சென்ற மாதம் மத்திய வெளியுறவுத்துறை மந்திரி சுஷ்மா சுவராஜ், பகவத் கீதையை தேசிய நூலாக அறிவிக்க வேண்டும் என்று அழைப்பு விடுத்திருந்தார். இந்நிலையில், ஹரியானாவிலுள்ள பள்ளிகளில் 5-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை அடுத்த கல்வி ஆண்டு முதல் பகவத் கீதையை பாடமாக சேர்க்க அம்மாநில அரசு முடிவு செய்துள்ளது.
இதுபற்றி ஹரியானா கல்வித்துறை மந்திரி ராம் பிலாஸ் ஷர்மா கூறுகையில், 'பகவத் கீதை வாழ்க்கையை எப்படி மகிழ்ச்சியாக வாழ்வது என்பதை சொல்லிக் கொடுக்கிறது. மனஅழுத்தத்தை போக்கும் வழிகளை கற்றுக் கொடுக்கிறது. கீதையை வயதானவர்களுக்கு மட்டுமே பொருந்தும் என்று ஒதுக்கி விட முடியாது. வாழ்க்கை முழுவதும் ஒருவர் கீதையை வழிகாட்டியாக படிக்க தகுந்தது. கீதைதான் நமது வாழ்க்கை முறை. கீதையே நமது அறிவியல். கீதையே நமது பிரச்சனைகளுக்கு தீர்வு.' என்றார்.
0 கருத்துகள்:
Post a Comment