கிணற்றில் இருந்து 35 வயது மதிக்கத்தக்க நபர் ஒருவரின் சடலம் இன்று யாழ். கோப்பாய் பொலிஸாரினால் மீட்கப்பட்டுள்ளது.யாழ். உரும்பிராய் மேற்கு பகுதியில் இன்று புதன்கிழமை காலை 7.30 மணியளவில் சடலமொன்று மீட்கப்பட்டுள்ளது. சின்னராசா ரட்ணகுமார் (வயது 35) என்பவரே சடலமாக மீட்கப்பட்டவர் என அடையாளம் காணப்பட்டுள்ளது. இவர் உறவினர்கள் யாருமற்ற நிலையில் குறித்த பகுதியில் உள்ள ஒருவரின் வீட்டில் வசித்து வந்த நிலையில் அவர் இன்று சடலமாக மீட்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
0 கருத்துகள்:
Post a Comment