30 May 2014
பொதுமக்களுடன் இணைந்து போராட்டம்:
தருமபுரி மாவட்டத்தில் அரசு மதுக் கடைகளை மூட வலியுறுத்தி பொதுமக்களுடன் இணைந்து விரைவில் போராட்டத்தில் ஈடுபடப் போவதாக தருமபுரி மக்களவைத் தொகுதி உறுப்பினர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்தார்.
மக்களவைத் தேர்தலில் தருமபுரி தொகுதியில் தேசிய ஜனநாயக் கூட்டணி சார்பில் பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.
இதையடுத்து, தொகுதியில் உள்ள கிராமங்களுக்கு நேரடியாகச் சென்று வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்து வருகிறார்.
வியாழக்கிழமை தருமபுரி ஒன்றியத்துக்குள்பட்ட ஏமகுட்டியூர் கிராமத்தில் வாக்காளர்களுக்கு அவர் நன்றி தெரிவித்து பேசியது: மக்களவைத் தேர்தலில் பண பலம், அதிகார பலத்தால் திராவிடக் கட்சிகள் போட்டியிட்டன. ஆனால், பணத்தைப் பெரிதாக நினைக்காமல், முன்னேற்றம், வளர்ச்சி ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு இந்தத் தொகுதி மக்கள் பாமகவுக்கு வாக்களித்து, என்னை வெற்றி பெறச் செய்ததற்காக நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.
தருமபுரி மாவட்டத்தில் தொழிற்சாலைகளைத் தொடங்கி வேலைவாய்ப்பைப் பெருக்கிட நடவடிக்கை எடுப்பேன்.
தருமபுரி மாவட்டத்தில் ஓராண்டில் ரூ.1900 கோடிக்கு மது விற்பனையாகியுள்ளது. இந்தப் பணத்தை மதுவுக்கு
செலவழிக்காமல் இருந்திருந்தால் மக்களுக்கு பேருதவியாக இருந்திருக்கும்.
எனவே, மாவட்டத்தில் உள்ள அரசு மதுக் கடைகளை மூட வலியுறுத்தி, பொதுமக்களுடன் இணைந்து விரைவில் போராடுவேன் என்றார் அவர்.
நிகழ்ச்சியில், மாநில துணைப் பொதுச் செயலாளர் அ.சரவணன், வன்னியர் சங்க மாநிலத் துணைத் தலைவர் பாடி செல்வம் , கிழக்கு மாவட்டச் செயலாளர் அரசாங்கம், மாவட்ட ஊராட்சிக் குழு முன்னாள் தலைவர் வெங்கடேசுவரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
29 May 2014
27 May 2014
கலைஞர் டி.வி.க்கு ரூ.200 கோடி கைமாறிய விவகாரம்:
அமலாக்கப்பிரிவு தொடர்ந்த வழக்கில் ஆ.ராசா, கனிமொழி, உள்ளிட்ட 9 பேர் நேற்று சி.பி.ஐ. தனி கோர்ட்டில் ஆஜர் ஆனார்கள். அப்போது அவர்கள் ஜாமீன் கேட்டு மனு தாக்கல் செய்தனர். இந்த மனுக்களின் மீது நாளை(புதன்கிழமை) விசாரணை நடைபெறுகிறது.
ரூ.200 கோடி கைமாறிய விவகாரம்
2ஜி ஸ்பெக்ட்ரம் அலைக்கற்றை முறைகேடு தொடர்பான வழக்கு டெல்லியில் உள்ள சி.பி.ஐ. தனி கோர்ட்டில் நடந்து வருகிறது.
இதில், 2ஜி வழக்கில் கலைஞர் டி.வி.க்கு ரூ.200 கோடி கைமாறிய விவகார தொடர்பாக முன்னாள் மத்திய மந்திரி ஆ.ராசா, கனிமொழி எம்.பி, தயாளு அம்மாள், கலைஞர் டி.வி.யின் மேலாண்மை இயக்குனர் சரத்குமார், பி.அமிர்தம், சுவான் டெலிகாம் புரமோட்டர்ஸ் நிறுவனத்தை சேர்ந்த சாகித் உஸ்மான் பல்வா, வினோத் கோயங்கா, குசேகான் புரூட்ஸ் அண்டு வெஜிடபிள் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் இயக்குனர்கள் ஆசிப் பல்வா, ராஜீவ் அகர்வால், இந்தி திரைப்பட தயாரிப்பாளர் கரீம் மொரானி ஆகிய 10 தனிநபர்களின் பெயர்களும் மற்றும் சுவான் டெலிகாம், குஸேகான் ரியல்டி, சினியுக் மீடியா, கலைஞர் டி.வி. டைனமிக்ஸ் ரியல்டி, எவர்ஸ்மைல் கன்ஸ்ட்ரக்சன் கம்பெனி, கோன்வுட் கன்ஸ்ட்ரக்சன்ஸ் அண்டு டெவலப்பர்ஸ், டி.பி.ரியல்டி, நிஹார் கன்ஸ்ட்ரக்சன்ஸ் ஆகிய 9 நிறுவனங்களின் பெயர்களும் இடம் பெற்று உள்ளன.
சம்மன் அனுப்பியது
இந்த குற்றப்பத்திரிகையை ஏற்றுக்கொண்ட நீதிபதி ஓ.பி.சைனி, இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்கள் மீது விசாரணை நடத்த தேவையான முகாந்திரம் உள்ளதாக கூறினார்.
எனவே இந்த வழக்கில் ஆ.ராசா, கனிமொழி எம்.பி., தயாளு அம்மாள் உள்ளிட்ட அனைவரும் மே 26–ந் தேதி (நேற்று) நீதிமன்றத்தில் நேரில் ஆஜராக வேண்டும் என்று உத்தரவிட்டு இருந்தார். இது தொடர்பாக அவர்களுக்கு சம்மனும் அனுப்பப்பட்டது.
ஆ.ராசா, கனிமொழி ஆஜர்
அதன்படி முன்னாள் மத்திய மந்திரி ஆ.ராசா, கனிமொழி எம்.பி., உள்ளிட்டோர் நேற்று சி.பி.ஐ. தனிகோர்ட்டில் ஆஜரானார்கள். ஆனால் உடல் நலக்குறைவால் தயாளு அம்மாள் ஆஜராகவில்லை.இதேபோல், அமலாக்கப் பிரிவு குற்றம் சாட்டியுள்ள 9 நிறுவனங்களின் சார்பில் அந்த நிறுவனங்களில் பிரதிநிதிகள் ஆஜர் ஆனார்கள்.
தயாளு அம்மாள் தரப்பு வக்கீல் வாதிடுகையில், தயாளு அம்மாள் உடல்நலக்குறைவுடன் இருப்பதாகவும் புரிந்துகொள்வதில் அவருக்கு சிரமம் இருப்பதால் ஆஜராவதில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தார்.
இந்த கோரிக்கையை நீதிபதி ஓ.பி.சைனி ஏற்றுக்கொண்டு தயாளு அம்மாள் நேரில் ஆஜராவதற்கு நேற்று ஒருநாள் மட்டும் விலக்கு அளித்தார்.
நாளை விசாரணை
மேலும் 28–ந்தேதி(நாளை) அன்று தயாளு அம்மாளுக்காக அவரது வக்கீல் ஜாமீன் மனு தாக்கல் செய்யலாம் என்றும் ஜாமீன் அளிப்பது குறித்து தகுதியின் அடிப்படையில் முடிவு செய்யப்படும் என்றும் நீதிபதி கூறினார்.நேற்று சி.பி.ஐ. சிறப்பு கோர்ட்டில் ஆ.ராசா, கனிமொழி உள்ளிட்ட 9 பேர் ஜாமீன் கேட்டு மனு தாக்கல் செய்தனர். இந்த மனுக்களின் மீதான விசாரணை நாளை(புதன்கிழமை) எடுத்து கொள்ளப்படும் என்று நீதிபதி அறிவித்தார்.வழக்கு விசாரணையின்போது, குற்றம் சாட்டப்பட்டவர்களின் வக்கீல் நீதிபதியிடம், இந்த வழக்கு தொடர்பாக அமலாக்கப்பிரிவின் எந்த ஆவணங்களையும், தங்களுக்கு அளிக்கவில்லை என்று குறிப்பிட்டார்.
ஆவணங்களை வழங்க உத்தரவு
இதனை ஏற்றுக்கொண்ட நீதிபதி ஓ.பி.சைனி இந்த வழக்கு தொடர்பான அனைத்து ஆவணங்களையும் குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு அளிக்குமாறு அமலாக்கப்பிரிவு அளிக்கவேண்டும் என்று உத்தரவிட்டார்.
மேலும் ‘இந்த வழக்கு தொடர்பாக அமலாக்கப்பிரிவிடம் எத்தனை ஆவணங்கள் உள்ளதோ அத்தனையும் உங்களுக்கு கிடைக்கும். அடுத்த 2 நாட்களுக்குள் அந்த ஆவணங்கள் அனைத்தையும் நீங்கள் ஆய்வு செய்து முடித்துவிடவேண்டும்’ என்றும் குற்றம் சாட்டப்பட்டவர்களிடம் நீதிபதி கூறினார்.
26 May 2014
24 May 2014
யசோதா மோடி அழைத்தால் சேர்ந்து வாழ்வேன்:
மோடி அழைத்தால் சேர்ந்து வாழத்தயார் என்று அவரது மனைவி யசோதா பென் கூறியுள்ளார்.
யசோதா பென் அளித்துள்ள ஒரு பேட்டியில் கூறியதாவது, மோடி நாட்டின் பிரதமராக பதவி ஏற்பதில் நான் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன். ஒட்டுமொத்த தேசத்தைவிட அதிகமாக மகிழ்கிறேன்.
நானும் அவரும் விவாகரத்து செய்து கொள்ளவில்லை, நாங்கள் சேர்ந்து வாழவில்லை அவ்வளவுதான். அவரைப் பொறுத்தமட்டில், அவரது வாழ்க்கையில் நாடுதான் மிகவும் முக்கியம் என்றும் அவர் அழைத்தால் அவருடன் சேர்ந்து வாழத்தயாராக இருக்கிறேன் எனவும் கூறியுள்ளார்.
22 May 2014
சூறைக் காற்றுடன் பலத்த மழை: 2,000 வாழைகள் சாய்ந்தன
கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரையில் செவ்வாய்க்கிழமை இரவு இடி, மின்னல், சூறைக் காற்றுடன் பலத்த மழை பெய்தது. இதில் சுமார் 2 ஆயிரம் வாழைகள் சாய்ந்தன. பல்வேறு இடங்களில் மரங்கள் வேரோடு சாய்ந்ததால், ஊத்தங்கரை சுற்றுப் பகுதி கிராமங்களில் மின் விநியோகம் பாதிக்கப்பட்டது. ஊத்தங்கரை, கல்லூர், வெங்கடதாம்பட்டி, புதூர் உள்ளிட்ட பகுதிகளில் செவ்வாய்க்கிழமை சூறைக் காற்றுடன் பெய்த பலத்த மழையால் பழமையான புளியமரங்கள் வேரோடு சாய்ந்தன. மரக் கிளைகள் முறிந்து மின் கம்பங்கள், வயர்களில் விழுந்ததால் மின் விநியோகம் தடைபட்டது. பலத்த மழையால் மழைநீர் சாலையில் வெள்ளம் போல பெருக்கெடுத்து ஓடியது. நீர் நிலைகள் வறண்ட நிலையில், திடீர் மழையால் மக்கள் மகிழ்ச்சியடைந்தனர். ஊத்தங்கரை காவல் நிலைய வளாகத்தில் இரண்டு வேப்பமரங்கள் சாய்ந்து மின் கம்பி மீது விழுந்தன. இதனால், மின் விநியோகம் துண்டிக்கபட்டது. சாலையோரக் கடைகள் சூறைக் காற்றில் தூக்கி வீசப்பட்டன. கிராமங்களில் பல வீடுகளின் மேல்கூரைகள் பலத்த காற்றில் தூக்கி வீசப்பட்டன. கல்லூரில் விவசாயி மோகனுக்குச் சொந்தமான விளைநிலத்தில் சாகுபடி செய்யப்பட்டிருந்த 2 ஆயிரம் வாழைகள் சாய்ந்தன. அதே பகுதியைச் சேர்ந்த குமார், கணேசன் ஆகியோரின் கோழிப் பண்ணைகளில் ஏராளமான கோழிக் குஞ்சுகள் உயிரிழந்தன. சேலம்- திருப்பத்தூர் சாலையில் 10-க்கும் மேற்பட்ட புளியமரங்கள் வேரோடு சாய்ந்தன. ஊத்தங்கரையிலுள்ள தெப்பக்குளத்தின் சுற்றுச் சுவர் சேதமடைந்தது. மேலும், பல ஆண்டுகளுக்கு பிறகு ஊத்தங்கரையில் ஆலங்கட்டி மழை பெய்தது. இதைக் கண்டு மகிழ்ந்த மக்கள் ஆலங்கட்டிகளை சேகரித்தனர். ஊத்தங்கரை பகுதியில் 129 மி.மீ. மழை பதிவானது
21 May 2014
புகலிடக் கோரிக்கையாளர்களை மலேஷியா நாடு கடத்தக்
இலங்கைப் புகலிடக் கோரிக்கையாளர்களை அரசாங்கம் நாடு கடத்தக் கூடாது என மலேஷிய மனித உரிமை அமைப்பான சுவாரம் கோரியுள்ளது.
இலங்கை அரசாங்கத்தின் கோரிக்கைக்கு அமைய மலேசிய அரசாங்கம், இலங்கைப் புகலிடக் கோரிக்கையாளர்களை கைது செய்து நாடு கடத்துவில் முனைப்பு காட்டி வருவதாகக் குற்றம் சுமத்தியுள்ளது.
இலங்கை அரசாங்கத்தை திருப்திப்படுத்தும் நோக்கில் செயற்பட்டு வரும் சில பலம்பொருந்திய மலேஷிய அரசியல்வாதிகளின் உத்தரவுகளுக்கு அமைய காவல்துறையினர் செயற்பட்டு வருவதாக சுவாரம் அமைப்பின் பேச்சாளர் ஆர்.தவராஜன் தெரிவித்துள்ளார்.
அண்மையில் மூன்று இலங்கையர்களை மலேஷிய அரசாங்கம் கைது செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
கிருபாநாதன், கிருபாகரன் மற்றும் குசாந்தன் ஆகியோரே இவ்வாறு கைது செய்யப்பட்டு தடுத்த வைக்கப்பட்டுள்ளனர்.
இந்த இலங்கையர்கள் அரசியல் புகலிடக் கோரிக்கையாளர்களாக இருக்கக் கூடும் எனவும், அவ்வாறானவர்கள் நாடு கடத்தப்பட்டால் சித்திரவதைகளை அனுபவிக்க நேரிடலாம எனவும் அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
மலேஷியாவில் புகலிடம் கோரி வரும் இலங்கைத் தமிழர்களை, இலங்கை அரசாங்கம் இலக்கு வைத்து செயற்பட்டு வருவதாகவும், அதற்கு சில மலேஷிய அரசியல்வாதிகள் ஒத்துழைப்பு வழங்கி வருவதாகவும் அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.
கைது செய்யப்பட்ட நபர்களின் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும் குடிவரவு சட்டங்களை மீறிய குற்றச்சாட்டின் அடிப்படையில் கைது செய்யப்படும் நபர்களின் கணனிகளை பறிமுதல் செய்ய வேண்டிய அவசியமில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
குறித்த நபர்களின் கணனிகள் பறிமுதல் செய்யப்பட்டமை சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.
புகலிடக் கோரிக்கையாளர்கள் தொடர்பிலான ஐக்கிய நாடுகள் பிரகடனத்திற்கு புறம்பான வகையில் காவல்துறையினர் செயற்பட்டுள்ளதாக தவராஜன் தெரிவித்துள்ளார். புகலிடக் கோரிக்கையாளர்களை மலேஷியா நாடு கடத்தக்
இலங்கை அரசாங்கத்தின் கோரிக்கைக்கு அமைய மலேசிய அரசாங்கம், இலங்கைப் புகலிடக் கோரிக்கையாளர்களை கைது செய்து நாடு கடத்துவில் முனைப்பு காட்டி வருவதாகக் குற்றம் சுமத்தியுள்ளது.
இலங்கை அரசாங்கத்தை திருப்திப்படுத்தும் நோக்கில் செயற்பட்டு வரும் சில பலம்பொருந்திய மலேஷிய அரசியல்வாதிகளின் உத்தரவுகளுக்கு அமைய காவல்துறையினர் செயற்பட்டு வருவதாக சுவாரம் அமைப்பின் பேச்சாளர் ஆர்.தவராஜன் தெரிவித்துள்ளார்.
அண்மையில் மூன்று இலங்கையர்களை மலேஷிய அரசாங்கம் கைது செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
கிருபாநாதன், கிருபாகரன் மற்றும் குசாந்தன் ஆகியோரே இவ்வாறு கைது செய்யப்பட்டு தடுத்த வைக்கப்பட்டுள்ளனர்.
இந்த இலங்கையர்கள் அரசியல் புகலிடக் கோரிக்கையாளர்களாக இருக்கக் கூடும் எனவும், அவ்வாறானவர்கள் நாடு கடத்தப்பட்டால் சித்திரவதைகளை அனுபவிக்க நேரிடலாம எனவும் அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
மலேஷியாவில் புகலிடம் கோரி வரும் இலங்கைத் தமிழர்களை, இலங்கை அரசாங்கம் இலக்கு வைத்து செயற்பட்டு வருவதாகவும், அதற்கு சில மலேஷிய அரசியல்வாதிகள் ஒத்துழைப்பு வழங்கி வருவதாகவும் அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.
கைது செய்யப்பட்ட நபர்களின் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும் குடிவரவு சட்டங்களை மீறிய குற்றச்சாட்டின் அடிப்படையில் கைது செய்யப்படும் நபர்களின் கணனிகளை பறிமுதல் செய்ய வேண்டிய அவசியமில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
குறித்த நபர்களின் கணனிகள் பறிமுதல் செய்யப்பட்டமை சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.
புகலிடக் கோரிக்கையாளர்கள் தொடர்பிலான ஐக்கிய நாடுகள் பிரகடனத்திற்கு புறம்பான வகையில் காவல்துறையினர் செயற்பட்டுள்ளதாக தவராஜன் தெரிவித்துள்ளார். புகலிடக் கோரிக்கையாளர்களை மலேஷியா நாடு கடத்தக்
19 May 2014
இணையத்தில் உலவும் ப்ரீத்தி ஜிந்தாவின் நிர்வாண படம்
இந்தி படத்தில் 1998–ல் அறிமுகமான இவர், தொடர்ந்து பத்து வருடங்கள் முன்னணி கதாநாயகியாக இருந்தார்.
பிறகு ஐ.பி.எல். கிரிக்கெட்டில் பஞ்சாப் அணி உரிமையாளராகவும் மாறினார்.
இந்நிலையில், ப்ரீத்தி ஜிந்தாவின் ஆபாச படங்களை சிலர் இணையத்தில் பரப்புவதாக புகார்கள் எழுந்துள்ளன.
இதனால் வேதனையில் இருக்கும் ப்ரீத்தி ஜிந்தா, இது குறித்து ட்விட்டரில், எனது படங்களை ஆபாசமாக சித்தரித்து இணையத்தில் வெளியிடுகின்றனர்.
வக்கிர மனம் கொண்டவர்கள் எனது முகத்தை தனியாக எடுத்து வேறு நிர்வாண படங்களுடன் ஒட்டி மார்பிங் செய்து வெளியிடுகிறார்கள்.
நான் பிரபல நடிகையாக இருப்பது பலருக்கு பிடிக்காமல் இருக்கிறது, எனது தனிப்பட்ட வாழ்க்கையை சீரழிப்பது போல் அவர்கள் நடவடிக்கைகள் உள்ளது.
மேலும், எனக்கும் சோகம், அழுகை எல்லாம் உண்டு என்பது அவர்களுக்கு புரியவில்லை.
நான் சினிமாவில் நடித்துக் கொண்டு இருந்த போது என்னை பார்த்த கண்ணோட்டத்துடனேயே இப்போதும் பார்க்கிறார்கள் என்றும் என் வாழ்க்கை முறை மாறி விட்டது என்பதை அவர்கள் இன்னும் புரிந்து கொள்ளவில்லை எனவும் கூறியுள்ளார்.
12 May 2014
(1/4) பவுன் நகைக்காக சிறுமி படுகொலை
திருத்தணி: திருத்தணி அருகே கால்(1/4) பவுன் நகைக்காக ஒரு சிறுமியை கொன்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வாலாஜாவைச் சேர்ந்த ராமராஜின் மகள் வினிதா(8) விளையாடிக் கொண்டிருந்தபோது, மர்ம நபர்கள் அவளைக் கடத்திச் சென்று அவள் அணிந்திருந்த கால்(1/4) பவுன் நகையை திருடியதுடன் அவளையும் கொன்று விட்டு கிணற்றில் வீசி சென்று விட்டனர். இது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
09 May 2014
முதல் முறையாக கொளு கொளு குண்டு பாப்பா
தமிழகத்திலேயே முதன் முறை யாக 5.2 கிலோ எடை கொண்ட ஆண் குழந்தை பிறந்துள்ளது.
மேடவாக்கம் அடுத்துள்ள நன்மங்கலம் பொன்னியம்மன் காலடி பகுதியைச் சேர்ந்த கார்த்தி (33) ஒரு கூலித் தொழிலாளி. இவரின் மனைவி சுதா (29). இவர்களுக்கு ஏற்கெனவே 3 வயதில் ஆண் குழந்தை உள்ளது.
இரண்டாவது முறை கருவுற்ற சுதா, பிரசவத்திற்காக மேடவாக்கத்தில் உள்ள மேம்படுத்தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் புதன்கிழமை மதியம் சேர்க்கப் பட்டார். அவருக்கு இரவுவரை சுகப்பிரசவம் ஆகவில்லை.
இதையடுத்து அறுவை சிகிச்சை செய்து குழந்தையை எடுக்க மருத்துவர்கள் முடிவு செய்தனர். அதன்படி வியாழக்கிழமை மதியம் 1 மணியளவில் அறுவை சிகிச்சை செய்து குழந்தையை வெளியே எடுத்தனர்.
அந்தக் குழந்தையை எடை போட்டுப் பார்த்த போது 5.20 கிலோ எடை இருந்தது. எடை அதிகமாக இருந்தாலும் நல்ல உடல் நலத்துடன் குழந்தை இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
இது தொடர்பாக வட்டார மருத்துவ அலுவலர் ரவிச்சந்திரன் மற்றும் வட்டார சுகாதார மேற்பார்வையாளர் சுரேஷ் ஆகியோர் செய்தியாளர்களிடம் கூறியதாவது, தமிழகத்திலேயே முதன் முறையாக 5.20 கிலோ எடை கொண்ட குழந்தை பிறந்துள்ளது. குழந்தை நலமாக உள்ளது. அதிக எடையுடன் இருந்ததால் சுகப்பிரசவம் ஆகவில்லை.
பொதுவாக குழந்தைகள் 2.50 கிலோ முதல் 3 கிலோ வரை எடையுடன் பிறக்கும்.
பொதுவாக தாய்மார்களுக்கு பிரசவ காலத்தில் ரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகமாகும். அதனால் சில குழந்தைகளுக்கு சர்க்கரை நோய் பாதித்து, பிறக்கும்போதே அதிக எடையுடன் பிறக்க வாய்ப்புள்ளது. ஆனால் சுதாவின் குழந்தைக்கு அந்த பிரச்சினைகள் ஏற்படவில்லை.
முதல் குழந்தை யும் 4 கிலோ எடையுடன் பிறந்திருப்பதால் இந்த குழந்தையின் எடை குறித்து பயம் தேவையில்லை. பெற்றோர் அதிக எடையுடன் இருந்தாலோ அல்லது மரபுவழி காரணமாகவோ குழந்தைகள் அதிக எடையுடன் பிறக்க வாய்ப்புள்ளது என்று கூறியுள்ளார்
08 May 2014
மகளைமப்பில் கொலை செய்த தந்தை !!
திருவண்ணாமலையில் மனைவியுடன் உள்ள தகராறில் தந்தையே குடிபோதையில் மகளை கொன்றுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திருவண்ணாமலை மாவட்டம் கோவிந்தபட்டு குப்பம் தாங்கலை சேர்ந்தவர் முனுசாமி, இவர் கம்பி கட்டும் தொழிலாளி. இவரது மனைவி கௌரி.
இந்த தம்பதியின் மகள் கிரிஜா 3ம் வகுப்பு படித்து வந்தார். மேலும், ஜிண்டா என்ற மகள்களும், வெற்றி, பெரியதுரை என்ற மகன்கள் உள்ளனர்.
கௌரி நடத்தையில் முனுசாமி சந்தேகப்பட்டதால் கௌரிக்கும், முனுசாமிக்கும் அடிக்கடி தகராறு இருந்து வந்தது.
இந்நிலையில் குடிபோதையில் வீட்டுக்கு வந்த முனுசாமி மனைவி கௌரியிடம் தகராறில் ஈடுபட்ட போது கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
அப்போது கௌரி வீட்டை விட்டு வெளியேறி அருகில் உள்ள உறவினர் வீட்டிற்கு சென்றுள்ளார்.
இதனால் அதிர்ச்சியடைந்த முனுசாமி குழந்தைகளை தாக்கினால் கௌரி வந்து விடுவாள் என்று கருதி மகள் கிரிஜாவை தாக்கியுள்ளார்.
மேலும், தன் மகள் என்றும் பாராமல் அருகில் இருந்த கத்தியை எடுத்து சிறுமியின் கழுத்தை அறுத்துள்ளார்.
இதனால், அந்த சிறுமி அதே இடத்தில் துடிதுடித்து பரிதாபமாக இறந்துள்ளார்.
இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த 2வது மகள் ஜிண்டா அருகில் ஓடிவந்தாள். அவள் கையிலும் கத்தியால் கீறியுள்ளார்.
இந்நிலையில், குழந்தைகளின் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் வருவதற்குள் முனுசாமி தப்பி ஓடிவிட்டார்.
இதுகுறித்து பொதுமக்கள் சாத்தனூர் அணை பொலிசாருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்துக்கு விரைந்த பொலிசார் கிரிஜாவின் பிணத்தை மீட்டு திருவண்ணாமலை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
மேலும், காயமடைந்த ஜிண்டா திருவண்ணாமலை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இதுகுறித்து பொலிசார் வழக்குப்பதிவு செய்து தலைமறைவான முனுசாமியை கைது செய்துள்ளனர்.
06 May 2014
ஒரு தலைக்காதலால் நடந்தேறிய விபரீதம்!
சென்னை போரூர் ஏரியில் அடையாளம் தெரியாத பெண் உடல் ஒன்று துண்டு துண்டாக வெட்டி வீசப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
போரூர் ஏரியில், ஒரு பெண்ணின் உடலை வெட்டி ஒரு சாக்கு மூட்டையில் கட்டி ஏரியில் வீசி இருந்துள்ளனர்.
இது பற்றி வழக்கு பதிவு செய்த பொலிசார், காணாமல் போன பெண்களின் பட்டியலை சேகரித்து விசாரித்துள்ளனர்.
அப்போது சென்னை நெசப்பாக்கம் அன்னை சத்யா நகரைச் சேர்ந்த ரேகா என்ற பெண் காணாமல் போயிருந்தது தெரியவந்துள்ளது.
இதையடுத்து அந்த பெண்ணின் கணவர் ஸ்ரீராம் மற்றும் உறவினர்களை அழைத்து சென்று உடலை காட்டியுள்ளனர்.
அதைப் பார்த்த ஸ்ரீராம் கொலை செய்யப்பட்டிருப்பது மனைவி ரேகா தான் என்று உறுதிப்படுத்தியுள்ளார்.
ரேகாவுக்கும் ஸ்ரீராமுக்கும் கடந்த 3 மாதங்களுக்கு முன்பு தான் திருமணம் நடந்துள்ளது.
ஸ்ரீராம் அம்பத்தூரில் ஒரு தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார், ரேகா எம்.ஜி.ஆர் நகரில் ஜிம்மில் பணிபுரிந்துள்ளார்.
கடந்த 1ம் திகதி காலையில் ஜிம்முக்கு சென்றவர் வீடு திரும்பவில்லை.
இதையடுத்த பொலி்ஸ் விசாரணையில் மாதவரத்தை சேர்ந்த கால்டாக்சி டிரைவர் சாம்சன், ரேகாவை ஒரு தலையாக காதலித்தது தெரிய வந்துள்ளது.ஆனால் ரேகா ஸ்ரீராமை காதலிப்பதாக கூறி தன் மீது ஆசைப்பட வேண்டாம் என்று கூறி இருக்கிறார்.
ஆனால் சாம்சனால் ரேகாவை மறக்க முடியவில்லை. அடிக்கடி ரேகாவை பின் தொடர்ந்து சென்று காதல் தொல்லை கொடுத்துள்ளார்.
இது பற்றி ரேகா தனது காதலர் ஸ்ரீராமிடம் தெரிவித்து இருக்கிறார். சாம்சனின் தொந்தரவு பொறுக்க முடியாமல் ரேகா கால்சென்டருக்கு வேலைக்கு செல்ல வில்லை.
பின்னர், ரேகா இன்னொருவருக்கு மனைவியாகி விட்ட ஆத்திரத்தில் சாம்சன் கடத்தி கொலை செய்து இருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது.
மேலும், சாம்சன் வீட்டுக்கு பொலிசார் சென்ற போது வீடு பூட்டப்பட்டு இருந்ததாகவும் அவரை தீவிரமாக தேடி வருவதாகவும் தெரிவித்துள்ளனர்.
04 May 2014
தட்டுத் தடுமாறிய சிறுவன்…. வெளுத்து வாங்கிய பெண் பொலிஸ்
நாகர்கோவிலில் பேருந்தில் பயணித்த சிறுவன், நிலை தடுமாறி விழுந்துவிடாமல் இருக்க பெண் பொலிசை பிடித்ததால் சரமாரியாக அடி வாங்கியுள்ளான்.
கன்னியாகுமரி மாவட்டம் மேக்காரமண்டபம் அருகே உள்ள செக்காரவிளை பகுதியை சேர்நதவர் முத்துசாமி. கூலி தொழில் செய்து வருகிறார். இவரது மனைவி சரோஜா. இவர் இலவச சீருடை தைக்கும் தொழில் செய்து வருகிறார்.இந்நிலையில் நேற்று காலை இதற்கான துணிகளை வாங்குவதற்காக தனது மகன் விஷ்ணுதாசுடன் மார்த்தாண்டத்தில் இருந்து நாகர்கோவில் வரும் பேருந்தில் வந்து கொண்டிருந்தார்.
இவரது மகன் விஷ்ணுதாஸ் மூலச்சலில் உள்ள ஒரு பள்ளியில் 9ம் வகுப்பு படித்து வருகிறான். பேருந்தல் கூட்டம் அதிகமாக இருந்ததால் விஷ்ணுதாஸ் பேருந்தின் முன்பக்கம் நின்று கொண்டிருந்தான்.
தக்கலை அருகே பேருந்து வந்து கொண்டிருந்த போது திடீரென பிரேக் பிடித்ததால், நிலைதடுமாறிய சிறுவனின் கை , அருகில் இருந்த பெண்ணின் மேல் பட்டதாக கூறப்படுகிறது.
இதனால் ஆத்திரம் அடைந்த அந்த பெண் சிறுவன் என்றும் பாராமல் அடித்து உதைத்துள்ளார். இதை தட்டி கேட்ட தாய் சரோஜாவிடம் நான் யார் தெரியுமா? சப் இன்ஸ்பெக்டர், என்னிடம் பேசினால் தொலைத்து விடுவேன் என்று எச்சரித்துள்ளார்.
இதற்கிடையே பேருந்து ஓட்டுனர், நடத்துனர் மற்றும் பயணிகள் பேருந்தை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நிறுத்தினர். இதனை பார்த்த அந்த பெண் பேருந்தில் இருந்து இறங்கி தப்பி ஓட முயன்றார்.
இதனை எதிர்பாராத சக பெண் பயணி ஒருவர் அவரை மடக்கி பிடிக்க முயன்றார். ஆனால் அவர் தனது பேக்கில் இருந்து கத்தியை எடுத்து தனது கையை கீறிக்கொண்டார். உங்களை கொலை முயற்சி வழக்கில் உள்ளே தள்ளி விடுவேன் என்று எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இதுகுறித்து உடனடியாக நேசமணி நகர் காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. விரைந்து வந்த பொலிசார் பாதிக்கப்பட்ட சிறுவனையும், அவரது தாயாரையும் மட்டும் காவல் நிலையத்துக்கு அழைத்து சென்று புகாரை எழுதி வாங்கினர்.
முதல் கட்ட விசாரணையில் அடித்தவர் பெண் எஸ்ஐதான் என்பதும், அவர் தற்போது லஞ்ச வழக்கில் தற்காலிக பணிநீக்கத்தில் இருக்கிறார் என்பதும் தெரிய வந்தது. இதை தொடர்ந்து அவரை தேடி வருகின்றனர்.
03 May 2014
காதலனுடன் சேர்த்து வையுங்கள்: கணவருடன் காவல் நிலையம் வந்த
அகமதாபாத்தில் மகளிர் காவல் நிலையத்திற்கு தனது கணவருடன் வந்த 50 வயதுடைய பெண் ஒருவர், தன்னை தனது 24 வயது காதலருடன் சேர்த்து வைக்குமாறு புகார் அளித்த விநோத சம்பவம் நடந்துள்ளது.
மணி நகரில் உள்ள 50 வயதான ஆஷா ஒரு முறை அங்குள்ள கோவிலுக்கு செல்ல ரிக்சாவில் சென்ற போது ஜிக்னேசின் செயல்பாடு அவளை ஈர்த்துள்ளது.
அதனால் ஜிக்னேசின் செல்போன் எண்ணை கேட்டு வாங்கி, இருவரும் நெருங்கி பழக ஆரம்பித்துள்ளனர்.
இந்நிலையில், கடந்த 3 மாதங்களுக்கு முன் ஆஷாவை சந்தித்த ஜிக்னேஷ் தனது பெற்றோர் பார்த்து வைத்துள்ள பெண்ணை மணக்கப் போவதாகவும், தங்களது உறவை முறித்துக்கொள்ள வேண்டும் எனவும் கூறியுள்ளார்.
இதை சற்றும் எதிர்பார்க்காத ஆஷா ஜிக்னேஷ் தனக்கு துரோகம் செய்து விட்டதாக கருதியுள்ளார்.
இந்த நேரத்தில் ஆஷாவின் கணவருக்கும் அவரது காதல் விஷயம் தெரிந்துள்ளது.
அவர் ஆஷாவிடம் இம்மாதிரியான செயல் குடும்ப வாழ்க்கையை பாதிக்கும் என்று கூறி இந்த காதலை கைவிடுமாறு கூறியுள்ளார்.
ஆனால் அவர் இதை கேட்பதாக இல்லை. இதனையடுத்து அவர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
புகாரை ஏற்ற பொலிசார், முதலில் எப்படியாவது ஆஷாவுக்கு உதவவேண்டும் என நினைத்துள்ளனர்.
ஆனால், ஜிக்னேசுக்கு திருமணமான செய்தி தெரிந்தவுடன் தங்களது முடிவை மாற்றிக்கொண்ட அவர்ர்கள், இதனால் அவனது திருமண வாழ்க்கை பாதிக்கும் என கருதி தங்களது முடிவை கைவிட்டுள்ளனர்
மணி நகரில் உள்ள 50 வயதான ஆஷா ஒரு முறை அங்குள்ள கோவிலுக்கு செல்ல ரிக்சாவில் சென்ற போது ஜிக்னேசின் செயல்பாடு அவளை ஈர்த்துள்ளது.
அதனால் ஜிக்னேசின் செல்போன் எண்ணை கேட்டு வாங்கி, இருவரும் நெருங்கி பழக ஆரம்பித்துள்ளனர்.
இந்நிலையில், கடந்த 3 மாதங்களுக்கு முன் ஆஷாவை சந்தித்த ஜிக்னேஷ் தனது பெற்றோர் பார்த்து வைத்துள்ள பெண்ணை மணக்கப் போவதாகவும், தங்களது உறவை முறித்துக்கொள்ள வேண்டும் எனவும் கூறியுள்ளார்.
இதை சற்றும் எதிர்பார்க்காத ஆஷா ஜிக்னேஷ் தனக்கு துரோகம் செய்து விட்டதாக கருதியுள்ளார்.
இந்த நேரத்தில் ஆஷாவின் கணவருக்கும் அவரது காதல் விஷயம் தெரிந்துள்ளது.
அவர் ஆஷாவிடம் இம்மாதிரியான செயல் குடும்ப வாழ்க்கையை பாதிக்கும் என்று கூறி இந்த காதலை கைவிடுமாறு கூறியுள்ளார்.
ஆனால் அவர் இதை கேட்பதாக இல்லை. இதனையடுத்து அவர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
புகாரை ஏற்ற பொலிசார், முதலில் எப்படியாவது ஆஷாவுக்கு உதவவேண்டும் என நினைத்துள்ளனர்.
ஆனால், ஜிக்னேசுக்கு திருமணமான செய்தி தெரிந்தவுடன் தங்களது முடிவை மாற்றிக்கொண்ட அவர்ர்கள், இதனால் அவனது திருமண வாழ்க்கை பாதிக்கும் என கருதி தங்களது முடிவை கைவிட்டுள்ளனர்
Subscribe to:
Posts (Atom)