30 December 2015
10 நாட்களில் 1 லட்சம் டன் குப்பைகள் அகற்றல் ஓரிரு நாட்களில் தூய்மைப்படுத்தும்
சென்னையை தூய்மைப்படுத்தும் பணியில் கடந்த 10 நாட்களில் 1 லட்சம் டன் குப்பைகள் அகற்றப்பட்டு உள்ளது. ஓரிரு நாட்களில் பணிகள் நிறைவு பெறும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
தூய்மைப்படுத்தும் பணி
தமிழக முதல்-அமைச்சர் உத்தரவுப்படி, சென்னையில் மழை வெள்ள நிவாரண பணிகள் மற்றும் சுகாதார பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. திடக்கழிவு மேலாண்மைத்துறையும், பொது சுகாதாரத்துறையும் இணைந்து போர்க் கால அடிப்படையில் அனைத்து
பணிகளையும் செய்து
வருகிறது. 18 ஆயிரத்து 947 மாநகராட்சி பணியாளர்கள், இதர மாநகராட்சி, பேரூராட்சி, நகராட்சி ஆகிய பகுதிகளை சேர்ந்த 7 ஆயிரத்து 45 பணியாளர்கள் தூய்மைப்படுத்தும் பணியில் ஈடுபட்டு
வருகின்றனர்.
கடந்த 7-ந் தேதி முதல் 16-ந் தேதி வரை 1 லட்சத்து 9 ஆயிரத்து 672.09 டன் குப்பைகள் அகற்றப்பட்டுள்ளது. இந்த பணியில் 25,992 பணியாளர் கள் ஈடுபடுத்தப்பட்டு இரவு பகலாக வேலை நடந்து வருகிறது. இரவு நேரங்களில் வேலை செய் வதற்கு வசதியாக நடமாடும் தெரு
விளக்குகள்
அமைக்கப்பட்டுள்ளன. இப்பணிக்காக சென்னை மாநகராட்சிக்கு சொந்தமான 404 லாரிகளும், தனியார் மூலமாக 397 லாரிகளும், 141 ஜே.சி.பி எந்திரங்களும் பயன்படுத்தப்பட்டு வந்தன.
7,830 மருத்துவ முகாம்கள்
மாநகராட்சி பொது சுகாதாரத்துறை மூலம் 7 ஆயிரத்து 830 மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டுள்ளன. இதன்மூலம் 13 லட்சத்து 11 ஆயிரத்து 8 பயனாளிகள் பயனடைந்துள்ளனர். கூடுதலாக 1,000 டன் பிளீச்சிங் பவுடர் வரவழைக்கப்பட்டு, பிளீச்சிங் பவுடர் தெளித்தல் மற்றும் வீடுதோறும் ½ கிலோ பிளீச்சிங் பவுடர் வழங்கும் பணியும் தொடர்ந்து
நடைபெற்று வருகிறது.
துப்புரவு பணியாளர்கள் அந்தந்த மண்டலங்களில் உள்ள மண்டபங்களில் தங்க வைக்கப்பட்டு உள்ளனர். இவர்களுக்கு உணவு, உடை போன்ற அத்தியாவசிய தேவைகள் அந்தந்த மண்டல அதிகாரிகளால் செய்து தரப்பட்டு வருகிறது. நகரை தூய்மைப்படுத்தும் பணி இறுதிகட்டத்தை எட்டியிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்து சென்னை மாநகராட்சி துணை ஆணையர் (சுகாதாரம்) ஆர்.கண்ணன் கூறியதாவது:-
திருப்தி அளிக்கிறது
சென்னை நகர் முழுவதும் சுத்தம் செய்யும் பணிகளுடன், தொற்றுநோய் தடுப்பு நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளது. தற்போது சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் மழையால் சேர்ந்த கழிவுகள் முழுமையாக நீக்கப்பட்டுவிட்டது. வீடுகளில் இருந்து வெளியேற்றப்படும் கழிவு பொருட்களை அகற்றும் பணிகள் தற்போது நடந்து வருகின்றன. எலக்ட்ரானிக் பொருட் கள், உடமைகள் உள்ளிட்ட கழிவுகள் தேங்காமல் உடனுக்குடன் அகற்றப்பட்டு வருகிறது.
இன்னும் ஒரு சில நாட்களில் இந்த பணிகள் முழுமையடையும். துப்புரவு பணியாளர்களுக்கு மாநகராட்சி அதிகாரிகள் எல்லா உதவிகளையும் செய்ய தயாராக இருக்கிறோம். அரசியல் தலையீடு இல்லாமல் பொதுமக்கள் மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் ஒத்துழைப்பு திருப்தி அளித்ததாக பணியாளர்கள் தெரிவித்துள்ளனர். முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கூடுதலாகவே மருத்துவ முகாம்களும் நடத்தப்பட்டு வருகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
கணக்கெடுப்பு பணி
இதேபோல வெள்ள சேதங் களை கண்டறியும் பணியும் முடியும் நிலையினை எட்டியுள்ளது. வடகிழக்கு பருவமழையினால் சென்னை மாவட்டத்தில் ஏற்பட்டுள்ள சேதங் களை கண்டறிய, 21 மாவட்டங்களை சேர்ந்த 3 ஆயிரம் அலுவலர் கள், வெள்ள நிவாரண கணக்கெடுக்கும் பணிகளில் ஈடுபடுத்தப்பட்டு வருகின்றனர்.
கண்காணிப்பு பணியிலும் 21 மாவட்ட வருவாய் அலுவலர்கள் மற்றும் துணை கலெக்டர்களும் நியமிக்கப்பட்டுள்ளனர். சென்னையில் உள்ள 10 வட்டங்களில் இந்த கணக்கெடுக்கும் பணிகளை அலுவலர்கள் மேற்கொண்டு வருகின்றனர். இந்த கணக்கெடுப்பு பணி ஓரிரு நாட்களில் இறுதிக்கட்டத்தை எட்டிவிடும் என்று தெரிவிக்கப்படுகிறது.
இதுகுறித்து கணக்கெடுப்பு அதிகாரி ஒருவர் கூறியதாவது:-
இறுதி அறிக்கை
ஒவ்வொரு வீட்டிலும் குடும்ப அட்டை, வங்கி கணக்கு புத்தகம், ஆதார் கார்டு உள்ளிட்ட விவரங்களை கணக்கெடுப்பு அலுவலர்கள் சேகரித்து வருகின்றனர். வெள்ளத்தால் சேதமடைந்த ஆவணங்கள் பற்றி குறிப்பெடுத்து கொள்ளப்படுகிறது. பதிவின் போது வீட்டில் இல்லாதவர்களுக்காக ‘மறு கணக்கீடு’ முறையும் நடத்தப்படுகிறது.
பெரும்பாலான பகுதிகளில் குடும்ப அட்டை, ஆதார் கார்டு, வாக்காளர் அட்டை இல்லை என்று குறிப்பெடுக்கப்பட்டுள்ளது. குறிப்பாக வெள்ளத்தால் அதிகம் பாதிக்கப்பட்ட வில்லிவாக்கம் (மண்டலம்-8) உள்ளிட்ட பகுதிகளில் பணிகள் வேகமாக முடிந்துவிட்டன. இந்த குறிப்புகள்
முறையாக
தகவல் தொகுப்பு மையங்கள் மூலம் அரசின் கவனத்துக்கு கொண்டு செல்லப்படுகிறது. பொதுமக்கள் மற்றும் அதிகாரிகள் உதவியுடன் இந்த கணக்கெடுப்பு பணி 80 சதவீதம் வரை முடிந்து விட்டது. இன்னும் ஓரிரு நாட்களில் இறுதி அறிக்கை தயார் செய்யப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>29 December 2015
சட்” என்று கோபப்படும் ஒரு சராசரி கணவர்ளில்நானும் .ஒருவர் ?
சாப்பாடு சரியில்லை என்றால் “சட்” என்று கோபப்படும் ஒரு சராசரி கணவன்தான் நான்...!
காலையில் கூட சப்பாத்தி மென்மையாக இல்லை என்பதை, கொஞ்சம் மென்மை இல்லாத வார்த்தைகளை உபயோகித்தே என் மனைவியிடம் என்னால் சொல்ல முடிந்தது...!
ஆனால்...முன்னாள் குடியரசுத்தலைவர் அப்துல் கலாம் வாழ்வில் நடந்த ஒரு உண்மைச் சம்பவத்தை இன்று தற்செயலாக நாளிதழில் படிக்க நேரிட்டது.
இதோ... அப்துல் கலாமின் வார்த்தைகளில், அவரது இளமைக்கால
வாழ்க்கை :
"நான் சிறுவனாக இருக்கும் போது ஒரு நாள் இரவு நேரம் வெகு நேர வேலைக்கு பின்னர் என் தாய் இரவு சிற்றுண்டி செய்யத்தொடங்கினார்.
என் தாயும் எங்கள் குடும்பத்தை சமாளிக்க வேலைக்கு
செல்வது வழக்கம். சமைத்த பின் கருகிய ரொட்டி ஒன்றை என் கண் முன், என் தந்தைக்கு பரிமாறினார் என் தாய். ஆனால் என் தந்தையோ அதை சிறிதும் பொருட்படுத்தாமல் சாப்பிட்டார்.
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>> 28 December 2015
சல்மான்கான் குடிபோதையில் கார் ஓட்டி விபத்து ஏற்படுத்திய வழக்கில் விடுதலை!!!
கடந்த 2002ல் இந்தி நடிகர் சல்மான் கான் குடிபோதையில் கார் ஓட்டியதில் ஒருவர் பலியான வழக்கில், அவருக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து மும்பை செஷன்ஸ் (கீழமை) நீதிமன்றம் 2015 ஆம் ஆண்டு, மே மாதம் தீர்ப்பு வழங்கியது. ஆனால் அந்த தீர்ப்பை ரத்து செய்த மும்பை
உயர் நீதிமன்றம்
, போதுமான ஆதாரங்கள் இல்லை என்று கூறி சல்மான்கானை விடுதலை செய்த சம்பவம் மும்பையில் பெரும் பரபரப்பை கிளப்பியது
நடிகர் சல்மான்கான், 2002 ஆம் ஆண்டு ஒரு விருந்து நிகழ்ச்சியில் கலந்து விட்டு, வீட்டிற்கு திரும்பி கொண்டிருந்த போது,
அவரது கார் ஏறி,
சாலையில் உறங்கிக் கொண்டிருந்த நூருல்லா மெகபூப் செரீப் என்பவர் உயிரிழந்தார். மேலும், 4 பேர் பலத்த காயம் அடைந்தனர். அதனால் சல்மான்கான் மீது மும்பை போலிசார் வழக்கு பதிவு செய்தார்கள்.
ஆனால் இந்த விபத்தின் போது, தான் மது அருந்தி காரை செலுத்திவில்லை என்றும், தனது டிரைவர் அசோக்சிங் தான் காரை ஓட்டி விபத்தை ஏற்படுத்தினார் என்றும் போலிசாரிடம் நடிகர் சல்மான் கான் வாக்குமூலம் அளித்தார். இதையே அவரது டிரைவரும் நீதிமன்றத்தில் ஆஜராகி வாக்குமூலம் அளித்தார்.
முதலில், இந்த வழக்கை விசாரித்த மும்பை மாஜிஸ்திரேட்டு நீதிமன்றம் பின்பு விசாரணையை செசன்சு நீதிமன்றத்திற்கு மாற்றி உத்திரவிட்டது. அதன்படி, செசன்சு நீதிமன்றத்தில் மறுவிசாரணை
தொடங்கியது
அந்த வழக்கில், காயம் அடைந்த கலிம் முகமது பதான், முன்னா மலாய் கான், அப்துல்லா ராப் சேக், முஸ்லிம் சேக் , சல்மான் கானின் போலீஸ் மெய்க்காவலர் ரவீந்திர பாட்டீல் மற்றும் பலர் சல்மான்கானுக்கு எதிராக நீதி மன்றத்தில் நேரில் சாட்சி அளித்தனர்.
சல்மான்கான் நடிக்கும் படங்களின் வியாபார மதிப்பு 200 கோடியாக இருந்தது. எங்கே சல்மான் சிறைக்கு சென்றால், பெருத்த நஷ்டம் ஏற்பட்டுவிடுமோ என்று பாலிவுட் தயாரிப்பாளர்கள் அஞ்சினர்.
கடந்த 13 ஆண்டுகளுக்கும் மேலாக நடைபெற்ற அந்த வழக்கு விசாரணை 2015 ஆம் ஆண்டு ஏப்ரல் 21 ஆம் தேதியுடன் முடிவுக்கு வந்தது. அதையடுத்து, மே 6 ஆம் தேதி இந்த வழக்கில் தீர்ப்பு
கூறப்பட்டது.
கார் விபத்தின் போது, நடிகர் சல்மான்கான் மது போதையில் இருந்தார் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளதால், நடிகர் சல்மான்கான் குற்றவாளி என்று மும்பை செசன்ஸ் நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு அளித்தது. அதனால், சல்மான் கானுக்கு அதிகபட்சமாக 10 ஆண்டுகள் வரை தண்டனை கிடைக்க வாய்ப்பு உள்ளதாக அப்போது கூறப்பட்டது.
தீர்ப்பு வெளியானதும், நீதிமன்ற வளாகத்திலேயே, சினிமா துறையை சேர்ந்த ஒருவர் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றார். தன் சினிமா வாழ்க்கையின் எதிர்காலத்துக்கு, சல்மான்கான் உதவுவார் என்று நம்பியிருந்த வேளையில், இந்த தீர்ப்பை என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை என்று அவர் தன் தற்கொலைக்கு காரணம் கூறினார். அதன்பின் மருத்துவமனையில் அனுமதிக்கபட்டு உயிர் பிழைத்தார்.
நடிகர் சல்மான்கான் தீர்ப்பு குறித்து, அன்று காலை முதலே பாலிவுட் உலகம் மிகவும் ஆர்வமாக எதிர்பார்த்து காத்து இருந்து. ஆனால், நடிகர் சல்மான் கான் குற்றவாளி என தீர்ப்பு வெளியானதால் பாலிவுட் கடும்
அதிர்ச்சி அடைந்தது.
நீதிபதி வழங்கிய தீர்ப்பில், நடிகர் சல்மான்கானுக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது. அதனையடுத்து அவர் சிறையில் அடைக்கப்பட்டார். அந்த வழக்கில் இருந்து விடுதலையான பின்பே, திருமணம் செய்து கொள்வேன் என்று சல்மான் கூறியிருந்தார். ஆனால், அவருக்கு தண்டனை விதிக்கப்பட்டதால், சல்மான்கான் திருமணமும் தள்ளிப்போனதாக பேசப்பட்டது
அதன்பின், மும்பை கீழமை நீதிமன்றம் தனக்கு அளித்த தீர்ப்பை தள்ளுபடி செய்யவேண்டும் என்றும், தனக்கு முன் ஜாமீன் அளிக்க வேண்டும் என்றும் சல்மான்கான் மும்பை உயர் நீதி மன்றத்தில் மனு தாக்கல் செய்தார். அதையடுத்து மே மாதம் 8 ஆம் தேதி சல்மான்கானுக்கு கீழ்கோர்ட்டு விதித்த தண்டனையை மும்பை உயர் நீதிமன்றம் நிறுத்தி வைத்தது. மேலும், அவருக்கு நிபந்தனைகளுடன் கூடிய ஜாமீன் வழங்கி
உத்தரவிட்டது.
அதற்கிடையில், மகாராஷ்டிர மாநில அரசிடம், தகவலறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் சமூக ஆர்வலர் மன்சூர் தர்வேஷ் என்பவர், சல்மான் கான் கார் விபத்து பற்றிய வழக்கு தொடர்பான பைல்களை தர வேண்டும் எனக்கோரி விண்ணப்பித்தார். ஆனால் மகாராஷ்டிரா அரசோ, மாநிலைத் தலைமைச் செயலகமான மந்திராலயாவில், 2012 ஆம் ஆண்டு ஜூன் 21ஆம் தேதி ஏற்பட்ட தீ விபத்தில், நடிகர் சல்மான் கான் தொடர்பான பைல்கள் எல்லாம் எரிந்து போய்விட்டது என அற்புதமான பதிலை
தெரிவித்தது.
ஜாமீனில் வெளிவந்த சல்மான்கான் மீண்டும் வழக்கம்போல் படங்களில் நடிக்கத் தொடங்கினார். அவரின் பெரும்பாலான படங்கள் வெற்றி பெற்று பல கோடிகளை வசூல் செய்தன. மறுபுறம் வழக்கு விசாரணையும் நீதிமன்றத்தில் நடந்து கொண்டிருந்தது. வழக்கின் இறுதி தீர்ப்பு 2015 டிசம்பர் 10ஆம் தேதி அறிவிக்கப்படும் மும்பை உயர் நீதிமன்றம்
தெரிவித்தது..
இறுதி தீர்ப்பு சல்மானுக்கு ஆதரவாகவே அமைந்தது. சல்மான்கான் மீதான குற்றாசாட்டை மகாராஷ்டிர அரசு நிரூபீக்க தவறிவிட்டதாக காரணம் கூறிய நீதிபதிகள், அந்த வழக்கிலிருந்து நடிகர் சல்மான்கான் விடுதலை செய்யப்படுவதாக அறிவித்தனர். மேலும் கீழமை நீதிமன்றம்
சட்டபூர்வமாக இந்த
வழக்கை அனுகவில்லை என்றும் தீர்ப்பில் கூறினர். அந்த தீர்ப்பை கேட்டு ஆனந்த கண்ணீர்விட்ட சல்மான்கான், இந்த தீர்பை மனமுவந்து ஏற்றுக் கொள்கிறேன் என்று கூறினார்.
ஆனாலும், மும்பை உயர்நீதிமன்றம் சல்மான்கானை விடுதலை செய்ததை எதிர்த்து உச்ச நீதி மன்றத்தி மேல் முறையீடு செய்யப்படும் என மகராஷ்டிர அரசு சமீபத்தில் அறிவித்துள்ளது.
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>> 22 December 2015
யார் காந்தியாரைக் கொன்றவன் அசல் ஆர்.எஸ்.எஸ்...இல்லையா ???
காந்தியாரைக் கொன்றவன் அசல் ஆர்.எஸ்.எஸ்.காரனே என்பது உலகத்திற்கே தெரியும். ஆனால், பி.ஜே.பி.க்காரர்கள் ஒன்றைத் திருப்பித் திருப்பிச் சொல்லிக் கொண்டே இருக்கிறார்கள். நீதிமன்றமே சொல்லி விட்டது. நாதுராம் கோட்சே ஆர்.எஸ்.எஸ்.காரரல்ல என்று; அதற்குப் பிறகும் கோட்சேவை ஆர்.எஸ்.எஸ். என்று சொல்லுவது நியாயம் தானா? என்று பெரிய புத்திசாலிகள் போலவும், கேள்வி கேட்ட வர்களை மடக்கி விட்டது போலவும் சட்டையின் கழுத்துப் பட்டையைச் சற்றுத் தூக்கி விட்டு நடை போடுகிறார்கள்.
காந்தியாரைக் கொன்றவன் ஆர்.எஸ்.எஸ். என்று காங்கிரஸ் துணைத் தலைவர் கூறிவிட்டாராம். அதனால் ஆர்.எஸ்.எஸ்.காரர்களுக்கு மானம் கப்பலேறி விட்டதாம்.
பிஜேபி என்ன செய்தது? ஆர்.எஸ்.எஸ்.மீது காந்தி கொலைக் குற்றத்தை சுமத்தி, அதன்மூலம் ராகுல் காந்தி அரசியல் செய்ய இருக்கிறார் என்று புகார் செய்தது.
நாதுராம் கோட்சே ஆர்.எஸ்.எஸ். இல்லையென்றால் அவன் எந்த அமைப்பைத்தான் சேர்ந்தவன் என்ற கேள்வி எழுகிறது. அதற்கு ஆர்.எஸ்.எஸ். தரப்பில் என்ன பதில் கூறப்பட்டது? கோட்சே இந்து மகாசபை என்கிற அமைப்பைச் சேர்ந்தவன் என்று பதில் வந்தது.
ஆர்.எஸ்.எசுக்கும் - இந்து மகாசபைக்கும் அப்படி என்ன சித்தாந்த வேறுபாடு - கருத்து மாறுபாடு? இன்னொரு கட்டத்தில் இந்த இரண்டு அமைப்புகளும் இணைந்தும் விட்டன என்கிறபோது காந்தியைச் சுட்டுக் கொன்றதற்கான பொறுப்பை ஆர்.எஸ்.எஸ். ஏற்றுக் கொள்ளத்தானே வேண்டும்? அதில் ஏன் நழுவல்? அறிவு நாணயமற்ற தன்மையே தான் இதற்குக் காரணமாக இருக்க முடியும்.
நீதிமன்றம் சொல்லுவது ஒருபுறம் இருக்கட்டும்; நாதுராம் கோட்சேயின் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் என்ன சொல்லுகிறார்கள் என்பதுதானே முக்கியம்? காந்தியார் கொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்ற கோபால் கோட்சே நாதுராம் கோட்சேயின் சாட்சாத் தம்பிதான்; அந்தத் தம்பி என்ன சொல்லுகிறான்?
இந்துக் குடும்பத்தைச் சேர்ந்த ஃப்ரண்ட்லைன் இதழ் கோபால் கோட்சேயைப் பேட்டி கண்டு பகிரங்கமாக உண்மையை வெளிச்சத்துக்குக் கொண்டு வந்து விட்டதே. சங்பரிவார்கள் நாக்கைப் பிடுங்கிக் கொள்ளவில்லையே ஏன்?
கேள்வி: நாதுராம் கோட்சே ஆர்.எஸ்.எஸில்தான் இருந்தாரா? அதைவிட்டு வெளியேறிடவில்லையா?
பதில்: ஆர்.எஸ்.எஸில் நாதுராம் கோட்சே ஒரு பவிதி காரியலா (அறிவுப் பூர்வப் பணியாளர்) ஆக இருந்தார். நாதுராம் ஆர்.எஸ்.எசை விட்டு விலகியதாக (காந்தியார் கொலை வழக்கின்போது நாதுராம் கோட்சே அளித்த அறிக்கையில்) குறிப்பிட்டு இருந்தார். காந்தியார் கொலை செய்யப்பட்டதைத் தொடர்ந்து ஆர்.எஸ்.எசுக்கும், கோல்வாக்கருக்கும், நெருக்கடிகள், பிரச்சினைகள் ஏற்பட்டதன் காரணமாக அவர் அப்படிக் குறிப்பிட நேர்ந்தது. ஆனால், உண்மையில் நாதுராம் கோட்சே ஆர்.எஸ்.எசை விட்டு விலகவேயில்லை (ஃப்ரண்ட்லைன் 28.1.1944)
இதே இதழில் இன்னொன்று ஆர்.எஸ்.எசுக்கும் நாதுராம் கோட்சேவுக்கும் எந்தவித சம்பந்தமும் இல்லை என்று அத்வானி கூறி இருக்கிறாரே? என்ற கேள்விக்கு கோபால் கோட்சே பதில் என்ன தெரியுமா?
இது கோழைத்தனமானது -அவரது கூற்றை நான் மறுக்கிறேன் போ, காந்தியைக் கொல்லு! என்று ஆர்.எஸ்.எஸ். தீர்மானம் போடவில்லை என்று வேண்டுமானால் கூறலாம். ஆனால், நாதுராம் கோட்சேவுக்கும் ஆர்.எஸ்.எசுக்கும் சம்பந்தம் இல்லை என்று நீங்கள் கூற முடியாது என்று அதே பேட்டியில் காந்தியாரைப் படுகொலை செய்த நாதுராம் கோட்சேயின் தம்பியும், காந்தியார் படுகொலையில் ஆயுள் தண்டனை பெற்று இடையில் விடுதலை பெற்றவருமான கோபால் கோட்சே வெட்டொன்று துண்டு இரண்டாக அப்பட்டமாகச் சொன்ன பிறகும், நாதுராம் கோட்சே ஆர்.எஸ்.எஸ். இல்லை என்று கூறுவது அப்பட்டமாகப் பொய்ச் சொல்லுவதில் ஆர்.எஸ்.எசை வென்றிட உலக அரங்கில் யாருமே கிடையாது என்பதைத்தான் காட்டுகிறது.
இதில் இன்னொரு சூழ்ச்சியும், ஏமாற்றுத்தனமும் உண்டு - அதனைக் கவனிக்கத் தவறக் கூடாது. ஆர்.எஸ்.எஸ் உறுப்பினர் சேர்க்கை கிடையாது. அதனால் உண்மையிலேயே ஆர்.எஸ்.எஸ்.காரராக இருக்கும் எவரையும் ஆர்.எஸ்.எஸ். என்று சொல்லுவதற்கான ஆதாரம் கிடையாது. குற்றம் செய்து விட்டு, அதிலிருந்து ஆர்.எஸ்.எசைத் தப்பிக்கச் செய்ய ஆர்.எஸ்.எஸ்.செய்து வைத்திருக்கும் தந்திரமும், சூழ்ச்சியும் இதுவாகும்.
நீதிமன்றம் நாதுராம் கோட்சே ஆர்.எஸ்.எஸ். இல்லை என்று சொல்லி விட்டது. எனவே அவனை ஆர்.எஸ்.எஸ். என்று சொல்லாதீர்கள் என்கிறார்களே - அவர்களின் கனிவான பார்வைக்கு இதோ ஒரு நீதிமன்ற தீர்ப்பு. பஞ்சாப் அரியானா உயர்நீதிமன்ற நீதிபதி மகேஷ் குரோவர் வழங்கிய தீர்ப்புதான் (மே 2015).
இந்தியா டுடே ஏட்டின் முதன்மை ஆசிரியர், வெளியீட்டாளர் ஆகியோர் மீது அவமதிப்பு வழக்கு ஒன்றினை முகேஷ் கார்க் என்பவர் 2004 இல் தொடர்ந் திருந்தார். இதனை ஏற்று, மேற்கண்ட மூன்றுபேர்களுக்கும் அழைப்பாணை வழங்கப்பட்டது. இதனை எதிர்த்து பத்திரிகையாளர் மூவரும் உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். பத்திரிகையாளர்களுக்காக மூத்த வழக்குரைஞர் ஆர்.எஸ்.சீமா வாதாடினார். செய்திக்கட்டுரை அவமதிப்பானது எனக் கருத முடியாது. ஆர்.எஸ்.எஸ் இயக்கத்தை குறைகூறி எதுவும் எழுதப்பட வில்லை என வழக்குரைஞர் கூறியதை நீதிபதி மகேஷ் குரோவர் ஏற்று கொண்டார்.
கட்டுரையைப் படித்துப் பார்த்தால் நாதுராம் கோட்சேயை ஆர்.எஸ். எஸ்.காரர் என எழுதியிருக்கிறார்கள்; ஆர்.எஸ்.எஸ். இயக்கம் இந்து தேசிய இயக்கம் எனவும் எழுதியிருக்கிறார்கள். வரலாறும் வரலாற்றில் இடம் பெற்றவர்களும் உயர்ந்து நின்றாலும் பிற்காலத்தவர்களால் புரிந்து கொள்ள முடியாத வர்களாக இருப்பர். அந்த வகையில் கோட்சேயைப் பற்றிய பின்புல ஆய்வு செய்து எதனால் நாட்டின் தந்தையான காந்தியாரைக் கொலை செய்தார் என்பதையும் ஆய்வது வழக்கமானதே. அப்படி ஆராயும்போது, அவரும் அவர் சார்ந்திருந்த இயக்கத்தினைப் பற்றியும் குறிப்புரைகள் எழுதப் பட்டுள்ளன என நீதிபதி குறிப்பிட்டார். ஆர்.எஸ்.எஸின் உறுப்பினர் என்னும் முறையில் கோட்சே பற்றி எழுதப்பட் டதை அவமரியாதையானது என்றோ, அவமதிப்பானது என்றோ கருத முடியாது என்று குறிப்பிட்ட நீதிபதி வழக்கையும் பத்திரிக் கையாளர்களுக்கு வழங்கப்படட அழைப்பாணையையும் ரத்து செய்து ஆணையிட்டார்.
ஒரு கட்டுரையை முழுமையாகப் படித்துப் பார்க்க வேண்டும். இந்தக் கட்டுரை சாதாரண வாசகரின் மனதில் எம்மாதிரி எண்ணங்களைத் தோற்று விக்கும் என்பதை ஆயும் கடமை நீதிமன்றத்துக்கு உண்டு. போலித்தனமான ஆள்கள் தம் குருட்டுக் கண்களால் பார்த்தால் மட்டுமே இக்கட்டுரை அவ தூறானது எனக் கூறுவார்கள் என்று மிகக் கடுமையான சொற்களைப் பயன்படுத்தி தீர்ப்பு எழுதப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
இதுவும் நீதிமன்ற தீர்ப்புதான். ஆர்.எஸ்.எஸ். என்று நாதுராம் கோட்சேயைக் கூறாதீர்கள் என்பவர்களின் வாய்கள் இதற்குப் பிறகாவது
அடைபடட்டும்!
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>> 20 December 2015
வெள்ளப்பெருக்கில் சிக்கி உயிரிழந்த 35 பேரின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன
சென்னையில் வராலாறு காணாத மழையால் சிக்கி தவிக்கின்றனர் மக்கள்.
வெள்ளப்பெருக்கில் சிக்கி உயிரிழந்த 35 பேரின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன.
100 ஆண்டுகளில் இல்லாத கனமழை, வெள்ளத்தால்
சென்னை நகரமே தீவுகளாகி துண்டாகிப் போனது. மெல்ல மெல்ல இயல்பு வாழ்க்கை திரும்புகிறது சென்னை. அதேநேரத்தில் மழை வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்தவர்களின் சடலங்களும் அடுத்தடுத்து மீட்கப்பட்டு
வருகிறது.
இன்று மட்டும் மொத்தம் 35 சடலங்கள் சென்னை ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு கொண்டுவரப்பட்டுள்ளன. வெள்ளம் வடியவடிய இன்னும் எத்தனை பேர் உயிரிழந்துள்ளனர் என்ற அதிகாரப்பூர்வ
தகவல் கிடைக்கும்.
19 December 2015
சுஸ்மா சுவராஜ் கூற்று புதிய அரசாங்கம் பெறுமதியான பங்காளி இந்தியா?
இலங்கையின் புதிய அரசாங்கம், இரு நாட்டு உறவை விருத்தி செய்து கொள்வதில் பெறுமதியான பங்காளியாக செயற்படுவதாக இந்தியா தெரிவித்துள்ளது.
இந்திய வெளியுறவு அமைச்சர் சுஸ்மா சுவராஜ் இதனை தெரிவித்துள்ளார். புதுடில்லியில் நேற்று நிகழ்வு ஒன்றில்
உரையாற்றிய அவர்,
இலங்கையின் இனப்பிரச்சினையை தீர்ப்பதில் இந்தியா, இலங்கையுடன் இணைந்து செயற்படுவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
பிரதமர் நரேந்திர மோடி பதவியேற்றபோது அயல்நாடுகளின் தலைவர் அழைக்கப்பட்டமை முதல் அயல்நாடுகளுடனான உறவுகளில் முன்னேற்றம் உள்ளதாக சுஸ்மா தெரிவித்துள்ளார்.
17 December 2015
கடலரிப்புக்கான தடுப்புச் சுவர் அமைக்கும் கோரிக்கை திருப்பி அனுப்பப்பட்டது;?
எண்ணூர் - எர்ணாவூர் இடையே கடலரிப்புக்கான தடுப்புச் சுவர் அமைப்பது தொடர்பாக சுற்றுப்புறசூழல் தாக்க மதிப்பீட்டுக் குழுவுக்கு அனுப்பப்பட்ட கோரிக்கை திருப்பி அனுப்பப்பட்டதாக பசுமைத் தீர்ப்பாயத்தில் தமிழக அரசு கூறியுள்ளது.
ஒருங்கிணைந்த திட்டம்
தமிழகம் மற்றும் புதுச்சேரி கடலோரப் பகுதிகளில் கடல் அரிப்பைத் தடுப்பதற்காக அரசு அறிவியல் பூர்வமான தீர்வை ஏற்படுத்தும் வகையில் செயல்படவில்லை. எனவே தற்போது மேற்கொள்ளும் முறையை தடை செய்து உத்தரவிட வேண்டும் என்று சென்னையில் உள்ள தென்மண்டல தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தில் வழக்கு தாக்கல்
செய்யப்பட்டு உள்ளது.
இந்த வழக்கை தீர்ப்பாய உறுப்பினர்கள் நீதிபதி பி.ஜோதிமணி, பேராசிரியர் ஆர்.நாகேந்திரன் விசாரிக்கின்றனர். ஒருங்கிணைந்த கடல் அரிப்பு தடுப்பு மேலாண்மை திட்டத்தை உருவாக்க அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றும், அதுவரை தற்போது நடத்தும் கடல் அரிப்பு தடுப்பான் அமைக்கும் பணிகளை நிறுத்தவேண்டும் என்றும் உறுப்பினர்கள் ஏற்கனவே உத்தரவிட்டனர்.
கோரிக்கை மறுப்பு
இந்த நிலையில், மக்கள் நலனுக்காக அந்தப் பகுதியில் தற்காலிகமாக 10 கடலரிப்பு தடுப்புச்சுவர் எழுப்ப வேண்டியதிருப்பதாகவும், அதற்கு தீர்ப்பாயம் அனுமதிக்கவேண்டும் என்றும் தமிழக அரசு கோரியது. அதன் உண்மை நிலையை வக்கீல் கமிஷனர் வேல்முருகன் மூலம் தீர்ப்பாயம் அறிந்து, தற்கால தடுப்புச்சுவர் அமைக்க அனுமதி அளித்து
உத்தரவிட்டது.
இந்த நிலையில், நேற்று இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. தமிழக அரசு தரப்பில் ஆஜரான வக்கீல், “கடல் அரிப்பைத் தடுக்கும் திட்டத்தை நடைமுறைப்படுத்தும் தமிழக பொதுப்பணித்துறையை அழைக்காமல், சுற்றுப்புறசூழல் தாக்க மதிப்பீட்டுக்குழு கூட்டம் நடத்தியது. அதில் தடுப்புச் சுவர் அமைக்க அனுமதி கேட்ட கோரிக்கையை திருப்பி அனுப்ப முடிவு செய்யப்பட்டுள்ளது’’ என்று வாதிட்டார்.
தள்ளிவைப்பு
சுற்றுப்புறசூழல் தாக்க மதிப்பீட்டுக் குழு சார்பில் ஆஜரான வக்கீல், திருச்செந்தூர் பகுதிக்கான திட்டம் தொடர்பான பொதுப்பணித்துறை அதிகாரிகள் ஆஜரானதாக கூறினார். ஆனால் அந்த வாதத்தை தீர்ப்பாய உறுப்பினர்கள் ஏற்க மறுத்துவிட்டனர்.
இந்த விவகாரத்தில் பொதுப்பணித்துறை சென்னைப்பிரிவின் கருத்தை கேட்க உத்தரவிடவேண்டும் என்று தமிழக அரசு வக்கீல் கோரினார். வழக்கு விசாரணையை 22-ந் தேதிக்கு தள்ளி வைத்து
உத்தரவிட்டனர்.
10 December 2015
புராதன சின்னங்களை பாதுகாக்க தனிச்சட்டம் இல்லையே? ஐகோர்ட்டு நீதிபதிகள் வேதனை
தொன்மையான நாகரீகம், பழமையான கட்டிடங்கள் பல இந்தியாவில் இருந்தும், இவற்றை பாதுகாக்க தனிச்சட்டம் இதுவரை உருவாக்கப்படவில்லையே? என்று ஐகோர்ட்டு நீதிபதிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.
குழு அமைப்பு
தமிழகத்தில் புராதன சின்னங்களை முறையாக பராமரிக்க நிபுணர் குழுக்களை அமைக்கவில்லை என்று பத்திரிகைகளில் செய்தி வெளியானது. இந்த செய்தியின் அடிப்படையில், சென்னை ஐகோர்ட்டு தாமாக முன்வந்து வழக்குப்பதிவு செய்தது.
பின்னர், தமிழகத்தில் உள்ள கோவில்கள், புராதன சின்னங்கள் ஆகியவற்றின் நிலை குறித்து ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்ய மூத்த வக்கீல் பி.எஸ்.ராமன் தலைமையில் ஒரு குழுவை ஐகோர்ட்டு நியமித்தது. இந்த குழுவும், சென்னை உள்ளிட்ட பல ஊர்களில் உள்ள கோவில்களை ஆய்வு செய்து அறிக்கையை தாக்கல் செய்தது.
அபசகுனம் கோவில்கள்
அதேபோல நாமக்கல், திருப்பூர், ஈரோடு ஆகிய மாவட்டங்களில் 400 ஆண்டு பழமையான கோவில்களை, அபசகுனம் என்று கூறி இடிக்கப்படுவதாக ரங்கராஜன் நரசிம்மன் என்பவர் பொதுநல வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கையும் ஐகோர்ட்டு சேர்த்து விசாரித்தது. அபசகுனம் என்று சொல்லி கோவில்களை இடிப்பதற்கு தடை விதிக்கப்பட்டது.
இந்த நிலையில், இந்த 2 வழக்குகளும் தலைமை நீதிபதி சஞ்சய்கிஷன் கவுல், நீதிபதி புஷ்பா சத்தியநாராயணா ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்தது.
அபாயம் ள்ளது
இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் பிறப்பித்த இடைக்கால உத்தரவில் கூறியிருப்பதாவது:-
மூத்த வக்கீல் பி.எஸ்.ராமன் தலைமையிலான குழு தாக்கல் செய்துள்ள அறிக்கைகளை பார்க்கும்போது, புனரமைப்பு என்ற பெயரில் கோயில்களில் கட்டிட பணிகளை மேற்கொள்ள அனுமதித்தால், புராதன சின்னங்கள் பல அழிந்துவிடும் அபாயம் உள்ளது. மேலும், இதுபோன்ற புனரமைப்பு பணிகளை மேற்பார்வையிட்டு, அறிவுரை கூற நிபுணத்துவம் பெற்றவர்கள் போதிய எண்ணிக்கையில் இல்லை.
இதுகுறித்து வரலாற்று ஆய்வாளர் நாகசுவாமி, அரசுக்கு பல பரிந்துரைகளை அனுப்பியுள்ளார்.
வண்ணங்கள் சேதம்
அதில், ‘பாரம்பரியமான, தொன்மையான கோவில்கள் பராமரிப்பில் பயிற்சி பெற்ற என்ஜினீயர்களை கொண்ட குழு அமைக்கவேண்டும். கோவில்கள் புனரமைப்பின்போது அங்குள்ள சுவர்கள், தூண்களில் உள்ள வண்ணங்களும், எழுத்துகளும் சேதம் அடைகின்றன. அவற்றை தடுக்க நடவடிக்கை எடுக்கவேண்டும்’ என்று கூறியுள்ளார்.
இவரது பரிந்துரைகளை அரசு அதிகாரிகள் பரிசீலிக்கவேண்டும். இந்த புராதன சின்னங்களை பராமரிக்க ஐ.ஐ.டி., யுனஸ்கோ உள்ளிட்ட நிறுவனங்களை சேர்ந்த நிபுணர்களின் உதவிகளையும், அறிவுரைகளையும் பெறவேண்டும்.
எனவே, இந்த நிபுணர்கள் மூலம் புராதன சின்னங்கள், தொன்மையான கோவில்கள், கட்டிடங்கள், கட்டமைப்புகள் ஆகியவற்றை உரிய முறையில் புனரமைத்துப் பாதுகாக்க வழிமுறைகளை உருவாக்கவேண்டும். அதுவரை புனரமைப்பு பணிகளில் அவசரமான பணிகளை மட்டும் மேற்கொள்ளலாம். மற்ற பணிகள் எதையும் மேற்கொள்ளக்கூடாது. அரியவகை புராதன சின்னங்களுக்கு சேதம் ஏற்படுத்தக்கூடாது.
சட்டம் இல்லயே?
புராதனக் கோவில்களைப் பாதுகாப்பதற்கான தேசிய ஆணையம் ஒன்றை உருவாக்க 2009-ம் ஆண்டு பாராளுமன்றத்தில் சட்ட மசோதா கொண்டுவரப்பட்டது. அதேநேரம், புராதன கோவில்கள், கட்டிடங்களைப் பாதுகாப்பதற்கான தனிச்சட்டம் இதுவரை உருவாக்கப்படவில்லை.
தொன்மையான நாகரீகம், பழமையான கட்டிடங்கள் பல இந்தியாவில் உள்ளன. இவையெல்லாம் புராதன சின்னங்கள் என்று யுனஸ்கோ அமைப்பு அறிவிப்பு வெளியிட்டு 38 ஆண்டுகள் ஆகிவிட்டது. இதுவரை இந்த புராதன சின்னங்களை பாதுகாக்க தனிச்சட்டம் இந்தியாவில் இல்லையே? என்பது வேதனைக்குரியது. இந்த வழக்கு விசாரணையை வரும் ஜனவரி 25-ந் தேதிக்கு தள்ளிவைக்கிறோம்.
08 December 2015
நிவாரண நிதியாக திருமண செலவை வழங்கும் “காதல் நாயகி“ சந்தியா
காதல் பட நாயகி சந்தியாவின் திருமணம் மிக எளிமையான முறையில் கேரளாவில் நடந்தது.
காதல் திரைப்படத்தின் மூலம் நாயகியாக அறிமுகமான சந்தியா, மலையாளம்- தெலுங்கு படங்களிலும்
நடித்துள்ளார்.
இவருக்கு சென்னை அசோக்நகரை சேர்ந்த ஐ.டி பொறியாளர் வெங்கட் சந்திரசேகரன் என்பவரும் திருமணம் நிச்சயமானது.
இவர்களது திருமணம் நேற்று முன்தினம் சென்னையில் நடைபெறுவதாக இருந்த நிலையில், கனமழை காரணமாக இவர்கள் குடியிருந்த பகுதியில் வெள்ளத்தில் சிக்கியது.
இதனையடுத்து திருமணத்தை சென்னை பதிலாக கேரளா குருவாயூரில் நடத்த முடிவு செய்ததுடன், மிக எளிமையான முறையில் திருமணம் நடந்து முடிந்தது.
இதுகுறித்து சந்தியாவின் பெற்றோர் கூறுகையில், திருமணத்தை ஆடம்பரமாக நடத்த திட்டமிட்டோம்.
ஆனால் மழை காரணமாக குருவாயூர் கோவிலில் நடத்தி உள்ளோம். எனவே திருமண செலவை சென்னையில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்க முடிவு செய்துள்ளோம்
என தெரிவித்துள்ளனர்
07 December 2015
இடியுடன் கூடிய கனமழை சென்னையில் டிசம்பர் 9-ம் திகதி முதல் பெய்யும் !!!
சென்னையில் டிசம்பர் 9-ம் திகதி முதல் இடியுடன் கூடிய கனமழை பெய்யும் என்று பி.பி.சி. தொலைக்காட்சியின் வானிலை பிரிவு எச்சரிக்கை விடுத்துள்ளது.
டிசம்பர் முதல் வாரத்தில் பி.பி.சி.யின் வானிலை பிரிவு, சென்னையில் 3 நாட்கள் கனமழை தொடரும் என்றும், மழையளவு 50 செ.மீட்டர் இருக்கும் என்றும் எச்சரிக்கை விடுத்திருந்தது. அதன்படி சென்னையில் கனமழை பெய்தது.
இந்த நிலையில், தமிழகம் அருகே தென் மேற்கு வங்க கடல் பகுதியில் புதிதாக ஒரு காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகி இருக்கிறது என்றும், இதன் காரணமாக டிசம்பர் 7–ம் தேதியும் (இன்று), 8–ம் தேதியும் (நாளை) தமிழ்நாடு முழுவதும் அனைத்து இடங்களிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யும் என்றும் சென்னை வானிலை மைய தலைமை இயக்குனர் எஸ்.பாகுலேயன் தம்பி நேற்று
தெரிவித்திருந்தார்.
இதேபோன்று டிசம்பர் முதல் வாரத்தில் பி.பி.சி.யின் வானிலை பிரிவு, சென்னையில் 3 நாட்கள் கனமழை தொடரும் என்றும், மழையளவு 50 செ.மீட்டர் இருக்கும் என்றும் எச்சரிக்கை விடுத்திருந்தது
குறிப்பிடத்தக்கது.
அதே நேரத்தில் பி.பி.சி. மீண்டும் ஒரு எச்சரிக்கையை இன்று விடுத்துள்ளது. சென்னையில் நாளை மறுநாள் புதன்கிழமை முதல் இடியுடன் கூடிய கனமழை பெய்யும் என வானிலை வரைபடங்களுடன்
எச்சரித்துள்ளது
05 December 2015
இந்தியாவிலும் இலங்கையிலும் கனமழைக்கு வாய்ப்பு! சென்னை மூழ்கும் அபாயம்!
இப்போ பெய்த மழையைவிட பலமடங்கு மழைக்கு வாய்ப்பு என தேசிய வானிலை ஆய்வு மையம் தகவல் வெளியிட்டுள்ளது.
ஜப்பானிய வான்வெளி ஆய்வு முகவர் ஒருவரும் நாசாவும் வெளீயிட்டுள்ள அறிக்கையின்படி சென்னையில் பெய்வது மழை அல்ல EL Nino சூழற்சிப் புயல் என அறிவிக்கப்பட்டுள்ளது.
கிட்டத்தட்ட 250 Cm வரைக்கும் பெய்த இந்த சுழற்சிப் புயல் மீண்டும் சென்னையை தாக்கும் வாய்ப்புக்கள் அதிகம் எனவும்
தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனால் சென்னையே முழுகி போக வாய்ப்புக்கள் அதிகமாக காணப்படுவதனால் சென்னை கரையோர மக்களை பாதுகாப்பான இடங்களை நோக்கி உடனே நகரும்படி பாதுகாப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாகவும் நாசா வானிலை மையம் சுட்டிக்காட்டியுள்ளது.
மேலும் இதுவரை அடித்த சுழற்சிப் புயலால் பெய்த மழையினால் தென் இந்தியாவின் அதாவது தமிழ்நாட்டு கடற்கரையோரங்கள் குறிப்பாக சென்னை நகரம் கடுமையாக பாதிக்கப்பட்டதுடன், 260 க்கும் மேற்பட்டோர் இக்கடும் மழை வெள்ள அனர்த்தத்தினால் உயிரிழந்ததாகவும் மேலும் அவ் அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருக்கின்றது.
மேலும் தென் இந்தியாவை தாக்கிய இச் சுழற்சிப் புயல் இலங்கையையும் தாக்கும் எனவும் நாசா மேலும்
வெளியிட்டுள்ளது.
இந்நிலையில் இலங்கையில் பிரதான நீர்த்தேக்கங்களின் வான்கதவுகள் அவசர அவசரமாக திறந்து விடப்பட்டுள்ள நிலையில் பல இடங்களில் சாலைகளும் வீதிகளும் நீரில் மூழ்கி
காணப்படுகின்றன.
மட்டக்களப்பு-பொலநறுவை நெடுஞ்சாலையில் மன்னம்பிட்டிய மற்றும் கல்லல ஆகிய இடங்களிலும், மன்னார்-புத்தளம் சாலையில் எழுவான்குளத்திலும் இப்படியான நிலை காணப்படுவதாக அனர்த்த முகாமைத்துவ மையம் தெரிவிக்கின்றது.
புத்தளம், மன்னார் மற்றும் அம்பாறை ஆகிய மாவட்டங்களில் பாதுப்புகள் மற்றும் இடம்பெயர்வு தொடர்பான அறிக்கை பதிவாகியுள்ளதாகவும் அனர்த்த முகாமைத்துவ மையம் வெளியிட்டுள்ளது.
வானிலை அவதான நிலையம் வெளியிட்டுள்ள தகவல்களின் படி மழையுடன் கூடிய கால நிலை இலங்கையிலும் நீடிக்கும் எனத்
தெரிவிக்கப்படுகின்றது.
04 December 2015
வழமைக்கு திரும்புகின்றது சென்னை மழை:ஓய்ந்தது
தொடர்ந்து சில நாட்களாக பெய்யும் மழை காரணமாக ஏற்பட்ட வெள்ளத்தால் தண்ணீரில் தத்தளித்து வந்த சென்னையில் மெல்ல மெல்ல இயல்பு நிலை திரும்பி வருவதுடன் பல பகுதிகளில் வெள்ளநீர் வடிந்து
வருகிறது. செம்பரம்பாக்கம் உள்ளிட்ட ஏரிகளில் இருந்து திறக்கப்படும் நீரின் அளவு குறைக்கப்பட்டுள்ளதாலும், மழை ஓய்ந்துள்ளதாலும் பல இடங்களில் வெள்ளநீர் வடிந்து வருகிறது. அடையாற்றில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கால் கடந்த
2 நாட்களாக சைதாப்பேட்டை பாலத்தில் போக்குவரத்து நிறுத்தப்பட்டிருந்தது. இந்நிலையில், செம்பரம்பாக்கம் ஏரியில் நீர்திறப்பு குறைக்கப்பட்டுள்ளதால், அடையாற்றில் 3 அடி உயரத்திற்கு வெள்ளம் குறைந்துள்ளது. இதனால், சைதாப்பேட்டை பாலத்தில் மீண்டும்
வாகனங்கள் செல்ல
அனுமதிக்கப்பட்டுள்ளது. சென்னை - திருச்சி வீதி, கிண்டி-வடபழனி வீதி, அண்ணாசாலை, கே.கே.நகர், பல்லாவரம் உள்ளிட்ட பகுதிகளில் வெள்ளநீர் வடிந்ததால் வாகன போக்குவரத்து வழமை போல இடம்பெறுகின்றது.
மாநகர பஸ்களும்
இயக்கப்படுவதுடன் மக்கள் வெளியூர்களுக்கு செல்வதற்கும், பாதுகாப்பான இடங்களுக்கு செல்வதற்கும் தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறன. வீதிகள் சீரமைக்கப்படுவதுடன் பல இடங்களில் மின் விநியோகமும் அளிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதேவேளை, வெள்ளத்தால் அதிகம் பாதிக்கப்பட்ட தாம்பரம், குரோம்பேட்டை உள்ளிட்ட
பகுதிகளில் வெள்ளநீர் வடிந்து வருவதுடன் சென்னை - திருச்சி வீதியில் வண்டலூர் அருகே சேதமடைந்த வீதி சீரமைக்கப்பட்டுள்ளது. இதேவேளை, தென் மேற்கு வங்க கடலில் நிலை கொண்டிருந்த காற்றழுத்த
தாழ்வு பகுதி
அதே இடத்தில் நீடிப்பதால் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஒரிரு இடங்களில் மழை பெய்யும் என்றும், அதே நேரத்தில் சென்னைக்கு கன மழை ஆபத்து இல்லை என்றும் இந்திய வானிலை மைய இயக்குநர் ரமணன்
கூறியுள்ளார்
03 December 2015
மழையால் இந்திய இலங்கை விமானங்கள் இரத்து
கொழும்பிற்கும் – சென்னைக்கும் இடையிலான அனைத்து விமான சேவைகளும் இன்று வியாழக்கிழமையும் இரத்து செய்யப்பட்டுள்ளதாக ஸ்ரீலங்கா எயார்லைன்ஸ்
அறிவித்துள்ளது.
சென்னையில் நிலவும் அதிக மழையுடன் கூடிய வானிலையால் விமானங்கள் தரையிறங்குவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடும்மழை காரணமாக தமிழகத்தின் சென்னை சர்வதேச விமான நிலையம் மூடப்பட்டுள்ளதால் ஸ்ரீலங்கா உள்ளிட்ட பல்வேறு நாடுகளை சேர்ந்த பயணிகள் சிரமங்களை
எதிர்நோக்கியுள்ளனர்.
கொழும்பில் இருந்து சென்ற விமானங்கள் சில சென்னை விமான நிலையத்தில் தரையிறங்க முடியாமல் மீண்டும் ஸ்ரீலங்காவிற்கு திரும்பியுள்ளன.
விமான நிலையத்தின் அனைத்து சேவைகளும் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளதாக சென்னை விமான நிலைய இயக்குநர் தீபக் மிஷ்ரா தெரிவித்துள்ளார்.
சென்னையில் இருந்து புறப்படும் அனைத்து உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு விமான சேவைகளும் இரத்துச் செய்யப்பட்டுள்ளன.
நேற்றைய தினம் நிலைமைகளை மீளாய்வு செய்ததன் பின்னர் மேற்கொள்ளப்படவுள்ள அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து திட்டமிடப்படும் என விமான நிலைய இயக்குனர்
கூறியுள்ளார்.
விமானத்தின் ஒடுபாதையில் வெள்ளம் தேங்கியிருப்பதாலும் மழை காரணமாக ஓடுபாதையை சரியாக கண்டறிவதில் சிரமம் காணப்படுவதாலும் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள்
குறிப்பிடுகின்றனர்.
கொழும்பிற்கும் – சென்னைக்கும் இடையிலான அனைத்து விமான நேற்றைய தினமும் இரத்து செய்யப்பட்டிருந்தமை
குறிப்பிடத்தக்கது.
02 December 2015
நவம்பர் மாத மழை: நூலிழையில் தவறவிட்ட சென்னை!
சென்னை இந்த நூற்றாண்டில் நவம்பர் மாதத்தில் அதிக மழை பொழிவு என்ற வரலாற்று சாதனையை நூலிழையில்
தவறுவிட்டுள்ளது.
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை கடந்த அக்டோபர் 28-ம் திகதி தொடங்கிய நிலையில், சென்னையில் நவம்பர் மாதத்துகான மழைப்பதிவு 1049.3 மி.மீ பதிவாகியுள்ளது.
இது, இந்த நூற்றாண்டில் இரண்டாவது முறையாக நவம்பர் மாதத்தில் சென்னையில் பெய்த அதிக
மழையளவு ஆகும்.
இதற்கு முன்னதாக கடந்த 1918-ம் ஆண்டு நவம்பர் மாதம் சென்னையில் 1088.4 மிமீ மழை பதிவாகியுள்ளது.
கடந்த சில வாரங்களாக சென்னையில் கனமழை பெய்து வந்ததால் 2015 நவம்பர் மாத மழையளவு பழைய சாதனையை முறியடிக்கும் என எதிர்பாக்கப்பட்ட நிலையில், கடந்த சில நாட்களாக சென்னையில் மழை இல்லை.
எனவே, நவம்பர் 30-ம் திகதியுடன் முடிவடைந்த காலகட்டத்தில் சென்னையில் 1049.3 மி.மீ மழை பதிவானதன் மூலம், சென்னை புதிய சாதனையை நூலிழையில் தவறிவிட்டுள்ளது.
இதற்கிடையில் இன்று சென்னை உள்பட தமிழகத்தில் மீண்டும் கனமழை பெய்யத் தொடங்கியுள்ளது
ராஜீவ் கொலை கைதிகள் விடுதலைக்கு எதிரான வழக்கு இன்று தீர்ப்பு”!
ராஜீவ் கொலை கைதிகள் விடுதலைக்கு எதிராக மத்திய அரசினால் தாக்கல் செய்யப்பட்ட வழக்கின் தீர்ப்பு இன்று அறிவிக்கப்படவுள்ளது. ஆகவே, தமிழகம் மட்டுமின்றி நாடு முழுதும் இந்த தீர்ப்பு பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை கைதிகள் முருகன், சாந்தன், பேரறிவாளன் உள்பட 7 பேரையும் விடுதலை செய்யப் போவதாக தமிழக அரசு அறிவித்தது.
இந்த முடிவை எதிர்த்து அப்போதைய மத்திய காங்கிரஸ் கூட்டணி அரசு சுப்ரீம் கோர்ட்டில் ரிட் மனு தாக்கல் செய்தது. சுப்ரீம் கோர்ட்டு 7 பேரையும் விடுதலை செய்ய இடைக்கால
தடை விதித்தது.
இந்த வழக்கை விசாரிக்க சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி எச்.எல்.தத்து தலைமையில் 5 நீதிபதிகள் கொண்ட அரசியல்சாசன அமர்வு அமைக்கப்பட்டது.
இந்த வழக்கின் விசாரணை சுப்ரீம் கோர்ட்டில் ஜூலை 15-ந் தேதி தொடங்கி 11 நாட்களாக நடைபெற்றது.
மத்திய அரசு சார்பில் சொலிசிட்டர் ஜெனரல் ரஞ்சித்குமார் தன்னுடைய வாதத்தில், சி.பி.ஐ. விசாரணை நடத்திய வழக்கில் உரிய முடிவெடுக்கும் அதிகாரம் மத்திய அரசுக்கு தான்
உள்ளது.
சுப்ரீம் கோர்ட்டு தூக்கு தண்டனையை ஆயுள் தண்டனையாக அறிவித்த பிறகு அவர்களை விடுதலை செய்வது குறித்த முடிவை மத்திய அரசு தான் எடுக்க வேண்டும் என்றார்.
அனைத்து தரப்பிலும் இறுதி வாதங்கள் முடிவடைந்து ஆகஸ்டு 12-ந் தேதி இந்த வழக்கின் தீர்ப்பு தேதி குறிப்பிடாமல்
ஒத்திவைக்கப்பட்டது.
இந்த வழக்கின் மீதான இறுதி தீர்ப்பு இன்று (புதன்கிழமை) வழங்கப்படும் என்று சுப்ரீம் கோர்ட்டு அறிவித்துள்ளது.
ராஜீவ் கொலை கைதிகள் விடுதலை குறித்து மட்டுமின்றி, 14 ஆண்டுகளில் ஆயுள் தண்டனை கைதிகள் விடுவிக்கப்படுவது சரியா? என்பது குறித்த முடிவும் அறிவிக்கப்படவுள்ளது.
ஆகவே, தமிழகம் மட்டுமின்றி நாடு முழுதும் இந்த தீர்ப்பு பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
தலைமை நீதிபதி எச்.எல்.தத்து இன்று ஓய்வு பெறுவதால் அவர் வழங்கக்கூடிய கடைசி தீர்ப்பு இது என்பது குறிப்பிடத்தக்கது.
30 November 2015
விசேட சோதனை மாலைதீவு பிரஜைகள் மீது இல்லை???
இலங்கைக்கு செல்லும் மாலைதீவு பிரஜைகள் மீது விசேட சோதனைகள் மேற்கொள்ளப்படவில்லை என்று மாலைதீவில் உள்ள இலங்கை உயர்ஸ்தானிகரகம் தெரிவித்துள்ளது.
அண்மைக்காலமாக மாலைதீவின் பிரஜைகள் இலங்கையில் கைதுசெய்யப்பட்டமை மற்றும் ஒருவர் கொலை செய்யப்பட்டமையை அடுத்து கட்டுநாயக்கவில் மாலைதீவு பிரஜைகளுக்கு சோதனைகள் கடுமையாக்கப்பட்டுள்ளன என்று தகவல்கள்
வெளியாகியிருந்தன.
எனினும் இதனை மறுத்துள்ள மாலைதீவின் இலங்கை உயர்ஸ்தானிகரகம், மாலைதீவில் இருந்து எடுத்து வரப்படும் காட்போட் பெட்டிகள் மற்றும் உணவுப் பொருட்கள் பரிசோதனைகளுக்கு உள்ளாக்கப்படுகின்றன என்று குறிப்பிட்டுள்ளது.
இதேவேளை கடந்த சனிக்கிழமையன்று எமிரேட்ஸ் விமானத்தின் மூலம் இலங்கை வந்த மாலைதீவு பிரஜை ஒருவர் சில மணித்தியாலங்கள் தடுத்து வைக்கப்பட்டு விசாரணை செய்யப்பட்டார் என்பதும்
குறிப்பி;டத்தக்கது.
28 November 2015
பாஸ்தாவில் அதிகளவு ரசாயனம் : மீண்டும் சிக்கிய நெஸ்லே நிறுவனம்
நெஸ்லே இந்தியா நிறுவனத்தின் தயாரிப்புகளில் ஒன்றான நெஸ்லே பாஸ்தாவில் அனுமதிக்கப்பட்ட அளவை விட அதிகளவு ரசாயன பொருட்கள் இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
உத்தர பிரதேசம் மாநிலத்தின் மாவ் பகுதியில் உள்ள விநியோகஸ்தர் ஒருவரிடம் இருந்து சேகரிக்கப்பட்ட நெஸ்லே பாஸ்தா பாக்கெட்டுகள், அம்மாநில அரசுக்கு சொந்தமான உணவு தர பரிசோதனை ஆய்வகத்துக்கு அனுப்பப்பட்டது.
இந்த ஆய்வக பரிசோதனையின் முடிவில், அனுமதிக்கப்பட்ட அளவைவிட நெஸ்லே பாஸ்தாவில் ரசாயன பொருட்கள் இருந்தது கண்டறியப்பட்டுள்ளது.
அனுமதிக்கப்பட்ட காரீயத்தின் அளவான 2.5 பிபிஎம் என்பதை விட பரிசோதிக்கப்பட்ட பாக்கெட்டுகளில் 6 பிபிஎம் இருப்பது
தெரியவந்துள்ளது.
இது குறித்து நெஸ்லே நிறுவனத்திற்கு அனுப்பப்பட்ட கடிதமும் அங்கு பெறப்படாமால் திருப்பி அனுப்பட்டுள்ளதாக ஆய்வக அதிகாரி அரவிந்த் யாதவ் என்பவர் தெரிவித்தார்.
மேலும், இந்த அறிக்கையின் அடிப்படையில் நெஸ்லே பாஸ்தா உணவு பாதுகாப்பானது அல்ல எனவும் அவர்
தெரிவித்தார்.
இதற்கிடையே, தங்கள் நிறுவனத்தின் அனைத்து உற்பத்தி பொருட்களும் உண்பதற்கு பாதுகாப்பானது என்று நெஸ்லே இந்தியா நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது.
நெஸ்லே நிறுவனத்தின் தயாரிப்பான மேகி நூடுல்ஸில் அனுமதிக்கப்பட்டதை விட அதிக அளவு ரசாயன பொருட்கள் இருப்பது கண்டறியப்பட்டதோடு நாடு முழுவதும் மேகி நூடுல்ஸ் விற்பனைக்கு தடைவிதிக்கப்பட்டது.
இதைதொடர்ந்து மும்பை உயர் நீதிமன்ற உத்தரவுப்படி உரிய ஆய்வகங்களில் மேகி நூடுல்ஸ் பாதுகாப்பானது என்று தரச்சான்று பெற்ற பின்னர் மீண்டும் நெஸ்லே இந்தியா நிறுவனம் மேகி நூடுல்ஸ் விற்பனையை ஆரம்பித்துயுள்ளது.
இந்த நிலையில், நெஸ்லே பாஸ்தாவில் அனுமதிக்கப்பட்ட அளவை விட அதிகளவு ரசாயன பொருட்கள் இருப்பதாக தகவல்கள்
வெளியாகியுள்ளன.
27 November 2015
முதல் இடம்:உடல் உறுப்பு தானத்தில் தமிழகத்திற்கு விருது
நாட்டிலேயே உடல் உறுப்பு தானத்தில் முதல் இடம் வகிப்பதற்காக தமிழகத்திற்கு விருது வழங்கபட்டுள்ளது.
டெல்லியில் நடைபெற்ற விழாவில் மத்திய சுகாதாரத்துறை மந்திரி ஜே.பி.நட்டா தமிழகத்திற்கான விருதை அமைச்சர் விஜய பாஸ்கரிடம் வழங்கினார். உடல் உறுப்பு தானம் செய்வதில் ஆந்திர மாநிலம் இரண்டாவது இடத்தில்உள்ளது
மாவீரர் தின நிகழ்ச்சிக்கு அனுமதி அளித்து உயர்நீதிமன்றம் உத்தரவு
சென்னை: தமிழகத்தில் மாவீரர் தின நிகழ்ச்சிகளை நடத்த அனுமதி அளித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பிரபாகரன் பிறந்தநாளை முன்னிட்டு மாவீரர் தின நிகழ்ச்சி பல்வேறு நாடுகளில்
நவம்பர் 27 ம் தேதி நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி இந்தாண்டு தமிழ்நாட்டில் நடத்த அனுமதி கோரி மதிமுக, நாம் தமிழர் கட்சி, திராவிடர் விடுதலை
கட்சிகள் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் கோரிக்கை மனு தாக்கல் செய்யப்பட்டது.
அந்த மனுவில், இலங்கையில் உள்நாட்டு போரில் உயிரிழந்த விடுதலைப்புலிகள் அமைப்பை சேர்ந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் மாவீரர் தின நிகழ்ச்சிகளுக்கு தமிழகத்தில் அனுமதி வழங்க
காவல்துறைக்கு
உத்தரவிடக்கோரி இருந்தது. இந்த வழக்குகளை தனித்தனியே விசாரித்த சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி சுப்பையா, மாவீரர் தினத்தை தமிழகத்தில் கொண்டாட அனுமதி
அளித்து உத்தரவிட்டார். இதையடுத்து பெரவள்ளூர் சதுக்கம், காமராஜர் சிலை பின்புறம், திரு.வி.க.நகர் பேருந்து நிலையம் அருகே இன்று கூட்டம் நடைபெருகிறது. ஆனால் திராவிடர் விடுதலை கழகம் சார்பில் சேலத்தில் பெரியத்தான் புலியூருக்கு பதிலாக பழனிசாமி தோப்பில் மாவீரர் தினத்தை நடத்திக் கொள்ளலாம் என
உத்தரவிட்டார்.
மழை கொட்டப்போகுது..நவம்பர் 28,29ம் தேதிகளில். ஜாக்கிரதை!!!:
சென்னை: தென் கிழக்கு வங்கக் கடலில் நிலை கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு நிலையால், தமிழ்நாட்டில் 28,29 தேதிகளில் மிக கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிமை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது
. 12 முதல் 24 செமீ வரை மழை பெய்யும்
என்றும் வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. வடகிழக்கு பருவமழை, வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு நிலைகளினால் தமிழகத்தில் கடந்த 20 நாட்களாக கனமழை கொட்டித் தீர்த்தது.
இந்த மழையால்
தமிழகமே வெள்ளக்காடக மாறியுள்ளது. பல இடங்களில் வெள்ளநீர் வடியாமல் உள்ளது. தமிழகத்தை புரட்டிப்போட்ட கனமழையால் கடலூர் மாவட்டம் முற்றிலும் சிதைந்து போயுள்ளது. மழை விட்டும் சோகநிலை மாறாத நிலையில், மீண்டும் கனமழை பெய்யும் என்றும் வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
25 November 2015
வங்கிக் கணக்கு குறித்து விசாரணை- சுவிட்சர்லாந்து அரசிடம் உதவி கோருகிறது இந்தியா?
காங்கிரஸ் மூத்த தலைவர் பிரனீத் கவுரின் சுவிட்சர்லாந்து வங்கி கணக்குகளின் விவரங்களை அளிக்குமாறு அந்த நாட்டு அரசிடம் இந்தியா உதவி கோரியுள்ளது.
சுவிட்சர்லாந்தின் எச்.எஸ்.பி.சி. வங்கியில் கருப்பு பணத்தை பதுக்கி வைத்துள்ள 628 இந்தியர்கள் குறித்த பட்டியலை சில ஆண்டுகளுக்கு முன்பு பிரான்ஸ் அரசு இந்தியாவிடம் அளித்தது. அந்தப் பட்டியல் கடந்த ஆண்டு உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது.
இதைத் தொடர்ந்து சுவிட்சர்லாந்தில் கருப்பு பணத்தை பதுக்கி வைத்திருப்பதாக 1195 பேரின் பெயர் விவரங்களை ஆங்கில நாளிதழ் ஒன்று கடந்த ஜூனில் வெளியிட்டது. இதில் காங்கிரஸ் மூத்த தலைவரும் முன்னாள் மத்திய அமைச்சருமான பிரனீத் கவுர், அவரது மகன் ரணீந்தர் சிங் ஆகியோரின் பெயர்கள் இடம்பெற்றிருந்தன.
இதனிடையே கருப்பு பணத்தை கட்டுப்படுத்த சில மாதங்களுக்கு முன்பு சட்டவிரோத பணப் பரிமாற்ற தடை சட்டத்தை மத்திய அரசு கொண்டு வந்தது. இதன்படி வெளிநாடுகளில் கருப்பு பணத்தை பதுக்கி வைத்திருப்பவர்கள் தாமாக முன்வந்து தகவல் அளிக்க கடந்த செப்டம்பர் 30 வரை காலஅவகாசம் அளிக்கப்பட்டது. இதில் 638 பேர் தாங்களாக முன்வந்து கருப்பு பண விவரங்களை தெரிவித்தனர்.
ஆனால் பிரனீத் கவுரும் அவரது மகன் ரணீந்தர் சிங்கும் எவ்வித தகவலையும் தெரிவிக்கவில்லை. இதைத் தொடர்ந்து அவர்களின் வங்கிக் கணக்குகளின் விவரங்களை அளிக்குமாறு சுவிட்சர்லாந்து அரசிடம் இந்திய அரசு கோரிக்கை விடுத்துள்ளது.
இந்தத் தகவலை சுவிட்சர் லாந்தின் வரி நிர்வாக அமைப்பு நேற்று தெரிவித்தது. பிரனீத் கவுர், ரணீந்தர் சிங் ஆகியோரின் குடியுரிமை, பிறந்த தேதி விவரங் களை அந்த அமைப்பு வெளியிட் டுள்ளது. வேறு எந்த தகவல்களை யும் வெளியிடவில்லை.
இதுதொடர்பாக பிரனீத் கவுரும் ரணீந்தர் சிங்கும் 10 நாட்களுக்குள் சுவிட்சர்லாந்து அரசிடம் மேல்முறையீடு செய்யலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
அந்த நாட்டு சட்டப்படி குறிப்பிட்ட நபரின் கருப்பு பண விவரங்களை கோர முதலில் சுவிட்சர்லாந்து அரசின் வரி நிர்வாக அமைப்பிடம் விண்ணப்பிக்க வேண்டும். பின்னர் அந்த நாட்டு நீதிமன்றத்தில் முறைப்படி மனு தாக்கல் செய்ய வேண்டும். நீதிமன்றங்களில் போதிய ஆதாரங்களை அளித்தால் குறிப்பிட்ட நபரின் வங்கிக் கணக்கு விவரங்கள்
அளிக்கப்படும்.
இந்திய அரசிடம் உள்ள தகவல்கள் பிரான்ஸ் நாட்டிடம் இருந்து பெறப்பட்டவை. அவை எச்.எஸ்.பி.சி. முன்னாள் ஊழியர் ஒருவர் அந்த வங்கியில் இருந்து திருடிய தகவல்கள் ஆகும். அதை ஆதாரமாக ஏற்க சுவிட்சர்லாந்து அரசு மறுத்து வருகிறது
குரோம்பேட்டை அரச மருத்துவமனை நோயாளிகள் வெள்ளத்தில் :அவதி!!!
சென்னையில் திங்கள்கிழமை பெய்த கனமழை காரணமாக குரோம்பேட்டை அரசு மருத்துவனை வெள்ளநீரில்
மிதந்தது.
சென்னையில் திங்களன்று பெய்த கனமழை காரணமாக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்குள் வெள்ள நீர் புகுந்தது. இதனையடுத்து நோயாளிகளை மருத்துவர்களும் பிற ஊழியர்களும் சேர்ந்து வேறு வார்டுகளுக்கு மாற்றினர்.
றநோயாளிகள் பகுதி முழுதும் நீரில் மூழ்கியதாக மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக வந்த பலரும்
தெரிவித்தனர்.
இதனையடுத்து பல்லவபுரம் நகராட்சி தேங்கியுள்ள நீரை வெளியேற்ற பொதுப்பணித்துறையுடன் சேர்ந்து நடவடிக்கைகள்
மேற்கொண்டது.
தரைத்தளத்தில் மேலும் மழை நீர் புகுந்து விடாத வண்ணம் மணற் மூட்டைகள் வைத்து தடுக்கப்பட்டது.
ஒவ்வொரு முறையும் பருவமழையின் போது இந்த மருத்துவமனையில் மழை நீர் புகுந்து விடுவது வழக்கமாக இருந்து வருவதாக மருத்துவமனை ஊழியர்கள் தெரிவித்தனர்.
மேலும், அருகில் உள்ள குடியிருப்பு வாசிகள் தங்கள் பகுதிகளில் தேங்கியுள்ள நீரை அகற்ற மருத்துவமனையின் சுவரை உடைத்து விடுவதால் மழை நீர் மருத்துவமனைக்குள் புகுவதாக அவர்கள்
குற்றம்சாட்டினர்.
Keywords: சென்னை மழை, வெள்ளம், குரோம்பேட்டை அரசு மருத்துவமனை நீரில் மிதந்தது, தமிழகம், நோயாளிகள்
Subscribe to:
Posts (Atom)