தமிழகத்தில் பரவி வரும் ஜப்பானிய மூளைக்காய்ச்சலை தடுக்க மத்திய அரசு போதிய நடவடிக்கை எடுத்து வருவதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் நட்டா தெரிவித்துள்ளார். தமிழகத்தின் சுகாதார நிலைமை குறித்த ஆய்வு கூட்டம் சென்னையில் நேற்று நடந்தது. கூட்டத்துக்கு மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் நட்டா தலைமை வகித்தார். கூட்டத்தில் தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் உட்பட பலர் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்துக்கு பின் மத்திய அமைச்சர் ஜெ.பி. நட்டா நிருபர்களிடம் கூறியதாவது..
உத்தரபிரதேசம், மேற்கு வங்கம், அசாம், பீகார் மற்றும் தமிழகத்தில் ஜப்பானிய மூளைக் காய்ச் சல் தாக்கம் அதிகமாக காணப்படுகிறது. இந்த நோயை கட்டுப்படுத்த மத்திய அரசு போதிய நடவடிக்கை எடுத்து வருகிறது. இந்நோய்க்கு 93 சதவீதத்துக்கு மேல் தடுப்பு மருந்துகள் உள்ளது.
தமிழகத்தில் பச்சிளம் குழந்தைகள் இறப்பை தடுக்க
மத்திய அரசின் முழு நிதி உதவியுடன் மதுரை, திருவாரூர், விழுப்புரம், கரூர், தஞ்சாவூர் ஆகிய 5 இடங்களில் பச்சிளம் குழந்தைகள் தீவிர சிகிச்சை பிரிவு தொடங்கப்பட உள்ளது. எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க தமிழகத்தில் கோரிக்கை எழுந்துள்ளது. அதற்கான இடம் தேர்வு செய்ய மத்திய குழுவினர் விரைவில் தமிழகம் வரவுள்ளனர்.
அதேபோல், முதியோருக்கான தேசிய பாதுகாப்பு மையம் தமிழகத்தில் அமைக்க நிதி வழங்கப்பட்டுள்ளது. இதுதவிர புற்றுநோய் மையமும் விரைவில் அமைக்கப்படும். உயிர் காக்கும் மருந்துகளின் விலையை குறைக்க மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.
0 கருத்துகள்:
Post a Comment