Search This Blog n

09 December 2012

புத்தூர் கிழக்கு பிரதேசத்தில் நேற்றிரவு பொலிஸாரினால் 15 பேர் ?

 
யாழ்ப்பாண குடாநாட்டில் கைது நடவடிக்கைகள் தொடர்கிறது இதனால் பிரதேச மக்கள் அச்சத்துடன் வாழ்கின்றனர். நேற்று சனிக்கிழமை இரவு யாழ். புத்தூர் கிழக்கு பிரதேசத்தில் சுமார் 15 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக அச்சுவேலி பொலிஸார் தெரிவித்தனர்.
இவர்கள் அனைவரும் பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
கைது செய்யப்பட்ட 15 பேரும் பயங்கரவாத புலனாய்வு பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டு கொழும்புக்கு அழைத்து செல்வதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன என அச்சுவேலி பொலிஸார் தெரிவித்ததாக உறவினர்கள் தெரிவித்தனர்

0 கருத்துகள்:

Post a Comment