Search This Blog n

29 December 2012

பல்கலைக்கழக நடவடிக்கைகள் குறித்து விசேட கூட்டம்

 
யாழ்.பல்கலைக்கழகத்தில் கல்வி நடவடிக்கைகள் குறித்து கலந்துரையாடுவதற்கு எதிர்வரும் 31ம் திகதி விசேட கூட்டமொன்றை பல்கலைக்கழக நிர்வாகம் ஏற்பாடு செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
சக மாணவர்கள் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டு, வெலிகந்த புனர்வாழ்வு நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளமைக்கு எதிர்ப்பு தெரிவித்தே, மாணவர்கள் இந்த பகிஷ்கரிப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையிலே பல்கலைக்கழக நிர்வாகம் விசேட கூட்டத்தினை நடாத்த தீர்மானித்துள்ளது.
இதேவேளை, மாணவர்கள் விரிவுரைகளை பகிஷ்கரித்துள்ள போதிலும் பல்கலைக்கழக நடவடிக்கைகள் தொடர்ந்து இடம்பெற்று வருவதாகவும், மாணவர்களின் போராட்டம் தொடர்பில் கலந்துரையாடி தீர்மானமொன்றுக்கு வரும் வகையிலேயே எதிர்வரும் 31ஆம் திகதிமேற்படி விசேட கூட்டத்தை நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது

0 கருத்துகள்:

Post a Comment