Showing posts with label ஊர்ப்புதினம். Show all posts
Showing posts with label ஊர்ப்புதினம். Show all posts
22 November 2016
மூன்றே நாளில் முளைத்த சூப்பர் காதல்..! இனிப்பு கொடுத்து ஆரவாரம்..! இது எங்கே..?
இந்தியாவே வீதிக்கு வந்து விட்டது..! கையில் இருக்கும் ஐநூறு ஆயிரங்களை மாற்றிவிட மாட்டோமா என்று தவிக்கிறார்கள் மக்கள்..!
காலை முதல் இரவு வரை நீண்ட வரிசையில் மக்கள் தவிப்போடு காத்து கிடக்கிறார்கள்..! ஆனால் இரண்டு அழகான இளசுகள் என்ன காரியம் பண்ணாங்க தெரியுமா..! படிங்க..நொந்து போகாம முடிஞ்சா
வாழ்த்துங்க..!
வேற என பண்றது..! கலி முத்திப்போச்சு..! பெங்களூர் மடிவாலா பகுதியில் இருக்கிறது அந்த அரசு வங்கி. ஐநூறு ஆயிரம் செல்லாது என்று கூறியதுமே..மக்கள் இருக்கும் பணத்தை மாற்றிவிட நீண்ட வரிசையில் நிற்க ஆரம்பித்துவிட்டனர்..
அந்த வரிசையில் வந்து நின்ற கன்னடத்து பைங்கிளி வைஷ்ணவி..! அதே வரிசையில் வந்து நின்றான் கன்னடத்து காளை பிரஷாத்..!
இருவருமே வேறு வேறு கல்லூரியில் படிப்பவர்கள்..! முதல் நாள் காலை இருவரும் சைட் அடித்துக் கொண்டார்கள்..!
பகல் பதினோரு மணிக்கு வைஷ்ணவிக்கு தாகம் எடுக்க அருகில் உள்ள பெண்ணிடம் ஆண்ட்டி தண்ணீர் இருக்கா ப்ளீஸ்.. என்று கேட்க.. கொஞ்ச துடித்துப் போன பிரஷாத் கால் தெறிக்க ஓடிப்போய் மூன்று பாட்டில்ஜில் மினரல் வாட்டர் வாங்கி வந்தான் எக்ஸ்கியூஸ் மீ வாட்டர் என்றதும் உருகிப் போனாள் வைஷ்ணவி.
அருகில் உள்ளவர்களுக்கும் அவன் ஐஸ் வாட்டர் கொடுக்க புரிந்து கொண்ட மக்கள் சிரித்துவிட்டு வாங்கி தாகம் தீர குடித்தனர்.மதியம் அவள் பார்த்துக் கொள்ளச்சொல்லி விட்டு லஞ்ச் சாப்பிட ஸ்கூட்டியில்
பறந்தாள்.
தவித்துப் போனான் பிரஷாத்.மூன்று மணிக்கு வந்தாள் வைஷு.கண்களால் சாப்பிட்டியாடா என்று கேட்டாள்… இல்லை என்று ஜாடை சொன்னான்.
அன்றுமாலை அனைவருக்கும் காபி வரவைத்தான் பிரஷாத். அவளுக்கு மட்டும் இஞ்சி டீ. புல்லரித்துப் போனது கிளி. அடுத்த
நாளும் வந்தார்கள்.
மெல்ல பேச ஆரம்பித்தார்கள் மக்களுக்கு புரிந்து போனது. அன்று மாலைக்குள் கொஞ்சம் நெருக்கம் ஆனார்கள். நம்பர் கேட்டான்
கொடுத்தாள்.
அடுத்த நாள் காலை பக்கிகள் ஒரே ஸ்கூட்டியில் வந்து இறங்க மக்களுக்கு ஒரே சந்தோசம்.. அட அதுக்குள்ளவா என்று கிண்டல்
செய்தார்கள்.
மதியம் ஒரே ஹோட்டலில் சேர்ந்து சாப்பிடப் போனார்கள். பணம் மாற்ற வந்த இடத்தில் மனதையும் மாற்றிக்
கொண்டார்கள்.
பேங்க் வாசலில் வைத்தே வைஷ்ணவி தனது காதலைக் கூறினாள். அன்று மாலை அனைவருக்கும் சாக்லேட் கொடுத்தார்கள். மக்கள் வாழ்த்து கூறினார்கள்.ஜோடிகள் வண்டி ஏறி பறந்து விட்டனர்..! என்னத்தை சொல்றது போங்கோ..!
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>
27 April 2013
இரண்டாவது திருமணம் தேவையா?: நகையை ???
மனைவியை இழந்த 60 வயதான முதியவர் ஒருவர் இரண்டாவது திருமணம் செய்ய விளம்பரம் செய்துள்ளார். அவரை கூப்பிட்டு அடித்து நகையை பறித்துள்ளது ஒரு கும்பல்.
சென்னை குரோம்பேட்டையை சேர்ந்தவர் தங்கரத்தினம் ஓய்வு பெற்ற பேராசிரியர். இவரது மனைவி சில ஆண்டு முன்பு காலமானார்.
பிள்ளைகள் இல்லை, கவனிக்க யாரும் இல்லாமல் அவதிப்பட்ட தங்கரத்தினம், நாளிதழ் ஒன்றில் 2வது திருமணம் செய்ய பெண் தேவை என விளம்பரம் கொடுத்தார். இதை பார்த்து, ஒரு இளம்பெண் தங்கரத்தினத்தை தொடர்பு கொண்டு எனக்கு 25 வயது ஆகிறது, உங்களை திருமணம் செய்து கொள்ள விரும்புகிறேன், அம்பத்தூருக்கு வாருங்கள் என கூறியுள்ளார்.
தங்கரத்தினம் அம்பத்தூர் வந்தார். அந்த பெண் அவரை ஒரு ஆட்டோவில் கள்ளிக்குப்பம் பகுதியில் உள்ள வீட்டுக்கு அழைத்து சென்றார். அங்கு அவரும், அவரது கணவன் மற்றும் 2 பேரும் சேர்ந்து தங்கரத்தினத்தை இந்த வயதில் உனக்கு 2வது திருமணம் கேட்கிறதா என கேட்டு சரமாரியாக தாக்கியுள்ளனர்.
அவர் அணிந்திருந்த 5 சவரன் தங்க செயினை பறித்து கொண்டு யாரிடமாவது இதை தெரிவித்தால் கொலை செய்து விடுவோம் என கூறி மிரட்டியுள்ளனர். இதுகுறித்து சென்னை கமிஷனர் அலுவலகத்தில் தங்கரத்தினம் புகார் செய்தார்.
அம்பத்தூர் பொலிசார் விசாரித்தனர், தங்கரத்தினத்தை தாக்கி நகையை பறித்தது அயனாவரத்தை சேர்ந்த நிக்கோலா, அவரது கணவன் வில்லியம், ரேகா, முத்துக்குமார் ஆகியோர் என தெரியவந்தது. 4 பேரையும் பொலிசார் கைது செய்து புழல் சிறையில் அடைத்தனர், 5 சவரன் நகை மீட்கப்பட்டது.

10 February 2013
சொந்த நாட்டு மக்களை கொல்ல உத்தரவிட்டாரா ஒபாமா?
26 December 2012
உரும்பிராயில் கிணற்றில் இருந்து ஆண் ஒருவரின் சடலம் மீட்பு
கிணற்றில் இருந்து 35 வயது மதிக்கத்தக்க நபர் ஒருவரின் சடலம் இன்று யாழ். கோப்பாய் பொலிஸாரினால் மீட்கப்பட்டுள்ளது.யாழ். உரும்பிராய் மேற்கு பகுதியில் இன்று புதன்கிழமை காலை 7.30 மணியளவில் சடலமொன்று மீட்கப்பட்டுள்ளது. சின்னராசா ரட்ணகுமார் (வயது 35) என்பவரே சடலமாக மீட்கப்பட்டவர் என அடையாளம் காணப்பட்டுள்ளது. இவர் உறவினர்கள் யாருமற்ற நிலையில் குறித்த பகுதியில் உள்ள ஒருவரின் வீட்டில் வசித்து வந்த நிலையில் அவர் இன்று சடலமாக மீட்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
20 October 2012
யாழ். மக்கள் வாழ்வோடு பின்னிப் பிணைந்த கீரிமலை!
20.10 2012 , By.Rajah.ஊர்ப்புதினம் (பட இணைப்பு).. இலங்கையில் வரலாற்றுச் சிறப்பு மிக்க அற்புத திருத்தலங்களில் ஒன்று கீரிமலை நகுலேஸ்வரம் சிவன் கோவில். யாழ்ப்பாணத்தில் அமையப் பெற்று உள்ளது.
கீரி முகம் பெற்று இருந்த முனிவர் ஒருவர் இங்கு உள்ள தீர்த்தத்தில் நீராடி கீரி முகம் நீங்கப் பெற்றமையால் இத்தலத்துக்கு கீரிமலை என்று பெயர் வந்து உள்ளது என்பது ஐதீகம். நளன், அருச்சுனன், முசுகுந்தன் போன்றோரால் இக்கோவில் வழிபட பெற்று இருக்கின்றது என நம்பப்படுகின்றது.
தீர்த்த-தல யாத்திரைக்கு உரிய புராதன புண்ணிய தலங்களில் இதுவும் ஒன்று.
யாழ்ப்பாண இந்துக்களின் வாழ்க்கை நெறியில் கீரிமலை சிவன் கோவிலுக்கு தனி முக்கியத்துவம் உள்ளது. இறந்தவர்களின் சாம்பலை கொண்டு வந்து இங்கு உள்ள தீர்த்தத்தில் இந்துக்கள் கரைப்பார்கள். அதே போல ஆடி அமாவாசை போன்ற தினங்களில் இங்கு நீராடி பிதிர்க்களை வழிபடுவார்கள்.
போருக்கு பிந்திய இலங்கையில் யாழ்ப்பாணத்துக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டு வருகின்ற உள்நாட்டு மற்றும் வெளிநாட்டுப் பயணிகள் விரும்பி வருகின்ற இடங்களில் ஒன்றாக இக்கோவில் உள்ளது.
சுற்றுலா பயணிகள், பக்தர்கள் கீரிமலைக் கடலில் நீராடி மகிழ்கின்றனர். அத்துடன் இச்சுற்றாடலை புகைப்படங்களாக எடுத்தும் கொள்கின்றனர்.கீரிமலை கோவில், சிலைகள் மற்றும் கடல் ஆகியன இவர்களை வெகுவாக கவர்ந்து இருக்கின்றன[புகைபடங்கள் ]
.

Subscribe to:
Posts (Atom)