Search This Blog n

02 April 2016

தோல்வியை தாங்க முடியாமல் உயிரை மாய்த்துக் கொண்ட பி.டெக் மாணவி!

டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியின் அரையிறுதி ஆட்டத்தில்,  மேற்கிந்திய தீவு அணியிடம் இந்திய அணி தழுவிய தோல்வியை தாங்க முடியாமல் என்ஜினீயரிங் மாணவி ஒருவர் தற்கொலை செய்து கொண்டுள்ள சம்பவம் மத்தியபிரதேசத்தில் நிகழ்ந்துள்ளது.
மும்பையில் நேற்று முன்தினம்  நடைபெற்ற டி20 உலக கோப்பை அரையிறுதி போட்டியில்,  மேற்கிந்திய தீவு அணிக்கு எதிரான போட்டியில் இந்திய அணி 192 ரன்கள் எடுத்தது. இந்த ரன் குவிப்பால் இந்திய அணி வெற்றி பெறும் என்று ரசிகர்கள் நினைத்திருந்த நிலையில், மேற்கிந்திய தீவு அணி அதிரடியாக விளையாடி வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்கு
 முன்னேறியது.
இந்நிலையில், மத்தியபிரதேச மாநிலத்தின் குவாலியர்நகரில் உள்ள என்ஜினீயரிங் கல்லூரியில் பிடெக் படித்து வந்த மாணவி ஒருவர்,  இந்திய அணியின் தோல்வியை தாங்கிக் கொள்ள முடியாமல் மனவேதனையில் தற்கொலை செய்துகொண்டதாக தகவல் 
வெளியாகியுள்ளது.
தனது குடும்பத்தினரிடம் இந்தியா கண்டிப்பாக ஜெயிக்கும் என்று கூறி வந்த அந்த மாணவி,  இந்தியாவின் தோல்வியால் கடும் அதிர்ச்சியடைந்துள்ளார். மனவேதனையில் இருந்த அந்த மாணவி,  தனது துப்பட்டாவால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக தகவல்கள்
 வெளியாகியுள்ளன.
இது குறித்து மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ஹரிநாராயணசாரி மிஸ்ரா கூறுகையில்,  "அந்த பெண் தற்கொலை செய்து கொண்டது உண்மைதான். ஆனால், அவர் இந்திய அணி தோல்வியால் தற்கொலை செய்து கொண்டாரா என்பது குறித்து விசாரணை நடத்தி வருகிறோம்" என்று தெரிவித்துள்ளார். 
தற்கொலை செய்து கொண்ட மாணவியின் தந்தை மாநில கலால்துறையிலும், தாயார் ஆசிரியராகவும் பணியாற்றி 
வருகிறார்கள்.
இங்குஅழுத்தவும் நவற்கிரி.கொம் செய்திகள் >>>



0 கருத்துகள்:

Post a Comment