சிறைக்கைதிகளுக்கு கல்வியை வழங்கும் முயற்சியில் வெற்றி அடைந்ததை அடுத்து இப்போது முதல்முறையாக பாலியல் தொழிலாளர்களை நோக்கி தன் பார்வையை திருப்பியிருக்கிறது இந்திரா காந்தி தேசிய திறந்தநிலை பல்கலைக்கழகம் (இக்னோ).
இதற்காக ரெட் லைட் ஏரியாவை தேடிச் சென்ற 'இக்னோ' இந்திய செஞ்சிலுவை சங்கத்தின் உதவியுடன் அங்குள்ள 'கங்கா ஜமுனா' பகுதியில் வாழும் பாலியல் தொழிலாளர்களுக்கு கல்வியை வழங்க தயாராக இருப்பதாக உறுதியளித்தது.
சென்ற ஆண்டு இதே பகுதியில் இந்திய செஞ்சிலுவை சங்கமும், இக்னோவும் இணைந்து பாலியல் தொழிலாளர்களுக்கு ஆரோக்கியமாக வாழ்வது பற்றி கவுன்சிலிங் நடத்தியது. இந்நிலையில், இந்த ஆண்டு இக்னோ நடத்தும் பட்டப்படிப்பு ஆயத்த தேர்வில் முதல்முறையாக 9 பாலியல் தொழிலாளர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
அதாவது, முறைப்படி 10, பிளஸ்-டூ படிக்காதவர்கள் நேரடியாக பட்டப்படிப்பில் சேர இக்னோவில் ஒரு ஆயத்த தேர்வு நடத்தப்படுகிறது. இந்த தேர்வில் பொது அறிவு வினாக்களும், எளிமையான
தேர்வு பாடங்களிலிருந்தும் கேள்விகள் கேட்கப்படுகின்றன. இதில் பாஸ் ஆனால் பட்டப்படிப்பை எவ்வித நிபந்தனையுமின்றி தொடரலாம். இதற்கு 18-வயது நிரம்பியதாக வயது சான்று இருக்க வேண்டும். மத்திய பிரதேசம், சத்தீஷ்கர், மகாராஷ்டிரா மாநிலங்களிலிருந்து வந்துள்ள 9 பாலியல் தொழிலாளர்களுக்கும் வேறெந்த ஆவணங்களும் இல்லை. அவர்களிடம் அண்மையில் எடுக்கப்பட்ட ஆதார் கார்டு மட்டுமே இருந்தன. எனவே, அவற்றை தங்களது வயது சான்றாக சமர்பித்தனர்.
இக்னோவின் நாக்பூர் மையத்தின்
இயக்குனர்
சிவசுவுரூப், ரெட் கிராஸ் சங்கத்தின் ஒருங்கிணைப்பாளர் ஹேமலதா பாண்டே ஆகியோர் பாலியல் தொழிலாளர்களும் படிக்க வேண்டும் என விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர். குறிப்பாக, ஹேமலதா அங்குள்ள ரெட் லைட் ஏரியாவில் பாலியல் தொழிலாளர்களுக்கு முறையாக கான்டம்கள் விநியோகிக்கப்பட்டு வருகிறதா என்பதை கண்கானித்து வரும் பணியை செய்து வருகிறார்
0 கருத்துகள்:
Post a Comment