மத்திய அரசு அறிவித்துள்ள பத்ம விருதுகளுக்கு விளையாட்டுத்துறையைச் சேர்ந்த 6 பேரும் தேர்வு செய்யப்பட்டிருக்கிறார்கள்.
உலக பேட்மிண்டன் போட்டியில் 2 முறை வெண்கலப்பதக்கம் வென்ற ஒரே இந்தியரான வீராங்கனை பி.வி.சிந்து,
இந்திய ஆண்கள் ஆக்கி அணியின் கேப்டன் சர்தார் சிங், ஆக்கி வீராங்கனை சபா அஞ்சும், இந்திய பெண்கள் கிரிக்கெட் அணியின் கேப்டன் மிதாலி ராஜ், முன்னாள் கைப்பந்து வீராங்கனையும், தற்போது மலையேற்ற சாகசத்தில் ஈடுபட்டு வருபவருமான அருனிமா சின்ஹா ஆகியோர்
பத்ம ஸ்ரீ விருதை பெறுகிறார்கள்.
இதில் அருனிமா சின்ஹா, 2011–ம் ஆண்டு ரெயில் பயணத்தின் போது கொள்ளை கும்பலால் தூக்கி வீசப்பட்டதில்
இடதுகாலை இழந்தவர். அதன் பிறகு மலையேற்ற பயிற்சியில் ஈடுபட்ட அருனிமா, செயற்கை காலுடன் எவரெஸ்ட் சிகரத்தை ஏறிய முதல் இந்தியர் என்ற பெருமைக்குரியவர்.
முன்னாள் மல்யுத்த வீரரும் இரட்டை ஒலிம்பிக் பதக்கம் வென்ற சுஷில்குமாரின் பயிற்சியாளருமான சத்பால் சிங் பத்மபூஷண் விருதை பெறுகிறார்.
அதே சமயம் மல்யுத்த வீரர் சுஷில்குமாரின் பெயர் பத்ம பூஷண் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டதால் தனது பெயரை விடுவித்தது ஏன் என்று பேட்மிண்டன் மங்கை சாய்னா நேவால் போர்க்கொடி தூக்கினார். பிறகு தாமதமாக அவரது பெயரும் விருதுக்கு சிபாரிசு செய்யப்பட்டது. ஆனால் இருவரது பெயர்களும் விருது பட்டியலில் இடம் பெறவில்லை.
0 கருத்துகள்:
Post a Comment