தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டான ஜல்லிக்கட்டு நடத்த மத்திய அரசு அனுமதி வழங்க மறுத்துள்ளது.
பொங்கல் பண்டிகையை கொண்டாட மக்கள் தயாராகிக் கொண்டிருக்கும் வேளையில், அனைவரும் எதிர்பார்த்து காத்திருந்தது ஜல்லிக்கட்டுக்கு தான்.
விலங்குகள் நல பாதுகாப்பு சட்டத்தின் அடிப்படையில் ஜல்லிக்கட்டுக்கு சுப்ரீம் கோர்ட்டு முழுமையாக தடை விதித்தது, இதனை எதிர்த்து தமிழக அரசு தொடர்ந்து வழக்கு நிலுவையில் உள்ளது.
இந்நிலையில் ஜல்லிக்கட்டு தடையின்றி நடக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்கும் என்றும், இதற்கான முறையான அனுமதி பெற தமிழக குழு டெல்லி செல்லும் எனவும் முதல்வர் ஓ. பன்னீர் செல்வம் உறுதியளித்து இருந்தார்.
இதன்படி இன்று காலை ஐ.ஏ.எஸ். அதிகாரி விஜயகுமார், அயூப்கான், ஆபிரகாம் ஆகியோர் இடம்பெற்ற தமிழக குழு டெல்லி சென்றது.
இவர்கள் மத்திய அரசு அதிகாரிகளிடம் வலியுறுத்தி கேட்டும், பேச்சுவார்த்தையில் எவ்வித உடன்பாடும் எட்டப்படவில்லை.
உடனடியாக அனுமதி வழங்க மத்திய அரசு மறுத்துள்ளதுடன், இதுபற்றி பின்னர் பேசி முடிவெடுக்கலாம் என தெரிவித்துள்ளது.
0 கருத்துகள்:
Post a Comment