தொடர்ந்து சில நாட்களாக பெய்யும் மழை காரணமாக ஏற்பட்ட வெள்ளத்தால் தண்ணீரில் தத்தளித்து வந்த சென்னையில் மெல்ல மெல்ல இயல்பு நிலை திரும்பி வருவதுடன் பல பகுதிகளில் வெள்ளநீர் வடிந்து
வருகிறது. செம்பரம்பாக்கம் உள்ளிட்ட ஏரிகளில் இருந்து திறக்கப்படும் நீரின் அளவு குறைக்கப்பட்டுள்ளதாலும், மழை ஓய்ந்துள்ளதாலும் பல இடங்களில் வெள்ளநீர் வடிந்து வருகிறது. அடையாற்றில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கால் கடந்த
2 நாட்களாக சைதாப்பேட்டை பாலத்தில் போக்குவரத்து நிறுத்தப்பட்டிருந்தது. இந்நிலையில், செம்பரம்பாக்கம் ஏரியில் நீர்திறப்பு குறைக்கப்பட்டுள்ளதால், அடையாற்றில் 3 அடி உயரத்திற்கு வெள்ளம் குறைந்துள்ளது. இதனால், சைதாப்பேட்டை பாலத்தில் மீண்டும்
வாகனங்கள் செல்ல
அனுமதிக்கப்பட்டுள்ளது. சென்னை - திருச்சி வீதி, கிண்டி-வடபழனி வீதி, அண்ணாசாலை, கே.கே.நகர், பல்லாவரம் உள்ளிட்ட பகுதிகளில் வெள்ளநீர் வடிந்ததால் வாகன போக்குவரத்து வழமை போல இடம்பெறுகின்றது.
மாநகர பஸ்களும்
இயக்கப்படுவதுடன் மக்கள் வெளியூர்களுக்கு செல்வதற்கும், பாதுகாப்பான இடங்களுக்கு செல்வதற்கும் தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறன. வீதிகள் சீரமைக்கப்படுவதுடன் பல இடங்களில் மின் விநியோகமும் அளிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதேவேளை, வெள்ளத்தால் அதிகம் பாதிக்கப்பட்ட தாம்பரம், குரோம்பேட்டை உள்ளிட்ட
பகுதிகளில் வெள்ளநீர் வடிந்து வருவதுடன் சென்னை - திருச்சி வீதியில் வண்டலூர் அருகே சேதமடைந்த வீதி சீரமைக்கப்பட்டுள்ளது. இதேவேளை, தென் மேற்கு வங்க கடலில் நிலை கொண்டிருந்த காற்றழுத்த
தாழ்வு பகுதி
அதே இடத்தில் நீடிப்பதால் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஒரிரு இடங்களில் மழை பெய்யும் என்றும், அதே நேரத்தில் சென்னைக்கு கன மழை ஆபத்து இல்லை என்றும் இந்திய வானிலை மைய இயக்குநர் ரமணன்
கூறியுள்ளார்
0 கருத்துகள்:
Post a Comment