Search This Blog n

14 January 2015

குற்றவாளியாக அறிவித்தது தவறு: அனல் பறக்கும் வாதம

 சொத்து குவிப்பு வழக்கில் ஜெயலலிதாவை குற்றவாளியாக அறிவித்தது தவறு என்று கர்நாடக உயர்நீதிமன்றத்தில் மூத்த வழக்கறிஞர் நாகேஸ்வரராவ் வாதிட்டுள்ளார்.
சொத்து குவிப்பு வழக்கு மேல்முறையீட்டு மனு மீதான விசாரணை கர்நாடக உயர்நீதிமன்றத்தில் தனி நீதிபதி அமர்வு முன்பு தொடங்கி நடைபெற்று வருகிறது. 2 நாட்கள் விடுமுறைக்கு பின்னர் நேற்று மீண்டும் விசாரணை தொடங்கியது.
தனி நீதிபதி குமாரசாமி முன்னிலையில் மேல் முறையீட்டு மனு மீதான விசாரணை நேற்று 6–வது நாளாக நடைபெற்றது.
ஜெயலலிதா சார்பாக மூத்த வழக்கறிஞர் நாகேஸ்வரராவ் வாதிடுகையில்,
பொது ஊழியராக பணியாற்றிய ஜெயலலிதாவுடன் 
சேர்த்து மற்ற மூன்று பேருடைய சொத்துகளையும் இந்த வழக்கில் கணக்கிட்டு உள்ளனர்.
பினாமி பெயர்களில் சொத்துகள் வாங்கி இருந்தால் அதுபற்றி பினாமி சட்டப்படி தான் விசாரணை நடத்த வேண்டும். அதற்கென்று தனியாக ஒரு சட்டம் இருக்கும்போது அவர்களை ஜெயலலிதாவுடன் சேர்த்து ஊழல் தடுப்பு சட்டத்தில் விசாரணை நடத்தியது தவறு.
அவர்களின் சொத்துகளை ஜெயலலிதா கணக்கில் சேர்த்ததும் தவறானது. இந்த சூழ்நிலையில் ஜெயலலிதாவை குற்றவாளியாக அறிவித்தது தவறு.
ஜெயலலிதாவுக்கு கிடைத்த பிறந்த நாள் பரிசுக்கும் சேர்த்து வருமான வரி செலுத்த வேண்டும் என்று அந்த துறை அதிகாரிகள் 
உத்தரவிட்டனர்.
இதையடுத்து ஜெயலலிதா அதற்கும் சேர்த்து வரி செலுத்தினார். ஆனால் இந்த பரிசையும் சட்டவிரோத சொத்து கணக்கில் சேர்த்துள்ளனர். இதுவும் தவறானது. பரிசாக கிடைத்த பொருட்களை எப்படி சட்டவிரோத சொத்து கணக்கில் சேர்க்க முடியும்?
நமது எம்.ஜி.ஆர், ஜெயா பப்ளிகேஷன்ஸ் ஆகிய நிறுவனங்களுக்கு பணபரிமாற்றம் சரியான முறையில் தான் நடைபெற்று உள்ளது.
இதில் எந்த தவறும் நடைபெறவில்லை. இதற்கான ஆவணங்கள் உள்ளன. ஆனால் இந்த ஆவணங்களை கீழ்நீதிமன்றம் ஏற்காதது தவறானது என்று கூறியுள்ளார். 
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

0 கருத்துகள்:

Post a Comment