யோகா குரு பாபா ராம்தேவ் நடத்தி வரும் பதஞ்சலி யோகா பீடம் மற்றும் திவ்ய யோகா ட்ரஸ்ட் மூலம் நடப்பு நிதியாண்டில் பதஞ்சலி நிறுவனம் ரூ.2 ஆயிரம் கோடி வருவாய் ஈட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பதஞ்சலி யோகா பீடம் மக்கள் தினமும் பயன்படுத்தும் சத்துமாவு, சோப்புகள், ஷாம்பு, தோல் பூச்சு கிரீம்கள், பிஸ்கட்டுகள், நெய், ஜூஸ், தேன், மசாலா பொருட்கள், சர்க்கரை, கடுகு எண்ணெய், பேஸ்ட் உள்ளிட்டவை தயாரித்து விற்பனை செய்கின்றன.
பதஞ்சலி ஆயுர்வேத, பொருட்கள் உற்பத்தி நிறுவனம்,கடந்த ஆண்டு ரூ 1200 கோடியை தனது விற்பனையில் ஈட்டி உள்ளது.
இந்நிலையில், நடப்பு நிதியாண்டில் பதஞ்சலி நிறுவனம் ரூ. 2 ஆயிரம் கோடி வருவாய் ஈட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இது கடந்த நிதியாண்டை விட 67 சதவீத உயர்வு என்பது குறிப்பிடத்தக்கது.
2012ம் ஆண்டில் பதஞ்சலி ஆயுர்வேத பொருட்களை விற்பனை செய்வதற்கு என்ற பிரத்யேக கடைகள், நாடு முழுவதும், 150 முதல் 200 வரையில் செயல்பட்டு வந்தன னால் தற்போது அந்த கடைகளின் எண்ணிக்கை, 4 ஆயிரமாக அதிகரித்துள்ளது..
0 கருத்துகள்:
Post a Comment