இந்தியாவிற்கு பாதுகாப்பை கருத்தில் கொண்டு அரசு, 32 வெப்சைட்களை முடக்கம் செய்துள்ளது. இந்த வெப்சைட்களில் இந்தியாவிற்கு எதிரான தகவல்கள் பதிவேற்றம் செய்யப்பட்டு இருந்தது என்றும் ஐ.எஸ். தீவிரவாதம் போன்ற தீவிரவாத இயக்கங்களின் கருத்துக்கள் பதிவு செய்யப்பட்டு இருந்தது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தேசிய பாதுகாப்புக்கு கவலையளிக்கும் விதமாக இருந்த சில வெப்சைட்களை நாங்கள் முடக்கம் செய்துள்ளோம் என்று அரசு அதிகாரி தெரிவித்துள்ளார்.
32 வெப்சைட்களை முடக்கம் செய்ய மத்திய தொலைத்தொடர்பு துறை சுற்றறிக்கை விடுத்துள்ளது என்று தகவல்கள் வெளியாகியுள்ளது. வீடியோ இணையதளமான டெய்லிமோசன் மற்றும் விமியோ போன்ற இணையதளங்களும் இதில் அடங்கும். இதற்கிடையே வெப்சைட்களில் இருந்த கருத்துக்கள் நீக்கப்பட்டது உறுதி செய்யப்பட்டதை அடுத்து சில வெப்சைட்கள் அனுமதிக்கப்பட்டது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. சில வெப்சைட்களில், சமீபத்தில் தேசிய புலனாய்வு பிரிவால் கைது செய்யப்பட்ட ஐ.எஸ். தீவிரவாதி ஆரிப் மஜீத் குறித்து சில தகவல்கள் பதிவு செய்யப்பட்டு இருந்தது என்று அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்திய இளைஞர்களை ஐ.எஸ். தீவிரவாத இயக்கத்தில் இணைய செய்யும் விதமாக வெப்சைட்கள் பயன்படுத்தப்பட்டுள்ளது என்றும் அரசு உணர்ந்துள்ளது. ஆப்கானிஸ்தான் மற்றும் ஈராக் போன்ற நாடுகளில் நேசபடைகளுடன் போராடி, மக்கள் இறப்பு பற்றிய செய்திகள் வெப்சைட்களில் பரவ செய்யப்பட்டுள்ளது.
மராட்டிய தீவிரவாத தடுப்பு படை, இந்தியாவிற்கு எதிரான கருத்துக்களை கொண்டிருக்கும் வெப்சைட்களை முடக்க வேண்டும் என்று மனுதாக்கல் செய்தது. இதனையடுத்து மும்பை கோர்ட்டு விடுத்த உத்தரவை அடுத்து அரசு தற்போது இந்த நடவடிக்கைகளை எடுத்துள்ளது. தீவிரவாத தடுப்புப் படையின் அறிவுரையின்படியே இந்த வெப்சைட்கள் முடக்கப்பட்டது என்று பாரதீய ஜனதாவின் ஐ.டி. பிரிவு தலைமை அதிகாரியும் தெரிவித்துள்ளார்.
"தீவிரவாத தடுப்பு படையின் அறிவுரையை அடுத்து இந்த வெப்சைட்கல் முடக்கப்பட்டது, இந்த வெப்சைட்களில் ஐ.எஸ். தீவிரவாத அமைப்பின், இந்தியாவிற்கு எதிரான கருத்துக்கள் இருந்தது என்று தீவிரவாத தடுப்பு படை தரப்பில் தெரிக்கப்பட்டது," என்று பாரதீய ஜனதாவின் குப்தா டூவிட் செய்துள்ளார். குறிப்பிட்ட வெப்சைட்கள் ஆட்சேபணைக்குரிய கருத்துக்களை நீக்கினாலும், போலீசுடன் இணைந்து பணியாற்றினாலும் முடக்கம் செய்யப்படாது என்று அவர் குறிப்பிட்டுள்ளார். இருப்பினும் இந்த செய்தி குறித்த அதிகாரப்பூர்வமான தகவல்கள் வெளியாகவில்லை.
0 கருத்துகள்:
Post a Comment