உத்தரபிரதேசத்தின் வாரணாசியில் உள்ள பல்வேறு முக்கியமான பகுதிகளை கடந்த சில நாட்களாக மர்ம நபர் ஒருவர் படம் பிடித்து வந்தார். மேலும் தனது காரில் 3 அதிநவீன கேமராக்களை பொருத்தி வாரணாசியை சுற்றி சுற்றி வந்து படம் பிடித்துள்ளார்.
நேற்று சிக்ரா பகுதியில் உள்ள வணிக வளாகத்தில் படம் பிடித்த போது அவரை போலீசார் கைது செய்தனர். அவரது காரும், கேமராக்களும் பறிமுதல் செய்யப்பட்டன.
அவரிடம் போலீசார் நடத்திய விசாரணையில், அவர் வரைபடம் தயாரிக்கும் ஒரு நிறுவனத்தில் பணி செய்வதாகவும், அதற்காக கடந்த நவம்பர் 29-ந் தேதி முதல் வாரணாசியில் தங்கியிருந்து படம் பிடித்து அனுப்பி வருவதாகவும் கூறினார். அவர் படம் பிடித்த பகுதிகள் அனைத்தும் மிகவும் முக்கியமான பகுதிகள் என்பதால், அவரிடம் மேலும் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
பிரதமர் நரேந்திர மோடி வாரணாசி தொகுதி எம்.பி. என்பதால், அவர் அங்கு அடிக்கடி வந்து செல்வது குறிப்பிடத்தக்கது.
0 கருத்துகள்:
Post a Comment