தமிழ் சினிமாவின் முன்னணி தயாரிப்பாளர் மற்றும் விநியோகஸ்தர்களில் ஒருவராக வலம் வந்தவர் வேந்தர் மூவிஸ் மதன்.
அடுத்தடுத்து பெரிய படங்களைத் தயாரித்து வந்த இவர், கடந்த சில மாதங்களுக்கு முன்னர், 'காசியில் தற்கொலை செய்து கொள்ளப் போவதாக' கடிதம் எழுதி வைத்து விட்டு மாயமானதால் பரபரப்பு ஏற்பட்டது.
மேலும், மதன் மீது பல்வேறு பண மோசடி வழக்குகள் தொடரப்பட்டன. இதற்கிடையில் மாயமான இவரை தேடும் பணியில் பொலிசார் ஈடுபட்டு வந்தனர்.
இந்நிலையில், தலைமறைவாக இருந்து வந்த இவரை திருப்பூரில் வைத்து பொலிசார் கைது செய்துள்ளனர்.
இதுகுறித்து சென்னை பொலிஸ் கமிஷனர் ஜார்ஜ் கூறுகையில், சென்னையை சேர்ந்த பெண் ஒருவருடன் மதன் தொடர்பில் இருந்தார், அவரை சந்திப்பதற்காக இன்று திருப்பூர் வந்திருந்தார்.
இத்தகவலறிந்த பொலிசார் விரைந்து சென்று ரகசிய அறையில் பதுங்கியிருந்த மதனை கைது செய்தனர்.
இவரை சென்னை கொண்டு வருவதற்காக பணிகள் நடந்து வருகிறது.
சென்னை வந்த பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்படுவார் என்று தெரிவித்துள்ளார்.
மேலும் உத்தகர்கண்டில் மதன் சொத்து வாங்கி குவித்துள்ளதாகவும், இதுதொடர்பாக மேலும் விசாரணை நடத்தப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.இன்று மதனுக்கு 44வது பிறந்தநாள் என்பது குறிப்பிடத்தக்கது.
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>
0 கருத்துகள்:
Post a Comment