டைனோசர் எலும்புக்கூட்டை
மங்கோலியாவிலிருந்து கடத்த வந்த அமெரிக்கர் கைது செய்யப்பட்டதுடன் நியூயோர்க்
நீதிமன்றத்தில் ஒப்படைக்கப்பட்டார்.
ஃபுளோரிடாவைச் சேர்ந்த எரிக் புரேக்கோப்பி(வயது 38) என்பவர் மங்கோலியாவிலிருந்து
70 மில்லியன் பழமையான டைனோசர் உட்பட புதைப்படிவங்களை அமெரிக்காவிற்கு கடத்தி
வந்துள்ளார். கடந்த யூன் மாதம் மங்கோலிய அரசு, தங்களிடமிருந்த டைனோசர் எலும்புக்கூடு திருடப்பட்டு விட்டதாக அறிவித்ததும் சர்வதேச காவல் துறை தேடுதல் வேட்டையை தொடங்கியது. இந்நிலையில் கடத்தப்பட்ட பொருட்களை இணையத்தில் எரிக் ஏலம் விட்டபோது மாட்டிக்கொண்டார். அப்போது அவரை கைது செய்த பொலிசார், அவரிமிருந்த புதைப்படிவங்களை கைப்பற்றியதுடன் நியூயோர்க் நீதிமன்றத்தில் ஒப்படைத்தனர். நீதிமன்றத்தில் தான் கடத்தியதாக எரிக் ஒப்புக்கொண்டார். தற்போது இந்த புதைப்படிவங்களை அமெரிக்கா, மங்கோலியாவிடம் ஒப்படைக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றது[புகைபடங்கள்] |
0 கருத்துகள்:
Post a Comment