தெற்குடெல்லியில் உள்ள அம்பேத்கார் நகரில் டெல்லி அரசு போக்குவரத்து கழக பணிமனை உள்ளது. நேற்று இரவு இங்கு நூற்றுக்கும் மேற்பட்ட பஸ்கள் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தன. நள்ளிரவு 3.20 மணிக்கு திடீரென தீவிபத்து ஏற்பட்டது.
தகவல் அறிந்ததும் சம்பவ இடத்திற்கு 11 தீயணைப்பு வாகனங்களில் வீரர்கள் விரைந்து சென்று 2 மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். இருப்பினும் அங்கு நிறுத்தப்பட்டு இருந்த 17 குளிர்சாதன பஸ்கள் எரிந்து சாம்பலாயின. மேலும், எரிபொருள் நிரப்பும் நிலையமும் சேதம் அடைந்தது. உயிர்சேதம் எதுவும் ஏற்படவில்லை. விபத்துக்கான காரணம் உடனடியாக தெரியவில்லை. இதுகுறித்து விசாரிக்க மூவர் விசாரணைக்குழு அமைக்கப்பட்டு உள்ளது.
இந்த பணிமனையில் நூற்றுக்கும் மேற்பட்ட பஸ்கள் நிறுத்தப்பட்டு உள்ளன. குளிர் சாதன பஸ்கள் தலா ரூ.60 லட்சம் ரூபாய் செலவில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு தான் வாங்கப்பட்டவை என்பது குறிப்பிடத்தக்கது.
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

0 கருத்துகள்:
Post a Comment