல் 12 மணியளவில் ஒரு வாலிபர் நிர்வாணமாக சரசரவென ஏறினார். பின்னர் சிலையின் தலை மீது அமர்ந்து கொண்டார். கால்களை மாற்றி மாற்றி அவ்வப்போது பல்வேறு போஸ்களும் கொடுத்துள்ளார். இதனால் சாலையில் சென்றவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். தகவல் அறிந்த பொலிஸார் அங்கு விரைந்து வந்தனர். போக்குவரத்தை வேறு பாதையில் மாற்றி விட்டனர். கடும் பனியில் நிர்வாணமாக அந்நபர் உட்கார்ந்திருந்த ஸ்டைலை பார்த்து அவர்களும் அதிர்ச்சி அடைந்தனர்.
பின்னர், அவருடன் பேச்சு கொடுத்தனர். அவர் கத்தி போன்ற பயங்கர ஆயுதங்கள் வைத்திருப்பதாக பொலிஸார் சந்தேகப்பட்டனர். மூன்று மணி நேர போராட்டத்துக்கு பிறகு பிற்பகல் 3 மணிக்கு அந்நபர் தானாகவே கீழே இறங்கி வந்தார். உடனே பொலிசார் அவரை சுற்றிவளைத்து கைது செய்தனர். பின்னர் வேனில் ஏற்றி சிறைக்கு கொண்டு சென்றனர்.
இதனால் பரபரப்பான லண்டன் சாலை 3 மணி நேரம் ஸ்தம்பித்தது. அவர் எதற்காக சிலை மீது ஏறினார், அவர் பெயர் விவரங்கள் வெளியிடப்படவில்லை{புகைபடங்கள்},

31 October 2012

சகோதரர்களாக கருதும் காலம் மாறிவிட்டாது யாழ் முதல்வர்

       
Wednesday 31 October 2012.By.Rajah.தமிழ் மக்கள் இராணுவத்தினரை எதிரிகளாக பார்த்த காலம் மாறி சகோதரர்களாக கருதும் காலம் மாறிவிட்டாது என்று யாழ். மாநகரசபையின் மேயர் திருமதி யோகேஸ்வரி பற்குணராஜா கூறியுள்ளார்.
இராணுவத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களுக்கு பரிசில் வழங்கும் நிகழ்விலேயே இவ்வாறு அவர் வசைபாடினார்.
தமிழ் மக்கள் ஏதிரிகளாகப் பார்த்த சிறிலங்கா இரானுவத்தினரை தற்போது காலம் மாறியுள்ளதால் சகோதரர்களாகவே தான் பார்ப்பதாகவும் அவ்வாறே தமிழ்மக்களும் கருத வேண்டும் என்றார்.
நாம் இலங்கைத்தீவில் தமிழர்களாகவும் இலங்கையர்களாகவும் வாழவேண்டும். கடந்த காலத்தில் புலிகளின் கருத்துக்களை மக்கள் செவி சாய்த்தபடியால் சிங்கள மக்களை நாம் எதிரிகளாக பார்க்கவேண்டிய கட்டாயம் எற்பட்டது. இதனால் தமிழ் மக்களின் எதரிகளாக இராணுவத்தினர் சித்தரிக்கப்பட்டிருந்தனர்.
தமிழ் மக்களும் சகோதரர்களாக ஏற்றுக்கொண்டு இணைந்து வாபபழகிக் கொள்ள வேண்டும். அதே நேரம் தமிழர்கள், சிங்களவர்கள் என்றதற்கப்பால் அனைவரும் இலங்கையராகவே வாழவும் வேண்டும் என்றார். அத்துடன் இலங்கையில் எந்த ஒரு நாட்டிலும் இல்லாத இலவசக்கல்வி முறை இருக்கின்றது இதனால் மாணவர்கள் இங்கு கல்வி கற்று எமது நாட்டுக்குச் சேவை செய்யவேண்டும் என்றும் கூறினார்.
யாழ்ப்பாணம் ஆஸ்பத்திரி வீதியில் அமைந்துள்ள பொது மக்கள் சிவில் தொடர்பு அலுவலகத்தில் நடைபெற்ற இந்த நிகழ்விற்கு, யாழ். கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் மகிந்த ஹத்துருசிங்க, வடமாகாண கல்வி அமைச்சின் பிரதிச் செயலாளர் விக்னேஸ்வரன், யாழ். அரச அதிபர் சுந்தரம் அருமைநாயகம், யாழ். மாநகர சபை மேயர் திருமதி யோகேஸ்வரி பற்குணராஜா ஆகியோர் கொண்டு 26 மாணவர்களுக்கு பரிசில்கள் மற்றும் வைப்பு புத்தகங்கள் என்பன வழங்கினர்

16 October 2012

தமிழினப் படுகொலைகள் என்ற நூல் ஜேர்மன்

         
Monday 15 October 2012 By.Rajah. { புகைபடங்கள்}
மொழியில் இன்று வெளியீடு!உலகளாவிய மிகப் பெரிய புத்தக கண்காட்சி விழாவில் வடகிழக்கு மனித உரிமை செயலகம் (NESoHR) தொகுத்து வெளியிட்ட "தமிழினப் படுகொலைகள்" என்ற நூல் ஜேர்மன் மொழியில் "Damit wir nicht vergessen…” Massaker an Tamilen 1956–2008” எனும் தலைப்பில் இன்று யேர்மனியில் Frankfurt நகரில் வெளியிடப்பட்டது
இப் புத்தகத்தை வெளியிட்டு வைப்பதற்கு சிறப்பு விருந்தினராக, இந்நூலை யேர்மன் மொழியில் மொழியாக்கம் செய்த பேராசிரியர் பீற்றர் சால்க் அவர்கள் கலந்து கொண்டார். அத்துடன் இந்நூலை அச்சுப் பதிவு செய்த நிறுவனத்தின் உரிமையாளர் கிறிஸ்டியன் வைஸ் அவர்களும், தமிழ் மக்கள் சார்பாக செல்வி லக்சி லம்பேர்ட் மற்றும் ரொபின்சன் அவர்களும் கலந்துகொண்டனர்.
பேராசிரியர் பீற்றர் சால்க் உரையாற்றுகையில்,
சிறிலங்கா அரசு ஈழத்தமிழர்கள் மீது நடாத்திய மனிதவுரிமை மீறல்கள் மற்றும் இனப்படுகொலைகள் இந் நூலில் ஆதாரத்துடன் வெளிக்கொண்டு வரப்பட்டுள்ளது. அந்த வகையில் இவ்வாறன குற்றங்கள் புரிந்த இலங்கை அரசை சர்வதேச சட்டங்களுக்கு அமைய அனைத்துலக குற்றவியல் மன்றத்தில் நிறுத்த முடியும் என இவ் ஆவணத்தின் முக்கியத்துவத்தை எடுத்துரைத்தார்.
ரொபின்சன் உரையாற்றுகையில்,

தமிழ் மக்களுக்கு சிறிலங்கா அரசால் இழைக்கப்பட்ட கொடுமைகள் இன்று வரை அனைத்து நாட்டு மக்களும் ஆதாரப்படுத்தப்பட்ட வகையில் சென்றடையவில்லை. அதனால் இன்று வெளியிடப்படும் இந்நூலை மிக முக்கியமான ஒரு ஆவணமாக கருதுகின்ற வேளையில், இ இந்நூலை உருவாக்குவதற்கு தமது உயிர்களை அர்பணித்தவர்களை நினைவில் பதித்து இதை யேர்மன் மொழியில் வெளியிட்டு வைப்பதற்கு மிக பெரும் உதவியை செய்த பேராசிரியர் பீற்றர் சால்க், அச்சுப் பதிவு செய்த நிறுவனத்தின் உரிமையாளர் கிறிஸ்டியன் வைஸ் மற்றும் பெயர் குறிப்பிட்ட முடியாத அனைவருக்கும் ஈழத்தமிழ் மக்கள் சார்பில் நன்றியை தெரிவித்தார்.
அத்தோடு சிறிலங்கா அரசு ஈழத்தமிழர்கள் மீது 60 ஆண்டுகளுக்கும் மேலாக திட்டமிட்ட இனப்படுகொலையை செய்துவருகின்றதை இந்நூல் ஆதாரத்துடன் வெளிக்காட்டுகின்றது என்பதையும் சுட்டிக்காட்டினர்.
செல்வி லக்சி லம்பேர்ட் உரையாற்றுகையில்,
தன்போன்ற இளையோர்கள் இவ்வாறன ஆவண நூலை பயன்படுத்தி கொடுமைகள் இழைக்கப்பட்ட மக்களுக்கு நீதி தேடி கொடுப்பதற்கு அரசியல் வேலைத்திட்டங்களுக்கு இந்நூலை பயன்படுத்த வேண்டும். அத்தோடு இவ்வாறான ஆவணத்தை உருவாக்குவதற்கு அரசாங்கத்தின் கொடூரமான தாக்குதலுக்கு மத்தியில் தமது உயிர்களை காப்பாற்ற எண்ணாமல் நடந்த இனப்படுகொலைகளை பதிவு செய்தவர்களை நினைவில் நிறுத்தி ஈழத்தமிழர்களின் விடுதலையை நோக்கி இளையோர்கள் செயற்பட வேண்டும் என்று கூறினார்.
இந் நூல் யேர்மனியில் உள்ள நூல்நிலையங்களுக்கும், உயர்கல்விக் கூடத்திற்கும் அரசியல் கட்சிகளுக்கும், மனிதவுரிமை அமைப்புகளுக்கும் அனுப்பி வைக்கப்படும் என்று வெளியீட்டார்கள் அறிவித்துள்ளார்கள்.
புலம்பெயர் நாடுகளில் அகதி தஞ்சம் கோரியுள்ள ஈழத்தமிழ் மக்கள் சிறிலங்கா அரசின் கொடுமைக்களை புகலிட நாட்டு அரசாங்கத்திற்கு ஆதாரத்துடன் கொடுப்பதற்கும் இந் நூல் மிக முக்கியம் வாய்ந்தது எனவும் தெரிவித்துள்ளார்கள்.







nk

13 October 2012

விடுதலைப் புலிகளினால் சுட்டு வீழ்த்தப்பட்ட விமானம் கண்டுபிடிப்பு

தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் போர் விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டபோது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் இவை
 
                                
















12 Oct 2012

03 October 2012

முள்ளிவாய்க்கால்,ஆனந்தபுரம் பகுதிகளில்

Wednesday03October2012.By.Rajah.பாலங்களுக்கு அடியில் உடல்கள் எரிக்கப்பட்டுள்ளதை பாருங்கள்!            முள்ளிவாய்க்கால், ஆனந்தபுரம் பகுதிகளில் உள்ள சில பாலங்களுக்கு அடியில் உடல்கள் எரிக்கப்பட்டுக் கிடப்பதாக அங்கு சென்று மீண்ட தமிழர்கள் தெரிவித்துள்ளார்கள். வட்டுவாகலில் உள்ள சிறிய பாலம் ஒன்றிற்கு அடியில் சுமார், 15 உடல்கள் எரிக்கப்பட்ட நிலையில் காணப்படுவதாகவும், மற்றும் கட்டிட இடிபாடுகளுக்கு இடையே பல உடல்கள் எரியூட்டாப்பட்டு உள்ளதாகவும் அவர்கள் மேலும் தெரிவித்துள்ளனர்.
இராணுவத்தினரின் தாக்குதல்களில், கட்டட இடிபாடுகளில் சிக்கி பலர் உயிரிழந்துள்ளனர். ஆனால் அவகள் உடல்களுக்கு பக்கமாக மரக் குத்திகளைப் போட்டு இராணுவம் எரியூட்டியுள்ளது. குறிப்பாக உடல்களை அழிக்கவும் இவ்வாறு செய்துள்ளனர். மேலும் முள்ளிவாய்க்காலில் இறந்த பலரது உடல்களை இடிந்த பாலங்களுக்கு அடியில் போட்டு எரியூட்டியும் உள்ளனர்.

சமீபத்தில் சில தமிழர்கள், முள்ளிவாய்க்கால், ஆனந்தபுரம், மற்றும் வட்டுவாகல் பகுதிகளுக்குச் சென்றுள்ளனர். தடைசெய்யப்பட்ட சில பகுதிகளுக்கு இவர்கள் சென்றவேளை அவ்விடம் எங்கிலும் மண்டை ஓடுகள் காணப்படுவதாக அவர்கள் தெரிவித்தது மட்டுமல்லாது, அவற்றை புகைப்படமும் எடுத்துள்ளனர். போர் நடந்தவேளை தம்மை பாதுகாத்துக்கொள்ள மக்கள் வெட்டிய பதுங்கு குழிகள் பல காணப்படுவதாகவும், அவற்றில் பல பொறிந்து உள்நோக்கி விழுந்துள்ளதாகவும் தெரிவித்துள்ள
அவர்கள், அதனுள் பல மண்டை ஓடுகளும் மனித எலும்புகளும் காணப்படுவதாகவும் மேலும் தெரிவித்துள்ளனர். அவற்றுக்கு அருகாமையில், பல இடங்களில் வெள்ளை நிற சாம்பல் காணப்படுவதாகவும், அவை மனித உடல்களை எரிக்கும்போது மிஞ்சும் சாம்பல் எனவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

ஆங்காங்கே வெடிக்காத, (இல்லையேல் ஏவமுடியாத) ராக்கெட்டுகளும் நிலத்தில் காணப்படுவதாகவும் அறியப்படுகிறது. இலங்கை இராணுவத்தினர் இறுதி நேரத்தில் புலிகள் கட்டுப்பாட்டுப் பிரதேசத்துக்குள் முன்னேற ஆர்.பி.ஜி ரக ஏவுகணைகளையே பயன்படுத்தியுள்ளனர். பாரிய அழிவை ஏற்படுத்தவல்ல இவ்வகையான ஏவுகணைகளைப் பயன்படுத்தியே இராணுவம் முன்னேறியுள்ளது.
இந் நிலையிலேயே தாம் கனரக ஆயுதங்களைப் பாவிக்கவில்லை என்று, சர்வதேச தொலைக்காட்சிகளுக்கு 2009ம் ஆண்டு இலங்கை அரசு தெரிவித்தது. முள்ளிவாய்க்கால் பகுதிகள் எங்கும், வெடிக்காத மற்றும் ஏவ முடியாத ராக்கெட்டுகள் நிலத்தில் இருப்பதை, நீங்கள் நாம் இணைத்துள்ள படங்களில் காணலாம். தமிழ் மக்களை கொன்று குவித்து, அடையாளம் தெரியாமல் இருக்க அவர்களின் உடல்களை, மறைவிடங்களில் வைத்து மரக்குத்திகளைப் போட்டு எரியூட்டியுள்ளது இலங்கை இராணுவம்.

இப் போர் குற்ற ஆதரங்களை, ஐ.நா மனித உரிமை கழகத்துக்கு நாம் அனுப்பி வைத்துள்ளதோடு, பான் கீ மூனைச் சந்திக்கவுள்ள இந்திய நாடாளுமன்ற குழுவினருக்கும் இப் புகைப்படங்கள் அனுப்பப்பட்டுள்ளது.











02 October 2012

யாழ்ப்பாணத்தில் மகாத்மா காந்தியின் சிலைக்கு இன்று மாலை அணிவிக்கப்பட்டு அஞ்சலி !

         
 
Tuesday.02,October.2012,By.Rajah.{புகைபடங்கள்,}.மகாத்மா காந்தியின் 143 வயது ஜனன தினத்தை முன்னிட்டு அகில இலங்கை காந்தி சேவா சங்கத்தினால் காந்தி ஜனன தின நிகழ்வுகள் இன்று யாழ்ப்பாணத்தில் கொண்டாப்பட்டன.
யாழ். ஆஸ்பத்திரி வீதியில் உள்ள மகாத்மா காந்தியின் சிலைக்கு இன்று காலை 9.30 மணியளவில் மாலை அணிவிக்கப்பட்டு அஞ்சலி செலுத்தப்பட்டுள்ளது.
தொடர்ந்து அவ்விடத்தின் கூடிய யாழ்.தாதியர் பயிற்சி கல்லூரி மாணவர்கள் மற்றும் பொது மக்கள் மகாத்மா காந்தியின் சிலைக்கு மலர் மாலை அணிவித்து மலர் தூவியும் நினைவு அஞ்சலி செலுத்தினர்.
இந் நிகழ்வுகளில் அகில இலங்கை காந்தி சேவா சங்கதின் தலைவர் மற்றும் உறுப்பினர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.