Search This Blog n

07 December 2012

முள்ளிவாய்க்கால் மாவீரர் தின வீடியோக்கள்

     
போலியானவைவிடுதலைப் புலிகளுக்கும், இலங்கை அரசுக்கும் இடையே இறுதி யுத்தம் நடைபெற்ற முள்ளிவாய்க்கால் பகுதியில் கடந்த மாதம் மாவீரர் தினம் நடத்தப்பட்டது என்று வெளியான வீடியோ, மற்றும் அறிக்கைகள் போலியானவை. அவற்றை நம்ப வேண்டாம் என்று விடுதலைப்புலிகள் இயக்கம் அறிக்கை விடுத்துள்ளது.
யு-டியூப்பிலும், சில இணையத்தளங்களிலும் வெளியான வீடியோவில் காண்பிக்கப்படுவதுபோல, முள்ளிவாய்க்காலில் மாவீரர் தின நிகழ்வுகள் நடைபெறவில்லை. மக்களை குழப்புவதற்காக செய்யப்பட்ட சதிச் செயல் அது எனவும், விடுதலைப்புலிகள் பெயரில் வெளியான அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது இலங்கை அரசின் திட்டமிட்ட சதி என்று தெரிவித்துள்ள விடுதலைப்புலிகள் இயக்கம், தனி மனிதர்களின் மீது அவதூறு பரப்புவது விடுதலைப் புலிகளின் மரபு அன்று என்றும் தமது அறிக்கையில் தெரிவித்துள்ளது.
தற்போது தனி மனிதர்களின் மீது அவதூறு பரப்பும் நபர்களும், மீடியாவும், இலங்கை அரசில் திட்டமிட்ட சதியின் ஒரு பகுதிதான் என்றும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அறிக்கை, 5-ம் தேதி வெளியிடப்பட்டுள்ளது

0 கருத்துகள்:

Post a Comment