21 September 2018
இந்தியாவில் மின்சாரம் மூலம் இயங்கும் கார்கள், பேருந்துகள்
நாளுக்கு நாள் எரிபொருட்களின் விலை அதிகரித்து கொண்டே வருகிறது. மேலும் புவி வெப்பமயமாதலுக்கு இந்த எரிபொருளில் இயங்கும் வாகனங்கள் முக்கிய காரணம் வகிக்கின்றன.
இதனை கட்டுப்படுத்தும் விதமாக உலகில் பலநாடுகள் மின்சாரம் மூலம் இயங்கும் கார்கள், பேருந்துகள் பயன்பாட்டுக்கு
கொண்டுவந்துள்ளன.
இதில், இந்தியாவிலும் முக்கிய தலைநகரங்களில் பட்டரி மூலம் இயங்கும் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன.இந்த நிலையில், தமிழகத்தின் தலைநகர் சென்னையில் முதல்கட்டமாக 80 பட்டரி மூலம் பேருந்துகள் இயக்கப்படும் என்றும், கோவையில், 20 பேட்டரி மூலம் பேருந்துகள் இயக்கப்படும் என்றும் தமிழக போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் அதிரடியாகத்
தெரிவித்துள்ளார்.
கடந்த 2 தினங்களுக்கு முன் இலண்டன் சென்று வந்த அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர், தமிழகத்தில் பேட்டரி மூலம் பேருந்துகள் இயக்க, அங்கு நடந்த ஆலோசனைக் கூட்டத்தில் கலந்து கொண்டு, பட்டரி பேருந்துகளின் இயக்கத்தை
பார்வையிட்டு வந்தார்.
இந்நிலையில், நேற்று கரூரில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர், ‘புவி வெப்பமயமாதலை தடுக்கவும், காற்று மாசுபடாமல் காக்கவும், உலகம் முழுவதும் பட்டரி பேருந்துகள் இயக்கப்படுவதுபோல் தமிழகத்திலும் கொண்டு வர லண்டனில் நடந்த ஆலோசனைக் கூட்டத்தில் கலந்து கொண்டு, பட்டரி பேருந்துகளின் இயக்கத்தை பார்வையிட்டேன்.
தமிழகத்தில் பேட்டரி பேருந்துகளை இயக்குவதற்கு ‘பட்டரி சார்ஜிங் நிலையம்’ அமைக்க ஆலோசனை நடைபெற்றது. இதனையடுத்து, தமிழகத்தில் முதல் கட்டமாக தலைநகர் சென்னையில் 80 பட்டரி பேருந்துகளும், கோவையில் 20 பட்டரி பேருந்துகளும் இயக்கப்படும். இதன் காரணமாக காற்று மாசுபடுவதையும், புவி வெப்பமயமாதலையும்
தடுக்க முடியும்.
மேலும், பேருந்து பராமரிப்பு செலவுகள் குறையும். இந்த பட்டரி பேருந்து விலை 2 கோடி ருபாய். இந்த பேருந்தில் 20 இருக்கைகள் இருக்கும். இதில் சுமார் 100 பேர் வரை நின்று கொண்டே பயணம் செல்லலாம்’ எனத் தெரிவித்துள்ளார்
Subscribe to:
Posts (Atom)