15 March 2020
விளையாட்டாகச் எனக்கு கொரோனா இருக்குஎன சொன்ன பெண் அலறியடித்து ஓடிய பயணிகள்
சென்னையில் பேருந்தில் பயணித்த பெண் ஒருவர் தனக்கு கொரோனா இருப்பதாக சொன்னதால் பயணிகள் அதிர்ச்சிக்கு
உள்ளாகியுள்ளனர்.
கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் தீவிரமாக பரவி வருவதால் மக்கள் மிகுந்த அச்சத்தில் உள்ளனர். இந்நிலையில் இந்தியாவிலும் மக்களுக்கு கொரோனா பரவியுள்ளது. இதுவரை கொரோனா வைரஸால் 2 பேர் உயிரிழந்துள்ளனர்.இந்நிலையில் 13.03.20.
சென்னையிலிருந்து கோவை சென்ற பேருந்தில் பெண் ஒருவர் பயணித்துள்ளார். மேல்மருவத்தூர் தாண்டி சென்று கொண்டிருந்தபோது திடீரென பேருந்தை நிறுத்த சொல்லியுள்ளார். ஆனால் நடத்துனர் பேருந்தை நிறுத்த மறுத்துவிட்டார். அப்போது
அந்த பெண் தனக்கு கொரோனா இருப்பதாகவும், உடனடியாக பேருந்தை நிறுத்துமாறும் கூறியுள்ளார். இதனால் பயணிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். உடனடியாக பேருந்தை நிறுத்தி அந்த பெண்ணை
இறக்கிவிட்டுள்ளனர்.பிறகு அருகிலுள்ள சுங்கசாவடிக்கு பேருந்து சென்றது
அங்கு விவரத்தை கூறி தங்களை மருத்துவ பரிசோதனை செய்ய வேண்டும் என கூறியுள்ளனர். இதுகுறித்து
போலீசாருக்கு
தகவல் தெரிவிக்கப்பட டிக்கெட் முன்பதிவு செய்த விவரங்களை வைத்து அந்த பெண்ணை போலீஸ் கண்டுபிடித்து விசாரித்திருக்கிறார்கள்.சென்னை ஐஐடியில் படித்து வரும் அந்த பெண் பேருந்தை
நிறுத்தவேண்டும் என்பதற்காக பொய் சொன்னதாக கேஷுவலாக சொல்லியிருக்கிறார். விளையாட்டு என்ற பெயரில் பொதுமக்களை இப்படி பதற வைப்பதா என அந்த பெண்ணை
கண்டித்துள்ளனர்.
13 March 2020
எண்ணெய் கிணற்றுக்குள் சிக்கிய நாயை காப்பாற்றிய சிறுவன்..
தன் உயிரையே பணயம் வைத்து எண்ணெய் கிணற்றில் தவறி விழுந்த நாய்க்குட்டியை 10 வயது சிறுவன் மீட்கும் காட்சி இணையத்தில் வைரலாகி வருகிறது.துருக்கியில் தியார்பகீர் (Diyarbakir) மாநிலத்தின் தென்கிழக்கு பகுதியில், எனிஸ் டேய்லன் (Enes Taylan) என்ற 10 வயது சிறுவன், நண்பர்களுடன் சாலையில் சென்று
கொண்டிருக்கும் போது நாய்க்குட்டியின் சத்தம் கேட்டு நின்றுள்ளான்.அப்போது, அந்த சத்தம் எங்கிருந்து வருகிறது என்று சுற்றிமுற்றி பார்த்த சிறுவன், அருகில் இருந்த எண்ணெய் கிணற்றுக்குள் எட்டிப்பார்த்த போது, அங்கு எண்ணெயில் நாய்க்குட்டி
சிக்கி தவிப்பது தெரிய வந்தது.
இதனையடுத்து, மற்ற நண்பர்கள் உதவியுடன் அவசர குழுவுக்கு தகவல் தெரிவித்துள்ளான். அவர்கள் வந்து நாய்க்குட்டியை மீட்பதற்காக அந்த கிணற்றுக்குள் எனிஸ் என்ற அந்த சிறுவனை
தலைக்கீழாக இறக்கிவிட்டனர்.
பின்னர் சிறிதுநேரம் போராடி நாய்க்குட்டியை எண்ணெய் கிணற்றுக்குள் இருந்து காப்பாற்றி அருகில் இருந்த குளத்திற்கு எடுத்து சென்று நாய்க்குட்டியை சிறுவன் சுத்தப்படுத்திவிட்டு அங்கேயே விட்டுவிட்டான்.அதுவரை சிக்கித்தவித்த
நாய்க்குட்டி பின்பு இயல்பு நிலைக்கு திரும்பியது. மனித நேயத்துடன் சிறுவன் செயல்பட்டு நாய்க்குட்டியை காப்பாற்றிய வீடியோ காட்சி இணையத்தில் வெளியாகி உலகம் முழுவதும் விலங்கு நல ஆர்வலர்களிடம் பாராட்டுக்களை குவித்து வருகிறது.
03 March 2020
விடுதிக் குளியலறையில் குழந்தை பெற்றெடுத்த 18 வயது மாணவி
மஹாராஷ்டிரா மாநிலத்தில் கல்லூரி விடுதி குளியலறையில் 18 வயது கல்லூரி மாணவி ஒருவர் குழந்தை பெற்றெடுத்த அதிர்ச்சி சம்பவம் நிகழ்ந்துள்ளது.மஹாராஷ்டிரா மாநிலம் துலே மாவட்டத்தில் உள்ள சக்ரி நகரில் சாவித்ரிபாய் புலே ஆதிவாசி
பெண்களுக்கான விடுதி ஒன்று அமைந்துள்ளது. இந்த விடுதியில் உள்ள குளியலறையில் குழநதையொன்றில்
அழுகுரல் கேட்டு விடுதிக் கண்காணிப்பாளர் சென்று பார்த்த போது, அங்கிருந்த வாளி ஒன்றில் பிறந்த குழந்தை இருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தார். உடனே காவல்துறைக்கு
தகவல் தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து விடுதியில் தங்கியிருந்த பெண்களிடம் விசாரணை நடத்திய போது முதலில் யாரும் முன்வந்து உண்மையைக் கூறவில்லை. பின்னர் சந்தேகத்திக்கிடமான வகையில் இருந்த பெண் ஒருவரிடம் விசாரணை செய்ததில், அவர்தான் அந்தக் குழந்தையைப் பெற்றெடுத்தமை தெரிய வந்துள்ளது.தற்போது அந்தப் பெண்ணும் குழநதையும் துலே மாவட்ட அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.இந்தத் தகவல்களை சக்ரி காவல் நிலைய ஆய்வாளர் தேவிதாஸ் தாம்னே
தெரிவித்துள்ளார்.
Subscribe to:
Posts (Atom)