24 November 2016
இடி மின்னல் தாக்கி ஆறு பேர் மருத்துவமனையில்!
ஹட்டன் - நோர்வுட் - கோதி தோட்டத்தில் மின்னல் தாக்குதலுக்கு உள்ளாகிய ஆறு பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.
இந்த அனர்த்தம் நேற்று (23.11.2016) மாலை இடம்பெற்றுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, அவர்கள் தற்போது மஸ்கெலிய மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
எனினும் அவர்களின் நிலைமை பாரதூரமாக இல்லை எனவும் மருத்துவமனை தகவல்கள் தெரிவித்துள்ளமை
குறிப்பிடத்தக்கது.
மிகவும் குட்டியான செயற்கைகோள் விண்மீன் கண்டுபிடிப்பு
ஜப்பான் விண்வெளி ஆராய்ச்சியாளர்கள் மிகவும் குட்டியான செயற்கைக்கோள் விண்மீன் ஒன்றை கண்டுபிடித்துள்ளார்கள்.
உலகிலேயே இதுவரை கண்டுப்பிடிக்கப்பட்ட செயற்கைக்கோள்களில் மிகவும் சிறியதாக காணப்படும் இந்த செயற்கைக்கோள் விண்மீனுக்கு விர்கோ என்று பெயரிட்டுள்ளனர்.
மேலும் இது குறித்து ஆராய்ச்சிகள் மேற்கொண்ட போது, பால் அண்டத்தில் இருக்கும் 50 விண்மீன் செயற்கைக்கோள்களில் 40 விண்மீன்கள் மங்கலாகவும், மிகவும் சிறிய அளவிலும், அவைகளின் ஒளிப்பிறக்க அளவு மைனஸ்(-) 8 ஆக இருப்பதாகவும் ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடுத்துள்ளார்கள்.
புதிதாக கண்டுபிடிக்கப்பட்ட விர்கோ விண்மீன் சூரியனில் இருந்து 280,000 ஒளி ஆண்டுகள் தொலைவில் இருப்பதுடன், இந்த விண்மீன்கள் இடம் மாறக்கூடியது என்றும் கண்டுபிடித்துள்ளார்கள்.
23 November 2016
வவுனியாவில் புலத்தியிலிருந்து வந்தவர் சடலமாக மீட்பு..!! (காணொளி )
வவுனியா பத்தினியார் மகிழங்குளம் 3 ஆம் ஒழுங்கையில் ஜேர்மனியில் இருந்து வந்தவர் சடலமாக இன்று காலை மீட்கப்பட்டுள்ளார்.
ஜேர்மனியில் இருந்து கடந்த 3 மாதங்களுக்கு முன்னர் நாடு திரும்பிய விக்கிரமரட்ன குணசிறி என்ற 59 வயது நபரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
1985 ஆம் ஆண்டு காலப்பகுதியில் ஜேர்மனுக்கு சென்றிருந்த இவர் கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்னர் கொழும்பில் சத்திரசிகிச்சை மேற்கொண்டதன் பின்னர் மீண்டும் ஜேர்மனுக்கு
சென்றிருந்தார்.
எனினுமு; அங்கு காலநிலை ஒத்துக்கொள்ளவில்லை என தெரிவித்து தனியாக தனது பத்தினியார் மகிழங்குளம் வீட்டில் தங்கியிருந்து வீட்டை திருத்தம் செய்து வந்துள்ளார்.
இந் நிலையில் நேற்றும் வீட்டில் திருத்த வேலைகள் இடம்பெற்றிருந்ததாக தெரிவித்த அயலவர்கள் இன்று காலை மணல் இறக்குவதற்காக வந்த டிப்பர் சாரதியே குறித்த வீட்டின் உரிமையாளர் வீட்டு வாசலில் சடலமாக ஈரப்பதாக தெரிவத்த நிலையில் பொலிஸாருக்கும் தகவல்
வழங்கப்பட்டிருந்தது.
இந் நிலையில் சம்பவ இடத்திற்கு வந்த வவுனியா பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். இதேவேளை சடலமாக மீட்கப்பட்டவரின் குடும்பத்தினர் அண்மையிலேயே
வவனியாவிற்கு வருகை தந்து இவரை பார்வையிட்டு சென்றதாகவும் தெரிவித்த உறவினர்கள் 1985 ஆம் ஆண்டு காலப்பகுதி வரை இவர் இலங்கை பொலிஸில் பணியாற்றியிருந்ததாகவும் உறவினர்கள்
கறுப்பு பணத்தை சுவிஸ் பாங்குகளில் மீட்காமல் மக்களின் சுருக்கு பையில் பணம் பறித்த மோடி!
சுவிஸ் பாங்குகளில் கறுப்பு பணத்தை மீட்காமல் சாதாரண ஏழை மக்களின் சுருக்கு பையின் பணத்தை மட்டுமே பிரதமர் மோடி பறித்துள்ளார் என்று தமிழக காங்., கமிட்டி தலைவர் திருநாவுக்கரசர் ஆவேசமாக பேசினார்.
தமிழ்நாடு காங்., கமிட்டி நெல்லை, துாத்துக்குடி, கன்னியாகுமரி மற்றும் விருதுநகர் மாவட்ட அளவிலான மண்டல நிர்வாகிகள் சந்திப்பு கூட்டம் பாளை நுாற்றாண்டு மண்டபத்தில் நேற்று நடந்தது.
இதில் தமிழக காங்., கமிட்டி தலைவர் திருநாவுக்கரசர் பேசியதாவது:
மத்திய அரசு 500 ரூபாய் மற்றும் ஆயிரம் ரூபாய் நோட்டுகள் செல்லாது என அறிவித்தது பிரமதர் மோடியின் துக்ளக் சர்வாதிகார போக்கை காட்டுகிறது. அவசர கோலத்தில் மக்களை பற்றி சிந்திக்காமல் இந்த அறிவிப்பை மோடி வௌியிட்டுள்ளார்.
இதில் மக்களின் பிரச்னைகளை அகில இந்திய காங்., கமிட்டி துணைத் தலைவர் ராகுல் பாங்க் வாசலில் கேட்டார். ஆனால் அரசியலுக்காக ராகுல் இவ்வாறு செய்வதாக எதிர்க் கட்சியினர் பிரசாரம் செய்தனர். ஆனால் அதற்குள் மோடியின் தாயார் பாங்கிற்கு சென்று பழைய நோட்டுகளை மாற்றியது அரசியல் விளம்பரத்திற்காக செய்தாரா என்பதை விளக்க வேண்டும். பெற்ற தாயை கவனிக்காத பிள்ளை நாட்டின் பிரதமராக இருப்பது துரதிருஷ்டம். தாய்க்காக ஆயிரம் ரூபாய் கூட கொடுக்காமல் பாங்கிற்கு அனுப்பிய பிள்ளை இந்திய நாட்டின் தாய்மார்களை காப்பாற்ற போவதாக கூறுவதை யாரும் நம்ப மாட்டார்கள்.
இந்தியாவில் தற்போது 2100 கோடி எண்ணிக்கையில் கரன்சி நோட்டுகள் அச்சடிக்கப்பட வேண்டியுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது. மாதம் 300 கோடி கரன்சி அச்சடித்தால் கூட இதற்கு 7 மாதங்கள் ஆகும் என முன்னாள் நிதி அமைச்சர் சிதம்பரம் கூறியுள்ளார்.
இதுவரை 500ரூபாய் புதிய நோட்டுகள் மக்களுக்கு கிடைக்கவில்லை. ஏற்கனவே 1௦௦, 5௦ மற்றும் 500 ரூபாய் நோட்டுகளை அச்சடித்து விட்டு புதியதாக 2 ஆயிரம் நோட்டுகளை அச்சடித்திருக்க வேண்டும். ஆனால் அதற்கு பதிலாக முதலில் ௨ ஆயிரம் நோட்டுகளை அச்சடித்து பிற நோட்டுகளுக்கு தட்டுப்பாடு நிலவுகிறது. தற்போது ௨ ஆயிரம் நோட்டுகள் கிடைத்தாலும் இதற்கு சில்லறை யாரும் கொடுப்பதில்லை. மக்கள் பிரச்னைகள் குறித்து தெரியாத அரசாங்கத்தை மோடி நடத்தி வருகிறார்.
இதில் குறிப்பாக, 2ஆயிரம் நோட்டுகளை அச்சடிக்க பிரதமர் மோடிக்கு எந்தவித அதிகாரமும் இல்லை. மத்திய அமைச்சரவை கூட்டத்தில் விவாதித்து தீர்மானம் நிறைவேற்றி ரிசர்வ் பாங்க் அனுமதி பெற்று இதனை அச்சடிக்க வேண்டும். ஆனால் இதற்கான விதிமுறைகளை கடைபிடிக்காமல் சர்வாதிகாரி ஹிட்லர் போல் மோடி செயல்படுகிறார். இதுசம்பந்தமாக கோர்ட்டிலும் வழக்குகள் தொடரப்பட்டு விசாரணை நடந்து வருகிறது.
கறுப்பு பணத்தை ஒழிக்க 500 ரூபாய், ஆயிரம் ரூபாய் நோட்டுகள் செல்லாது என அறித்த மோடி எதற்கு புதியதாக ௨ ஆயிரம் ரூபாய் நோட்டுகளை அச்சடித்தார். 2 ஆயிரம் நோட்டுதான் வேண்டும் என்று மக்கள் யாரும் கேட்கவில்லை. புதிய ௨ ஆயிரம் நோட்டுகளால் கறுப்பு பணம் அதிகரிக்குமே தவிர குறையாது.
பிரதமராக மோடி பதவியேற்றதும் சுவிஸ் பாங்குகளில் உள்ள கறுப்பு பணத்தை மீட்டு ஒவ்வொருவரின் கணக்குகளிலும் ௧௫ லட்சம் டெபாசிட் செய்யப்படும் என அறிவித்தார். ஆனால் இதுவரை இதற்கான நடவடிக்கை எடுப்பதற்கு பதிலாக தற்போது சாதாரண ஏழை மக்களின் சுருக்கு பையில் இருந்த பணத்தை பறித்துள்ளார்.
கறுப்பு பணத்தை ஒழிக்கும் நடவடிக்கைகளுக்கு நாங்கள் உறுதுணையாக இருப்போம். ஆனால் அதற்காக மக்கள் படும் துன்பங்களுக்கு எதிராக போராட்டங்களை நடத்துவோம். தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள் முடங்கி கிடப்பதால் 4 ஆயிரம் கோடி ரூபாய் கடன் விவசாயிகளுக்கு வழங்காத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் விவசாயிகள் முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
ஆனால் தமிழகம் இந்த பிரச்னைகளை கண்டு கொள்ளாமல் ஆழ்ந்த நித்திரையில் காணப்படுகிறது. நல்லாட்சி, கெட்டாட்சி என்பதற்கு மத்தியில் தற்போது தமிழகத்தில் ஆட்சி நடக்கிறதா, படுத்துள்ளதா, அல்லது துாங்குகிறதா என்பது தெரியவில்லை.
தமிழக முதல்வர் விரைவில் பூரண நலம் பெற்று வீடு திரும்பி மக்கள் சேவைகளை செய்ய வேண்டும் என்று விரும்புகிறோாம். முதல்வர் ஜெயலலிதாவை முதலில் ஆஸ்பத்திரிக்கு சென்று பார்த்தவர் ராகுல். இதற்கு முன்பு எம்.ஜி.ஆர் ஆஸ்பத்திரியில் இருந்த போது நேரில் வந்து நலம் விசாரித்தவர் இந்திரா காந்தி. அமெரிக்காவில் எம்.ஜி.ஆருக்கான சிகிச்சைகளுக்கு இந்திரா காந்தி, ராஜிவ் காந்தி பெரிதும் உதவி செய்ததை அதிமுகவினர் மறக்க கூடாது.
தற்போது கூட்டணி எதுவும் இல்லாமல் முதல்வர் ஜெயலலிதாவை, ராகுல் காந்தி பார்த்து சென்றார். தற்போது திமுகவுடன்தான் கூட்டணியில் தொடருகிறோம். பாண்டிச்சேரியில் காங்., வேட்பாளர் முதல்வர் நாராயண சுவாமி வெற்றி பெற்றுள்ளார். தமிழகத்தில் 3 சட்டசபை இடைத்தேர்தல்களில் அதிமுக வெற்றி பெற்றுள்ளது. மக்களின் தீர்ப்பை மகேசன் தீர்ப்பாக ஏற்றுக் கொள்கிறோம்.
முதல்வர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வரும் நிலையில் அமைச்சர்கள் ஆஸ்பத்திரியில் இருக்காமல் கோட்டைக்கு சென்று மக்கள் பணிகளை தீவிரப்படுத்த வேண்டும்.
காங்., கட்சியில் இளைஞர்களுக்கு வாய்ப்பு அளிக்கப்பட வேண்டும். நல்ல இளைஞர்களை அந்தந்த வட்டார சீனியர் தலைவர்கள் கண்டுபிடித்து அவர்களுக்கு முன்னுரிமை அளித்து பதவி அளிக்க பரிந்துரை செய்ய வேண்டும். வட்டார நிர்வாகிகள், மாவட்ட மற்றும் மாநில பொறுப்புகளுக்கு வர வேண்டும்.
உள்ளாட்சி தேர்தலை பொறுத்தவரை கட்சி சின்னத்தில் போட்டியிடும் சுமார் 20 ஆயிரம்
பதவிகளுக்கு திமுகவுடன் தொடர்ந்து கூட்டணி பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறது. கட்சி சார்பற்ற சுமார் 1.50லட்சம் பதவிகளில் அனைத்து வார்டுகளிலும் காங்., கட்சியினர் போட்டியிட்டு வெற்றி பெற கடுமையாக உழைக்க வேண்டும்.
கட்சியின் அடிமட்ட அளவில் பலப்படுத்த வேண்டும். உறுப்பினர் சேர்க்கையை தீவிரப்படுத்த வேண்டும். காமராஜர் ஆட்சி காலத்தில் 22 சதவீத ஓட்டு வங்கியை மீண்டும் பெற வேண்டும். வரும் காலங்களில் காங்., கட்சி தனித்து ஆட்சி அமைக்கும் வகையிலோ அல்லது கூட்டணி ஆட்சி அமையும் வகையிலோ காங்., கட்சியினர் முழு வீச்சில் பாடுபட வேண்டும்.
நான் காங்., கட்சியின் மாநில தலைவர் போல் செயல்படாமல் கட்சியின் முதல் தொண்டன் போல் செயல்படுகிறேன். எப்போது வேண்டும் என்றாலும் என்னை அணுகி கட்சி பிரச்னைகள் குறித்து விவாதிக்கலாம். வாரம் ஒரு நாளாவது கட்சிக்காக முழுமையாக பணி செய்ய வேண்டும்.
தமிழக காங்., கமிட்டி தலைவராக என்னை நியமித்த ராகுல் நம்பிக்கையை காப்பாற்ற, அவரை பிரதமர் பதவியில் அமர்த்த எனது உடல், பொருள், ஆவி என்று எதையும் பாராமல் எந்த தியாகத்தை செய்யவும் தயாராக இருக்கிறேன். இதற்கு அனைத்து தரப்பினரும் முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்.
இவ்வாறு மாநில தலைவர் பேசினார்.
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>
22 November 2016
மூன்றே நாளில் முளைத்த சூப்பர் காதல்..! இனிப்பு கொடுத்து ஆரவாரம்..! இது எங்கே..?
இந்தியாவே வீதிக்கு வந்து விட்டது..! கையில் இருக்கும் ஐநூறு ஆயிரங்களை மாற்றிவிட மாட்டோமா என்று தவிக்கிறார்கள் மக்கள்..!
காலை முதல் இரவு வரை நீண்ட வரிசையில் மக்கள் தவிப்போடு காத்து கிடக்கிறார்கள்..! ஆனால் இரண்டு அழகான இளசுகள் என்ன காரியம் பண்ணாங்க தெரியுமா..! படிங்க..நொந்து போகாம முடிஞ்சா
வாழ்த்துங்க..!
வேற என பண்றது..! கலி முத்திப்போச்சு..! பெங்களூர் மடிவாலா பகுதியில் இருக்கிறது அந்த அரசு வங்கி. ஐநூறு ஆயிரம் செல்லாது என்று கூறியதுமே..மக்கள் இருக்கும் பணத்தை மாற்றிவிட நீண்ட வரிசையில் நிற்க ஆரம்பித்துவிட்டனர்..
அந்த வரிசையில் வந்து நின்ற கன்னடத்து பைங்கிளி வைஷ்ணவி..! அதே வரிசையில் வந்து நின்றான் கன்னடத்து காளை பிரஷாத்..!
இருவருமே வேறு வேறு கல்லூரியில் படிப்பவர்கள்..! முதல் நாள் காலை இருவரும் சைட் அடித்துக் கொண்டார்கள்..!
பகல் பதினோரு மணிக்கு வைஷ்ணவிக்கு தாகம் எடுக்க அருகில் உள்ள பெண்ணிடம் ஆண்ட்டி தண்ணீர் இருக்கா ப்ளீஸ்.. என்று கேட்க.. கொஞ்ச துடித்துப் போன பிரஷாத் கால் தெறிக்க ஓடிப்போய் மூன்று பாட்டில்ஜில் மினரல் வாட்டர் வாங்கி வந்தான் எக்ஸ்கியூஸ் மீ வாட்டர் என்றதும் உருகிப் போனாள் வைஷ்ணவி.
அருகில் உள்ளவர்களுக்கும் அவன் ஐஸ் வாட்டர் கொடுக்க புரிந்து கொண்ட மக்கள் சிரித்துவிட்டு வாங்கி தாகம் தீர குடித்தனர்.மதியம் அவள் பார்த்துக் கொள்ளச்சொல்லி விட்டு லஞ்ச் சாப்பிட ஸ்கூட்டியில்
பறந்தாள்.
தவித்துப் போனான் பிரஷாத்.மூன்று மணிக்கு வந்தாள் வைஷு.கண்களால் சாப்பிட்டியாடா என்று கேட்டாள்… இல்லை என்று ஜாடை சொன்னான்.
அன்றுமாலை அனைவருக்கும் காபி வரவைத்தான் பிரஷாத். அவளுக்கு மட்டும் இஞ்சி டீ. புல்லரித்துப் போனது கிளி. அடுத்த
நாளும் வந்தார்கள்.
மெல்ல பேச ஆரம்பித்தார்கள் மக்களுக்கு புரிந்து போனது. அன்று மாலைக்குள் கொஞ்சம் நெருக்கம் ஆனார்கள். நம்பர் கேட்டான்
கொடுத்தாள்.
அடுத்த நாள் காலை பக்கிகள் ஒரே ஸ்கூட்டியில் வந்து இறங்க மக்களுக்கு ஒரே சந்தோசம்.. அட அதுக்குள்ளவா என்று கிண்டல்
செய்தார்கள்.
மதியம் ஒரே ஹோட்டலில் சேர்ந்து சாப்பிடப் போனார்கள். பணம் மாற்ற வந்த இடத்தில் மனதையும் மாற்றிக்
கொண்டார்கள்.
பேங்க் வாசலில் வைத்தே வைஷ்ணவி தனது காதலைக் கூறினாள். அன்று மாலை அனைவருக்கும் சாக்லேட் கொடுத்தார்கள். மக்கள் வாழ்த்து கூறினார்கள்.ஜோடிகள் வண்டி ஏறி பறந்து விட்டனர்..! என்னத்தை சொல்றது போங்கோ..!
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>
21 November 2016
ரகசிய அறையில்பெண்ணுடன் இருந்த மதன் அதிரடி கைது!
தமிழ் சினிமாவின் முன்னணி தயாரிப்பாளர் மற்றும் விநியோகஸ்தர்களில் ஒருவராக வலம் வந்தவர் வேந்தர் மூவிஸ் மதன்.
அடுத்தடுத்து பெரிய படங்களைத் தயாரித்து வந்த இவர், கடந்த சில மாதங்களுக்கு முன்னர், 'காசியில் தற்கொலை செய்து கொள்ளப் போவதாக' கடிதம் எழுதி வைத்து விட்டு மாயமானதால் பரபரப்பு ஏற்பட்டது.
மேலும், மதன் மீது பல்வேறு பண மோசடி வழக்குகள் தொடரப்பட்டன. இதற்கிடையில் மாயமான இவரை தேடும் பணியில் பொலிசார் ஈடுபட்டு வந்தனர்.
இந்நிலையில், தலைமறைவாக இருந்து வந்த இவரை திருப்பூரில் வைத்து பொலிசார் கைது செய்துள்ளனர்.
இதுகுறித்து சென்னை பொலிஸ் கமிஷனர் ஜார்ஜ் கூறுகையில், சென்னையை சேர்ந்த பெண் ஒருவருடன் மதன் தொடர்பில் இருந்தார், அவரை சந்திப்பதற்காக இன்று திருப்பூர் வந்திருந்தார்.
இத்தகவலறிந்த பொலிசார் விரைந்து சென்று ரகசிய அறையில் பதுங்கியிருந்த மதனை கைது செய்தனர்.
இவரை சென்னை கொண்டு வருவதற்காக பணிகள் நடந்து வருகிறது.
சென்னை வந்த பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்படுவார் என்று தெரிவித்துள்ளார்.
மேலும் உத்தகர்கண்டில் மதன் சொத்து வாங்கி குவித்துள்ளதாகவும், இதுதொடர்பாக மேலும் விசாரணை நடத்தப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.இன்று மதனுக்கு 44வது பிறந்தநாள் என்பது குறிப்பிடத்தக்கது.
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>
18 November 2016
சட்ட விரோத கமிஷன் வாங்கிக்கொண்டு பணபரிமாற்றம், அம்பலம் ?
செல்லாது’ என அறிவிக்கப்பட்ட ரூ.1,000, ரூ.500 நோட்டுகளை பெருமளவில் கமிஷன் பெற்றுக்கொண்டு சட்டவிரோதமாக மாற்றித்தருகிற கும்பல்கள் ஆங்காங்கே செயல்படுகின்றன.
இப்படி ஒரு கும்பல் செயல்படுவதை டெல்லி ஊடகம் ஒன்று ‘ஸ்டிங் ஆபரேஷன்’ என்னும் ரகசிய நடவடிக்கையின் மூலம் அம்பலப்படுத்தியது.
இதுபற்றி மத்திய தகவல், ஒலிபரப்புத்துறை மந்திரி வெங்கையா நாயுடு நேற்று கூறும்போது, ‘‘பெரும் தொகையை கமிஷனாக பெற்றுக்கொண்டு, ரூ.1,000, ரூ.500 நோட்டுகளை மாற்றித்தருவது ரகசிய நடவடிக்கை மூலம் அம்பலமாகி உள்ளது. இதன் பின்னால் இருப்பவர்கள் யார் என்பதை கண்டறிவதற்கு விசாரணை நடத்துமாறு நான் உள்துறை மந்திரிக்கு கடிதம் எழுதி உள்ளேன்’’ என்றார்.
மேலும், ‘‘இதுபற்றி விரிவான விசாரணை நடத்துமாறு டெல்லி போலீஸ் கமிஷனரிடம் புகார் அளிக்குமாறு என் செயலாளரை கேட்டுக்கொண்டுள்ளேன்’’ எனவும் கூறினார்.
எனவே இந்த விவகாரத்தில் விசாரணை வரும் என
எதிர்பார்க்கப்படுகிறது
லஞ்சமாக புதிய ரூ.2 ஆயிரம் நோட்டுகளை வாங்கிய துறைமுக அதிகாரிகள் கைது
குஜராத் மாநிலம் கண்ட்லா துறைமுகத்துக்கு பல்வேறு சாதனங்களை தனியார் நிறுவனம் சப்ளை செய்து வருகிறது. அந்நிறுவனத்தின் நிலுவையில் உள்ள ரசீதுகளுக்கு ஒப்புதல் வழங்க துறைமுக அதிகாரிகள் சீனிவாசலு, குமேத்கர் ஆகியோர் லஞ்சம் கேட்டனர்.
சீனிவாசலுக்கு ரூ.2½ லட்சமும், குமேத்கருக்கு ரூ.1½ லட்சமும் லஞ்சம் தர பேரம் பேசப்பட்டது. அவை அனைத்தையும் புதிய ரூபாய் நோட்டுகளாக தர வேண்டும் என்று அதிகாரிகள் வலியுறுத்தினர். எனினும் லஞ்சம் கொடுக்க விரும்பாத அந்நிறுவன உரிமையாளர் இது குறித்து லஞ்ச ஒழிப்பு தடுப்பு பிரிவு போலீசில் புகார் செய்தார்.
போலீசாரின் ஏற்பாட்டின்படி நேற்றுமுன்தினம் அந்நிறுவன உரிமையாளர் ரூ.4 லட்சத்தை புதிய ரூ.2 ஆயிரம் நோட்டுகளாக கொண்டு வந்தார். அதிகாரிகளுக்கு பதிலாக இடைத்தரகர் ருத்ரேஸ்வர் சுனாமுடி அந்த பணத்தை வாங்கினார். அப்போது லஞ்ச ஒழிப்பு போலீசார், அவரை பிடித்து விசாரித்த போது அதிகாரிகள் அனுப்பியதை ஒப்புக் கொண்டார்.
இதையடுத்து சீனிவாசலு, குமேத்கர், ருத்ரேஸ்வர் சுனாமுடி ஆகியோரை போலீசார் கைது செய்தனர். குமேத்கர் வீட்டில் சோதனை செய்த போது ரூ.40 ஆயிரம் சிக்கியது. மொத்தம் ரூ.4.40 லட்சம் புதிய நோட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டது.
தனியார் நிறுவன உரிமையாளர் இது குறித்து கூறுகையில், அதிகாரிகள் வற்புறுத்தி லஞ்சம் கேட்டதால் நான் என்னிடம் இருந்த பணம் மற்றும் நண்பர்கள், உறவினர்களிடம் இருந்து புதிய ரூ.2 ஆயிரம் நோட்டுகளை வாங்கி கொண்டு வந்தேன் என்றார்.
17 November 2016
டெல்லி மற்றும் அரியானாவில் 10 மீட்டர் ஆழத்தில் நிலநடுக்கம் !
டெல்லி மற்றும் அதன் அண்டை மாநிலமான அரியானாவில் இன்று அதிகாலையில் மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த இரு மாநிலங்களின் எல்லைபகுதிகளில் இந்த நிலநடுக்கம்
ஏற்பட்டுள்ளது.
இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 4.4 ஆக பதிவாகியுள்ளது. இது பூமிக்கு அடியில் 10 மீட்டர் ஆழத்தில் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கத்தால் உயிரிழப்போ, பொருட்சேதமோ ஏதும்
ஏற்படவில்லை.
நேற்று முன்தினம் இரவு பஞ்சாப் மாநிலம் ஜலந்தர் மாவட்டத்தில் 3.6 ரிக்டர் அளவுகோலில் நிலநடுக்கம் ஏற்பட்டது என்பது
குறிப்பிடத்தக்கது.
10 November 2016
ஜீன்ஸ், லெகிங்ஸ், டிரவுசர் போன்ற ஆடைகளுக்கு கோயில்களுக்குள் தடை?
ஜீன்ஸ், லெகிங்ஸ், டிரவுசர் போன்ற ஆடைகள் அணிந்து வருபவர்களை பாரம்பரியமிக்க கோயில்களுக்குள் ஜீன்ஸ், லெகிங்ஸ், டிரவுசர் போன்ற ஆடைகள் அணிந்து வருபவர்களை அனுமதிக்கக் கூடாது என்று அறநிலையத் துறை சுற்றறிக்கை அனுப்பியுள்ளது.
உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவின் பேரில் எடுக்கப்பட்டுள்ள இந்த நடவடிக்கை வரும் சனவரி 1ம் திகதி முதல் அமலுக்கு
வருகிறது.
திருச்சி மாவட்டத்தில் உள்ள செண்பக விநாயகர் கோயில் திருவிழாவில் கலை நிகழ்ச்சி நடத்த அனுமதி கோரிய மனு மீதான தீர்ப்பில் நீதிபதி இவ்வாறு உத்தரவிட்டுள்ளார்.
நீதிபதி எஸ்.வைத்தியநாதன், தனது உத்தரவில், கோயில்களுக்கு செல்லும் போது ஒழுக்கமான ஆடைகள் அணி வது, சுத்தம், நாகரிகம் ஆகிய வற்றை அனைத்து மதங்களும் கற்பிக்கின்றன.
கிறிஸ்தவ, இஸ்லாமிய மதங்களில் வழிபாட்டுக்கு செல்லும்போது தனி ஆடைக் கட்டுப்பாடு உள்ளது.
இந்து கோயில்களுக்கு செல்லும் பக்தர்களுக்கு ஆடைக் கட்டுப்பாடு விதிப்பது தொடர்பாக அறநிலையத் துறை விரைவில் முடிவெடுக்க
வேண்டும்.
தமிழகத்தில் உள்ள இந்து கோயில்களில் 2016 சனவரி 1ம் திகதி முதல் ஆண்கள் வழக்கமான மேலாடையுடன் வேஷ்டி, பைஜாமா, பேன்ட்டும், பெண்கள் மேலாடையுடன் கூடிய சுடிதார், சேலை, தாவணியும், குழந்தைகள் முழுமையாக மூடப்பட்ட ஏதாவது ஒரு ஆடையும்
அணிந்து வரவேண்டும்.
மாறாக, அரை டிரவுசர், ஷார்ட்ஸ், மினி ஸ்கர்ட், மிடி, கையில்லாத மேலாடை, இடுப்புக்கு கீழ் நிற்கும் ஜீன்ஸ், இடுப்புக்கு மேல் நிற்கும் டி-ஷர்ட் போன்றவற்றை அணிந்து வருபவர்களை கோயிலுக்குள் அனுமதிக்கக் கூடாது.
இந்த ஆடைக் கட்டுப்பாட்டை தீவிர மாக அமல்படுத்துமாறு அனைத்து கோயில்களுக்கும் அறநிலையத் துறை கடிதம் அனுப்ப வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளார்.
இதையடுத்து இந்து சமய அறநிலையத் துறை தனது கட்டுப்பாட்டில் உள்ள கோயில்களுக்கு சுற்றறிக்கை
அனுப்பியுள்ளது.
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>
05 November 2016
புதுமண மக்கள்காற்று மாசுபடுதலுக்கு எதிராக விழிப்புணர்வை ஏற்படுத்த பேரணி!
குஜராத் மாநிலம் சூரத் நகரில் வரும் 7-ஆம் தேதி அங்குள்ள தனியார் அமைப்பு சார்பில் சமூக திருமண நிகழ்ச்சி ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த திருமணத்தில் பங்குபெறும் 258 மணமக்களும் காற்று மாசுபடுதலுக்கு எதிராக விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் சைக்கிளில் திருமண ஊர்வலம் மேற்கொள்ள உள்ளனர்.
அதன்படி மணமக்கள் அனைவரும் குறித்த சமுதாய தலைவர்கள் புடைசூழ நகரத்தின் முக்கிய சாலைகள் வழியாக சைக்கிளில் மணமகன் ஊர்வலம் நடத்த உள்ளனர்.
இது நகரத்தில் வாகன புகையால் ஏற்படும் காற்று மாசுபடுதலுக்கு எதிராக ஒரு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் முன்னெடுக்கப்படும் முதல்படி என ஒருங்கிணைப்பாளர்கள் தெரிவிக்கின்றனர்.
வாகன நெரிசல், காற்று மாசுபடுதல், ஆரோக்கியம் உள்ளிட்டவையில் பொதுமக்கள் அதிக அக்கறை காட்ட வேண்டும் என்றும், குறித்த நிகழ்வில் பல்வேறு சமுதாய தலைவர்கள் கலந்துகொள்ள இருப்பதாகவும் தெரிவித்துள்ளனர்.
Subscribe to:
Posts (Atom)