நியூசிலாந்து நாட்டின் வடபகுதியில் இருந்து 1,100 கடல் மைல் தூரத்தில், பசிபிக் பெருங்கடலின் இடையில் பிஜி தீவுக்கூட்டங்கள் உள்ளன. இந்த தீவுகள் அனைத்தும் ஒன்றிணைக்கப்பட்டு பிஜி என்ற தனிநாடாக உள்ளது.
கடந்த வாரம் இங்குள்ள சமோவா என்ற இடத்தில் வீசிய 'இவான்' சூறாவளிக்கு 8 பேர் பலியாகினர். இந்நிலையில் பிஜியில் நேற்றும் பலத்த மழையுடன் கடும் சூறாவளி காற்று வீசியது. மணிக்கு 200 கி.மீட்டர் வேகத்தில் வீசிய இந்த சூறாவளியால், பல வீடுகளில் மேற்கூரைகள் பறந்து விழுந்தன.
மழையினால், கடும் வெள்ளமும் ஏற்பட்டுள்ளதால், மின்சார வினியோகம் நிறுத்தப்பட்டது. பிஜி தீவை சுற்றிப்பார்க்க வந்த வெளிநாட்டு பயணிகள் உள்பட 8 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர், 137 நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
சூறாவளியை அடுத்து விமான சேவைகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டுள்ளதாக பிஜி அரசு அறிவித்துள்ளது

0 கருத்துகள்:
Post a Comment