30 November 2015
விசேட சோதனை மாலைதீவு பிரஜைகள் மீது இல்லை???
இலங்கைக்கு செல்லும் மாலைதீவு பிரஜைகள் மீது விசேட சோதனைகள் மேற்கொள்ளப்படவில்லை என்று மாலைதீவில் உள்ள இலங்கை உயர்ஸ்தானிகரகம் தெரிவித்துள்ளது.
அண்மைக்காலமாக மாலைதீவின் பிரஜைகள் இலங்கையில் கைதுசெய்யப்பட்டமை மற்றும் ஒருவர் கொலை செய்யப்பட்டமையை அடுத்து கட்டுநாயக்கவில் மாலைதீவு பிரஜைகளுக்கு சோதனைகள் கடுமையாக்கப்பட்டுள்ளன என்று தகவல்கள்
வெளியாகியிருந்தன.
எனினும் இதனை மறுத்துள்ள மாலைதீவின் இலங்கை உயர்ஸ்தானிகரகம், மாலைதீவில் இருந்து எடுத்து வரப்படும் காட்போட் பெட்டிகள் மற்றும் உணவுப் பொருட்கள் பரிசோதனைகளுக்கு உள்ளாக்கப்படுகின்றன என்று குறிப்பிட்டுள்ளது.
இதேவேளை கடந்த சனிக்கிழமையன்று எமிரேட்ஸ் விமானத்தின் மூலம் இலங்கை வந்த மாலைதீவு பிரஜை ஒருவர் சில மணித்தியாலங்கள் தடுத்து வைக்கப்பட்டு விசாரணை செய்யப்பட்டார் என்பதும்
குறிப்பி;டத்தக்கது.
28 November 2015
பாஸ்தாவில் அதிகளவு ரசாயனம் : மீண்டும் சிக்கிய நெஸ்லே நிறுவனம்
நெஸ்லே இந்தியா நிறுவனத்தின் தயாரிப்புகளில் ஒன்றான நெஸ்லே பாஸ்தாவில் அனுமதிக்கப்பட்ட அளவை விட அதிகளவு ரசாயன பொருட்கள் இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
உத்தர பிரதேசம் மாநிலத்தின் மாவ் பகுதியில் உள்ள விநியோகஸ்தர் ஒருவரிடம் இருந்து சேகரிக்கப்பட்ட நெஸ்லே பாஸ்தா பாக்கெட்டுகள், அம்மாநில அரசுக்கு சொந்தமான உணவு தர பரிசோதனை ஆய்வகத்துக்கு அனுப்பப்பட்டது.
இந்த ஆய்வக பரிசோதனையின் முடிவில், அனுமதிக்கப்பட்ட அளவைவிட நெஸ்லே பாஸ்தாவில் ரசாயன பொருட்கள் இருந்தது கண்டறியப்பட்டுள்ளது.
அனுமதிக்கப்பட்ட காரீயத்தின் அளவான 2.5 பிபிஎம் என்பதை விட பரிசோதிக்கப்பட்ட பாக்கெட்டுகளில் 6 பிபிஎம் இருப்பது
தெரியவந்துள்ளது.
இது குறித்து நெஸ்லே நிறுவனத்திற்கு அனுப்பப்பட்ட கடிதமும் அங்கு பெறப்படாமால் திருப்பி அனுப்பட்டுள்ளதாக ஆய்வக அதிகாரி அரவிந்த் யாதவ் என்பவர் தெரிவித்தார்.
மேலும், இந்த அறிக்கையின் அடிப்படையில் நெஸ்லே பாஸ்தா உணவு பாதுகாப்பானது அல்ல எனவும் அவர்
தெரிவித்தார்.
இதற்கிடையே, தங்கள் நிறுவனத்தின் அனைத்து உற்பத்தி பொருட்களும் உண்பதற்கு பாதுகாப்பானது என்று நெஸ்லே இந்தியா நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது.
நெஸ்லே நிறுவனத்தின் தயாரிப்பான மேகி நூடுல்ஸில் அனுமதிக்கப்பட்டதை விட அதிக அளவு ரசாயன பொருட்கள் இருப்பது கண்டறியப்பட்டதோடு நாடு முழுவதும் மேகி நூடுல்ஸ் விற்பனைக்கு தடைவிதிக்கப்பட்டது.
இதைதொடர்ந்து மும்பை உயர் நீதிமன்ற உத்தரவுப்படி உரிய ஆய்வகங்களில் மேகி நூடுல்ஸ் பாதுகாப்பானது என்று தரச்சான்று பெற்ற பின்னர் மீண்டும் நெஸ்லே இந்தியா நிறுவனம் மேகி நூடுல்ஸ் விற்பனையை ஆரம்பித்துயுள்ளது.
இந்த நிலையில், நெஸ்லே பாஸ்தாவில் அனுமதிக்கப்பட்ட அளவை விட அதிகளவு ரசாயன பொருட்கள் இருப்பதாக தகவல்கள்
வெளியாகியுள்ளன.
27 November 2015
முதல் இடம்:உடல் உறுப்பு தானத்தில் தமிழகத்திற்கு விருது
நாட்டிலேயே உடல் உறுப்பு தானத்தில் முதல் இடம் வகிப்பதற்காக தமிழகத்திற்கு விருது வழங்கபட்டுள்ளது.
டெல்லியில் நடைபெற்ற விழாவில் மத்திய சுகாதாரத்துறை மந்திரி ஜே.பி.நட்டா தமிழகத்திற்கான விருதை அமைச்சர் விஜய பாஸ்கரிடம் வழங்கினார். உடல் உறுப்பு தானம் செய்வதில் ஆந்திர மாநிலம் இரண்டாவது இடத்தில்உள்ளது
மாவீரர் தின நிகழ்ச்சிக்கு அனுமதி அளித்து உயர்நீதிமன்றம் உத்தரவு
சென்னை: தமிழகத்தில் மாவீரர் தின நிகழ்ச்சிகளை நடத்த அனுமதி அளித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பிரபாகரன் பிறந்தநாளை முன்னிட்டு மாவீரர் தின நிகழ்ச்சி பல்வேறு நாடுகளில்
நவம்பர் 27 ம் தேதி நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி இந்தாண்டு தமிழ்நாட்டில் நடத்த அனுமதி கோரி மதிமுக, நாம் தமிழர் கட்சி, திராவிடர் விடுதலை
கட்சிகள் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் கோரிக்கை மனு தாக்கல் செய்யப்பட்டது.
அந்த மனுவில், இலங்கையில் உள்நாட்டு போரில் உயிரிழந்த விடுதலைப்புலிகள் அமைப்பை சேர்ந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் மாவீரர் தின நிகழ்ச்சிகளுக்கு தமிழகத்தில் அனுமதி வழங்க
காவல்துறைக்கு
உத்தரவிடக்கோரி இருந்தது. இந்த வழக்குகளை தனித்தனியே விசாரித்த சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி சுப்பையா, மாவீரர் தினத்தை தமிழகத்தில் கொண்டாட அனுமதி
அளித்து உத்தரவிட்டார். இதையடுத்து பெரவள்ளூர் சதுக்கம், காமராஜர் சிலை பின்புறம், திரு.வி.க.நகர் பேருந்து நிலையம் அருகே இன்று கூட்டம் நடைபெருகிறது. ஆனால் திராவிடர் விடுதலை கழகம் சார்பில் சேலத்தில் பெரியத்தான் புலியூருக்கு பதிலாக பழனிசாமி தோப்பில் மாவீரர் தினத்தை நடத்திக் கொள்ளலாம் என
உத்தரவிட்டார்.
மழை கொட்டப்போகுது..நவம்பர் 28,29ம் தேதிகளில். ஜாக்கிரதை!!!:
சென்னை: தென் கிழக்கு வங்கக் கடலில் நிலை கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு நிலையால், தமிழ்நாட்டில் 28,29 தேதிகளில் மிக கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிமை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது
. 12 முதல் 24 செமீ வரை மழை பெய்யும்
என்றும் வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. வடகிழக்கு பருவமழை, வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு நிலைகளினால் தமிழகத்தில் கடந்த 20 நாட்களாக கனமழை கொட்டித் தீர்த்தது.
இந்த மழையால்
தமிழகமே வெள்ளக்காடக மாறியுள்ளது. பல இடங்களில் வெள்ளநீர் வடியாமல் உள்ளது. தமிழகத்தை புரட்டிப்போட்ட கனமழையால் கடலூர் மாவட்டம் முற்றிலும் சிதைந்து போயுள்ளது. மழை விட்டும் சோகநிலை மாறாத நிலையில், மீண்டும் கனமழை பெய்யும் என்றும் வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
25 November 2015
வங்கிக் கணக்கு குறித்து விசாரணை- சுவிட்சர்லாந்து அரசிடம் உதவி கோருகிறது இந்தியா?
காங்கிரஸ் மூத்த தலைவர் பிரனீத் கவுரின் சுவிட்சர்லாந்து வங்கி கணக்குகளின் விவரங்களை அளிக்குமாறு அந்த நாட்டு அரசிடம் இந்தியா உதவி கோரியுள்ளது.
சுவிட்சர்லாந்தின் எச்.எஸ்.பி.சி. வங்கியில் கருப்பு பணத்தை பதுக்கி வைத்துள்ள 628 இந்தியர்கள் குறித்த பட்டியலை சில ஆண்டுகளுக்கு முன்பு பிரான்ஸ் அரசு இந்தியாவிடம் அளித்தது. அந்தப் பட்டியல் கடந்த ஆண்டு உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது.
இதைத் தொடர்ந்து சுவிட்சர்லாந்தில் கருப்பு பணத்தை பதுக்கி வைத்திருப்பதாக 1195 பேரின் பெயர் விவரங்களை ஆங்கில நாளிதழ் ஒன்று கடந்த ஜூனில் வெளியிட்டது. இதில் காங்கிரஸ் மூத்த தலைவரும் முன்னாள் மத்திய அமைச்சருமான பிரனீத் கவுர், அவரது மகன் ரணீந்தர் சிங் ஆகியோரின் பெயர்கள் இடம்பெற்றிருந்தன.
இதனிடையே கருப்பு பணத்தை கட்டுப்படுத்த சில மாதங்களுக்கு முன்பு சட்டவிரோத பணப் பரிமாற்ற தடை சட்டத்தை மத்திய அரசு கொண்டு வந்தது. இதன்படி வெளிநாடுகளில் கருப்பு பணத்தை பதுக்கி வைத்திருப்பவர்கள் தாமாக முன்வந்து தகவல் அளிக்க கடந்த செப்டம்பர் 30 வரை காலஅவகாசம் அளிக்கப்பட்டது. இதில் 638 பேர் தாங்களாக முன்வந்து கருப்பு பண விவரங்களை தெரிவித்தனர்.
ஆனால் பிரனீத் கவுரும் அவரது மகன் ரணீந்தர் சிங்கும் எவ்வித தகவலையும் தெரிவிக்கவில்லை. இதைத் தொடர்ந்து அவர்களின் வங்கிக் கணக்குகளின் விவரங்களை அளிக்குமாறு சுவிட்சர்லாந்து அரசிடம் இந்திய அரசு கோரிக்கை விடுத்துள்ளது.
இந்தத் தகவலை சுவிட்சர் லாந்தின் வரி நிர்வாக அமைப்பு நேற்று தெரிவித்தது. பிரனீத் கவுர், ரணீந்தர் சிங் ஆகியோரின் குடியுரிமை, பிறந்த தேதி விவரங் களை அந்த அமைப்பு வெளியிட் டுள்ளது. வேறு எந்த தகவல்களை யும் வெளியிடவில்லை.
இதுதொடர்பாக பிரனீத் கவுரும் ரணீந்தர் சிங்கும் 10 நாட்களுக்குள் சுவிட்சர்லாந்து அரசிடம் மேல்முறையீடு செய்யலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
அந்த நாட்டு சட்டப்படி குறிப்பிட்ட நபரின் கருப்பு பண விவரங்களை கோர முதலில் சுவிட்சர்லாந்து அரசின் வரி நிர்வாக அமைப்பிடம் விண்ணப்பிக்க வேண்டும். பின்னர் அந்த நாட்டு நீதிமன்றத்தில் முறைப்படி மனு தாக்கல் செய்ய வேண்டும். நீதிமன்றங்களில் போதிய ஆதாரங்களை அளித்தால் குறிப்பிட்ட நபரின் வங்கிக் கணக்கு விவரங்கள்
அளிக்கப்படும்.
இந்திய அரசிடம் உள்ள தகவல்கள் பிரான்ஸ் நாட்டிடம் இருந்து பெறப்பட்டவை. அவை எச்.எஸ்.பி.சி. முன்னாள் ஊழியர் ஒருவர் அந்த வங்கியில் இருந்து திருடிய தகவல்கள் ஆகும். அதை ஆதாரமாக ஏற்க சுவிட்சர்லாந்து அரசு மறுத்து வருகிறது
குரோம்பேட்டை அரச மருத்துவமனை நோயாளிகள் வெள்ளத்தில் :அவதி!!!
சென்னையில் திங்கள்கிழமை பெய்த கனமழை காரணமாக குரோம்பேட்டை அரசு மருத்துவனை வெள்ளநீரில்
மிதந்தது.
சென்னையில் திங்களன்று பெய்த கனமழை காரணமாக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்குள் வெள்ள நீர் புகுந்தது. இதனையடுத்து நோயாளிகளை மருத்துவர்களும் பிற ஊழியர்களும் சேர்ந்து வேறு வார்டுகளுக்கு மாற்றினர்.
றநோயாளிகள் பகுதி முழுதும் நீரில் மூழ்கியதாக மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக வந்த பலரும்
தெரிவித்தனர்.
இதனையடுத்து பல்லவபுரம் நகராட்சி தேங்கியுள்ள நீரை வெளியேற்ற பொதுப்பணித்துறையுடன் சேர்ந்து நடவடிக்கைகள்
மேற்கொண்டது.
தரைத்தளத்தில் மேலும் மழை நீர் புகுந்து விடாத வண்ணம் மணற் மூட்டைகள் வைத்து தடுக்கப்பட்டது.
ஒவ்வொரு முறையும் பருவமழையின் போது இந்த மருத்துவமனையில் மழை நீர் புகுந்து விடுவது வழக்கமாக இருந்து வருவதாக மருத்துவமனை ஊழியர்கள் தெரிவித்தனர்.
மேலும், அருகில் உள்ள குடியிருப்பு வாசிகள் தங்கள் பகுதிகளில் தேங்கியுள்ள நீரை அகற்ற மருத்துவமனையின் சுவரை உடைத்து விடுவதால் மழை நீர் மருத்துவமனைக்குள் புகுவதாக அவர்கள்
குற்றம்சாட்டினர்.
Keywords: சென்னை மழை, வெள்ளம், குரோம்பேட்டை அரசு மருத்துவமனை நீரில் மிதந்தது, தமிழகம், நோயாளிகள்
22 November 2015
இலங்கை கடற்படையினர் மீண்டும் தமிழக மீனவர்கள் மீது தாக்குதல்!
தமிழக மீனவர்களின் படகுகள் மீது இலங்கை கடற்படையினர் தாக்குதல் நடத்தியுள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
இன்று காலை இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.
இலங்கை கடற்படையினர் இந்திய மீனவர்கள் மீது கற்கள் மற்றும் போத்தல்களை கொண்டு தாக்குதல்களை நடத்தியுள்ளனர்.
இதன்போது முத்து என்பவர் காயமடைந்துள்ளார். எனினும் ஏனையவர்கள் காயமின்றி தப்பியுள்ளனர்.
இதன்பின்னர் தமிழக மீனவர்கள் கரைக்கு திரும்பி ராமநாதபுரம் வைத்தியசாலையில் சிசிச்சைப்பெற்றனர்.
இதில் முத்து என்பவரின் நெற்றியில் பாரிய காயம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை இலங்கை கடற்படையினரால் பல படகுகள் சேதமாக்கப்பட்டுள்ளன. அத்துடன் வலைகளும் சேதமாக்கப்பட்டுள்ளதாக தமிழக மீன்வளத்துறை பணிப்பாளர் கோபிநாத்
தெரிவித்துள்ளார்.
21 November 2015
பெண்ணை கற்பழித நண்பருக்கு விருந்தாக்க முயன்ற ராணுவ வீரர்?
ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூர் அருகே உள்ள கிராமத்தை சேர்ந்தவர் ராணிதன் சிங். இவர் ராணுவத்தில் பணியாற்றி வந்தார். விடுமுறைக்கு இவர் தனது சொந்த கிராமத்திற்கு வந்திருந்த போது திருமண ஏற்பாடு நடைபெற்றது. அவருக்கு ஒரு பெண்ணை பார்த்து பெற்றோர்கள் முடிவு செய்தனர்.
ராணிதன் சிங் தனக்கு பார்த்த பெண்ணை அடிக்கடி சென்று பார்த்து பேசி உள்ளார். பின்னர் அந்த பெண்ணுடன் உடல் ரீதியாக உறவு வைத்து உள்ளார். பின்னர் அதை வீடியோவாக எடுத்து அதனை இணையதளங்களில் வெளியிட்டு விடுவதாக பாலியல் வன்முறையில்
ஈடுபட்டு உள்ளார்.
பின்னர் அந்த வீடியோவை தனது நண்பருக்கு அனுப்பி வைத்து உள்ளார். பின்னர் தனக்கு பார்த்த பெண்ணை தனது நண்பருக்கு விருந்தாக்க முயன்று உள்ளார்.
இதை தொடர்ந்து அந்த பெண் தனது தந்தையிடம் இந்த விவரத்தை கூறி உள்ளார். இதை தொடர்ந்து ஷேர்கார் போலீஸ் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது. இதை தொடர்ந்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
தலமைக்காவலர் பெண் போலீஸ் அதிகாரியின் மடியில் அமர்ந்தாரா?
ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் ராஜவுரி மாவட்டத்தில் உள்ள ஒரு போலீஸ் நிலையத்தில் மகளிர் சிறப்பு காவல் அதிகாரி ஒருவரின் மடியில், அங்குள்ள தலமைக்காவலர் ஒருவர் வேண்டும் என்றே மடியில் உட்கார்ந்து இருக்கும் படங்கள் பேஸ்புக், வாட்ஸ் அப் போன்ற சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகின்றன.
சமூக வலைதளங்களில் இந்த காட்சிகள் அடங்கிய இரண்டு புகைப்படங்கள் வலம் வருகின்றன. இவை ராஜவுரி மாவட்டத்தில் உள்ள புதால் போலீஸ் நிலையத்தில் எடுக்கப்பட்டவை என்று கூறப்படுகிறது. புகைப்படத்தில் பெண் போலீஸ் அதிகாரியின் மடியில் உட்காரும் தலைமைக்காவலர் ஜாகீர் உசேன் என்பது அடையாளம் தெரியவந்தது. இதையடுத்து உடனடியாக அவரை சஸ்பெண்டு செய்து அதிகாரிகள் நடவடிக்கை
எடுத்துள்ளனர்.
மேற்கண்ட சம்பவம் கடந்த ஆகஸ்ட் மாதம் நடைபெற்றதாக ராஜவூரி- பூஞ்ச் சரக துணை டிஐஜி ஏகே அத்ரி தெரிவித்துள்ளார். மேலும், இந்த படங்கள் வெளியான உடன், தலைமைக்கவலர் ஜாகீர் உசேன் உடனடியாக சஸ்பெண்ட் செய்யப்பட்டதாகவும், அவரை மாவட்ட போலீஸ் லைன்ஸ் பிரிவுக்கு பணியிடம் மாற்றியதாகவும் அவர் தெரிவித்தார். மேலும்,
சம்பவம் குறித்து
விசரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாகவும், பெண் போலீஸ் அதிகாரிக்கு எதிராகவும் உடைந்தையாக செயல்பட பிற போலீஸ் துறையினருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர்
தெரிவித்தார்.
20 November 2015
வெள்ளத்தால் வீட்டுக்குள் பாம்பு புகுந்துவிட்டால் என்ன செய்ய வேண்டும்?
சென்னை எங்கும் மழைநீர் தேங்கியுள்ளதால் வீட்டுக்குள் பாம்பு புகுந்துவிட்டால் செய்ய வேண்டிய முன்னேற்பாடுகள் பற்றி பார்க்கலாம்.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் வெள்ளத்தினால் குடியிருப்பு பகுதிகளில் பாம்புகள் புகுந்து
விடுகின்றன.
சென்னையில் வீட்டுக்குள் பாம்பு புகுந்துவிட்டால் என்ன செய்ய வேண்டும்?
வீடுகளுக்குள் பாம்பு புகுந்து விட்டால் உடனடியாக 044- 22200335 என்ற ஹெல்ப்லைன் எண்ணிற்கு தகவல் தெரிவிக்க வேண்டும்.
மீட்பு படையினர் உங்களை காக்க எந்நேரமும் தயார் நிலையில் இருக்கின்றனர்.
வீட்டுக்குள் பாம்பு புகுந்தால் அதனை அடித்துக் கொல்வதை தவிர்க்க வேண்டும்.
பாம்பு புகுந்துள்ள அறையை விட்டு உடனடியாக குழந்தைகள், முதியவர்கள், பெண்கள் ஆகியோரை வெளியேற்ற வேண்டும்.
அதன் பின்னர் அந்த அறையை தாழிட்டுக் கொள்ளவது முதற்கட்ட பாதுகாப்பு.
மழையில் சிக்கிய வாகனங்களின் சக்கரங்களில் பாம்புகள் சுற்றிக்கொண்டிருக்கலாம்.
எனவே, அப்படியான தருணங்களில் வாகனத்தை நன்கு சோதனை செய்த பிறகே ஓட்ட வேண்டும்.
ஹெல்மெட்டின் உள்பகுதியில் தேள் போன்றவை அண்டுவதற்கு வாய்ப்பு உள்ளது.எனவே ஹெல்மெட்டை உறையிட்டு மூடி வைக்க
வேண்டும்.
அணியும்போதும் பூச்சிகள், தேள் போன்றவை இருக்கிறதா என சோதித்து அணியவேண்டும்.
பாம்பு கடித்தால் முதலில் சம்பந்தப்பட்ட நபரை எழுந்து நடக்கவோ, ஓடவோ விடாமல் அப்படியே படுக்க வைக்க வேண்டும்.
ஏனெனில் ரத்த ஓட்டம் அதிகரித்தால் ரத்தத்தில் விஷம் ஏறிவிடும்.
பாம்பு கடித்த இடத்தில் 15 செ.மீ. அளவுக்கு மேல் நன்றாக
ஒரு விரல்
இடைவெளிகொடுத்து ஒரு கர்சீப் அல்லது துணி வைத்து கட்டிவிடவும்.
பாம்பு கடித்த காலை நகர்த்தவே கூடாது; அதனை ஒரு கட்டையோடு சேர்த்து கட்டி விடவும்.
பாம்பு கடித்த இடத்தை நன்றாக ஐஸ் கட்டிகள் வைத்து ஒத்தடம் கொடுக்கலாம்.
ஏனெனில் ஐஸ் கட்டிகள் ஒத்தடம் கொடுக்கும்போது அல்லது ஐஸ் கட்டிகளை கடித்த இடத்தின் மேல் வைக்கும்போது, அந்த இடத்தில் ரத்தம் உறையும் என்பதால், விஷம் ரத்தத்தில் கலப்பது
தடுக்கப்படுகிறது.
17 November 2015
இணையதளம் மூலம் விபசாரம்: கொல்கத்தா– கர்நாடக அழகிகள் மீட்பு
கோவை மாநகர் பகுதியில் நூதன முறையில் இணையதளம் வாயிலாக விபசாரம் நடைபெறுவதாக மாநகர குற்றப்பிரிவு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதன் அடிப்படையில் குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் சந்திரசேகரன், உக்கடம் போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலமுரளி சுந்தரம் ஆகியோர் அடங்கிய தனிப்படை போலீசார் இணையதளங்களை கண்காணித்தனர். அப்போது ஒரு இணையதளத்தில் வெளிமாநில விபசார அழகிகள் உள்ளதாக விளம்பரம் வெளியாகி இருந்தது. அதில் குறிப்பிடப்பட்டு இருந்த தொலைபேசி எண்ணுக்கு போலீசார் வாடிக்கையாளர் போல் போன்
செய்து பேசினர்.
எதிர்முனையில் பேசிய விபசார புரோக்கர் தன்னிடம் வெளிமாநில அழகிகள் உள்ளதாகவும், ஒரு நாள் இரவுக்கு ரூ.10 ஆயிரம் கட்டணமாக தர வேண்டும் என்றும் கூறினார். மேலும் உக்கடம் பஸ் நிலைய பகுதிக்கு வாருங்கள் என்றும் அழைத்தார்.
விபசார புரோக்கர் கூறிய இடத்துக்கு போலீசார் மாறு வேடத்தில் சென்றனர். அங்கு ஒரு காரில் 3 அழகிகள் மற்றும் ஒரு பெண் புரோக்கர் இருந்தனர். முக்கிய புரோக்கரான நசீர், வந்திருப்பது வாடிக்கையாளர் தான் என நினைத்து போலீசாரிடம் பேசினார்.
அப்போது மறைந்து இருந்த போலீசார் நசீரை மடக்கி பிடித்து கைது செய்தனர். காரில் இருந்த பெண் புரோக்கரும் கைது செய்யப்பட்டார். அவர்களிடமிருந்து 5 செல்போன் மற்றும் கார் பறிமுதல் செய்யப்பட்டது. அதைத்தொடர்ந்து கொல்கத்தாவை சேர்ந்த 2 அழகிகள் மற்றும் கர்நாடகாவை சேர்ந்த அழகி உள்பட 3 பேரை மீட்டு காப்பகத்தில்
ஒப்படைத்தனர்
15 November 2015
சி.ஐ.எஸ்.எப். போலீஸ் பாதுகாப்பு: வக்கீல்கள், பொதுமக்கள் எந்த வழியாக வரவேண்டும்?
வக்கீல்கள், கோர்ட்டு ஊழியர்கள், பொதுமக்கள் எந்த வழிகளில் ஐகோர்ட்டுக்குள் வரவேண்டும் என்பது குறித்த அறிவிப்பை ஐகோர்ட்டு தலைமை பதிவாளர் 14,11,2015.நேற்று வெளியிட்டுள்ளார்.
சென்னை ஐகோர்ட்டு தலைமை பதிவாளர் பொன்.கலையரசன் நேற்று அறிக்கை ஒன்றை வெளியிட்டார். அதில் அவர் கூறியிருப்பதாவது:
ஆலோசனை
ஐகோர்ட்டுக்கு மத்திய தொழில் பாதுகாப்பு படையை கொண்டு நவம்பர் 16–ந் தேதி (இன்று) முதல் பாதுகாப்பு வழங்கவேண்டும் என்று கடந்த மாதம் 30–ந் தேதி தலைமை நீதிபதி தலைமையிலான முதன்மை பெஞ்ச் உத்தரவு பிறப்பித்துள்ளது. இதன்படி, தமிழக போலீஸ் அதிகாரிகள்,
மத்திய தொழில்
பாதுகாப்பு படை (சி.ஐ.எஸ்.எப்.) அதிகாரிகள் உள்ளிட்ட அனைத்து தரப்பினர்களுடனும் ஐகோர்ட்டு பாதுகாப்பு கமிட்டி பல முறை ஆலோசனை செய்தது. இந்த ஆலோசனையின்படி, ஐகோர்ட்டு வளாகத்தில் சி.ஐ.எஸ்.எப். போலீசார் பாதுகாப்பு வழங்கும் இடம் வரையறை செய்யப்பட்டுள்ளது. இதற்கான வரைபடம் தயாரிக்கப்பட்டுள்ளது.
நுழைவு வாயில்
ஐகோர்ட்டு வளாகத்தில், ஐகோர்ட்டு உள்ள பகுதியை பாதுகாக்கும் பணி சி.ஐ.எஸ்.எப். போலீசாரிடம் ஒப்படைக்கப்படுகிறது.
ஐகோர்ட்டு வளாகத்துக்குள் நீதிபதிகளின் வாகனங்கள் வரும் நுழைவு வாயில் எண் 1, வடக்கு (எம்.பி.ஏ.) நுழைவு வாயில் (எண் 2 மற்றும் 2 ஏ), தெற்கு பகுதியில் உள்ள இரண்டு நுழைவு வாயில்களில், ஒரு நுழைவுவாயில் (எண் 8 ஏ) ஆகியவை சி.ஐ.எஸ்.எப். போலீஸ் கட்டுப்பாட்டுக்குள்
வரும்.
இதற்காக நுழைவு வாயில் எண் 2–ல் இருந்து நுழைவு வாயில் எண் 8 வரை இரும்பு தடுப்புக்கள் அமைக்கப்பட்டுள்ளது. இந்த தடுப்புகளுக்கு இடையே பல நுழைவு வாயில்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த இரும்பு தடுப்புகள் வழியாக ஐகோர்ட்டுக்குள் வரும் நபர்களை உடல் சோதனை செய்வதற்கு 6 நுழைவு வாயில்கள் அமைக்கப்பட்டுள்ளன.
உடல் சோதனை
அதாவது வடக்கு மற்றும் தெற்கு நுழைவுவாயில்களில் தலா ஒரு உடல் சோதனை செய்யும் மையமும், சிறு வழக்குகளை விசாரிக்கும் நீதிமன்றம் வழியாக வரும் நபர்களை சோதனை செய்ய 2 உடல் சோதனை செய்யும் மையங்களும், சென்னை ஐகோர்ட்டு வக்கீல் சங்கம் கட்டிடத்தில் இருந்து, தரை தளம் மற்றும் முதல் தளம் வழியாக வருபவர்களை சோதனை செய்ய 2 உடல் சோதனை மையங்களும்
அமைக்கப்பட்டுள்ளன.
தெற்கு நுழைவு வாயிலை தவிர, பிற நுழைவு வாயில்கள் வழியாக வக்கீல்கள் ஐகோர்ட்டுக்குள் வரலாம். வழக்கு விசாரணைக்காக வரும் பொதுமக்கள், பார்வையாளர்கள் ஆகியோர் சிறு வழக்குகளை விசாரிக்கும் நீதிமன்றங்கள் வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள அலுவலகத்தில் முறையான நுழைவு சீட்டு பெற்று உள்ளே வரலாம்.
ஒத்துழைப்பு வேண்டும்
அதேபோல, வக்கீல்கள் தங்களது கார்களை ஏற்கனவே அறிவிக்கப்பட்ட இடத்தில் நிறுத்திக் கொள்ளலாம். ஆனால், மோட்டார் சைக்கிள்களை, ஐகோர்ட்டு வளாகத்தில் உள்ள புதுச்சேரி (பிளாக்) மாநில அரசு கட்டிடம் அருகே நிறுத்தவேண்டும்.
கோர்ட்டு ஊழியர்கள் தெற்கு நுழைவு வாயில் வழியாக உள்ளே வந்து, தங்களது கார் மற்றும் மோட்டார் சைக்கிள்களை, ஐகோர்ட்டு நிர்வாக அலுவலக (பிளாக்) கட்டிடம் அருகே
நிறுத்தவேண்டும்.
ஐகோர்ட்டின் அனைத்து நுழைவு வாயில்களிலும் சி.ஐ.எஸ்.எப். போலீசார் நிற்பார்கள். அவர்கள், ஐகோர்ட்டுக்குள் வரும் நபர்கள் அனைவரையும் உடல் சோதனை செய்த பின்னரே அனுமதிப்பார்கள். எனவே,
இந்த பாதுகாப்பு நடவடிக்கைக்கு அனைத்து தரப்பினரும்
ஒத்துழைப்பு
வழங்கவேண்டும் என்று கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.
இவ்வாறு தலைமை பதிவாளர் பொன்.கலையரசன்
கூறியுள்ளார்.
மலைப்பாதையில் போக்குவரத்து நெரிசல் திருப்பதி பக்தர்கள் கடும் அவதி
திருமலையில் பலத்த மழை பெய்து வருவதால் திருப்பதி மலைப்பாதையில் பாறைகளும், மரங்களும் சரிந்து சாலையில் விழுகின்றன. திருப்பதி 2–வது மலைப்பாதை தற்காலிகமாக மூடப்பட்டு உள்ளதால்
அடிவாரத்தில்
இருந்து 4 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள மோகாலிமிட்டா இடத்தில் திருமலையை நோக்கி வரும் அனைத்து வாகனங்களும் சுமார் 20 நிமிடம் நிறுத்தி வைக்கப்பட்டு இணைப்புச்சாலை வழியாக
திருமலைக்கு திருப்பி விடப்படுகின்றன. இதனால் குறித்த நேரத்தில் கோவிலுக்கு செல்ல முடியாமல் பக்தர்கள் கடும்
அவதிப்படுகின்றனர்.
ஒரே மலைப்பாதையில் அனைத்து வாகனங்களும் செல்வதால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. மலைப்பாதையை சீரமைக்கும் பணியை விரைவில் முடிக்க வேண்டும் என்று பக்தர்கள் கோரிக்கை
விடுத்துள்ளனர்.
மோகாலிமிட்டாவில் வாகனங்கள் நிறுத்தி வைக்கப்படுவதால் நீண்டதூரம் வாகனங்கள் அணிவகுத்து நிற்கின்றன.
14 November 2015
இரவிலிருந்து பெய்துவரும் கடும் மழை மின்சாரம் துண்டிப்பு !!!
சென்னையிலும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளிலும் வியாழக்கிழமை இரவிலிருந்து பெய்துவரும் கடும் மழையின் காரணமாக, நகரின் தாழ்வான பகுதிகள் நீரில் மூழ்கியுள்ளன.
பல இடங்களில் மின்சாரம் துண்டிக்கப்பட்டிருக்கிறது.
சென்னை நகரில் நேற்று இரவிலிருந்து மழை தொடர்ச்சியாக பெய்துவருகிறது. இதனால் சாலைகளில் மழை நீர் வெள்ளம்போல ஓடுவதால், போக்குவரத்து கடுமையாக
பாதிக்கப்பட்டு உள்ளது.
இரவு முழுவதும் பெய்த மழையின் காரணமாக, ரயில் பாதைகளின் கீழுள்ள பல சுரங்கப் பாதைகள் மழையில் மூழ்கியுள்ளன.
தமிழ்நாடு முழுவதும் பல மாவட்டங்களில் மழை பெய்துவருவதால், சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், திருவண்ணாமலை, திருநெல்வேலி, வேலூர், தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் பள்ளிக்கூடங்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டிருக்கிறது.
இதற்கிடையில், தெற்கு அந்தமான் கடல் பகுதியில் நிலை கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு நிலையானது மேற்கு நோக்கி நகர்ந்து தற்போது தென் கிழக்கு அந்தமான் கடல் பகுதியில் நிலை கொண்டிருப்பதால், தமிழ்நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் அடுத்த ஐந்து நாட்களுக்கு மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தின் வட மாவட்டங்களான சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களில் கனமழையோ, மிக கன மழையோ பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்திலேயே அதிக பட்சமாக காஞ்சிபுரத்தில் 34 செ.மீ. மழை பெய்துள்ளது. புழல், செங்குன்றம் ஆகிய பகுதிகளில் 21 சென்டிமீட்டர் மழையும் பெய்துள்ளது.
திருவள்ளூர் மாவட்டத்தில் கவரப் பாளையத்தில் உள்ள ஏரி நிரம்பி, உடைந்திருப்பதால் சென்னை – திருவள்ளூர் இடையிலான போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.
மதுராந்தகம் ஏரி நிரம்பி, அந்த ஏரி தற்போது திறந்துவிடப்பட்டுள்ளதால் சுற்றுப்புற பகுதிகளில் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டிருக்கிறது.
கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள பேச்சிப்பாறை அணையும் நிரம்பியுள்ளது.
இதற்கிடையில் மழையால் பாதிக்கப்பட்டிருந்த கடலூர் மாவட்டத்தில் ஒரு வாரத்திற்குப் பிறகு இன்று பள்ளிக்கூடங்கள்
திறக்கப்பட்டிருக்கின்றன.
12 November 2015
மது விற்பனை: ரூ.372 கோடி கடந்த ஆண்டை விட ரூ.68 கோடி அதிகம்!
தமிழகம் முழுவதும் 6 ஆயிரத்து 803 ‘டாஸ்மாக்’ மதுபான கடைகள் உள்ளன. மதுவிலக்கை வலியுறுத்தி ஒரு பக்கம் குரல்கள் எழுந்தாலும், ‘டாஸ்மாக்’ கடைகளில் வழக்கமான நாட்களில்
சராசரியாக ரூ.70 கோடி முதல் ரூ.80 கோடி வரைக்கும், சனி, ஞாயிற்றுக்கிழமை மற்றும் அரசு விடுமுறை நாட்களில் ரூ.90 கோடி முதல் ரூ.100 கோடி வரைக்கும் மதுபானங்கள் விற்பனையாகி வருவதாக கூறப்படுகிறது.
தீபாவளி, புத்தாண்டு, பொங்கல் போன்ற பண்டிகைகளின்போது ரேசன் கடைகள், சினிமா தியேட்டரில் வரிசையில் நிற்பது போல, ‘டாஸ்மாக்’ கடைகளில் மதுபிரியர்கள் மதுபானங்களை வாங்கி செல்வதை காண முடியும்.
இந்த ஆண்டு தீபாவளி பண்டிகையையொட்டி, கடந்த 8-ந் தேதி முதல் 10-ந் தேதி வரை 3 நாட்களில் டாஸ்மாக் கடைகளில் சுமார் ரூ.372 கோடி அளவுக்கு மது வகைகள் விற்பனையாகி உள்ளது.
இதுகுறித்து டாஸ்மாக் உயரதிகாரி ஒருவர் கூறியதாவது:-
கடந்த ஆண்டு தீபாவளி பண்டிகையின்போது ரூ.304 கோடிக்கு மதுபான வகைகள் விற்பனையாகின. இந்த ஆண்டு தீபாவளி பண்டிகையையொட்டி, கடந்த 8-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) ரூ.113 கோடி, 9-ந் தேதி(திங்கட்கிழமை) ரூ.108 கோடி, 10-ந் தேதி (தீபாவளி பண்டிகையன்று)ரூ.151 கோடி என மொத்தம் ரூ.372 கோடிக்கு மது வகைகள்
விற்பனையாகி உள்ளது.
கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் ரூ.68 கோடி விற்பனை அதிகமாக நடந்துள்ளது. வழக்கம்போல் பிராந்தி மதுவகைகள் அதிகம் விற்று தீர்ந்துள்ளது. மழையால் பீருக்கு மவுசு குறைந்து போனது. இதனால் கடந்த ஆண்டை விட பீர் விற்பனை 10 சதவீதம் சரிவடைந்துள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
‘டாஸ்மாக் மது கடைகளை போலவே ‘எலைட், தனியார் மதுபான பார்களிலும் மதுபிரியர்கள்
கூட்டம்அலைமோதியது.
11 November 2015
கிரிக்கெட் பேரவையின் தலைவர் பதவியிலிருந்து ஶ்ரீனிவாசன் நீக்கம்
சர்வதேச கிரிக்கெட் பேரவையின் தலைவர் பதவியில் இருந்து ஶ்ரீனிவாசன் அதிரடியாக நீக்கப்பட்டுள்ளார். இன்று மும்பையில் இடம்பெற்ற பொதுக்குழு கூட்டத்தில் இதற்கான திர்மானம் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டுச் சபையின் புதிய தலைவரான ஷஷாங் மனோகரால்
எடுக்கப்பட்டுள்ளது.
இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபையின் முன்னாள் தலைவரான ஶ்ரீனிவாசன், கடந்த ஜுன் மாதம் சர்வதேச கிரிக்கெட் பேரவையின் தலைவராக பதவியேற்றார். அடுத்த ஆண்டு ஜுன் மாதம்வரை அவரது பதவிக்காலம் உள்ள நிலையிலேயே இந்த தீர்மானம்
எடுக்கப்பட்டுள்ளது.
எனவே மீதமுள்ள பதவிக்காலத்தில் ஷஷாங் மனோகர் சர்வதேச கிரிக்கெட் பேரவையின் தலைவராக செயற்படுவார் என
தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஒருவேளை, ஷஷாங் மனோகரால் ஐ.சி.சி., தொடர்பான கூட்டங்களில் பங்கேற்க முடியாமல் போனால் அவருக்கு பதிலாக சரத் பவார் கலந்துகொள்வார்.
கொடுப்பதோ வெறும் ரூ.1.5 கோடி… பெப்சி சம்பாதிப்பதோ ரூ.1000 கோடி!’
தாமிரபரணியில் ஒரு வருடத்துக்கு 55 கோடி லிட்டர் தண்ணீர் எடுக்க உள்ள பெப்சி நிறுவனம், இதற்காக அரசுக்கு வெறும் 1.5 கோடி ரூபாய் செலுத்தப்போகிறது என்றும், ஆனால் பெப்சி சம்பாதிக்க போவது மட்டும் 1000 கோடி ரூபாய்க்கு மேல் என்றும் தமிழக ஆம் ஆத்மி கட்சி அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளது.
இது தொடர்பாக தமிழக ஆம் ஆத்மி கட்சி தலைவர் வசீகரன் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், ” கடல் நீரை நன்நீராக்கும் திட்டம் மூலம் ஒரு டிஎம்சி தண்ணீரை தயாரிக்க நமக்கு ஆகும் செலவு 150 கோடி ரூபாய். தமிழகத்தின் பாசனத்துக்கு மட்டும் நமக்கு கிட்டத்தட்ட
ஒரு வருடத்துக்கு
500 டிஎம்சி தண்ணீர் தேவை, மற்ற தேவைகளோடு சேர்த்து நமக்கு 600 டிஎம்சி தண்ணீர் தேவைப்படும். அதை கடல் நீர் திட்டம் மூலம் நாம் பெற 75000 கோடி ரூபாய் செலவாகும். அதற்கான ஆலைகள் அமைக்க நமக்கு கிட்டத்தட்ட ஏழரை லட்சம் கோடி செலவாகும்.
டாஸ்மாக்கின் ஒரு வருட வருமானம் 35000 கோடி. அந்த பணத்தை கொண்டு தமிழகத்தின் அனைத்து ஏரி, குளங்களையும் தூர்வாரி இருந்தால் இந்தியாவின் செழிப்பான மாநிலமாக தமிழ்நாடு வெறும் ஐந்தே வருடங்களில் மாறிவிடும். எவன் கேட்டான் உங்களை 50000 கோடி
செலவில் மெட்ரோ ரயில் திட்டம்? குடிக்க நீர் இல்லாமல் இங்கே பலர் செத்து மடிகிறார்கள், விவசாயிகள் தற்கொலை செய்து கொள்கிறார்கள். ஏழை மக்களின் உயிர் முக்கியமா… இல்லை உல்லாச மெட்ரோ
ரயில் முக்கியமா?
தாமிரபரணியில் பெப்சி ஒரு வருடத்துக்கு 55 கோடி லிட்டர் தண்ணீர் எடுக்க போகிறது. இந்த தண்ணீருக்காக பெப்சி, அரசுக்கு செலுத்த போவது வெறும் 1.5 கோடி ரூபாய். ஒரு லிட்டர் குடி தண்ணீர் 20 ரூபாய்க்கு விற்றால் அந்த கம்பெனி சம்பாதிக்க போவது மட்டும் 1000 கோடி ரூபாய்க்கு மேல். அடுத்த 99 ஆண்டுகளுக்கும் வெறும் 20 ரூபாய்க்கு ஒரு லிட்டர் தண்ணீரை விற்றால் கூட அந்த கம்பெனி சம்பாதிக்க போவது மட்டும்
ஒரு லட்சம் கோடி.
அதே சமயம் கடல் நீரை குடிநீராக்கும் திட்டம் மூலம் 55 கோடி லிட்டர் தண்ணீரை தயாரிக்க அரசுக்கு ஆகும் செலவு மட்டும் 3 கோடி. மூன்று கோடி ரூபாய் நீரை வெறும் 1.5 கோடிக்கு விற்கும் இந்த ஏமாற்று அரசியல்வாதிகளுக்கு எப்படிப்பட்ட தண்டனை வழங்கப்பட
வேண்டும்?
நாம் குடிக்க புதிது புதிதாக கடல் நீர் குடிநீர் ஆக்கும் திட்டம். ஆனால் பெப்சிக்கு சுவையான தாமிரபரணி தண்ணீர். ஏன் பெப்சியை ஒரு கடல் நீரை குடிநீராக்கும் ஆலையை நிறுவ சொல்லி, அதிலிருந்து அவர்களுக்கு தேவையான தண்ணீரை எடுத்துக்கொள்ள சொல்லி
இருக்கலாமே!
ஜெயலலிதாவுக்குதான் என்ன ஒரு தாராள மனம். அரசிடம் ஒரு லிட்டர் தண்ணீரை வெறும் 3 பைசாவுக்கு வாங்கி நம் மக்களுக்கு 20 ரூபாய்க்கு விற்கிறது அந்த கம்பெனி. இப்படி தனியார் கொள்ளைக்கு உடன்படும் அரசியல்வாதிகளை விரட்ட வேண்டும். தேசத் துரோக சட்டத்தின்
கீழ் கைது
செய்யப்பட வேண்டியது டாஸ்மாக்கை எதிர்த்து பாடல் பாடிய கோவனையா அல்லது இப்படி சொந்த நாட்டை கூறு போட்டு விற்கும் துரோகிகளையா?” என்று தெரிவித்துள்ளார்
07 November 2015
இலங்கையர் ஒருவர் 85ஆயிரம் டொலர்களுடன் கைது!!!
மும்பையின் அன்ஹெரி விமானநிலையத்தில் வைத்து இலங்கையர் ஒருவர் 85ஆயிரம் டொலர்கள் சகிதம் கைதுசெ
ய்யப்பட்டுள்ளார்.
இந்த சம்பவம் நேற்று இடம்பெற்றுள்ளது கொழும்புக்கு செல்ல முயற்சித்த போதே இவர் கைதுசெய்யப்பட்டார்.
விமானம் புறப்படும் நேரத்தில் அந்த விமானத்தில் ஏறுவதற்கு குறித்த மொஹமட் சாஜஹான் என்ற இந்த இலங்கையர் அவசரப்பட்டமையை அடுத்து சந்தேகம் கொண்டு அதிகாரிகள் அவரை
சோதனையிட்டுள்ளனர்.
இதன்போது அதிகாரிகளுக்கு ஒத்துழைக்க மறுத்த அவர் பின்னர் பலவந்தமாக சோதனைக்கு உள்ளாக்கப்பட்டார்.
அத்துடன் விசாரணையின் போது தாம் நாணய கடத்தலில் ஈடுபடும் ஒருவர் என்பதை ஏற்றுக்கொண்ட ஒருவர் சில நாட்களுக்கு முன்னர் சிங்கப்பூரில் இருந்து வெளிநாட்டு நாணயங்களுடன் இலங்கை சென்ற தாம், அந்த நாணயங்களை இந்திய ரூபாய்கள் மாற்றி சிறந்த லாபத்தை பெற்றுக்கொள்ளவே மும்பாய் வந்ததாக
தெரிவித்தார்.
எனினும் உரிய ஆவணங்கள் இல்லாமை காரணமாக தம்மால் நாணயங்களை மாற்றமுடியவில்லை என்று அவர் குறிப்பிட்டுள்ளார்
இந்தநிலையில் தடுத்து வைக்கப்பட்ட அவர் பின்னர் விடுதலை செய்யப்பட்டார்
04 November 2015
நெல்லையில் 120 அடியில் கட்-அவுட். பிரம்மாண்டத்தின் உச்சத்தில் வேதாளம்.?
அஜீத் நடித்த 'வேதாளம்' திரைப்படம் வரும் 10ஆம் தேதி உலகம் முழுவதும் பிரமாண்டமாக ரிலீஸாகவுள்ள நிலையில், இந்த படத்தை அதைவிட பிரமாண்டமாக வரவேற்க அஜீத் ரசிகர்கள் தயாராகி
வருகின்றனர்.
'வேதாளம்' திரையிடப்படும் திரையரங்குகளில் பெரிய பெரிய கட்-அவுட், பிளக்ஸ் பேனர்கள் ஆகியவைகளை தற்போது ரசிகர்கள் வைத்து வருகின்றனர். சென்னை ராக்கி திரையரங்கில் நான்கு தியேட்டர்களில் ஓடும் படங்களின் பேனர்கள் வைக்கும் மிகப்பெரிய இடத்தில்
'வேதாளம்' பேனர் மட்டுமே வைக்கப்பட்டுள்ளது. ராக்கி திரையரங்க வரலாற்றில் ஒரே படத்தின் பேனர் முழு இடத்தையும் ஆக்கிரமித்துள்ளது இதுவே முதல்முறை
அதேபோல் திருநெல்வேலியில் இதுவரை இல்லாத அளவில் 120 அடி உயர கட்-அவுட் தயாராகி வருகிறது. அரசியல் கட்சிகளுக்கு இணையாக ஒரு நடிகருக்கு மிகப்பெரிய கட்-அவுட் திருநெல்வேலியில் வைக்கபடுவது இதுவே முதல்முறை என்பது குறிப்பிடத்தக்கது.;
02 November 2015
மாடல் அழகிக்கு பத்வா பாகிஸ்தான் கிரிக்கெட் வீரருடன் பாலியல் உறவு
பிரபல மாடல் அழகி அர்ஷி கான் பாகிஸ்தான் கிரிக்கெட் வீரரான சாகித் அப்ரிடியுடன் பாலியல் உறவு வைத்துக் கொண்டதாக அவர் தனது டுவிட்டரில் தெரிவித்திருந்தார்.
நான் அப்ரிடியுடன் பாலியல் உறவு வைத்துக் கொண்டேன்! ஒருவருடன் உறவு கொள்ள நான் இந்திய மீடியாவிடம் அனுமதி பெற வேண்டுமோ? இது என் தனிப்பட்ட விஷயம். என்னைப் பொறுத்தவரை இது காதல்" என்று தெரிவித்து இருந்தார்.
இதற்கு பாகிஸ்தான் மதவாதிகள் அவருக்கு பத்வா விதித்து இருந்தனர். இது குறித்து கடந்த சனிக்கிழமை தனது டுவிட்டரில் கருத்து தெரிவித்து உள்ள அர்ஷி
பாகிஸ்தான் மிகவும் ஏமாற்றம் அளிக்கிறது. எனக்கு பத்வா அளித்ததற்கு யாரும் எனக்கு ஆதரவு அளிக்கவில்லை. பாகிஸ்தான் விழித்தெழ வேண்டும்.
பத்வாக்கு தனது பதில் குறித்து ஒரு வீடியோ அதில் வெளியிட்டு
உள்ளார்.
நான் பயப்படவில்லை . எனக்கு சாகித் அப்ரிடி மீது காதல் இருந்தது என கூறி உள்ளார்.மேலும் அவர் டுவிட்டர் அழைப்புகள் மூலம் தனக்கு அச்சுறுத்தல் வருவதாக கூறி உள்ளார்.
யாருக்காவது என்னை கொலை செய்ய வேண்டும் என்றாலோ அல்லது என்மீது மை ஊற்ற வேண்டும் என்றாலோ நான் அதை வரவேற்கிறேன் என டுவிட்டரில் கூறி உள்ளார்.
Subscribe to:
Posts (Atom)