நேரில் ஆய்வு தெலுங்கானாவில் பன்றி காய்ச்சலால் 21 பேர் பலியாகி உள்ளனர்.தற்போது 180-க்கும் மேற்பட்டோர் பன்றி காய்ச்சல் அறிகுறியுடன் காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கபட்டு
சிகிச்சை அளிக்கபட்டு வருகிறது.
நேற்று 3 பேர் பலியானதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.இதில் 2 பேர் ஆந்திர மாநிலத்தை சேர்ந்தவர்கள் ஆவர்.
இந்நிலையில் தெலுங்கானா முதல்-மந்திரி மத்திய அரசுக்கு பன்றி காய்ச்சலை தடுக்க மத்திய சிறப்பு குழுவை அனுப்பி வைக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். அவரின் வேண்டுகோளை ஏற்று மத்திய அரசு 3 பேர் கொண்ட சிறப்பு குழுவை காந்தி
மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தது.
இன்று வந்த மத்திய சிறப்பு மருத்துவ குழுவினர் ஐதராபாத் காந்தி அரசு மருத்துவமனையில் பன்றி காய்ச்சலால் பாதிக்கபட்டவர்களை கண்டு நலம் விசாரித்தனர்.மற்ற வார்டுகளுக்கு பன்றிகாய்ச்சல் பரவாமல் இருக்க போதிய மருத்துவ வசதிகள் செய்யும் மாறு மருத்துவ ஊழியர்களுக்கு உத்தரவிடப்பட்டது.
மருத்துவமனையின் சுகாதரம் குறித்து நோயாளிகளிடம் மருத்துவ குழு விசாரித்தனர். அதற்கு அவர்கள் அதிருப்தியை தெரிவித்தனர்.அடிப்படை வசதிகளை செய்யுமாறு காந்தி அரசு மருத்துறை தலைவருக்கு உத்தரவிட்டனர்.மேலும் டாக்டர்கள் நோயளிகளிடம் அன்புடன் நடந்து கொள்ளுமாறு கேட்டுக்கொண்டனர்.
இன்று அல்லது நாளை முதல்-மந்திரி சந்திரசேகர ராவை மருத்துவ குழுவினர் சந்திக்க உள்ளதாக கூறப்படுகிறது.மேலும் மத்திய அரசு சார்பில் 10 ஆயிரம் தடுப்பு ஊசிகளும் காந்தி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.
0 கருத்துகள்:
Post a Comment