சென்னையில் திங்கள்கிழமை பெய்த கனமழை காரணமாக குரோம்பேட்டை அரசு மருத்துவனை வெள்ளநீரில்
மிதந்தது.
சென்னையில் திங்களன்று பெய்த கனமழை காரணமாக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்குள் வெள்ள நீர் புகுந்தது. இதனையடுத்து நோயாளிகளை மருத்துவர்களும் பிற ஊழியர்களும் சேர்ந்து வேறு வார்டுகளுக்கு மாற்றினர்.
றநோயாளிகள் பகுதி முழுதும் நீரில் மூழ்கியதாக மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக வந்த பலரும்
தெரிவித்தனர்.
இதனையடுத்து பல்லவபுரம் நகராட்சி தேங்கியுள்ள நீரை வெளியேற்ற பொதுப்பணித்துறையுடன் சேர்ந்து நடவடிக்கைகள்
மேற்கொண்டது.
தரைத்தளத்தில் மேலும் மழை நீர் புகுந்து விடாத வண்ணம் மணற் மூட்டைகள் வைத்து தடுக்கப்பட்டது.
ஒவ்வொரு முறையும் பருவமழையின் போது இந்த மருத்துவமனையில் மழை நீர் புகுந்து விடுவது வழக்கமாக இருந்து வருவதாக மருத்துவமனை ஊழியர்கள் தெரிவித்தனர்.
மேலும், அருகில் உள்ள குடியிருப்பு வாசிகள் தங்கள் பகுதிகளில் தேங்கியுள்ள நீரை அகற்ற மருத்துவமனையின் சுவரை உடைத்து விடுவதால் மழை நீர் மருத்துவமனைக்குள் புகுவதாக அவர்கள்
குற்றம்சாட்டினர்.
Keywords: சென்னை மழை, வெள்ளம், குரோம்பேட்டை அரசு மருத்துவமனை நீரில் மிதந்தது, தமிழகம், நோயாளிகள்
0 கருத்துகள்:
Post a Comment