சென்னை போரூர் ஏரியில் அடையாளம் தெரியாத பெண் உடல் ஒன்று துண்டு துண்டாக வெட்டி வீசப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
போரூர் ஏரியில், ஒரு பெண்ணின் உடலை வெட்டி ஒரு சாக்கு மூட்டையில் கட்டி ஏரியில் வீசி இருந்துள்ளனர்.
இது பற்றி வழக்கு பதிவு செய்த பொலிசார், காணாமல் போன பெண்களின் பட்டியலை சேகரித்து விசாரித்துள்ளனர்.
அப்போது சென்னை நெசப்பாக்கம் அன்னை சத்யா நகரைச் சேர்ந்த ரேகா என்ற பெண் காணாமல் போயிருந்தது தெரியவந்துள்ளது.
இதையடுத்து அந்த பெண்ணின் கணவர் ஸ்ரீராம் மற்றும் உறவினர்களை அழைத்து சென்று உடலை காட்டியுள்ளனர்.
அதைப் பார்த்த ஸ்ரீராம் கொலை செய்யப்பட்டிருப்பது மனைவி ரேகா தான் என்று உறுதிப்படுத்தியுள்ளார்.
ரேகாவுக்கும் ஸ்ரீராமுக்கும் கடந்த 3 மாதங்களுக்கு முன்பு தான் திருமணம் நடந்துள்ளது.
ஸ்ரீராம் அம்பத்தூரில் ஒரு தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார், ரேகா எம்.ஜி.ஆர் நகரில் ஜிம்மில் பணிபுரிந்துள்ளார்.
கடந்த 1ம் திகதி காலையில் ஜிம்முக்கு சென்றவர் வீடு திரும்பவில்லை.
இதையடுத்த பொலி்ஸ் விசாரணையில் மாதவரத்தை சேர்ந்த கால்டாக்சி டிரைவர் சாம்சன், ரேகாவை ஒரு தலையாக காதலித்தது தெரிய வந்துள்ளது.ஆனால் ரேகா ஸ்ரீராமை காதலிப்பதாக கூறி தன் மீது ஆசைப்பட வேண்டாம் என்று கூறி இருக்கிறார்.
ஆனால் சாம்சனால் ரேகாவை மறக்க முடியவில்லை. அடிக்கடி ரேகாவை பின் தொடர்ந்து சென்று காதல் தொல்லை கொடுத்துள்ளார்.
இது பற்றி ரேகா தனது காதலர் ஸ்ரீராமிடம் தெரிவித்து இருக்கிறார். சாம்சனின் தொந்தரவு பொறுக்க முடியாமல் ரேகா கால்சென்டருக்கு வேலைக்கு செல்ல வில்லை.
பின்னர், ரேகா இன்னொருவருக்கு மனைவியாகி விட்ட ஆத்திரத்தில் சாம்சன் கடத்தி கொலை செய்து இருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது.
மேலும், சாம்சன் வீட்டுக்கு பொலிசார் சென்ற போது வீடு பூட்டப்பட்டு இருந்ததாகவும் அவரை தீவிரமாக தேடி வருவதாகவும் தெரிவித்துள்ளனர்.
0 கருத்துகள்:
Post a Comment