வக்கீல்கள், கோர்ட்டு ஊழியர்கள், பொதுமக்கள் எந்த வழிகளில் ஐகோர்ட்டுக்குள் வரவேண்டும் என்பது குறித்த அறிவிப்பை ஐகோர்ட்டு தலைமை பதிவாளர் 14,11,2015.நேற்று வெளியிட்டுள்ளார்.
சென்னை ஐகோர்ட்டு தலைமை பதிவாளர் பொன்.கலையரசன் நேற்று அறிக்கை ஒன்றை வெளியிட்டார். அதில் அவர் கூறியிருப்பதாவது:
ஆலோசனை
ஐகோர்ட்டுக்கு மத்திய தொழில் பாதுகாப்பு படையை கொண்டு நவம்பர் 16–ந் தேதி (இன்று) முதல் பாதுகாப்பு வழங்கவேண்டும் என்று கடந்த மாதம் 30–ந் தேதி தலைமை நீதிபதி தலைமையிலான முதன்மை பெஞ்ச் உத்தரவு பிறப்பித்துள்ளது. இதன்படி, தமிழக போலீஸ் அதிகாரிகள்,
மத்திய தொழில்
பாதுகாப்பு படை (சி.ஐ.எஸ்.எப்.) அதிகாரிகள் உள்ளிட்ட அனைத்து தரப்பினர்களுடனும் ஐகோர்ட்டு பாதுகாப்பு கமிட்டி பல முறை ஆலோசனை செய்தது. இந்த ஆலோசனையின்படி, ஐகோர்ட்டு வளாகத்தில் சி.ஐ.எஸ்.எப். போலீசார் பாதுகாப்பு வழங்கும் இடம் வரையறை செய்யப்பட்டுள்ளது. இதற்கான வரைபடம் தயாரிக்கப்பட்டுள்ளது.
நுழைவு வாயில்
ஐகோர்ட்டு வளாகத்தில், ஐகோர்ட்டு உள்ள பகுதியை பாதுகாக்கும் பணி சி.ஐ.எஸ்.எப். போலீசாரிடம் ஒப்படைக்கப்படுகிறது.
ஐகோர்ட்டு வளாகத்துக்குள் நீதிபதிகளின் வாகனங்கள் வரும் நுழைவு வாயில் எண் 1, வடக்கு (எம்.பி.ஏ.) நுழைவு வாயில் (எண் 2 மற்றும் 2 ஏ), தெற்கு பகுதியில் உள்ள இரண்டு நுழைவு வாயில்களில், ஒரு நுழைவுவாயில் (எண் 8 ஏ) ஆகியவை சி.ஐ.எஸ்.எப். போலீஸ் கட்டுப்பாட்டுக்குள்
வரும்.
இதற்காக நுழைவு வாயில் எண் 2–ல் இருந்து நுழைவு வாயில் எண் 8 வரை இரும்பு தடுப்புக்கள் அமைக்கப்பட்டுள்ளது. இந்த தடுப்புகளுக்கு இடையே பல நுழைவு வாயில்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த இரும்பு தடுப்புகள் வழியாக ஐகோர்ட்டுக்குள் வரும் நபர்களை உடல் சோதனை செய்வதற்கு 6 நுழைவு வாயில்கள் அமைக்கப்பட்டுள்ளன.
உடல் சோதனை
அதாவது வடக்கு மற்றும் தெற்கு நுழைவுவாயில்களில் தலா ஒரு உடல் சோதனை செய்யும் மையமும், சிறு வழக்குகளை விசாரிக்கும் நீதிமன்றம் வழியாக வரும் நபர்களை சோதனை செய்ய 2 உடல் சோதனை செய்யும் மையங்களும், சென்னை ஐகோர்ட்டு வக்கீல் சங்கம் கட்டிடத்தில் இருந்து, தரை தளம் மற்றும் முதல் தளம் வழியாக வருபவர்களை சோதனை செய்ய 2 உடல் சோதனை மையங்களும்
அமைக்கப்பட்டுள்ளன.
தெற்கு நுழைவு வாயிலை தவிர, பிற நுழைவு வாயில்கள் வழியாக வக்கீல்கள் ஐகோர்ட்டுக்குள் வரலாம். வழக்கு விசாரணைக்காக வரும் பொதுமக்கள், பார்வையாளர்கள் ஆகியோர் சிறு வழக்குகளை விசாரிக்கும் நீதிமன்றங்கள் வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள அலுவலகத்தில் முறையான நுழைவு சீட்டு பெற்று உள்ளே வரலாம்.
ஒத்துழைப்பு வேண்டும்
அதேபோல, வக்கீல்கள் தங்களது கார்களை ஏற்கனவே அறிவிக்கப்பட்ட இடத்தில் நிறுத்திக் கொள்ளலாம். ஆனால், மோட்டார் சைக்கிள்களை, ஐகோர்ட்டு வளாகத்தில் உள்ள புதுச்சேரி (பிளாக்) மாநில அரசு கட்டிடம் அருகே நிறுத்தவேண்டும்.
கோர்ட்டு ஊழியர்கள் தெற்கு நுழைவு வாயில் வழியாக உள்ளே வந்து, தங்களது கார் மற்றும் மோட்டார் சைக்கிள்களை, ஐகோர்ட்டு நிர்வாக அலுவலக (பிளாக்) கட்டிடம் அருகே
நிறுத்தவேண்டும்.
ஐகோர்ட்டின் அனைத்து நுழைவு வாயில்களிலும் சி.ஐ.எஸ்.எப். போலீசார் நிற்பார்கள். அவர்கள், ஐகோர்ட்டுக்குள் வரும் நபர்கள் அனைவரையும் உடல் சோதனை செய்த பின்னரே அனுமதிப்பார்கள். எனவே,
இந்த பாதுகாப்பு நடவடிக்கைக்கு அனைத்து தரப்பினரும்
ஒத்துழைப்பு
வழங்கவேண்டும் என்று கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.
இவ்வாறு தலைமை பதிவாளர் பொன்.கலையரசன்
கூறியுள்ளார்.
0 கருத்துகள்:
Post a Comment