நெஸ்லே இந்தியா நிறுவனத்தின் தயாரிப்புகளில் ஒன்றான நெஸ்லே பாஸ்தாவில் அனுமதிக்கப்பட்ட அளவை விட அதிகளவு ரசாயன பொருட்கள் இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
உத்தர பிரதேசம் மாநிலத்தின் மாவ் பகுதியில் உள்ள விநியோகஸ்தர் ஒருவரிடம் இருந்து சேகரிக்கப்பட்ட நெஸ்லே பாஸ்தா பாக்கெட்டுகள், அம்மாநில அரசுக்கு சொந்தமான உணவு தர பரிசோதனை ஆய்வகத்துக்கு அனுப்பப்பட்டது.
இந்த ஆய்வக பரிசோதனையின் முடிவில், அனுமதிக்கப்பட்ட அளவைவிட நெஸ்லே பாஸ்தாவில் ரசாயன பொருட்கள் இருந்தது கண்டறியப்பட்டுள்ளது.
அனுமதிக்கப்பட்ட காரீயத்தின் அளவான 2.5 பிபிஎம் என்பதை விட பரிசோதிக்கப்பட்ட பாக்கெட்டுகளில் 6 பிபிஎம் இருப்பது
தெரியவந்துள்ளது.
இது குறித்து நெஸ்லே நிறுவனத்திற்கு அனுப்பப்பட்ட கடிதமும் அங்கு பெறப்படாமால் திருப்பி அனுப்பட்டுள்ளதாக ஆய்வக அதிகாரி அரவிந்த் யாதவ் என்பவர் தெரிவித்தார்.
மேலும், இந்த அறிக்கையின் அடிப்படையில் நெஸ்லே பாஸ்தா உணவு பாதுகாப்பானது அல்ல எனவும் அவர்
தெரிவித்தார்.
இதற்கிடையே, தங்கள் நிறுவனத்தின் அனைத்து உற்பத்தி பொருட்களும் உண்பதற்கு பாதுகாப்பானது என்று நெஸ்லே இந்தியா நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது.
நெஸ்லே நிறுவனத்தின் தயாரிப்பான மேகி நூடுல்ஸில் அனுமதிக்கப்பட்டதை விட அதிக அளவு ரசாயன பொருட்கள் இருப்பது கண்டறியப்பட்டதோடு நாடு முழுவதும் மேகி நூடுல்ஸ் விற்பனைக்கு தடைவிதிக்கப்பட்டது.
இதைதொடர்ந்து மும்பை உயர் நீதிமன்ற உத்தரவுப்படி உரிய ஆய்வகங்களில் மேகி நூடுல்ஸ் பாதுகாப்பானது என்று தரச்சான்று பெற்ற பின்னர் மீண்டும் நெஸ்லே இந்தியா நிறுவனம் மேகி நூடுல்ஸ் விற்பனையை ஆரம்பித்துயுள்ளது.
இந்த நிலையில், நெஸ்லே பாஸ்தாவில் அனுமதிக்கப்பட்ட அளவை விட அதிகளவு ரசாயன பொருட்கள் இருப்பதாக தகவல்கள்
வெளியாகியுள்ளன.
0 கருத்துகள்:
Post a Comment