பெங்களூரில் ஒரு தனியார் பள்ளியில் படிக்கும் 8 வயது சிறுமியை ஆசிரியர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதாக போலீசில் புகார் செய்யப்பட்டது. இந்த சம்பவத்தை கண்டித்தும் ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்க கோரி பெற்றோர்கள் இன்று பள்ளி முன்பு போராட்டம் நடத்தினார்கள்.
அப்போது திடீரென்று பள்ளிக்குள் புகுந்து ஆசிரியரை தாக்கினர். இதில் அவரது மண்டை உடைந்தது. பள்ளி மீது சரமாரியாக கற்கள் வீசப்பட்டன. வாகனங்கள் சூறையாடப்பட்டன. இதை தடுத்த போலீசாருடன் மோதலில் ஈடுபட்டனர்.
இதனால் போலீசார் தடியடி நடத்தினர். அதன் பிறகும் வன்முறை நீடித்ததால் போலீசார் கண்ணீர் புகை குண்டுகளை வீசினர். என்றாலும் போராட்டம் நீடிப்பதால் அங்கு பதட்டம் நிலவுகிறது.
0 கருத்துகள்:
Post a Comment