பிரிட்டனில் தன் மீது பாசம்
காட்டாத தாயை ஆத்திரத்தில் 94 முறை குத்திக் கொன்ற சிறுவன் சிறையில்
அடைக்கப்பட்டான்.
பிரிட்டனில் டார்செட் பகுதியில் உள்ள வேமவுத் என்ற இடத்தை சேர்ந்த லீ விட்டில்
(வயது 42) என்ற பெண் தனது படுக்கையறையில் பிணமாக கிடந்தார். தகவல் அறிந்ததும் அங்கு வந்த பொலிசார் அவரது 17 வயது மகன் கிரன் ஸ்மித்திடம் விசாரித்தனர். அப்போது அச்சிறுவன், போதை மருந்து விவகாரத்தில் எனது அண்ணன் சிக்கி கொண்டான். இதையடுத்து யார்க்ஷயரில் உள்ள டோன் காஸ்டரில் இருந்து வந்த மர்ம நபர்கள் எனது தாயுடன் பேசிக் கொண்டிருந்தனர். பின்னர் அவரை சரமாரியாக கத்தியால் குத்தி கொன்று விட்டு எனது தாயாரிடம் இருந்து பணத்தை கொள்ளையடித்து விட்டு தப்பி விட்டனர் என்று கூறினான். சிறுவன் மீது சந்தேகம் கொண்ட பொலிசார் நடத்திய விசாரணையில் தன் தாயை குத்திக்கொண்டதை அச்சிறுவன் ஒப்புக்கொண்டான். பின்னர் அவன் கூறுகையில், தாயாருக்கு என்னை அதிகமாக பிடிக்காது. இதனால் அவர் மீது கடுமையான கோபம் ஏற்பட்டது. எனவே, அவருடன் வாக்குவாதம் ஏற்பட்ட போது ஆத்திரத்தில் அவரை கத்தியால் குத்தி கொன்று விட்டு பால்கனி வழியாக பைப் மூலம் கீழே இறங்கி தப்பி ஓடிவிட்டேன் என்றான். கொலை செய்யப்பட்ட லீ விட்டிலின் உடல் பிரேத பரிசோதனைக்காக அனுப்பப் பட்டது. அங்கு அவரது உடலில் தலை, முகம், கை, கால்கள், முதுகு, தண்டு வடம் உள்ளிட்ட 94 இடங்களில் கத்திகுத்து காயங்கள் இருந்தன. கைது செய்யப்பட்ட அச்சிறுவன் சிறையில் அடைக்கப்பட்டான் {புகைபடங்கள், }. |
0 கருத்துகள்:
Post a Comment