This is default featured slide 1 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.This theme is Bloggerized by Lasantha Bandara - Premiumbloggertemplates.com.

This is default featured slide 2 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.This theme is Bloggerized by Lasantha Bandara - Premiumbloggertemplates.com.

This is default featured slide 3 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.This theme is Bloggerized by Lasantha Bandara - Premiumbloggertemplates.com.

This is default featured slide 4 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.This theme is Bloggerized by Lasantha Bandara - Premiumbloggertemplates.com.

This is default featured slide 5 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.This theme is Bloggerized by Lasantha Bandara - Premiumbloggertemplates.com.

Search This Blog n

28 April 2016

பாஸ்போர்ட் 24 மணி நேரத்தில் வீட்டிற்க்கு டெலிவரி

பாஸ்போர்ட் கேட்டு விண்ணப்பித்த 24 மணி நேரத்தில் வீட்டில் டெலிவரி செய்யும் அளவுக்கு பாஸ்போர்ட் துறையின் சேவை பெரும் முன்னேற்றம் அடைந்துள்ளது.
திருவாரூர் மாவட்டம், மன்னார்குடி அருகேயுள்ள கீழத் திருப்பாலக்குடி கிராமத்தைச் சேர்ந்த 6 வயது சிறுவன் கவின். இவனது பெற்றோருக்கு ஏற் கெனவே பாஸ்போர்ட் உள்ளது. மகனுக்கும் பாஸ்போர்ட் எடுக்க முடிவு செய்தனர். ஆன்லைன் மூலம் விண்ணப்பித்தனர். விண்ணப்பத் துடன் சிறுவனின் பிறப்புச் சான்றி தழ், பெற்றோரின் பாஸ்போர்ட் நகல் போன்ற ஆவணங்களை பதிவேற்றம் செய்தனர்.
தஞ்சாவூரில் உள்ள பாஸ்போர்ட் சேவை மையத்தில் கடந்த ஏப்ரல் 15-ம் தேதி வெள்ளிக்கிழமை காலை 9.30 மணிக்கு நேர்காணலுக்காக நேரம் கிடைத்தது. சிறுவனும், பெற்றோரும் 15-ம் தேதி காலை 10 மணிக்கு பாஸ்போர்ட் சேவை மையத்துக்குள் நுழைந்தனர். அசல் ஆவணங்கள் சரிபார்த்தல்,
 சிறுவனின் 
கைரேகை பதிவு, புகைப்படம் எடுத்தல், அதிகாரிக ளுடன் நேர்காணல் என அடுத்தடுத்த 4 கவுன்ட்டர்களுக்குச் சென்றனர். எல்லா நடைமுறைகளும் 30 நிமிடங்களிலேயே முடிந்துவிட்டன.
காலை 10.30 மணிக்கு சேவை மையத்தை விட்டு வெளியே வந்தனர். ‘பாஸ்போர்ட் சேவை மையத்துக்கு வருகை தந்தமைக் காக நன்றி’ என்ற குறுந்தகவல் ஏற்கெனவே பதிவு செய்யப்பட்டி ருந்த பெற்றோரின் செல்போன் எண்ணுக்கு காலை 10.31 மணிக்கு வந்தது. ‘காவல் துறை விசாரணை தேவையில்லை என்ற அடிப்படை யில் உங்கள் விண்ணப்பம் ஏற்றுக் கொள்ளப்பட்டது’ என்ற குறுந் தகவல் காலை 
10.35 மணிக்கு வந்தது.
‘பாஸ்போர்ட் அச்சிடுவதற்கான நடவடிக்கைகள் தொடங்கிவிட்டன’ என்ற மற்றொரு குறுந்தகவல் காலை 11.02 மணிக்கு வந்தது. ‘பாஸ்போர்ட் அச்சிடும் பணி முடிந்துவிட்டது’ என்ற குறுந்தகவல் மதியம் 1.30 மணிக்கு கிடைத்தது. அதாவது பாஸ்போர்ட் சேவை மையத்துக்கு சென்று விண்ணப்பித்துவிட்டு, வீடு வந்து சேருவதற்குள் பாஸ்போர்ட் 
அச்சிடப்பட்டுவிட்டது.
‘அடுத்து விரைவு தபால் சேவை மூலம் உங்கள் பாஸ்போர்ட் அனுப்பப்பட்டு விட்டது’ என்ற குறுந்தகவல் மாலை 6.30 மணிக்கு கிடைத்தது. மறுநாள் காலை சுமார் 11 மணிக்கு வீட்டில் பாஸ்போர்ட் டெலிவரி செய்யப்பட்டுவிட்டது.
விண்ணப்பித்த 24 மணி நேரத் தில் வீட்டிலேயே பாஸ்போர்ட் டெலிவரி செய்யப்பட்ட இந்த நிகழ்வானது சிறுவன் கவின் குடும்பத்தாரை மட்டுமின்றி, இதனை அறிந்த அந்த கிராமத்தினர் அனைவரையும் பெரும் வியப்பில் ஆழ்த்தியது. பாஸ்போர்ட்டுக்கு விண்ணப்பித்து மாதக்கணக்கில் காத்திருந்த காலம் மாறி, 24 மணி நேரத்தில் வீட்டுக்கே பாஸ்போர்ட் கிடைக்கும் அளவுக்கு ஏற்பட்டுள்ள இந்த முன்னேற்றமே அவர்களது வியப்புக்கு 
காரணம்.
இந்த முன்னேற்றம் எவ்வாறு சாத்தியமானது என்பது குறித்து திருச்சி மண்டல பாஸ்போர்ட் அதிகாரி எஸ்.லிங்கசாமி கூறியதாவது:
கணினிமயம்
பாஸ்போர்ட் அலுவலக செயல் பாடுகள் அனைத்தும் 100 சதவீதம் கணினிமயமாக்கப்பட்டதுதான் விரைவான சேவைக்கான முதல் காரணம். இதன் காரணமாக நிலுவையில் உள்ள விண்ணப்பங்கள் பெருமளவில் குறைக்கப்பட்டுவிட்டன. இதனால் விண்ணப்பங்கள் ஏற்கப்பட்டு, காவல் துறை விசாரணை அறிக்கையும் கிடைக்கப் பெற்றால் உடனே பாஸ்போர்ட் விநியோகம் செய்ய முடியும் என்ற நிலை தற்போது 
ஏற்பட்டுள்ளது.
பிறப்புச் சான்று, முகவரிச் சான்று போன்ற அசல் ஆவணங்கள் எவ்வித வில்லங்கமும் இன்றி மிகச் சரியாக இருந்தால், பாஸ்போர்ட் சேவை மையத்துக்கு அழைக்கப்படும் அதே தினத்தில் அவர்கள் விண்ணப்பம் ஏற்றுக்கொள்ளப்படும். காவல் துறை விசாரணை தேவையில்லாத விண்ணப்பங்களுக்கு அன்றைய தினமே பாஸ்போர்ட் 
அச்சிடப்பட்டு, 
அடுத்த நாளோ அல்லது அதற்கு மறுநாளோ விண்ணப்பதாரருக்கு பாஸ்போர்ட் கிடைத்துவிடும். காவல் துறை விசாரணை தேவை எனில், பாஸ்போர்ட் விண்ணப்பம் ஏற்கப்படும் அதே வினாடியில் 
சம்பந்தப்பட்ட 
மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர் அலுவலகத்துக்கு விண்ணப்பதாரர் பற்றிய தகவல்கள் ஆன்லைன் மூலம் சென்றுவிடும். அங்கிருந்து காவல் நிலையத்துக்கு தகவல்கள் அனுப்பப்பட்டு, காவல் துறையினர் விண்ணப்பதாரரின் இருப்பிடத்துக்கு சென்று விசாரணை செய்து, அறிக்கை அனுப்புவார்கள்.21 நாட்கள்
காவல் துறையினரின் இந்த நடைமுறைகள் முடிய அதிக பட்சம் 21 நாட்கள் ஆகும். காவல் துறை அறிக்கை எங்களுக்கு கிடைத் தவுடன், அடுத்த ஓரிரு நாட்களில் பாஸ்போர்ட் அச்சிடப்பட்டு, விண்ணப்பதாரருக்கு 
கிடைத்து விடும்.
ஆக, பாஸ்போர்ட் சேவை மையத்துக்கு செல்லும்போது தேவையான அனைத்து அசல் ஆவணங்களையும் மிகச் சரியாக விண்ணப்பதாரர்கள் சமர்ப்பித்தால், எங்களால் மிக விரைவில் பாஸ்போர்ட் விநியோகம் செய்ய முடியும். திருச்சி மண்டலத்தில் கடந்த மார்ச் மாதத்தில் மட்டும் 19 ஆயிரத்து 832 பேர் பாஸ்போர்ட் கேட்டு விண்ணப்பித்தனர். அவர் களில் 18 ஆயிரத்து 256 பேருக்கு பாஸ்போர்ட் விநியோகம் 
செய்யப் பட்டுவிட்டது.
சாதாரண முறையிலேயே பாஸ் போர்ட் மிக விரைவாக கிடைத்து விடுவதால், தத்கால் திட்டத்தில் விண்ணப்பிப்போரின் எண்ணிக்கை மிகவும் குறைந்துவிட்டது.
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>

23 April 2016

மணமகள் கழுத்தில் சினிமா பாணியில் தாலி கட்டிய மணமகனால் பரபரப்பு!

நெல்லூர் மாவட்டத்தில் போலீஸ் விசாரணைக்கு அழைத்து செல்ல முயன்ற போது தப்பி ஓடிய மனமகன் சினிமா பாணியில் ஓடி சென்று மணமகள் கழுத்தில் தாலி கட்டியதால் அங்கு பரபரப்பு நிலவியது.
திருப்பதி அருகே உள்ள நெல்லூர் மாவட்டம் ஒட்டி பல்லி கிராமத்தை சேர்ந்தவர் ஜனார்தனன் இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த சுமலதா என்ற பெண்ணுக்கும் திருப்பதில் திருமணம் நடைபெற 
இருந்தது.
இந்நிலையில் ஜனார்தனை கைது செய்ய போலீசார் திருமண மண்டபத்திற்கு வந்தனர். ஜனார்தனன் பத்மா என்ற பெண்ணை காதலித்து ஏமாற்றியதாக அவரை கைது செய்ய போலீசார் முயன்றனர்.
ஆனால் மணமகனை விசாரணைக்கு அனுப்ப திருமண வீட்டார் மறுத்தனர். இதனால் போலீசாருக்கும் திருமண வீட்டாருக்கும் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது திடீரென போலீசாரிடம் தப்பி ஓடிய மணமகன் திருமண மண்டபத்திற்குள் நுழைந்து மணமகள் சுமலதா கழுத்தில்
 தாலி கட்டினார்.
பின்னர் இது குறித்து விளக்கம் அளித்த ஜனார்தனன், பத்மா என்ற பெண்ணை தாம் காதலிக்க வில்லை. தன் மீது வீண் பழி போடப்பட்டுள்ளதாக குற்றம் சாட்டினார்.
இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி 
வருகின்றனர்.
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>



16 April 2016

மாணவர் செல்போனில் படம் எடுத்தவர் ரெயில் மோதி பலி?

.உத்தரபிரதேச மாநிலம் ஷாரன்பூர் பகுதியை சேர்ந்தவர் கார்த்திக் கக்கர் (வயது16). இவர் அங்குள்ள ரெயின்போ பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வந்தார். நேற்று காலை கார்த்திக் கக்கர் தனது நண்பர்கள் 3 பேருடன் சைக்கிளில் டெல்லி சாலையில் உள்ள சுன்காதி ரெயில்வே கேட் 
அருகே சென்றார்.
பின்னர் மாணவர் கார்த்திக் கக்கர் அந்த இடத்தில் நின்று கொண்டு செல்போனில் ‘செல்பி’ படம் எடுத்துக்கொண்டிருந்தார்.
அப்போது ஹரித்துவார்-அஜ்மீர் செல்லும்
 எக்ஸ்பிரஸ் ரெயில்
 கண்இமைக்கும் நேரத்தில் மாணவர் கார்த்திக் கக்கர் மீது பயங்கரமாக மோதியது. இதில் 500 மீட்டர் தூரத்துக்கு ரெயில் மாணவரை இழுத்து சென்றது. இதில் படுகாயம் அடைந்த மாணவர் கார்த்திக் கக்கர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>



02 April 2016

தோல்வியை தாங்க முடியாமல் உயிரை மாய்த்துக் கொண்ட பி.டெக் மாணவி!

டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியின் அரையிறுதி ஆட்டத்தில்,  மேற்கிந்திய தீவு அணியிடம் இந்திய அணி தழுவிய தோல்வியை தாங்க முடியாமல் என்ஜினீயரிங் மாணவி ஒருவர் தற்கொலை செய்து கொண்டுள்ள சம்பவம் மத்தியபிரதேசத்தில் நிகழ்ந்துள்ளது.
மும்பையில் நேற்று முன்தினம்  நடைபெற்ற டி20 உலக கோப்பை அரையிறுதி போட்டியில்,  மேற்கிந்திய தீவு அணிக்கு எதிரான போட்டியில் இந்திய அணி 192 ரன்கள் எடுத்தது. இந்த ரன் குவிப்பால் இந்திய அணி வெற்றி பெறும் என்று ரசிகர்கள் நினைத்திருந்த நிலையில், மேற்கிந்திய தீவு அணி அதிரடியாக விளையாடி வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்கு
 முன்னேறியது.
இந்நிலையில், மத்தியபிரதேச மாநிலத்தின் குவாலியர்நகரில் உள்ள என்ஜினீயரிங் கல்லூரியில் பிடெக் படித்து வந்த மாணவி ஒருவர்,  இந்திய அணியின் தோல்வியை தாங்கிக் கொள்ள முடியாமல் மனவேதனையில் தற்கொலை செய்துகொண்டதாக தகவல் 
வெளியாகியுள்ளது.
தனது குடும்பத்தினரிடம் இந்தியா கண்டிப்பாக ஜெயிக்கும் என்று கூறி வந்த அந்த மாணவி,  இந்தியாவின் தோல்வியால் கடும் அதிர்ச்சியடைந்துள்ளார். மனவேதனையில் இருந்த அந்த மாணவி,  தனது துப்பட்டாவால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக தகவல்கள்
 வெளியாகியுள்ளன.
இது குறித்து மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ஹரிநாராயணசாரி மிஸ்ரா கூறுகையில்,  "அந்த பெண் தற்கொலை செய்து கொண்டது உண்மைதான். ஆனால், அவர் இந்திய அணி தோல்வியால் தற்கொலை செய்து கொண்டாரா என்பது குறித்து விசாரணை நடத்தி வருகிறோம்" என்று தெரிவித்துள்ளார். 
தற்கொலை செய்து கொண்ட மாணவியின் தந்தை மாநில கலால்துறையிலும், தாயார் ஆசிரியராகவும் பணியாற்றி 
வருகிறார்கள்.
இங்குஅழுத்தவும் நவற்கிரி.கொம் செய்திகள் >>>