இலங்கைக்கு செல்லும் மாலைதீவு பிரஜைகள் மீது விசேட சோதனைகள் மேற்கொள்ளப்படவில்லை என்று மாலைதீவில் உள்ள இலங்கை உயர்ஸ்தானிகரகம் தெரிவித்துள்ளது.
அண்மைக்காலமாக மாலைதீவின் பிரஜைகள் இலங்கையில் கைதுசெய்யப்பட்டமை மற்றும் ஒருவர் கொலை செய்யப்பட்டமையை அடுத்து கட்டுநாயக்கவில் மாலைதீவு பிரஜைகளுக்கு சோதனைகள் கடுமையாக்கப்பட்டுள்ளன என்று தகவல்கள்
வெளியாகியிருந்தன.
எனினும் இதனை மறுத்துள்ள மாலைதீவின் இலங்கை உயர்ஸ்தானிகரகம், மாலைதீவில் இருந்து எடுத்து வரப்படும் காட்போட் பெட்டிகள் மற்றும் உணவுப் பொருட்கள் பரிசோதனைகளுக்கு உள்ளாக்கப்படுகின்றன என்று குறிப்பிட்டுள்ளது.
இதேவேளை கடந்த சனிக்கிழமையன்று எமிரேட்ஸ் விமானத்தின் மூலம் இலங்கை வந்த மாலைதீவு பிரஜை ஒருவர் சில மணித்தியாலங்கள் தடுத்து வைக்கப்பட்டு விசாரணை செய்யப்பட்டார் என்பதும்
குறிப்பி;டத்தக்கது.
0 கருத்துகள்:
Post a Comment