பாகிஸ்தான் கவலை ஒபாமாவின் இந்தியப் பயணத்தின்போது, இந்தியாவுக்கும், அமெரிக்காவுக்கும் இடையில் கையெழுத்தான ஒப்பந்தங்களால் தெற்காசியாவில் ஆயுதப் போட்டி உருவாகும் என்று பாகிஸ்தானின் பாதுகாப்பு ஆலோசகர் சர்தாஜ் அஜீஸ் அச்சம் தெரிவித்துள்ளார். ஒபாமாவின் இந்தியப் பயணம் தொடர்பாக,
இஸ்லாமாபாதில் வியாழக்கிழமை நடைபெற்ற கருத்தரங்கில் கலந்து கொண்டு சர்தாஜ் அஜீஸ் பேசியதாவது..
. இந்திய-அமெரிக்க அணுசக்தி ஒப்பந்தங்களால் உருவாகக்கூடிய ஏற்றத்தாழ்வுகளையும், அவற்றை நீக்குவதற்கான வழிமுறைகளையும் பாகிஸ்தான் ஆய்வு செய்து வருகிறது. தெற்காசியாவில் அதிமுக்கியத்துவம் வாய்ந்த நிலைத்தன்மையே பாகிஸ்தானின் முக்கியமான கவலையாகும்.
இந்த நோக்கத்திற்கு அமெரிக்கா உள்ளிட்ட சர்வதேச நாடுகள் ஆதரவளிக்க வேண்டும். ஒபாமாவின் இரண்டாவது இந்திய வருகைக்கு முன்னதாக, அமெரிக்காவிடம் பாகிஸ்தான்
இதை வற்புறுத்தி தெரிவித்தபோதிலும், அமெரிக்கா அலட்சியப்படுத்தியது. தெற்காசியாவின் பிராந்திய நிலைத்தன்மையை பாதிக்கும் நடவடிக்கைகளை அமெரிக்கா தவிர்க்க வேண்டும். அமெரிக்கா, ரஷியாவிடம் இருந்து ஆயுதங்களை வாங்குவதன் மூலம் இந்தியா தனது ராணுவக் கட்டமைப்பை பலப்படுத்த முயற்சிக்கிறது. இதனால் தெற்காசியாவில் ஏற்கெனவே
இருக்கும் ஏற்றத்தாழ்வு அதிகரிக்கும்.
இந்திய-பாகிஸ்தான் பதற்றங்கள் அதிகரித்து, சர்வதேச எல்லைக்கோட்டில் போர் நிறுத்த மீறல்கள் நிகழ்ந்த சூழலில், ஏற்றத்தாழ்வுகள் அதிகரிப்பது கவலைக்குரியதாக உள்ளது என்று சர்தாஜ் அஜீஸ் பேசினார். முன்னதாக, அவர் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட அறிக்ற்கையில், தேசிய நலன்களைப் பாதுகாக்கும் அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும் என்று உறுதியளித்தார்.
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>
0 கருத்துகள்:
Post a Comment