12 November 2019
பொலிஸ் நிலையத்திற்கு மனைவியின் தலையை வெட்டி கொண்டு வந்த கணவன்
பெண்ணின் தலையை அரிவாளால் வெட்டி கணவன் கொலை செய்த பயங்கர சம்பவம் அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.குறித்த சம்பவம் இந்தியா உத்திரப்பிரதேச மாநிலத்தில் இடம்பெற்றுள்ளதுஇது தொடர்பில் மேலும் அறியமுடிவதாவது;நரேஷ் என்பவக்கு 17 வருடங்களுக்கு முன்னர் சாந்தி என்ற பெண்ணுடன் திருமணம்
நடைபெற்றுள்ளது.
இத்தம்பதியினருக்கு 3 மகள்களும்இ ஒரு மகனும் உள்ளனர். நரேஷுக்கு மதுப்பழக்கம் இருந்துள்ளது. இதனால் கணவன்
மனைவி இடையே எப்பொழுதும் தகராறுகள் ஏற்பட்டு வந்துள்ளன.நரேஷ் குடித்துக்கொண்டிருந்த போது அவருடைய
மனைவி தடுத்து நிறுத்த
முயற்சி செய்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த நரேஷ் சாந்தியின் தலையை அரிவாளால் வெட்டியுள்ளார். தலையில்லாமல் முண்டமாக இருந்த சடலத்தை நரேஷ் வேறொரு அறையில் வைத்து பூட்டியுள்ளார். சாந்தியின் தலையை
ஒரு டப்பாவுக்குள் மூடி வைத்துள்ளார். மறுநாள் காலையில் குழந்தைகள் தாயின்றி கத்தியுள்ளனர்.மூத்த மகள் சென்று
எட்டிப்பார்த்தபோது, தாய் தலையில்லாமல் கிடந்ததை கண்டு அதிர்ச்சியுற்றாள். உறவினர்கள் வருவதற்குள்
சாந்தியின் தலையுடன் நரேஷ் காவல் நிலையத்தை சென்றடைந்தார்.நரேஷை
கண்டு அதிர்ந்த பொலிஸார் அவர் மீது வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்தனர். முதற்கட்ட விசாரணையில் சம்பவத்தின் போது மது அருந்தவில்லை என தெரியவந்துள்ளது. மேலதிக விசாரணைகளை பொலிஸார்
மேற்கொண்டு வருகின்றனர்.
09 November 2019
பெற்றோர்களுக்கு ஓர் அபாய எச்சரிக்கை.பரிதாபமாக பலியான குழந்தை
தொலைக்காட்சி விழுந்ததில் குழந்தை பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.இந்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரிவிக்கப்படுவதாவது;ஆந்திரப் பிரதேச மாநிலம் சிறீகாகுளம் மாவட்டம், காசிபுகா நகரில் உள்ள நியூ காலணியில் வசித்து வரும் வரலக்ஷ்மி என்பவர் நேற்று தனது 11 மாத குழந்தை
மோகாரினிக்கு
உணவு கொடுத்துக் கொண்டிருந்தார்.உணவை சாப்பிட மறுத்த குழந்தை அங்கும் இங்குமாக ஓடியது. அப்போது வீட்டின் உள்அறையில் மேஜை மீது வைக்கப்பட்டிருந்த தொலைக்காட்சியின் வயரை தவறுதலாக இழுத்ததில் அது குழந்தையின் மீது விழுந்தது.
இதில், பலத்த காயமடைந்த குழந்தையை பெற்றோர்கள் உடனடியாக அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு
சென்றனர். அங்கு சிகிச்சை பலனின்றி குழந்தை பரிதாபமாக இறந்தது.இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை
ஏற்படுத்தியுள்ளதுடன், குழந்தைகளிருக்கும் வீடுகளில் இவ்வாறு அலட்சியமாக பொருட்களை வைக்காமல், அவதானமாகச் செயற்படுமாறு சமூக ஆர்வலர்கள் எச்சரித்துள்ளமை
குறிப்பிடத்தக்கது.
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>
05 November 2019
புறாவை துரத்திச் சென்று 100 அடிக் கிணற்றிற்குள் வீழ்ந்த சிறுவன்
புறாவை துரத்திச் சென்று 10-ம் வகுப்பு மாணவன் 100 அடி ஆழக் கிணற்றில் விழுந்த சம்பவம் ராசிபுரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.தமிழகம் நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தை அடுத்த புதுப்பாளையம் பகுதியை சேர்ந்தவர் பெருமாள். கூலித் தொழில் செய்து வரும் இவருக்கு கார்த்திக் என்ற மகன் உள்ளார். இவர் அதே பகுதில் உள்ள பள்ளி ஒன்றில் 10ம் வகுப்பு படித்து வருகிறார். நேற்று விடுமுறை என்பதால், தனது நண்பர்களுடன் விளையாடிக் கொண்டிருந்திருக்கிறார். அப்போது புறா ஒன்று அந்த
பகுதியில் வந்து அமர்ந்துள்ளது.
அப்போது அதனை பிடிக்க கார்த்திக் முயற்சிக்க அது பறந்து சென்றுள்ளது. இருப்பினும் அதனை விடக் கூடாது எப்படியாவது பிடித்து விட வேண்டும் என்ற ஆர்வத்தில், புறாவை கார்த்திக் துரத்தியுள்ளார். தனது முழுக் கவனமும் மேலே சென்று கொண்டிருந்த புறாவிடம் இருக்க, கீழே இருந்த கிணற்றை கவனிக்கத் தவறிய கார்த்திக் எதிர்பாராத விதமாக
கிணற்றுக்குள் விழுந்தார்.
அது 100 அடி ஆழக் கிணறு என்பதனால் பதறி போன அவரது நண்பர்கள் உடனடியாக வீட்டிற்கும், தீ அணைப்பு துறையினருக்கும் தகவல் தெரிவித்தனர்.இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த தீ அணைப்பு துறையினர், ஒரு மணி நேர கடுமையான போராட்டத்திற்கு பிறகு சிறுவனை உயிருடன் மீட்டனர். புறாவை துரத்திச் சென்று சிறுவன் 100 அடி ஆழக் கிணற்றுக்குள் விழுந்த சம்பவம் அந்தப் பகுதியில்
பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
04 November 2019
கேரளவில் பிறப்புறுப்பில் உயிர்போகும் வலி மருத்துவரை நாடிய இளைஞன்
இந்தியாவின் கேரள மாநிலத்தில் இளைஞர் ஒருவரின் பிறப்புறுப்பில் இருந்து அட்டைப் புழு ஒன்றை மருத்துவர்கள் அப்புறப்படுத்திய சம்பவம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.கேரளாவின் ஆலப்புழா பகுதியில் இளைஞர் ஒருவருக்கு கடந்த சில நாட்களாக
பிறப்புறுப்பில் வலி ஏற்பட்டு வந்துள்ளது.வலியால் அந்த இளைஞர் துடித்துப் போயுள்ளார். ஒரு கட்டத்தில் தம்மால் இனி பொறுக்க முடியாது என கருதிய அவர் மருத்துவரை நாடியுள்ளார்.மருத்துவர் மேற்கொண்ட பரிசோதனையில் அந்த இளைஞருக்கு அதிர்ச்சி காத்திருந்தது.
அவரது பிறப்புறுப்பில் மலைப் பிரதேசங்களில் மட்டும் காணப்படும் ஒருவகை அட்டைப் புழு நுழைந்துள்ளது மருத்துவர்களால் கண்டறிந்துள்ளனர்.சமீபத்தில் அவர் குடியிருப்புக்கு அருகாமையில் உள்ள குளம் ஒன்றில் குளிக்க சென்றுள்ளார். அந்த
குளத்தில் வைத்து நூலிழை அளவுக்கு மட்டுமே இருந்த அந்த அட்டை அந்த இளைஞரின் பிறப்புறுப்பில் புகுந்துள்ளது.
அது தற்போது ரத்தம் குடித்து 7 செ.மீ அளவுக்கு
வளர்ந்துள்ளது. இதனையடுத்து மருத்துவர்கள் உரிய கருவிகளை பயன்படுத்தி அந்த அட்டையை வெளியே எடுத்துள்ளனர்.தற்போது தீவிர சிகிச்சை அளித்து இளைஞரை குணப்படுத்தியுள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
02 November 2019
சிறுவன் சுர்ஜித்தின் நினைவாக அபாயநிலையை உணர்த்தும் கல்வெட்டு
ஆழ்துளை கிணற்றில் விழுந்து உயிரிழந்த சிறுவன் சுர்ஜித்தின் நினைவாக கல்வெட்டொன்று அமைக்கப்பட்டுள்ளது.திருவண்ணாமலை மாவட்டத்தின் தென் அரசம்பட்டு கிராமத்தில் இயங்கி வரும் அரசு ஆரம்பப் பாடசாலையின் அமைக்கப்பட்டிருந்த ஆழ்துளைக் கிணறு
ஒன்று மழை நீர் சேமிப்பாக மாற்றப்பட்டது.அத்துடன் அங்கு சமீபத்தில் ஆழ்துளைக் கிணற்றில் விழுந்து உயிரிழந்த குழந்தை சுர்ஜித்திற்கு ஒரு நினைவு அஞ்சலியும் நடத்தப்பட்டதுடன் சுர்ஜித்தின் நினைவாக கல்வெட்டொன்றும் திறக்கப்பட்டது. இதனை
திருவண்ணாமலை
மாவட்ட ஆட்சியர் கந்தசாமி திறந்து வைத்தார்.இந்தக் கல்வெட்டில், நான் சுர்ஜித் பேசுகிறேன். நான் திருச்சி மாவட்டம் நடுக்காட்டுப்பட்டி கிராமத்தில், எனது தாயின் கருவறையில் பிறந்து இரண்டு
வயதில் ஆழ்துளைக் கிணற்றின்
கறுப்பறையில் என் வாழ்க்கை முடிந்துவிட்டது.இறப்பு அனைவருக்கும் உண்டு என்றாலும் என்னை போல் 80 மணி நேரம், மரணத்துடன் போராடிய அந்த தருணம் மிகவும் கொடுமையானது.
நான் இந்த உலகத்தில் வாழ
முடியாமல் போனாலும், இனி வரும் காலங்களில் ஆழ்துளைக் கிணறுகளை திறந்து வைக்காமல் என்னைபோல் உள்ள குழந்தைகளின் உயிரை பாதுகாக்கவும். என் இறப்பு உங்களுக்கு ஒரு பாடமாக இருக்கட்டும் என்ற வாசகம் பொறிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Subscribe to:
Posts (Atom)