Search This Blog n

02 December 2015

ராஜீவ் கொலை கைதிகள் விடுதலைக்கு எதிரான வழக்கு இன்று தீர்ப்பு”!

ராஜீவ் கொலை கைதிகள் விடுதலைக்கு எதிராக மத்திய அரசினால் தாக்கல் செய்யப்பட்ட வழக்கின் தீர்ப்பு இன்று அறிவிக்கப்படவுள்ளது. ஆகவே, தமிழகம் மட்டுமின்றி நாடு முழுதும் இந்த தீர்ப்பு பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை கைதிகள் முருகன், சாந்தன், பேரறிவாளன் உள்பட 7 பேரையும் விடுதலை செய்யப் போவதாக தமிழக அரசு அறிவித்தது.
இந்த முடிவை எதிர்த்து அப்போதைய மத்திய காங்கிரஸ் கூட்டணி அரசு சுப்ரீம் கோர்ட்டில் ரிட் மனு தாக்கல் செய்தது. சுப்ரீம் கோர்ட்டு 7 பேரையும் விடுதலை செய்ய இடைக்கால 
தடை விதித்தது.
இந்த வழக்கை விசாரிக்க சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி எச்.எல்.தத்து தலைமையில் 5 நீதிபதிகள் கொண்ட அரசியல்சாசன அமர்வு அமைக்கப்பட்டது.
இந்த வழக்கின் விசாரணை சுப்ரீம் கோர்ட்டில் ஜூலை 15-ந் தேதி தொடங்கி 11 நாட்களாக நடைபெற்றது.
மத்திய அரசு சார்பில் சொலிசிட்டர் ஜெனரல் ரஞ்சித்குமார் தன்னுடைய வாதத்தில், சி.பி.ஐ. விசாரணை நடத்திய வழக்கில் உரிய முடிவெடுக்கும் அதிகாரம் மத்திய அரசுக்கு தான் 
உள்ளது.
சுப்ரீம் கோர்ட்டு தூக்கு தண்டனையை ஆயுள் தண்டனையாக அறிவித்த பிறகு அவர்களை விடுதலை செய்வது குறித்த முடிவை மத்திய அரசு தான் எடுக்க வேண்டும் என்றார்.
அனைத்து தரப்பிலும் இறுதி வாதங்கள் முடிவடைந்து ஆகஸ்டு 12-ந் தேதி இந்த வழக்கின் தீர்ப்பு தேதி குறிப்பிடாமல் 
ஒத்திவைக்கப்பட்டது.
இந்த வழக்கின் மீதான இறுதி தீர்ப்பு இன்று (புதன்கிழமை) வழங்கப்படும் என்று சுப்ரீம் கோர்ட்டு அறிவித்துள்ளது.
ராஜீவ் கொலை கைதிகள் விடுதலை குறித்து மட்டுமின்றி, 14 ஆண்டுகளில் ஆயுள் தண்டனை கைதிகள் விடுவிக்கப்படுவது சரியா? என்பது குறித்த முடிவும் அறிவிக்கப்படவுள்ளது.
ஆகவே, தமிழகம் மட்டுமின்றி நாடு முழுதும் இந்த தீர்ப்பு பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
தலைமை நீதிபதி எச்.எல்.தத்து இன்று ஓய்வு பெறுவதால் அவர் வழங்கக்கூடிய கடைசி தீர்ப்பு இது என்பது குறிப்பிடத்தக்கது.
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

0 கருத்துகள்:

Post a Comment