11 April 2020
விழிப்புணர்வு முயற்சி கொரோனா வைரஸ் வடிவில் உருவான கார்.
மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக. இந்தியாவின் தெலுங்கானாவைச் சேர்ந்த ஒருவர் கொரோனா வைரஸ் வடிவில் கார் ஒன்றை வடிவமைத்துள்ளார்.இந்தியாவின் தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத்தைச் சேர்ந்தவர் சுதாகர்.
இவர், சுதா கார்ஸ் என்ற பெயரில் அருங்காட்சியகம் நடத்தி வருகிறார்.
வகை வகையான கார்களை வடிவமைப்பதில் தனித்துவம் பெற்ற இவர் பர்கர், கிரிக்கெட் பந்து, கிரிக்கெட் மட்டை மற்றும் ஹெல்மெட் உள்ளிட்ட வடிவங்களில் கார்களை உருவாக்கியுள்ளார்.இந்தியாவில், கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், கொரோனா
வைரஸ் குறித்தும், அது பரவும் விதம் குறித்தும் மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த முடிவு செய்தார்.இதற்காக, கொரோனா வைரஸ் தோற்றத்தில் சிறிய கார் ஒன்றை வடிவமைத்துள்ளார். இது குறித்து
அவர் கூறுகையில்,
கொரனா வைரஸ் குறித்த விழிப்புணர்வை மக்களிடையே ஏற்படுத்த வேண்டும். அதன் பரவல் மற்றும் ஆபத்து குறித்து அவர்களுக்கு அறிவுறுத்த வேண்டும் என்பதற்காக இந்த காரை
வடிவமைத்தேன்.அரசிடம் உரிய அனுமதி பெற்று, இந்த கார் மூலம் ஹைதராபாத் முழுவதும் சென்று, மக்களை வீட்டிலேயே இருக்க வலியுறுத்தும் விதமாக விழிப்புணர்வு ஏற்படுத்த உள்ளேன் எனவும் அவர் தெரிவித்தார்.
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>
08 April 2020
முடங்கிப் போன இந்தியா மனைவியுடன் 750 கி.மீ சைக்கிளில் பயணித்த தொழிலாளி
பயமும், பசியும் யாருக்கு தான் தைரியத்தைக் கொடுக்காது?”
இந்த வார்த்தைகளைச் சொல்வது ஒரு தத்துவஞானியோ அல்லது புகழ்பெற்ற நாவலின் பிரபல கதாபாத்திரமோ அல்ல. ஒரு சாமானியர்.ராகோராம் என்பவர் தனது மனைவியுடன், ரோஹ்தக்கிலிருந்து
பயணித்து 750 கி.மீ தொலைவில் உள்ள தனது சொந்த ஊரான பல்ராம்பூருக்கு வந்து சேர்ந்த ஒரு சராசரி மனிதர். அச்சத்தால் உடனடியாக இருப்பிடத்திலிருந்து வெளியேறி சொந்த ஊர் வந்த அனுபவத்தை இப்படியாக சொல்கிறார் அவர்.கொரோனா வைரஸ் தொற்று
காரணமாக நாடு முழுவதும் திடீரென லாக் டவுன் அமல்படுத்தப்பட்டதால், ஹரியானா மாநிலம் ரோஹ்தக்கிலிருந்து உத்தர பிரதேசத்தின் பல்ராம்பூருக்கு திரும்பிய ஆயிரக்கணக்கானோரில் ராகோராமும் ஒருவர்.கொரோனா வைரஸின் பயம் மற்றும் வாழ்வதற்கான நெருக்கடிதான் சொந்த ஊருக்கு நீண்ட பயணத்தை மேற்கொள்ள வேண்டும் என்ற பலத்தையும் ஊக்கத்தையும் அளித்ததாக
ராகோராம் கூறுகிறார்.
“நாங்கள் பணிபுரிந்த நிறுவனம் சில நாட்களுக்கு முன்பு மூடப்பட்டது. நாங்கள் ஒப்பந்தக்காரரிடம் பேசியபோது, உதவ முடியாது என்று கைவிரித்துவிட்டார். இங்கேயே தங்கிவிட்டால் வாடகை கொடுக்கவேண்டும் என்று குடியிருந்த வீட்டின் உரிமையாளர் சொல்லிவிட்டார். ரோஹ்தக்கில் வசிக்கும் எங்கள் ஊரைச் சேர்ந்த சிலர், தங்கியிருந்த வீடுகளை விட்டு வெளியேறிக் கொண்டிருந்தார்கள். எனவே, அங்கிருந்து கிளம்பி விடுவதுதான் நல்லது என்று நாங்கள் நினைத்தோம். நமது
கிராமத்திற்கு சென்றுவிட்டால், குறைந்தபட்சம் பசியால் இறக்க மாட்டோம் என்று நினைத்தோம். நமது சொந்த ஊரில் ஏதாவது ஏற்பாடு செய்து கொள்ள முடியும் என்ற நம்பிக்கையில் கிளம்பிவிட்டோம்” என்கிறார் ராகோராம்.ஐந்து மாதங்களுக்கு முன்பு ரோஹ்தக்கிற்குச் சென்ற ராகோராமுக்கு சில நாட்களுக்கு முன்புதான் ஒப்பந்தக்காரர்
ஒருவரின் மூலம் தனியார் நிறுவனம் ஒன்றில் மாதம் ஒன்பதாயிரம் ரூபாய் சம்பளத்தில் வேலை கிடைத்து இருக்கிறது.மார்ச் 27 காலை, ரோஹ்தக்கிலிருந்து தனது மனைவியுடன் மிதிவண்டியில் கிளம்பிவிட்டார்.நான்கு நாட்களுக்குப் பிறகு,
மார்ச் 31ஆம் தேதி மாலையில், அவர் கோண்டா என்ற இடத்தை வந்தடைந்தார். அப்போது தான் நாங்கள் அவருடன் முதல்முறையாகப் பேசினோம். அப்போது, அவர் தன் மனைவியுடன் மருத்துவ பரிசோதனைக்காக கோண்டாவில் உள்ள
மாவட்ட மருத்துவமனைக்குச் சென்று கொண்டிருந்தார்.நாங்கள் ரோஹ்தக்கிலிருந்து வெளியேறியபோது, பாக்கெட்டில் 120 ரூபாய் தான் இருந்தது. இரண்டு பைகளில் துணிகளும், பிற சாமான்களும் மட்டுமே எடுத்துக் கொண்டு கிளம்பிவிட்டோம். நாங்கள் முதல் முறையாக மிதிவண்டியில் சாலை வழியாக
வந்ததால் எங்களுக்கு வழியும் தெரியவில்லை. சோனிபட் வரை அலைந்து திரிந்தோம். எல்லா இடங்களிலும் போலீஸ்காரர்கள் எங்களை நிறுத்தினார்கள். ஆனால் அனாதரவான எங்கள் நிலைமையைப் பார்த்த அவர்கள் விட்டுவிட்டார்கள். சோனிபட்டிற்கு பிறகு, நாங்கள் நெடுஞ்சாலையில் சென்றோம். அப்போதுதான் அலையாமல், நேராக, காஜியாபாத், பரேலி, சீதாப்புர், பஹ்ரிச் வழியாக கோண்டாவிற்கு வந்து சேர்ந்தோம்.”
மார்ச் 31 ம் தேதி, மாவட்ட மருத்துவமனையில் சுகாதார பரிசோதனைக்குப் பிறகு வீட்டிற்குச் செல்ல ராகோராமுக்கு அனுமதி கிடைத்தது. ராகேராமின் கிராமம் பல்ராம்பூர், ரெஹ்ரா காவல் நிலைய சரகத்திற்குள் வருகிறது. ஆனால் அவரது மாமியார் வீடு கோண்டா மாவட்டத்தில் வருகிறது. அன்று இரவு கோண்டாவில் உள்ள தனது மாமியார் வீட்டிற்குச் சென்று தங்கிய ராகோராம் மறுநாள் மனைவியுடன் தனது
சொந்த கிராமத்திற்கு சென்றார்.ரோஹ்தக்கிலிருந்து பல்ராம்பூருக்கு சாலை வழியாக 750 கி.மீ. தொலைவு பயணித்ததைப் பற்றி கூறும் ராகோராம், அது மிகவும் சிரமமாக இருந்ததாகச் சொல்கிறார். சைக்கிளில் இவ்வளவு தூரம் பயணித்ததில்லை. அதிகபட்சமாக அவ்வப்போது
தனது கிராமத்தில் இருந்து பல்ராம்பூருக்கு மட்டுமே சைக்கிளில் சென்றிருக்கிறார் என்ற நிலையில், இவ்வளவு தூரம் மனைவியையும் அழைத்துக் கொண்டு எப்படி சென்றார் என்ற
கேள்வி எழுகிறது. ஆனால் கொரோனா வைரஸ் மனதில் மிகுந்த ஏற்படுத்திய அச்சமே, அவர்களை இவ்வளவு தொலைவு குறுகிய காலத்தில் பயணிக்கச் செய்திருக்கிறது.
இந்த ஐந்து நாட்களில், ராகோராம் தொடர்ந்து மிதிவண்டியை ஓட்டிச் சென்றிருக்கிறார். ஒரு மணி நேரத்திற்கு ஐந்து முதல் ஏழு நிமிடங்கள் மட்டுமே இடையில் நிறுத்தினார். மனைவியும் கூடவே இருந்ததால் நீண்ட நேரம் மிதிவண்டி ஓட்டுவது சாத்தியப்படவில்லை
என்று சொல்கிறார் ராகோராம். “இரவில் இரண்டு மணி நேரம் ஓய்வெடுப்பேன். ஒரு பெட்ரோல் பம்ப் அல்லது மூடிக்கிடக்கும் ஏதாவது ஒரு கடைக்கு வெளியே சைக்கிளை நிறுத்திவிட்டு ஓய்வெடுப்பேன்”
என்கிறார் ராகோராம்.
மிதிவண்டியே ஒரே ஆதரவு:ரோஹ்தக்கை விட்டு ராகோராம் தனது மனைவியுடன் வெளியேறிவிட்டார், ஆனால் தன்னைப் போன்ற ஆயிரக்கணக்கானவர்களை வழியில் சந்திப்போம் என்று அவர் நினைத்துக்கூடப் பார்க்கவில்லை.ராகோராமின் மனைவி சீமாவிடமும் பேசினோம். “நெடுஞ்சாலையில் பார்க்கும் இடமெல்லாம் மனிதர்களே இருந்தார்கள். தலையில் பைகளைச் சுமந்து கொண்டு சிலர் சென்றார்கள். சிலருடைய தோள்களில் பைகள் தொங்கிக் கொண்டிருந்தன.
சிலர் தனியாக சென்று கொண்டிருந்தார்கள்,
பலர் ஒன்றாக சேர்ந்து குழுக்களாகச் சென்றார்கள். அவர்களை எல்லாம் பார்த்த பிறகு எங்களுடைய வலியும் வேதனையும் குறைந்துவிட்டதை உணர்ந்தோம். எங்களிடம் மிதிவண்டி இல்லாதிருந்தால், நாங்களும் நடந்து தான் வந்திருக்க வேண்டும். ஏதோ நல்ல
நேரம் எங்களிடம் மிதிவண்டி இருந்தது” என்று அப்பாவியாகச் சொல்கிறார் அந்தப் பெண்.ராகோராமிடம் பணம் இல்லை, ஆனால் கொஞ்சம் உணவுப் பொருட்களை கையோடு கொண்டு
வந்திருந்தார். இருப்பினும், வழியில் அவருக்கு உணவு பிரச்சனையாக இருக்கவில்லை.மக்கள் எல்லா இடங்களிலும் உணவு மற்றும் குடிநீர் விநியோகித்துக் கொண்டிருந்தார்கள். எனவே எங்களுக்கு உணவுக்கு எந்த பிரச்சனையும் இல்லை. சாலையில் ஏராளமான
மக்கள் இருந்தபோதிலும், யாருக்கும் பிரச்சனை ஏற்படக்கூடாது என்பதற்காக உதவி செய்யும் கரங்கள் பல இருந்தன. ஆனால் வழியில் நடந்து செல்லும் பலரை காவல்துறையினர் நிறுத்தினார்கள். சிலரை அடித்தார்கள். ஆனால், இதுபோன்ற எந்த பிரச்சனையும் எங்களுக்கு ஏற்படவில்லை”
என்கிறார் ராகோராம்.
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>
Subscribe to:
Posts (Atom)