Search This Blog n

23 April 2016

மணமகள் கழுத்தில் சினிமா பாணியில் தாலி கட்டிய மணமகனால் பரபரப்பு!

நெல்லூர் மாவட்டத்தில் போலீஸ் விசாரணைக்கு அழைத்து செல்ல முயன்ற போது தப்பி ஓடிய மனமகன் சினிமா பாணியில் ஓடி சென்று மணமகள் கழுத்தில் தாலி கட்டியதால் அங்கு பரபரப்பு நிலவியது.
திருப்பதி அருகே உள்ள நெல்லூர் மாவட்டம் ஒட்டி பல்லி கிராமத்தை சேர்ந்தவர் ஜனார்தனன் இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த சுமலதா என்ற பெண்ணுக்கும் திருப்பதில் திருமணம் நடைபெற 
இருந்தது.
இந்நிலையில் ஜனார்தனை கைது செய்ய போலீசார் திருமண மண்டபத்திற்கு வந்தனர். ஜனார்தனன் பத்மா என்ற பெண்ணை காதலித்து ஏமாற்றியதாக அவரை கைது செய்ய போலீசார் முயன்றனர்.
ஆனால் மணமகனை விசாரணைக்கு அனுப்ப திருமண வீட்டார் மறுத்தனர். இதனால் போலீசாருக்கும் திருமண வீட்டாருக்கும் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது திடீரென போலீசாரிடம் தப்பி ஓடிய மணமகன் திருமண மண்டபத்திற்குள் நுழைந்து மணமகள் சுமலதா கழுத்தில்
 தாலி கட்டினார்.
பின்னர் இது குறித்து விளக்கம் அளித்த ஜனார்தனன், பத்மா என்ற பெண்ணை தாம் காதலிக்க வில்லை. தன் மீது வீண் பழி போடப்பட்டுள்ளதாக குற்றம் சாட்டினார்.
இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி 
வருகின்றனர்.
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>



0 கருத்துகள்:

Post a Comment