ரவுடி கும்பல் அட்டூழியம்:வன்முறைக்கு பெயர் பெற்ற உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் உயிருக்குப் போராடிய பிரபல ரவுடியை சிறையில் இருந்து ஆம்புலன்சில் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றபோது வழிமறித்த மற்றொரு ரவுடி கும்பல் அவரை சுட்டுக் கொன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மதுரா சிறையில் நேற்று முன்தினம் இரு ரவுடி கோஷ்டிகள் துப்பாக்கிகளால் சுட்டுக் கொண்டதில் சிலர் காயமடைந்தனர். இதில் குண்டு பாய்ந்து காயமடைந்த டோட்டா என்ற ரவுடியை நேற்றிரவு சிறை காவலர்கள் ஒரு ஆம்புலன்சில் ஏற்றி ஆக்ரா ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்றனர். அந்த ஆம்புலன்சுக்கு பாதுகாப்பாக சில வாகனங்களில் போலீசாரும் உடன் வந்தனர்.
மதுரா-ஆக்ரா நெடுஞ்சாலை வழியாக விரைந்தபோது இடையில் ஒரு வாகனத்தில் வந்த சிலர் ஆம்புலன்சை வழிமறித்தனர். காயமடைந்து உயிருக்குப் போராடிக் கொண்டிருக்கும் டோட்டாவின் உறவினர்கள் என்று தங்களை அறிமுகப்படுத்திக் கொண்ட அந்த கும்பல் டோட்டாவின் முகத்தை பார்க்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டது.
ஆம்புலன்சின் பின்புற கதவை திறந்த அந்த கும்பல் கண்ணிமைக்கும் நேரத்தில் டோட்டாவை துப்பாக்கிகளால் சரமாரியாக சுட்டுக் கொன்றது. உள்ளே இருந்த ஒரு உதவி மருத்துவருக்கும், ஒரு போலீஸ்காரருக்கும் குண்டு காயங்கள் ஏற்பட்டது.
இச்சம்பவம் தொடர்பாக மாஜிஸ்திரேட் விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. தன்னை தீர்த்துக்கட்ட மதுரா சிறை அதிகாரிகள் முயற்சித்து வருவதாக உயிருடன் இருந்தபோது பல சந்தர்ப்பங்களில் டோட்டா கூறி வந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

0 கருத்துகள்:
Post a Comment