அமெரிக்க அதிபர் ஒபாமா வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து ஒடிசாவில் ரயில் தண்டவாளம் குண்டுவைத்து தகர்க்கப்பட்டது. முனிகோடா ரயில் நிலையம் அருகே முனிகோல் என்ற இடத்தில் நேற்று தண்டவாளத்தில் சக்திவாய்ந்த வெடிகுண்டு வெடித்தது. இதில் அங்கிருந்த ரயில்வே ஊழியர் ஒருவர் காயமடைந்தார். குண்டு வெடிப்பில் தண்ட வாளம் சேதம் அடைந்தது. தகவலறிந்ததும் வெடிகுண்டு நிபுணர்கள்
சென்று சோதனை நடத்தினர். அப்போது வெடித்தது சக்தி வாய்ந்த குண்டு என்பது தெரியவந்தது
ஒரு மீட்டர் அளவுக்கு தண்டவாளம் சேதம் அடைந்திருந்தது.அருகில் கிடந்த பேனரில், வன்சத்ரா- நாகபாலி மற்றும் குமுசார் பகுதியில் உள்ள மாவோயிஸ்ட் இயக்கத்தினர் குண்டு வெடிப்புக்கு பொறுப்பேற்பதாகவும், அமெரிக்க அதிபர் ஒபாமா வருகைக்கு
எதிர்ப்பு தெரிவித்து இது நிகழ்த்தப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
தண்டவாளம் தகர்ந்ததால் விசாகபட்டினர் - ராய்பூர் இடையிலான ரயில் சேவை பாதிக்கப்பட்டது. அந்த வழியாக வந்த
ரயில்கள் அருகில் உள்ள கேசிங்கா, முனிகுடா மற்றும் ராயகடா ரயில் நிலையங்களில் நிறுத்திவைக்கப்பட்டன. ரூ. 1 கோடி பணம், 150 துப்பாக்கிகள், 3000 குண்டுகள் உள்ளிட்ட ஆயுதங்களை தங்களுக்கு அளிக்க வேண்டும். இல்லாவிட்டால் தண்டவாளங்களை தகர்ப்போம் என பீகாரில் மாவோயிஸ்டுகள் ரயில்வே துறைக்கு இரு தினங்களுக்கு மிரட்டல் விடுத்திருந்தனர்.
0 கருத்துகள்:
Post a Comment