Search This Blog n

17 December 2015

கடலரிப்புக்கான தடுப்புச் சுவர் அமைக்கும் கோரிக்கை திருப்பி அனுப்பப்பட்டது;?

எண்ணூர் - எர்ணாவூர் இடையே கடலரிப்புக்கான தடுப்புச் சுவர் அமைப்பது தொடர்பாக சுற்றுப்புறசூழல் தாக்க மதிப்பீட்டுக் குழுவுக்கு அனுப்பப்பட்ட கோரிக்கை திருப்பி அனுப்பப்பட்டதாக பசுமைத் தீர்ப்பாயத்தில் தமிழக அரசு கூறியுள்ளது.
ஒருங்கிணைந்த திட்டம்
தமிழகம் மற்றும் புதுச்சேரி கடலோரப் பகுதிகளில் கடல் அரிப்பைத் தடுப்பதற்காக அரசு அறிவியல் பூர்வமான தீர்வை ஏற்படுத்தும் வகையில் செயல்படவில்லை. எனவே தற்போது மேற்கொள்ளும் முறையை தடை செய்து உத்தரவிட வேண்டும் என்று சென்னையில் உள்ள தென்மண்டல தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தில் வழக்கு தாக்கல் 
செய்யப்பட்டு உள்ளது.
இந்த வழக்கை தீர்ப்பாய உறுப்பினர்கள் நீதிபதி பி.ஜோதிமணி, பேராசிரியர் ஆர்.நாகேந்திரன் விசாரிக்கின்றனர். ஒருங்கிணைந்த கடல் அரிப்பு தடுப்பு மேலாண்மை திட்டத்தை உருவாக்க அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றும், அதுவரை தற்போது நடத்தும் கடல் அரிப்பு தடுப்பான் அமைக்கும் பணிகளை நிறுத்தவேண்டும் என்றும் உறுப்பினர்கள் ஏற்கனவே உத்தரவிட்டனர்.
கோரிக்கை மறுப்பு
இந்த நிலையில், மக்கள் நலனுக்காக அந்தப் பகுதியில் தற்காலிகமாக 10 கடலரிப்பு தடுப்புச்சுவர் எழுப்ப வேண்டியதிருப்பதாகவும், அதற்கு தீர்ப்பாயம் அனுமதிக்கவேண்டும் என்றும் தமிழக அரசு கோரியது. அதன் உண்மை நிலையை வக்கீல் கமிஷனர் வேல்முருகன் மூலம் தீர்ப்பாயம் அறிந்து, தற்கால தடுப்புச்சுவர் அமைக்க அனுமதி அளித்து 
உத்தரவிட்டது.
இந்த நிலையில், நேற்று இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. தமிழக அரசு தரப்பில் ஆஜரான வக்கீல், “கடல் அரிப்பைத் தடுக்கும் திட்டத்தை நடைமுறைப்படுத்தும் தமிழக பொதுப்பணித்துறையை அழைக்காமல், சுற்றுப்புறசூழல் தாக்க மதிப்பீட்டுக்குழு கூட்டம் நடத்தியது. அதில் தடுப்புச் சுவர் அமைக்க அனுமதி கேட்ட கோரிக்கையை திருப்பி அனுப்ப முடிவு செய்யப்பட்டுள்ளது’’ என்று வாதிட்டார்.
தள்ளிவைப்பு
சுற்றுப்புறசூழல் தாக்க மதிப்பீட்டுக் குழு சார்பில் ஆஜரான வக்கீல், திருச்செந்தூர் பகுதிக்கான திட்டம் தொடர்பான பொதுப்பணித்துறை அதிகாரிகள் ஆஜரானதாக கூறினார். ஆனால் அந்த வாதத்தை தீர்ப்பாய உறுப்பினர்கள் ஏற்க மறுத்துவிட்டனர்.
இந்த விவகாரத்தில் பொதுப்பணித்துறை சென்னைப்பிரிவின் கருத்தை கேட்க உத்தரவிடவேண்டும் என்று தமிழக அரசு வக்கீல் கோரினார். வழக்கு விசாரணையை 22-ந் தேதிக்கு தள்ளி வைத்து
 உத்தரவிட்டனர். 
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

0 கருத்துகள்:

Post a Comment