Search This Blog n

02 January 2015

யுவன் சங்கர்ராஜா இசை அமைப்பாளர் ரகசிய திருமணம்

கீழக்கரை அருகே, இசை அமைப்பாளர் யுவன்சங்கர்ராஜா திருமணம் ரகசியமாக நடந்தது.
இசைவாரிசு
பிரபல இசை அமைப்பாளர் இளைராஜாவின் மகன் யுவன் சங்கர்ராஜா. தமிழில் அரவிந்தன் படம் மூலம் அறிமுகமாகி 100-க்கும் மேற்பட்ட படங்களுக்கு இசை அமைத்துள்ளார்.
சினிமாத்துறையில் இசை வாரிசு என்ற பெருமையோடு அடியெடுத்து வைத்த யுவன்சங்கர்ராஜாவின் வாழ்வில் பல்வேறு மாற்றங்கள் அடுத்தடுத்து ஏற்பட்டது.
கடந்த 2005-ம் ஆண்டு சுஜன்யா என்ற தோழியை காதலித்து திருமணம் செய்து கொண்ட யுவன்சங்கர் ராஜாவுக்கு திருமணவாழ்வில் மனைவியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் கடந்த 2007-ம் ஆண்டு பிரிந்து 2 பேரும் விவாகரத்து பெற்றனர்.
இதன்பின்னர் ஷில்பா என்ற பெண்ணை காதலித்து வந்த நிலையில் 2011-ம் ஆண்டு செப்டம்பர் 1-ந்தேதி திருப்பதியில் அவரை திருமணம் செய்து கொண்டார். இந்த திருமண வாழ்க்கையும் சரியாக அமையாததால் 2 பேரும் பிரிந்துவிட்டனர்.
இஸ்லாமிய மதத்திற்கு மாறினார்
இந்தநிலையில் யுவன்சங்கர்ராஜாவுக்கு இஸ்லாமிய மதத்தின்மேல் ஏற்பட்ட ஈர்ப்பால் இஸ்லாம் மதத்துக்கு மாறி தனது பெயரை அப்துல்ஹாலிக் என்று மாற்றிக்கொண்டார்.
இஸ்லாமிய மதக்கோட்பாடுகளை பின்பற்றி 5 வேளை தொழுகை நடத்தி வரும் யுவன் அப்துல் ஹாலிக்விற்கும் கீழக்கரையை சொந்த ஊராக கொண்டு மலேசியாவில் வசித்துவரும் ஜபருன்னிசாவுக்கும் திருமணம் நிச்சயம் செய்யப்பட்டது.
ஜபருன்னிசா துபாயில் ஆடை வடிவமைப்பாளராக உள்ளதாக கூறப்படுகிறது. இவர்களின் திருமண நிச்சயதார்த்தம் கடந்த அக்டோபர் 29-ந்தேதி சென்னையில் நடந்தது. திருமண நிச்சயதார்த்தத்தில்
 இளையராஜா குடும்பத்தினர் யாரும் கலந்து கொள்ளவில்லை என்று கூறப்படுகிறது.
இந்த நிலையில் துபாயில் நடத்த திட்டமிடப்பட்டு இருந்ததாக கூறப்பட்ட யுவனின் திருமணம் திடீரென்று மாற்றப்பட்டு கீழக்கரையில் நடத்த முடிவு செய்யப்பட்டது.
இதற்காக கடந்த ஒருவாரத்துக்கு முன்பே கீழக்கரைக்கு வந்து தங்கியிருந்த அப்துல்ஹாலிக்கான யுவன்சங்கர்ராஜாவுக்கும், ஜபருன்னிசாவுக்கும் நேற்று மாலை கீழக்கரை அருகே உள்ள செங்கல்நீரோடை கிராமத்தில் அமீர்பைசல்கார்டன் பகுதியில் ரகசியமாக
 திருமணம் நடந்தது.
இந்த திருமணத்தில் மணமகளின் குடும்பத்தினர் மற்றும் நெருங்கிய உறவினர்கள் மட்டுமே கலந்துகொண்டனர். பலத்த பாதுகாப்புடன் யாரும் நுழைந்துவிடாதபடி நடந்த இந்த திருமணத்தில், இளையராஜா உள்ளிட்ட குடும்பத்தினர் யாரும் கலந்துகொள்ளவில்லை.
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

0 கருத்துகள்:

Post a Comment