Showing posts with label உடல்நலம். Show all posts
Showing posts with label உடல்நலம். Show all posts
22 January 2015
பன்றி காய்ச்சல் குறித்து ஆய்வு செய்ய சிறப்பு மருத்துவக் குழு
நேரில் ஆய்வு தெலுங்கானாவில் பன்றி காய்ச்சலால் 21 பேர் பலியாகி உள்ளனர்.தற்போது 180-க்கும் மேற்பட்டோர் பன்றி காய்ச்சல் அறிகுறியுடன் காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கபட்டு
சிகிச்சை அளிக்கபட்டு வருகிறது.
நேற்று 3 பேர் பலியானதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.இதில் 2 பேர் ஆந்திர மாநிலத்தை சேர்ந்தவர்கள் ஆவர்.
இந்நிலையில் தெலுங்கானா முதல்-மந்திரி மத்திய அரசுக்கு பன்றி காய்ச்சலை தடுக்க மத்திய சிறப்பு குழுவை அனுப்பி வைக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். அவரின் வேண்டுகோளை ஏற்று மத்திய அரசு 3 பேர் கொண்ட சிறப்பு குழுவை காந்தி
மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தது.
இன்று வந்த மத்திய சிறப்பு மருத்துவ குழுவினர் ஐதராபாத் காந்தி அரசு மருத்துவமனையில் பன்றி காய்ச்சலால் பாதிக்கபட்டவர்களை கண்டு நலம் விசாரித்தனர்.மற்ற வார்டுகளுக்கு பன்றிகாய்ச்சல் பரவாமல் இருக்க போதிய மருத்துவ வசதிகள் செய்யும் மாறு மருத்துவ ஊழியர்களுக்கு உத்தரவிடப்பட்டது.
மருத்துவமனையின் சுகாதரம் குறித்து நோயாளிகளிடம் மருத்துவ குழு விசாரித்தனர். அதற்கு அவர்கள் அதிருப்தியை தெரிவித்தனர்.அடிப்படை வசதிகளை செய்யுமாறு காந்தி அரசு மருத்துறை தலைவருக்கு உத்தரவிட்டனர்.மேலும் டாக்டர்கள் நோயளிகளிடம் அன்புடன் நடந்து கொள்ளுமாறு கேட்டுக்கொண்டனர்.
இன்று அல்லது நாளை முதல்-மந்திரி சந்திரசேகர ராவை மருத்துவ குழுவினர் சந்திக்க உள்ளதாக கூறப்படுகிறது.மேலும் மத்திய அரசு சார்பில் 10 ஆயிரம் தடுப்பு ஊசிகளும் காந்தி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.
24 January 2013
கண் பார்வையை பாதிக்கும் ஆஸ்பிரின் மாத்திரை
| ஆஸ்பிரின் மாத்திரை சாப்பிட்டால்
கண் பார்வை பாதிக்கும். இதய நோய்கள், மாரடைப்பு மற்றும் பக்கவாதம் போன்ற
நோய்களுக்கு உலகம் முழுவதும் ஆஸ்பிரின் மாத்திரைகள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.
ஆனால் இவற்றை தொடர்ந்து சாப்பிடுவதால் வயதான காலத்தில் கண் நோய்கள் ஏற்படும்
வாய்ப்பு உள்ளது. குறிப்பாக கண் பார்வை பாதிக்கும் அபாயம் உள்ளதாக நிபுணர்கள்
தெரிவித்துள்ளனர். மேலும் வயதான காலத்தில் ஏற்படும் சில நோய்களுக்கு தொடர்ந்து ஆஸ்பிரின் மாத்திரை சாப்பிடுவதே காரணம் என்றும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. |
27 December 2012
விரதமிருப்பவர்களுக்கு மாரடைப்பு வாய்ப்பு இல்லை!
ஒரு நாள் விரதம் இருந்தால் மாரடைப்பு ஏற்படும் ஆபத்து குறைவு என்று டாக்டர்கள் கண்டுபிடித்துள்ளனர்.
விரதம் இருப்பது என்பது பல்வேறு மதங்களிலும் கடைப்பிடிக்கப்படும் பழக்கம். ஆண்டில் பல நாட்கள் விரதம் இருப்பது இந்துக்கள் வழக்கம். குறிப்பாக பெண்கள் மாதம் ஒரு நாளாவது நோன்பு இருப்பார்கள். வாரம் ஒருநாள் நோன்பு இருப்பவர்களும் உண்டு.
முஸ்லிம்கள் ரம்ஜான் பண்டிகையையொட்டி ஒரு மாதத்துக்கு பகல் நேரங்களில் நோன்பு இருப்பார்கள். கிறிஸ்தவர்களும் புனித வெள்ளியையொட்டி உபவாச ஜெபம் என்ற நோன்பு இருப்பது வழக்கம். இப்படி விரதம் இருப்பதால் பல்வேறு பயன்கள் இருப்பது டாக்டர்களால் நிரூபிக்கப்பட்டுள்ளது.
விரதம் இருப்பதன் பயன்கள் குறித்து இங்கிலாந்தின் யுடா பல்கலைக்கழக பேராசிரியர் பெஞ்சமின் ஹோர்ன் தலைமையில் ஆராய்ச்சி மேற்கொள்ளப்பட்டது. இதில், விரதம் இருப்பவர்களுக்கு இதய நோய் ஏற்படுவதற்கான வாய்ப்பு குறைவு என்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
சுமார் 5 ஆயிரம் பேரின் இதயத்தை எக்ஸ்ரே எடுத்து பார்த்ததில மாதம்தோறும் ஒரு நாளாவது விரதம் இருப்பவர்களில் பெரும்பாலானவர்களின் இதய ரத்த குழாய்களில் கொழுப்பால் ஏற்படும் அடைப்புகள் இல்லாதது கண்டுபிடிக்கப்பட்டது.
அவர்களுக்கு, மற்றவர்களைவிட மாரடைப்பு ஏற்படும் வாய்ப்பு குறைவு என்று பெஞ்சமின் ஹோர்ன் கூறி உள்ளார்.

27 November 2012
தலைவலியை உண்டாக்கும் செயல்கள்
| தலைவலி
நாம் செய்யும் செயல்களால் தான் ஏற்படுகிறது. இதற்காக நாம் நிறைய மாத்திரைகள்,
வீட்டு மருந்துகள் என்று பல வலிநிவாரணிகளை எடுத்துக் கொண்டாலும், அவை மீண்டும்
மீண்டும் வந்து கொண்டு தான் இருக்கின்றன.
அதிலும் அவ்வாறு மாத்திரைகளை எடுத்துக் கொண்டால் அந்த மாத்திரைகளும் உடலும்
பெரும் கெடுதலைத் தான் ஏற்படுத்தும். ஆகவே அத்தகைய வலி நிவாரணிகளைப் பயன்படுத்தி சரிசெய்வதை விட, நாம் செய்யும் எந்த செயல்களால் இந்த தலை வலி ஏற்படுகின்றதென்ற காரணத்தை தெரிந்து கொண்டு, அவற்றை சரிசெய்தாலே எந்த ஒரு வலியும் நம்மை நெருங்காமல் இருக்கும். ஈரமான கூந்தல் காலையில் தலைக்கு குளித்ததும் சரியாக காய வைக்காமல் அப்படியே தலையை சீவிக் கொண்டு செல்வார்கள். இதனால் தலையில் நீரானது அப்படியே தங்கிவிடும். பின் அவை தலைக்கு மிகுந்த வலியை உண்டாக்கும். ஆகவே எப்போதும் தலையை ஈரத்துடன் வைக்காமல் இருந்தால், தலைவலி வருவதைத் தடுக்கலாம். அதற்காக ஹேர் ட்ரையரைப் பயன்படுத்தக் கூடாது. ஏனெனில் அவை கூந்தல் உதிர்தலை உண்டாக்கும். அளவுக்கு அதிகமான வெப்பம் வேலையாக வெளியே செல்லும் போது தலைக்கு தொப்பியை அணிந்து செல்வது நல்லது. ஏனெனில் அளவுக்கு அதிகமான வெப்பம் ஸ்கால்ப்பில் படும் போது தலைவலியானது உண்டாகும். மேலும் சரியாக உண்ணாமல் வெயிலில் சென்றாலும், சூரியக் கதிர்கள் உடலில் உள்ள எனர்ஜியை ஈர்த்து பெரும் வலியை உண்டாக்கும். ஆகவே நன்கு சாப்பிட்டு தலைக்கு தொப்பியை அணிந்து செல்வது நல்லது. வாசனை திரவியங்கள் உடலில் வியர்த்தால் அதிக துர்நாற்றம் வருகிறதென்று, சிலர் அளவுக்கு அதிகமாக வாசனை திரவியங்களை உடலில் பூசிக் கொண்டு செல்கின்றனர். இதனால் அந்த செண்ட் வாசனை அதிக தலைவலியை உண்டாக்கும். ஆகவே வாசனை திரவியங்களை அதிகமாக பயன்படுத்தாமல் மிதமாக உபயோகிப்பது நல்லது. தொலைக்காட்சி திரை கணனியை போன்று தான் தொடர்ச்சியாக தொலைக்காட்சியை பார்க்கும் போதும் கண்களுக்கு பெரும் எரிச்சல் ஏற்படுகிறது. மேலும் சிலர் தொலைக்காட்சியின் உள்ளே போய் பார்ப்பது போல், மிகவும் அருகில் உட்கார்ந்து பார்ப்பர். இதனால் கழுத்து வலி ஏற்படும். ஆகவே அவ்வாறு உட்காராமல் சற்று தொலைவில் உட்கார்ந்து பார்க்க வேண்டும். மேலும் தொலைக்காட்சி மிகவும் பிரகாசமாக இருந்தால், அவற்றை கண்களுக்கு இதத்தை தரும் வகையில் சரியாக வைத்து பார்க்க வேண்டும். ஏனெனில் கண்களுக்கு ஏதாவது பிரச்சனைகள் ஏற்பட்டால், அவை தலையையும் நிச்சயம் பாதிக்கும். படுக்கையில் படித்தல் படுக்கும் போது புத்தகத்தைப் படிப்பது என்பது மிகவும் கெட்ட பழக்கம். ஏனெனில் இப்படி படித்தால் கண்கள் மிகவும் கஷ்டப்பட்டு எழுத்துக்களை பார்க்கும். ஆகவே எப்போது படிக்கும் போதும் உட்கார்ந்து படிக்க வேண்டும். அதுமட்டுமல்லாமல் வெளிச்சம் குறைவாக உள்ள இடத்தில் உட்கார்ந்து படிப்பதை தவிர்க்க வேண்டும். அதிக குளிர்ச்சி அனைவருக்கும் அளவுக்கு அதிகமாக குளிர்ச்சி உள்ள பானங்களை குடித்தாலோ அல்லது ஐஸ்கட்டிகளை சாப்பிட்டாலோ, தலை சற்று வலிப்பது போல் இருக்கும். ஏனெனில் அவை மூளையை உறைய வைத்துவிடுகிறது. ஆகவே அத்தகைய பொருளை சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். அதற்காக குளிர்ச்சியே சாப்பிடக் கூடாது என்பதில்லை. ஓரளவு குளிர்ச்சி உள்ள பொருளை, அளவாக சாப்பிட்டால் நல்லது. சரியான தூக்கம் தூக்கம் குறைவாக இருந்தாலும் அதிகமான தலை வலி உண்டாகும். ஆகவே ஒருவருக்கு குறைந்தது 6-7 மணிநேர உறக்கம் மிகவும் இன்றியமையாதது. இதனால் மூளை மற்றும் உடல் நன்கு புத்துணர்ச்சியுடன் இருக்கும். ஆல்கஹால் ஆல்கஹால் பருகுவதால் கூட தலை வலி உண்டாகும். ஏனெனில் சிலர் ஆல்கஹாலை குளிர்ச்சியாக சாப்பிடுவர். சாதாரணமாக ஆல்கஹால் சாப்பிட்டாலே மூளை மிகவும் தளர்ந்து இருக்கும். அதில் குளிர்ச்சியுடன் சாப்பிட்டால் தலை வலி தான் அதிகமாகும். அதிலும் அந்த வலி பருகிய மறுநாள் தான் உண்டாகும். ஆகவே குளிர்ச்சியாக சாப்பிடுவதோடு, அதிகமாக பருகுவதைத் தவிர்ப்பது நல்லது. |
25 October 2012
காலை உணவில் முட்டை சாப்பிடுங்க உடல் எடை குறையும்!
அதிக புரோட்டீன் கொண்ட முட்டையை காலை உணவில் சேர்த்துக் கொள்வதால் நாள் முழுவதும் பசி குறைந்து கலோரி சேர்வது தவிர்க்கப்படும். அதனால், உடல் எடையைக் குறைக்க முடியும் என்று அமெரிக்க ஆய்வில் தெரிய வந்துள்ளது. உடல் எடை அதிகம் கொண்டவர்களின் உணவில் முட்டையின் பங்கு குறித்து அமெரிக்காவின் கனெக்டிகட் பல்கலைக்கழக உணவுத் துறை விரிவான ஆய்வு நடந்தது.
காலை உணவில் முட்டை சேர்த்துக் கொள்வதால் உடலுக்கு அதிக புரோட்டீன் கிடைக்கிறது. அது உடலில் தெம்பை நீடிக்கச் செய்து நீண்ட நேரத்துக்கு வயிறு நிறைந்திருக்கும் உணர்வைத் தரும். அதன்மூலம், மதிய உணவு, மாலை சிற்றுண்டி ஆகியவற்றில் கலோரிகள் நிறைந்த அதிக உணவுகளை சாப்பிட வேண்டியிருக்காது. அதனால், உடலில் கலோரிகள் குறையும். மதியம், மாலை உணவுகளின் அளவு, கலோரி குறைவதால் எடை உயர்வது தடுக்கப்படுகிறது என்று ஆய்வில் கூறப்பட்டுள்ளது.
“உணவில் உயர்தர புரோட்டீன் சேர்ந்தால் ஒட்டுமொத்த உடல் நலனுக்கு நல்லது. குறிப்பாக, புரோட்டீன் அதிகமுள்ள முட்டையை காலை உணவில் சேர்க்கலாம். இரண்டு விதமான அமெரிக்க உணவுமுறையை ஆய்வு செய்ததில் இது தெரிய வந்தது. காலை உணவில் முட்டையை சேர்த்தவர்களுக்கு மதிய உணவு மட்டுமின்றி நாள் முழுவதும் பசியின் அளவு குறைந்திருந்தது. இதனால் உட்கொள்ளும் கலோரிகள் குறைந்து எடையை கட்டுப்பாட்டில் வைக்க முடிகிறது”

27 September 2012
கை, கால் வலிகளை குணப்படுத்தும் உப்பு கரைசல்
| வியாழக்கிழமை, 27 செப்ரெம்பர் 2012கை, கால்
மூட்டு வலியால் அவதிப்படுகிறீர்களா? உப்பு கரைத்த நீரில் குளியுங்கள், எந்தவித பக்க
விளைவும் இல்லாமல் வலி பறந்து போகும் என சமீபத்திய ஆய்வில் தெரிவிக்கப்பட்டு
உள்ளது.
அடிபடும் போது அல்லது கிருமி தொற்று ஏற்படும் போது, உடலில் உள்ள செல்கள் எவ்வாறு
விரிவடைந்து எதிர்ப்புச் சக்தியை உண்டாக்குகின்றன என்பது பற்றி மான்செஸ்டர்
பல்கலைக் கழகத்தினர் ஆராய்ச்சி மேற்கொண்டனர். எலி ஒன்றின் உடலில் அடிபட்ட இடத்தில் ஊசி மூலம் உப்புக் கரைசல் செலுத்தப்பட்டது. அப்பகுதியில் இருந்த செல்கள் விரிவடைந்து உப்பு நீரை கிரகித்துக் கொண்டதால் வீக்கம் குறைந்தது. இதன் தொடர்ச்சியாக மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகள் உப்பு நீரின் மகத்துவத்தை உணர்த்தின. உப்புக் கரைத்த நீர், கை, கால் மூட்டு வலி, எரிச்சல் போன்ற பிரச்னைகளுக்கு சிறந்த நிவாரணத்தை வழங்குகின்றன. இதை பயன்படுத்தும் போது, பக்க விளைவு ஏதும் ஏற்படுவதில்லை. சமையலுக்கு பயன்படும் சாதாரண உப்பைக் கூட இம்மருத்துவத்துக்குப் பயன்படுத்தலாம். கை, கால், மூட்டு வலி பிரச்னை உள்ளோருக்கு, அப்பகுதியில் செல்கள் விரிவடைவதால் வீக்கம் ஏற்படுகிறது. அப்பகுதியில் உப்புக் கரைசல் செலுத்தப்படும் போது வீக்கம் குறைவது கண்டறியப்பட்டு உள்ளது. உப்பு நீரை ஊசி மூலம் செலுத்துதல், உப்பு நீரில் ஊற வைத்த துணியால் பாதிக்கப்பட்ட இடத்தில் சுற்றுதல் அல்லது அதே நீரைக் கொண்டு பிரச்னைக்குரிய இடத்தில் நனையச் செய்தல் போன்ற எல்லா முறைகளும் வலி வீக்கத்தைக் குறைக்கின்றன. கை, கால் மூட்டு பிரச்னை உள்ளோர் இயற்கையான வெந்நீர் ஊற்றுகளுக்குச் சென்று குளித்து நிவாரணம் பெறுகின்றனர். உண்மையில் வெந்நீர் ஊற்றுகளில் அதிகளவு உப்பு கலந்திருப்பது ஆய்வில் கண்டறியப்பட்டு உள்ளது. இதன் காரணமாகவே மூட்டு வலியால் அவதிப்பட்டோருக்கு நிவாரணம் கிடைத்து உள்ளது என்பதுவும் தெரியவந்துள்ளது. |
Subscribe to:
Comments (Atom)